ராசாவே உன்ன நம்பி Episode 02

Advertisement

ராசாவே உன்ன நம்பி
- திகில் தொடர்-

♥♥♥பகுதி - 02♥♥♥

மறுநாள் விடிந்தது...
திவ்யா : "ராஜ் எழும்புங்க நேரம் ஆகிட்டு ஆபீஸ் போகணும்"
ராஜ் : "இப்பதான் தூங்கினன் அதுக்குள்ள விடிஞ்சிடுச்சா, என்ன கொடும திவ்யா இது"
திவ்யா : "ஏன் சொல்ல மாட்டிங்க. எழும்புங்க ராஜ்..! இல்லனா தண்ணி அள்ளி ஊத்திடுவன்"

ராஜ் : "எழும்பி தொலைரன் நீ செஞ்சாலும் செய்வ கொடுமைக்காரி"
குளித்துவிட்டு காலை.! சாப்பிட்டுவிட்டு ஆபீஸ் போக தயாரானான்.

ராஜ் : "அம்மா..! அப்பா..! போய்ட்டு வாறன், திவ்யா பொய்யிட்டு வாறன்"
ராஜ் அம்மா அப்பா : "சரிப்பா. கவனமா பொய்யிட்டு வா"
திவ்யா : "கவனமா பொய்ட்டு வாங்க ராஜ்"
காரில் ஏறி ஆபீஸ் நோக்கி புறப்பட்டான் .
ராஜ் அப்பா : "அம்மா திவ்யா..! ஒரு காபி ஒன்னு போட்டு தாமா"
திவ்யா : "ஒரு நிமிஷம் மாமா"
சிறிது நேரத்தில் காபியை கொடுத்து விட்டு அறையை சுத்தம் செய்ய சென்றாள்.

திவ்யா உள்ளே செல்கிறாள் கட்டிலில் உள்ள ராஜின் தலையணையில் சாய்ந்து கொண்டிருந்தது அந்த கறுப்பு உருவம்.

உடனே திவ்யா பயத்தில் சத்தமாக கத்திவிட்டாள் அந்த சத்தத்தில் அந்த உருவம் ஜன்னல் வழியாக போய் விட்டது. உடனே ராஜின் அம்மா அப்பா ஓடி வந்தனர்.

ராஜ் அப்பா : "திவ்யா என்னமா என்னாச்சி..?"
திவ்யா : "மாமா கட்டில்ல யாரோ படுத்து இருந்தாங்க மாமா அதுதான் பயந்து கத்திட்டன்"
ராஜ் அப்பா : "அது ஒண்ணுமில்லாம புது வீடுதானா அதுதான் உனக்கு அப்படி தோனி இருக்கும் பயப்படாதமா சரியா" என்று சொல்லி சமாதானம் படுத்தினார்.

திவ்யா : (மனதுக்குள்) "ஒரு வேல என்னடா கனவா இருக்குமா? இல்ல கற்பனையா? உண்மையா?"
என்று குழம்பி இருந்தாள் சிறிது நேரத்தில் "ஒண்ணுமில்லை சும்மா என்னடா மன கற்பனை" என்று நினைத்துகொண்டு அறையை சுத்தம் செய்து விட்டு சமைக்க சென்றாள்.

அந்த கறுப்பு உருவம் ஜன்னல் பின்னாடி இருந்து மீண்டும் வந்தது உள்ளே.

மாலை நேரம் ஆனது ராஜும் வீடு வந்தான் வந்ததும் திவ்யா நடந்தவற்றை கூறினாள்.
ராஜ் : (சிரித்தாவாறு) "என்ன சின்னப்புள்ளதனமா இருக்கு ஏதாவது கனவு கண்டிருப்ப"
திவ்யா : "இல்ல ராஜ் அதுதான் கொஞ்சம் குழப்பமா இருக்கு"
ராஜ் : "ஐயோ போப்பா. போய் சாப்பாட எடுத்து வை பசிக்குது"
திவ்யா : "எப்ப பாரு சாப்பாடு.. சாப்பாடு.. கொஞ்சம் பொறுங்க வச்சி தொலையிரன்"

திவ்யா சாப்பாட்டை எடுத்து வைத்தாள் எல்லோரும் சாப்பிட்டு விட்டு ராஜும் அப்பாவும் தமது அறைக்குள் சென்றனர்.

ராஜின் அம்மாவும் திவ்யாவும் வேலைகளை முடித்து விட்டு அவர்களும் உறங்குவதற்குச் அறைக்குச் சென்றனர்.

எல்லோரும் உறங்கிய சில மணித்தியாலங்களில் ராஜும் திவ்யாவும் ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தனர்.

திடிரென "ராஜ்.. ராஜ்.." என்று பெண் குரல் கேட்டது.

மீண்டும் "ராஜ்.. ராஜ்.." என்று குரல் உடனே திவ்யா விழித்துக் கொண்டாள். ராஜின் அருகில் அந்த கறுப்பு உருவம் கூந்தல் விரித்து பெண் உருவத்தில் காட்சியளித்தது.

திவ்யா பயத்துடன்,

திவ்யா : "ராஜ்... ராஜ்... எழும்புங்க ராஜ்"
ராஜ் : (அலுப்புடன்) "என்னடா செல்லம்"
திவ்யா : "ராஜ் அந்த கறுப்பு உருவம் உங்க பக்கத்துல நின்னுச்சி ராஜ்"
ராஜ் : "என்னப்பா இந்த நடுராத்திரியில கறுப்பு உருவம்.. சிவப்பு உருவம்னுகிட்டு தூங்குப்பா காலையில பாக்கலாம்"

திவ்யா : "ராஜ் காமடி பண்ணாதீங்க.! எனக்கு பயமா இருக்கு"
ராஜ் : "என்னடா செல்லம் என்னாச்சி உனக்கு?"
திவ்யா : "அந்த கறுப்பு உருவம் உங்க பேர சொல்லிச்சி ராஜ் பயமா இருக்கு ராஜ்"
ராஜ் : "செல்லம் சரி..சரி.. பயப்படாத நான் இருக்கன்ல"
திவ்யா : "ராஜ் ரொம்ப பயமா இருக்கு உங்க பேர எதுக்கு சொல்லனும்"

ராஜ் : (அவளை சமாளிக்க) "அதுதானே என்னட பேர எதுக்கு சொல்லனும்..? சரி இப்ப யோசிக்காம தூங்குப்பா காலையில சரி ஆகிடும்"

திவ்யா ராஜின் நெஞ்சில் தலைவைத்து தூங்கினாள். ராஜுக்கு மனதில் பல குழப்பம் தோன்றியது.

"என்னட பேர எதுக்கு சொல்லனும் இது உண்மையா? இல்ல திவ்யாட கற்பனையா?
அண்னைக்கும் சொன்னாலே கறுப்பு உருவத்த கண்டன்னு" அப்படியே குழப்பத்தில் உறங்கி விட்டான்.

அறையின் ஜன்னல் அருகில் உள்ள மரத்தின் கீழ் நின்று கொண்டிருந்து அந்த கறுப்பு உருவம்.

தொடரும்..........
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரஃபீஸ் மொஹம்மது தம்பி

அந்த கருப்பு உருவம் ஆணா? இல்லை பெண்ணா?
அப்புறம் நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கே
"என்னோடு" ன்னு வரணும்
"என்னடா" or "என்னட" இல்லை தம்பி
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top