ராதையின் கண்ணன் இவன்-1

Advertisement

Lalithaganesan

Well-Known Member
" என்ன நிமிர்ந்து பாரு தில்லை, இது எனக்கு பிடிக்காது, கோவம் வரும்னு தெரிஞ்சி தானே பண்ண, எல்லாம் பண்ணிட்டு மூஞ்சியை இப்படி பாவமா வச்சிக்கிட்டா ஆச்சா"

தனக்கு பக்கவாட்டில் இருக்கையில் இருந்து கேட்ட கண்டிப்புடன் ஒலித்த குரல் வயிறுக்கு உணவளித்து கொண்டிருந்த ராகவின் செவிகளுக்கு உணவானது அவனது அனுமதியின்றியே ,என்ன இப்படி மிரட்டுறங்க பாவம் அந்த குழந்தை என்ன பண்ணிச்சோ, இந்த காலத்துல என்ன இப்படி ஒரு பேரு என ராகவ் தன்போல் யோசிக்க அந்த தில்லையாக பட்டவரின் பதில் ராகவை திரும்பி அடுத்த டேபிளை பாக்க வைத்தது.

முதலில் அந்த பெண் பேசும் போது, தப்பு செஞ்ச குழந்தையை அம்மா மிரட்டுறாங்க போல அப்படினு நினைச்சா, அந்த பெண் மிரட்டுன தில்லை அப்படின்ற குழந்தைக்கு எப்படியும் ஒரு 60 வயசு இருக்கும் போலவே.

அந்த பெண்ணால், தில்லை என அழைக்க பட்டவர் நல்ல வாட்ட சாட்டமாக, பயம் கலந்த மரியாதை தரும் தோற்றத்தோடு,தும்பை பூ நிற வேட்டி, சட்டையோடு அந்த பெண் முன்னால் தவறு செய்து அம்மாவிடம் மாட்டிய பாலகன் என பவ்யமாக அமர்ந்து இருக்க ராகவின் சுவாரசியம் கூடியது.

"நீங்க சொன்னதை தானே நான் பண்ணேன் தாயி, நீங்க தானே இந்த காலேஜ்ல எம்.பி.ஏ படிக்கணும்னு சொன்னிங்க, அதனால தான் நான் இங்கே சீட்டு வாங்குனேன்" என தில்லை காலேஜ், சேர்ந்து இருக்கும் பிரிவின் பேரை சொன்னதும், ராகவ் "அட நம்ப கிளாஸ் தானா' என யோசிக்கும் போதே, அந்த பெண்,

"நா சொன்னத மட்டும் பண்ணுனா நா எதுக்கு கோவப்பட போறேன், சீட்டு வாங்குன சரி, ஏன் ஹாஸ்டல் ரூம்க்கு சொல்லல, யூஜி ஜாயின் பண்ணும் போது அவ்ளோ அலப்பறை, கிறிஸ் எனக்கு எல்லாமே பார்த்து பார்த்து தான் பண்ணுவாங்க, அவங்க கிட்டயே ஆயிரம் கேள்வி காலேஜ் பத்தி, ஹாஸ்டல் எப்படி, பாதுகாப்பானு அதுக்கு தனியா ஒரு புலன்விசாரணை, இந்த தடவ விசாரணை கமிஷின் மிஸ் ஆகும் போதே டௌட் ஆனேன் , என்னடா தில்லை நாயகம் எதுமே விசரிக்கமா மண்டைய மண்டைய உருட்டுறாரேனு, இப்போ தானே புரியுது எல்லாமே பக்கா பிளான், யார கேட்டு அவங்க வீட்டுல நா தங்க ஏற்பாடு பண்ண," என பல்லை கடிக்க,

" தெய்வா உங்களை நல்ல பாத்துக்கும் தாயி, அது உங்க கூட கொஞ்ச நாள் இருக்கணும்னு ஆச படுது" என தொடங்கியவர் தொடராமல் நிறுத்தினார் அந்த பெண்ணின் அனல் பார்வையில்,

"ஆக இதுக்காக தான் ஹாஸ்டல்ல ரூம்க்கு சொல்லல இல்லையா, அவருக்கு என்ன சுத்தமா பிடிக்காது, என்ன தொட்டா என்னோட கலர் அவரை ஒட்டிக்கும் அப்டின்ற மாதிரியே பார்ப்பாரு, அவரு பொண்ணு அதான் உன்னோட பேத்தி ஸ்வேதா அதுக்கும் மேல, அவ அழகி தான் நா இல்லன்னு சொல்லல ஆனா அந்த பொண்ணு அவ என்னமோ தேவலோக கன்னிகை மாதிரியும் என்னை ஏதோ அற்ப மானிட பதரேணு பாக்கும், எனக்கு இது எல்லாம் தேவையா சொல்லு தில்லை"

தொட்டா ஒட்டிக்குமா என யோசித்தபடி ராகவ் அந்த பெண்ணை நிமிர்ந்து பார்த்தான். அடைமழை தரும் கார்மேகத்தின் நிறம் தான், அந்த நிறத்துக்கு எடுப்பான இளம் ரோஜா நிற அனார்கலி உடை, இடை தாண்டிய பின்னல், உணர்வுகளை உள்ளபடி காட்டும் குவளை கண்கள், பேசும் போதே விழும் கண்ண குழி, செதுக்கி வைத்த கோவில் சிற்பம் என இவன் கண்களுக்கு அழகியாக தான் தெரிந்ததாள் பெண். "பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க" என பின்னணியில் இளையராஜா இசைக்க இமைக்க மறந்து இருக்க மனசாட்சியோ கோவை சரளா ஸ்டைலில் "பேக்கிரௌண்ட் மியூசிக் அடச்சீ இட்லி தின்னு" என காரி துப்ப சுதாரித்து வாயில் இருந்து வந்த நீர்வீழ்ச்சிக்கு உதடுகளை மூடி அணையிட்டு அந்த காரிகையிலிருந்து கவனத்தை அவர்களின் பேச்சுக்கு திசைதிருப்பினான் ராகவ்.

அப்பெண் பேசிக்கொண்டு இருக்கும் போதே தில்லையின் தொலை பேசி அடிக்க, அவரின் பார்வை தொலை பேசியில் பதிந்து உடனே அந்த பெண்ணின் முகத்தில் பேசட்டுமா எனும் விதமாக படிய அந்த பெண் யாரென அவரின் தொலைபேசியை பார்த்தவிட்டு பேசு எனும் விதமாக தலை அசைத்தாள்.

இவ்வளவு நேரம் அந்த பெண்ணிடம் உரையாடிய பவ்வியமான குரலா இது என அதிசயக்கும் வண்ணம் கம்பீரமான குரலில் "ஹலோ" என்றார் தில்லை.

…………………….

"சொல்லு தெய்வா"

……………….…....

"காலேஜ்ல வேலை முடிஞ்சிடுச்சி"

……………………..

"ஹோட்டல இருக்கோம்"

………………………

"இல்ல, இல்ல வீட்டுக்கு வந்து தான் சாப்பிடுவோம், தாயி தல வலிக்குதுன்னு சொன்னாக அதான் காபி குடிக்க வந்தோம்"

……………………….

"ஒரு மணி நேரத்துல வந்துடுவோம், சரி வைக்கட்டுமா"

என்னவாம் என்பாதாய் ராதிகா ஒரு பார்வை பார்க்க, மீண்டும் அதே பவ்யமான குரலில் "அது ஒன்னும் இல்ல தாயி, இன்னைக்கு நாம காலேஜ் விசயமா வரோம்னு சொல்லி இருந்தேன் அதான் வீட்டுக்கு எப்போ வரிங்கனு கேட்குது" என்றார் தில்லை.

"மிஸ்டர்.சண்முகம் எப்படி சம்மதம் சொன்னரு நா அங்க தங்க அதுவே எனக்கு யோசனையா தான் இருக்கு, உன்னோட பொண்ணு கேட்டதும் உன்னால முடியாதுன்னு சொல்ல முடில, என்ன பத்தி கொஞ்சம் கூட யோசிக்கல இல்ல, என்ன இருந்தாலும் அவங்க உன்னோட பொண்ணு, உனக்கு அவங்க தானே முக்கியம்"

"தெய்வா தான் ஏதோ பேசி சம்மதம் வாங்கி இருக்கு போல தாயி, நீங்க என்ன பெத்த அம்மா, என் குலதெய்வம், எல்லாரையும் விட நீங்க தான் தாயி எனக்கு முக்கியம், தெய்வா கேட்டதுக்காக மட்டும்னா நீங்க யூஜி படிக்கும் போதே அங்க தங்கி படிக்க சொல்லி இருப்பேனே தாயி, இது உங்களுக்காகவும் தான், எனக்கும் சிவாக்கும் அப்புறம் உங்களுக்குனு உறவுகள் நாலு பேரு வேணும் தாயி, உங்களுக்கு அங்க இருக்க கஸ்டம் தான் எனக்கு தெரியும் புரியுது, நீங்க அங்க இருந்தா அவங்களுக்கும் உங்களை புரிஞ்சிக்க வாய்ப்பு கிடைக்கும், உங்க குணமே உங்களை அவங்களுக்கு பிடிக்க வச்சிடும் தாயி, இதுவரைக்கும் அவங்களுக்கு உங்க கூட பழகவே வாய்ப்பு கிடைக்கல இல்ல" என தயங்கி தயங்கி கூற,

"உறவுகள் மட்டும் தான் பிறப்பால் வரும் தில்லை, அன்பு , பாசம், அக்கறை எல்லாதுக்கும் அது அடிப்படையா இருக்கலாம், ஆனா உறவுன்ற கட்டாயத்தில் மட்டும் பாசம் வராது தில்லை, கிறிஸ்கும் எனக்கும் என்ன உறவு, ஆனா உனக்கும், சிவாக்கும் அப்புறம் என் மேல ரொம்ப பாசம் வச்சி இருக்குறது அவர் தான், அவங்களுக்கு தினமும் என்ன பார்க்கும் போது என் மேல இருக்க வெறுப்பு அதிகம் கூட ஆகலாம் யாருக்கு தெரியும், நீ நினைக்குறது நடக்குமான்னு எனக்கு தெரியல, சரி ஒரு தடவ முயற்சி பண்ணிபார்த்து இருக்ககாலம்னு நீ வருத்தபட கூடதுன்னு நா சம்மதிக்கிற, அவங்க வீட்டுல தங்கி நா படிக்கிறேன், ஆனா அதுக்கு ஆகுற செலவ அவங்க கிட்ட நீ கொடுக்கணும், எனக்கு அவங்ககிட்ட இருந்து எதுமே வேண்டாம்"

"உறவுகள், உறவுகள் மூலமா கிடைக்குற பாதுகாப்பு உங்களுக்கு வேணும்னு தான் நா நினைக்கிறேன் தாயி, உங்களுக்கு பண்ண நா இருக்கேன், அவங்க தயவு உங்களுக்கு எதுக்கு தாயி, உங்க காலம் முழுமைக்கும் ஆகுற செலவக்கூட என்னால பாத்துக்க முடியும் தாயி, நம்ப நிலமை என்னனு உங்களுக்கு தெரியாதா, வீட்டுல தங்க காசு கொடுத்தா தெய்வா வருத்தப்படும், சண்முகம் கிட்ட தெய்வாக்கு தெரியாம குடுத்துடுறேன், அவங்களுக்கும் தெரியணும் நீங்க எதுக்கும் அவங்கள எதிர்ப்பார்த்து இல்லைனு, மாசா மாசம் நானும் சிவாவும் வந்து பார்க்குறோம் தாயி" என தில்லை பேச பேச குனிந்த தலை நிமிராமல் ஏதோ சிந்தனை வயப்பட்ட ராதிகா ஒரு நீண்ட பெருமூச்சிக்கு அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவளாக நிமிந்து அமர்ந்தாள்.

"என்னமோ இதையும் அதையும் பேசி, என்ன இங்க பேக் பண்ணிட்ட, உனக்காக மட்டும் தான் நா இங்க இருக்க சம்மதிக்கிறேன், என்னால அந்த வீட்டுல ஓட்ட முடியும்னு எனக்கு தோனல தில்லை, எங்களுக்கு நடுவுல தெய்வா மட்டிக்கிட்டு முழிக்கபோரங்க அது மட்டும் நிச்சயம், அவங்கள நினைச்சா தான் எனக்கு பாவமா இருக்கு, அப்புறம் ஸ்வேதா கிட்ட நல்ல பேசு, உன்னோட பேத்தி தானே, சின்ன பொண்ணு, இன்னும் உலகம் தெரியல ,எனக்காக பார்க்காத தில்லை, எனக்காக உன் உறவுகளை நீ தள்ளிவைக்காத சரியா, ஆமா அது என்ன மாசத்துக்கு ஒரு தடவ வரனு சொல்லி மறைமுகமா சனி, ஞாயிறும் ஊரு பக்கம் வர வேண்டாம்ணு சொல்றா, நீங்க இங்க வர வேண்டாம் நானே அங்க வரேன் வெறும் 3 மணி நேரம் தானே, அங்க வந்தா தான் இயல்பா மூச்சு விட முடியும் என்னால, சிவாவை பத்திரமா பாத்துக்கோ, நா இல்லன்னு சிவாவை ஏய்க்கதா, கொடுக்குறத ஒழுங்கா சாப்பிட்டு டயட் பாலோ பண்ணனும் சரியா" என ராதிகா சிறு குழந்தைக்கு கூறுவது போல் அறிவுரை கூற தில்லையும் பவ்யமாக "சரிங்க தாயி,சரிங்க தாயி" என தலை அசைத்து கேட்டுக்கொண்டார்.

ராதிகாவும், தில்லை நாயகமும் அவர்கள் அருந்திய காபிக்கு பணம் செலுத்திவிட்டு, இன்னும் ஏதோ (அந்த ஏதோ பெருசா ஒன்னும் ராதிகாவோட தில்லைக்கான அறிவுரை தான்)பேசியவாறே அந்த உணவகத்தை விட்டு வெளியேறினர்.

அப்படி என்ன அந்த பெரியவருக்கு அந்த பெண்ணை அவங்க வீட்டில தான் தங்க வைக்கணும், கார்மேகம் சொன்னதை வச்சி பார்த்தா, அந்த வீட்டுல ஒருத்தவங்களை தவிர மீதி ரெண்டு பேருக்கும் இவள் வேண்டாத விருந்தாளி, அங்க தங்கி இருந்தா என்ன மாற்றம் வரும்னு அந்த பெரியவர் எதிர்ப் பார்க்குறாரு?, ஒரு வேலை அந்த பெரியவர் சொன்ன மாதிரி கார்மேகத்தை பக்கத்துல இருந்தா பாத்த அவங்களுக்கும் பிடிச்சிடுமோ,ஆனா ஏன் பிடிக்கணும்??? தெய்வா அந்த பெரியவருக்கு பொண்ணுனா அப்போ கார்மேகம் யாரு, அந்த வீட்டை சேர்ந்தவங்க யாரையுமே கார்மேகம் முறை வச்சி பேசல என்னவா இருக்கும் இப்படி யோசிக்க ஆயிரம் இருக்கும் போது "கிடக்குறது கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனைல வைங்குற" கணக்கா நம்ப ராகவின் மனமோ கார்மேகத்தின் பேரு என்னவா இருக்கும் என்பதே முழு யோசனையாய், இவன எல்லாம்…………..

இவன் ராதையின் கண்ணன்……………….
startinge sema....interesting....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top