ராதையின் கண்ணன் இவன்-16

Advertisement

E.Ruthra

Well-Known Member
கல்லூரியில் இருந்து கிளம்பிய ராதிகா வீட்டுக்கு வந்த உடனே தன் அறைக்கு சென்றுவிட்டாள் வழக்கம் போல. கிறிஸ்க்கு இந்த வீடு, வீட்டு மனிதர்களை சுத்தமாக பிடிக்காது என்பதால் அவன் இங்கு வருவான் என அவள் யோசிக்க வில்லை, எப்படியும் கை பேசியில் அழைப்பான் அப்போது பேசி கொள்ளலாம் என நினைத்து தன் போக்கில் உடை மாற்றி விட்டு தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள். ஆனால் கிறிஸ் எதை பற்றியும் யோசிக்காமல் ராதிகாவின் இல்லத்தை அடைந்து உள்ளே போக தன் அடையாள அட்டையை கொடுக்க,வாயிற் காவலாளியோ இவரை உள்ளே அனுப்பலாமா என்று கேட்க வீட்டிற்கு உள்ளே இருக்கும் தொலைபேசிற்கு அழைக்க அழைப்பை ஏற்றது ரொம்ப நாட்களுக்கு பிறகு தலை வலியின் காரணமாக ஓய்வு எடுக்க என மதியம் வீட்டிற்கு வந்த சண்முகம் தான். பெயரையும், ஊர் அமெரிக்கா எனவும் யார் என்று தெரிய வில்லை என்றாலும் பெரிய ஆள் என்று மட்டும் புரிந்தால் உள்ளே அனுப்பும்படி சொல்லிவிட்டு வரவேற்பறையில் காத்திருந்தார்.

பேரை வாயிற் காவலாளி சொல்லி இருந்தாலும் இப்படி முழு வெள்ளை காரனை சண்முகம் எதிர் பார்க்கவில்லை. ஒரு பெட்டியை உருட்டி கொண்டு உள்ளே வந்தவன் குத்து கல்லு மாதிரி முழுதாய் அமர்ந்து இருந்த அவரை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் வீடு முழுக்க யாரையோ கண்களால் தேடிய வண்ணமே இருக்க, பொறுத்த பார்த்த சண்முகம் அவன் திருவாய் மலரும் வழியை காணாமல் அவருக்கு தெரிந்த ஆங்கிலத்தில் யாரை சந்திக்க வேண்டும் என கேட்க, அவனோ அச்சு அசல் அமெரிக்கா ஆங்கில உச்சரிப்பு முறையில் உச்சரித்த "ராதிகா" என்ற பெயரை புரிந்துகொள்ள அவருக்கு முழுதாக ஒரு நிமிடம் பிடித்தது. அவனை ஒரு மாதிரியாக பார்த்தவர் ஏதும் பேசாமல் வேலையாளை அழைத்து ராதிகாவை கூப்பிட சொன்னார். "அன்றைக்கு ஒருத்தவன் கூட படிக்குறவனு வந்தான், இவனை பார்த்தா வெள்ளைக்காரன் மாதிரி இருக்கு, இவனுக்கு எப்படி அந்த பொண்ண தெரியும், அதும் தைரியமா வீட்டுக்கே வந்து இருக்கான் யாரா இருக்கும்" என்ற யோசனையில் உட்கார்ந்த இடத்தை விட்டு நகராமல் நடப்பதை வேடிக்கை பார்க்க தயாரானார்.

வேலையாள் வந்து அழைத்ததுமே யாராக இருக்கும் என்ற யோசனையோடு படி இறங்கிய ராதிகா கடைசி படியில் தான் கிறிஸ்யை பரர்த்தாள். இவ்வளவு நேரம் புலி போல கம்பீரமாக நடை பழகியவன் அவனின் டாலியை பார்த்த நொடி பூனை குட்டியாய் பம்மி கொண்டு அவளை நெருங்கினான். கிறிஸ் இங்கு வந்ததை எதிர்பார்க்க வில்லை என்றாலும் அவனிடம் இதை எதிர் பார்க்காத தன் மடத்தனத்தை எண்ணி மானசீகமாக தன் தலையில் தானே அடித்து கொண்டாள், இருந்தும் வெளியில் கைகளை காட்டியவாறு அவனை பார்த்துவிட்டு அவனுக்கு பின்னாடி யாரையோ தேட, அவளின் பார்வையை உணர்ந்தவன்,

"இல்ல டாலி ராகவ் வரல, நா மட்டும் தான் வந்தேன்" என ஒரு நமட்டு சிரிப்புடன் கூற, சண்முகமோ "இவனுக்கு அந்த பையனையும் தெரிஞ்சி இருக்கும் போலவே" என பார்க்க, ராதிகா எந்த பதிலும் சொல்லாமல் இருக்க அவனே தொடர்ந்து,

"சாரி டாலி, சர்பரைஸா இருக்கட்டும்னு தான் சொல்லல டா" என மன்னிப்பு கேட்கும் பாவனையில் பேச இப்போது தான் அவன் தமிழில் உரையாடுவதை உணர்ந்த சண்முகத்துக்கு ஏக கடுப்பு,"அடப்பாவி, யார பார்க்கணும்னு கேட்டதுக்கு என்னமோ நாக்குல சுட்டு போட்டாலும் தமிழ் வாராது மாதிரி "ராதிகா" என்ற பேரையே வழா வழா கொழ கொழனு சொல்லிட்டு, இப்போ வீரமாமுனிவர் பேரன் மாதிரி பேசுறத பாரேன்" என பல்லை கடிக்க, அங்கே ராதிகாவோ தன் மவுனத்தை தொடர, கிறிஸ்,

"நா வேணா நாமா சின்ன வயசுல பண்ற மாதிரி தோப்பு கரணம் போடவா" என கேட்டுக்கொண்டே அங்கு இருந்த சண்முகம், நடமாடி கொண்டு இருந்த வேலையாள் என யாரையும் ஒரு கணக்காக எடுக்காமல் தோப்பு கரணம் போட தயாராக, ராதிகா தான் பதறி,

"அது எல்லாம் ஒன்னும் வேண்டாம், நீ என்ன வந்து பார்த்து ஆறு மாசம் ஆச்சி, இப்போ கூட கிளாஸ் எடுக்க தானே வந்து இருக்க, என்ன பார்க்க வரல இல்ல"என முகம் தூக்க, அந்த சிறு பிள்ளை தனமான கோவம் அவளை ஆறு வயது ராதிகாவாவே கிறிஸ்கு காட்ட, ஒரு புன்னகையுடனே,

"என்னடா நீ இப்படி சொல்லிட்ட, நா இதுவரைக்கும் எந்த காலேஜ்க்கு கிளாஸ் எடுக்க போய் இருக்கேன், நீ படிக்கிற காலேஜ்னு தான் நா அக்ஸ்ப்ட் பாண்னேன், அதுபோக நம்ப ஒர்க் எப்படி போகுதுன்னு தான் உனக்கே தெரியுமே, ஆறு மாசமா எங்கேயும் நகர முடில, கொஞ்சம் பிரீ ஆனதும் உன்னை பார்க்க ஓடி வந்துட்டேன்" என சிறு பிள்ளைக்கு விளக்குவது போல விளக்க, ராதிகாவுக்கும் வேலை நிலவரம் தெரியும் என்பதால்,

"நீ வரேன்னு சொல்லி இருந்தா வீட்டை எல்லாம் கிளீன் பண்ணி உனக்கு தேவையானதை எல்லாம் வாங்கி வச்சி இருப்பேன், இப்போ அங்க என்ன இருக்கோ தெரில" என அடுத்த நிமிடமே அவனை நினைத்து வருந்த,

"ரிலாக்ஸ் டாலி, ராகவ் எல்லாமே ரெடி பண்ணிட்டான்"

"என்ன ரெண்டு பேரும் ஓவர் குலோஸ் அஹ இருக்கீங்க சரி இல்லையே, என்ன விஷயம்" என ஒரு குருகுறுப்புடன் கேட்க,

"ஒன்னும் இல்லையே, ஒன்னுமே இல்லையே" சிரிப்புடன் கூற,

"கண்டுபிடிக்கிறேன், கண்டுபிடிக்கிறேன்" என ராதிகா சிரிக்க, கிறிஸ் கூட சேர்ந்து சிரித்தான். அப்போது தான் இருவரும் நின்று கொண்டே பேசுவதை உணர்ந்த ராதிகா,

"வா கிறிஸ் உட்கார்ந்து பேசலாம்"

"இல்ல, வேண்டாம் டாலி, நாம கிளம்பலாம், கொஞ்சம் வெளியே போய்ட்டு அப்படியே சாப்பிட்டு, நா உன்னை அப்புறமா வீட்டுல விட்டுறேன் என்ன ஓக்கே தானே, இல்ல வேலை எதும் இருக்கா" என அந்த வீட்டை வெறுப்புடன் பார்த்தவாறே அங்கே உட்கார கூட விருப்பம் இல்லை என்பதை சொல்லாமல் சொல்ல,

"வேலை எல்லாம் ஒன்னும் இல்ல கிறிஸ், போலாம்" என ராதிகாவும் அவனை புரிந்து கொண்ட விதமாக சொல்ல,

"ஆமா, இந்த புறா கூண்டுல எப்படி இருக்க, உன்னை இங்க தங்க வைக்கணும்னு தில்லைக்கு அப்படி என்ன பிடிவாதம், அவ்ளோ பெருசா நம்ப வீடு இருக்கு, அழகா அங்க தங்கி படிச்சி இருக்கலாம்" என கிறிஸ் பேச பேச சண்முகத்திற்கு நெஞ்சு வலி வராதது ஒன்று தான் குறை, அப்படியே திரும்பி தன் வீட்டை ஒரு பார்வை பார்த்தார், அழகும் கலை நயமுமாக பார்த்து பார்த்து அலங்கரித்த பங்களா மாதிரியான வீடு இது. இதுவே புறா கூண்டாம், என ஏகத்துக்கும் கோவம் வந்தாலும், அவனை நாலு வார்த்தை கேட்க மனம் விழைந்தாலும், ஏற்கனவே இந்த பெண்ணின் நண்பன் என வந்த அந்த ராகவிடம் வாயை கொடுத்த நேரமோ என்னமோ தொழிலில் அடுத்தடுத்து பிரச்சனை, (பிரச்சனை யாரால் என அறியாமல் அவனிடம் வாய் கொடுத்த நேரமாம், இவரை எல்லாம்) இவன் பார்த்தாலே வாய்க்கு முன் கை பேசும் ரகம் போல இருக்கு, எதற்கு வம்பு என வாயை இருக்க மூடி கொண்டார். அதே நேரம் ராதிகாவது ஏதாவது மறுப்பு சொல்வாள் என ஆசையாக அவளை பார்க்க, அவளோ அவன் சொன்னதை மறைமுகமாக அங்கீகரிக்கும் விதமாக பேச சண்முகம் தான் வெறுத்து போனார்.

"தில்லை பத்தி தான் தெரியும் இல்ல விடு, ஆமா நீ வந்தது தில்லைக்கு தெரியுமா"

"தெரியும் டா, எல்லாம் முடிவு பண்ணிட்டு தான் சொன்னேன்" என

"ஆக என்ன தவிர எல்லாருக்கும் தெரியும் அப்படித்தானே, அந்த தில்லையும் என் கிட்ட சொல்லவே இல்லை" என ராதிகா மீண்டும் முறைக்க ஆரம்பிக்கவும்,

"அம்மா தாயே மறுபடியும் முதல்ல இருந்தா மீ பாவம்" என கை எடுத்து கும்பிட, போனால் போகுது என்று பெரிய மனது பண்ணி அவனை மனித்த ராதிகா,

"சரி இரு நா போய் கிளம்பிட்டு வரேன்" என படியேற திரும்ப,

"ஹே இரு, இந்த இதுல இருக்குறது எல்லாம் உனக்கு தான், இதை அப்படியே உன்னோட ரூம்ல வைக்கணும், இது வெய்ட் கொஞ்சம் அதிகமா இருக்கும், நீ தூக்க மாட்ட, வா வந்து ரூம் அஹ காட்டு, வச்சிட்டு வந்து நா கார்ல வெய்ட் பண்றேன் சீக்கிரமா கிளம்பி வா" என அந்த பெட்டியுடன் அவளை தாண்டி படியேற செல்ல,

"எதுக்கு இவ்ளோ வாங்கிக்கிட்டு வந்து இருக்க கிறிஸ்,நீ இது வரைக்கும் வரும் போது எல்லாம் வாங்கிக்கிட்டு வந்ததையே எனக்கு என்ன பண்றது தெரில, இதுல இப்போ ஒரு சூட்கேஸ்" என அலுத்துக்கொள்ள,

"நீ இப்படி சொல்றதுனால தான் இந்த தடவை கம்மியா வாங்கிகிட்டு வந்தேன், இதுக்கும் இப்படி சொன்ன எப்படி" என அவனும் சலித்து சொல்ல, ராதிகா அவன் கைகளில் வைத்து இருந்த அந்த பெட்டி, தன் முட்டியை தாண்டி இடுப்பை தொடும் உயரம் என புரிய, அந்த பெட்டியையும், அவனையும் மாறி மாறி பார்த்து முறைக்க,

"என்னை அப்புறமா பாசமா பார்க்கலாம், இப்போ வா", என பெட்டியை தூக்கிக்கொண்டு படியேற, ராதிகா அவனை முறைத்த வண்ணமே நிற்க,

" வெளிய போகணும் சொன்னேன் இல்ல டாலி, வா வந்து ரூம் அஹ காட்டு, அப்புறம் லேட் ஆகும், வாடா" என மறுபடியும் சிறு கெஞ்சலோடு அழைக்க அவனை பின்தொடர்ந்து சென்றாள் ராதிகா. இருவருமே அங்கு இருந்த சண்முகத்தை கண்டுகொள்ளாமல் தன் பாட்டில் பேசியபடியே மாடியேற, சண்முகம் தான் தீவிர சிந்தனையில் இருந்தார், என்ன இருக்கும் அந்த பெட்டியில் என்று. நமக்கு இந்த மாதிரி சொந்தம் யாரும் இல்லையே இந்த வெள்ளாவில வச்சி வெளுத்தவன் யாரா இருப்பான். மாமாக்கு ஊருக்குள் அவ்ளோ மரியாதை, இந்த பொண்ணு தான் பேரு சொல்லி கூப்பிடுதுன்னு பார்த்தா இந்த வெள்ளாவில வச்சி வெளுத்தவனும் அப்படியே கூப்பிடுறான், யார இருப்பான் என இல்லாத தன் மூளையை கசக்கி யோசிக்க, அவன் படி இறங்கி வருவது தெரிந்து.

கிறிஸ் தன் போக்கில் வெளியே செல்ல சண்முகத்தை தாண்டி சென்று வாசல் படி இறங்க போகும் போது, அப்போது தான் கோவில் சென்ற தெய்வா உள்ளே வந்தார். இவனை பார்த்தவர் அவனை அடையாளம் கண்டு கொண்டு,

"வா கிறிஸ், எப்போ வந்த, எப்படி இருக்க, எதாவது சாப்டியா, என்ன அதுக்குள்ள எங்க கிளம்பிட்ட" என கேள்விகளாய் அடுக்க, ஒரு வெறுப்புடன் அவரை பார்த்தவன்,

"பெத்த பொண்ணையே உங்களுக்கு கண்ணுக்கு தெரியாது, என்ன எல்லாம் அடையாளம் தெரியுறது ஆச்சர்யமா இருக்கே" என சொல்லும்புகளை வீசியவாறே அவரை கடந்து செல்ல தெய்வா தான் விக்கித்து நின்றார். ராதிகாவிடம் கூட ஒரு ஒதுக்கம் தான் இருக்கும், இவனிடத்தில் இருந்த வெறுப்பு அவரை வெகுவாக தாக்கியது. அவருக்கு தெரியாதே கிறிஸின் மனநிலைமை, தாய் இல்லாமல் தனியே வளர்ந்த அவனுக்கு, ராதிகா எல்லாரும் இருந்தும் தனியே வளருகிறாள் என்பதை ஏற்று கொள்ளவே முடியவில்லை. எப்போதாவது ஊருக்கு தன் மகளுடன் வரும் தெய்வாவை பார்த்து ராதிகா எதும் பேசாமல் ஒதுங்க, கிறிஸ் ஒரு வெறுப்புடன் ஒதுங்குவான். இவர்கள் வீட்டில் தங்கும் நாட்களில் கிறிஸ் ராதிகாவை முடிந்த வரையில் வெளியே அழைத்து சென்றுவிடுவான், வீட்டிற்கு வந்த பிறகும் அவள் உறங்கும் வரை உடன் இருந்து பின்பே தன் வீடு சொல்லுவான்.

ஒரு பெரு மூச்சுடன் தெய்வா உள்ளே வர, அவர் கிறிஸ் உடன் பேசியதை பார்த்த சண்முகம் இவளுக்கு அவனை தெரியுமா என யோசிக்கும் போதே அவன் ஏதோ சொல்லுவதும் அதற்கு தெய்வா முகம் வாடுவதும் தெரிய யோசனையானர்.

"என்ன தெய்வா நல்ல தரிசனமா" என கேட்க, தன் முகத்தை சீராக்கி ஒரு புன்னகையை தவழ விட்ட
தெய்வா,

"நல்ல தரிசனம்ங்க" என்றவாறே விபூதி எடுத்து அவர் நெற்றியில் வைக்க,

"அந்த பையனை உனக்கு தெரியுமா", என தெய்வாவை அளவிட்டவாறே சண்முகம் கேட்க,

"அப்பாவோட நண்பர் வேதநாயகம் இருக்காரு இல்ல, அவரு பேரன்ங்க" என எதையும் வெளிக்காட்டாத குரலில் கூற, சண்முகமும் புரிந்தது எனும் விதமாக தலை அசைத்தார். சண்முகம் பொதுவாக அந்த நிகழ்வுக்கு பிறகு ஊருக்கு செல்வது இல்லை என்பதால் அவருக்கு அடையாளம் தெரியவில்லையே தவிர அந்த குடும்பத்தை பற்றி நிறைய கேள்வி பட்டு இருக்கிறார்.

"இந்த பொண்ணு கொடுத்து வச்ச பொண்ணு தான் போல, சுத்தி இருக்குறவங்க எல்லாரும் பாசமா இருக்காங்க அந்த பொண்ணு மேல" என இன்னதென்று அறிய முடியா குரலில் கூற, தெய்வா அவரை பார்த்த பார்வையில் துணுக்குற்ற சண்முகம் என்னவென கேட்க, தெய்வா ஏதும் பதில் சொல்லாமலே அல்லது பதில் சொல்ல விரும்பாமலே நிற்க, அதே நேரம் மேலே இருந்து வந்த ராதிகா இருவரிடமும் சொல்லாமலே செல்ல தெய்வாவின் பார்வையும் அவளையே தொடர, மனதிற்குள் "பாசம் காட்ட எத்தனை பேரு இருந்தாலும், தாயின் பாசத்துக்கும், தந்தையின் அரவணைப்புக்கும் ஈடாகுமா, எல்லாம் இருந்தும் எதும் இல்லாமல் வளரும் இவள் கொடுத்து வைத்தவளா" என மறுகியவாறே தானும் உள்ளே சென்றார்.

தான் கேள்வி கேட்டதை மறந்து பதில் அளிக்காமல் செல்லும் தன் காதல் மனைவியை பார்த்த சண்முகம் இந்த பொண்ணு வீட்டுக்கு வந்ததுல இருந்து தன் மனைவி தனக்கே அந்நியம் ஆகிவிட்ட உணர்வை தவிர்க்க முடியாமல், தன் மனைவியிடம் மனம் விட்டு பேசி அவளை அலைகழிக்கும் விஷயத்தை அறிய வேண்டியதின் அவசியத்தை உணர்ந்தார்.

இவன் ராதையின் கண்ணன்……………….
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

கிறிஸ்க்காக...

அடிவெள்ளாவிவச்சுத் தான் வெளுத்தாய்ங்களா
உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா
நான் தலை காலுப் புரியாம
தரைமேலே நிற்காம
தடு மாறிப் போனேனே நானே நானே
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
கிறிஸ்டோபர் ஸ்மித் சண்முகத்தை
நல்லா வைச்சு வைச்சு செய்யுறான்
ஹா ஹா ஹா

ராதிகா-ங்கிற சின்ன பேரை அமெரிக்கா இங்கிலீஷ்ஷில் கிறிஸ் எப்படி கொலை செய்திருப்பான்?
ஹா ஹா ஹா

வெள்ளாவில வைச்சு வெளுத்தவனா?
வீரமாமுனிவரின் பேரனா?
பள்ளிக்கோடத்துல படிச்சதெல்லாம்
இன்னும் உனக்கு ஞாபகம் இருக்கா,
சண்முகம்?
ஹா ஹா ஹா

உனக்கு யாரும் ஒண்ணும் வாங்கித் தந்ததில்லையா, சண்முகம்?
எனக்கும் இதுவரை யாரும் ஒண்ணும் வாங்கித் தந்ததில்லைப்பா

புறாக் கூண்டு மாதிரி வீடா?
ஹா ஹா ஹா
சிரிச்சு சிரிச்சு மாளலை, ருத்ரா டியர்

தெய்வாவையும் கிறிஸ் விட்டு
வைக்கலை
நல்லா நாக்கைப் பிடிங்கிக்கிற
மாதிரிதான் கேள்வி கேட்குறான்

ஏன் சண்முகம் தானாக விபூதி எடுத்து வைச்சுக்க மாட்டாரா, தெய்வா?
காதல் மனைவி நீங்க வைச்சாத்தான்
அந்த விபூதி சண்முகம் நெத்தியில் ஒட்டுமாம்

"அந்த நிகழ்வுக்கு அப்புறம் நீ ஊருக்கு போகலை"-ன்னா எந்த நிகழ்வு?
என்ன ஆச்சு, சண்முகம்?
இந்த ருத்ரா டியர்தான் வாயிலே
ஜிப் போட்டு நல்லா இறுக்கமா வாயை மூடிக்கிறாங்க
நீங்களாவது என்ன நடந்ததுன்னு சொல்லுங்க சண்முகம்

"எல்லாரும் இருந்தும் ராதிகா தனியே வளருகிறாள்"-ன்னா கார்மேகத்துக்கு
அப்பா இருக்காரா?
யாரு அவரு?
ஒருவேளை சண்முகம்தான் ராதிகாவின் அப்பாவா?
அப்போ மூத்த பெண் ராதிகாவை விட்டுட்டு தெய்வாவும் சண்முகமும் ஏன் தனியாக வந்தாங்க?
ராதிகா கருப்பாக இருப்பதாலா?
இல்லை ஜாதகக் கோளாறு இந்த மாதிரி ஏதாவது ரீசன் இருக்கா, ருத்ரா டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top