யாழியின் ருத்ர கிரீசன் - 18

Advertisement

cover (16).jpg

யாழியின் ருத்ர கிரீசன் - 18

பாறையிலிருந்து ஜோடியாய் கட்டிபிடித்தபடி அருவியின் நதியில் விழுந்த பிரகாஷும் சமியும் தண்ணீரின் உள்ளிருந்து மேல் எழுந்தனர்.

முகத்தில் இருந்த நீரை கைகளால் வழித்து விட்டு பிரகாஷை பார்த்து கேட்டாள் சமி.

சமி : என்னாச்சி ?

பிரகாஷ் : ஐயோ ! இப்போ யாரா இருக்கான்னு தெரியலையே ?! பகலதினா பரவால்ல. எதோ அப்படி இப்படினு இருக்கும். சமியா இருந்தா பகலதியா மாறா ட்ரை பண்ணுமே.

சமி : என்ன சத்தம் அங்கே ? ஏன் ஒரே கூட்டமா இருக்கு ?

சமி கேட்டுக் கொண்டே நதியிலிருந்து எழுந்து சத்தம் வந்த திசை நோக்கி சென்றாள். பிரகாஷும் பின்னாலே சென்றான். காரணம் அவள் கை காட்டிய இடத்தில் தமிழ் இருந்தான்.

அங்கே பார்த்தால், கீழே விழுந்த மித்ராவை நிகிலாவும் மற்றவர்களும் தூக்கி கொண்டு இருந்தனர். ஆனால், இத்தனைக்கும் காரணமான தமிழ் தாடையில் கை வைத்து தியேட்டரில் படம் பார்ப்பதை போல் அவளின் வலியை ரசித்துக் கொண்டிருந்தான்.

மித்ரா எழ கூட முடியாமல் வலியில் கதற நிகிலாவும் சமியின் அசிஸ்டென்ட் டைரக்டர் அஜய்யும் அவளை கைத்தாங்கலாக தூக்க முயற்சித்தனர்.

மித்ரா : முடிலே ! என்னால முடிலே ! வலிக்குது ! நிகிலா... நிக்க முடியில ! வலிக்கிது ! என்ன விடுங்க ! எழுந்திரிக்க முடியலே !

செத்து விடுவது போல் வலிக்கின்ற போதிலும் அவளின் பார்வை தமிழின் முகத்தையே பார்த்தது.

ஒரு முறையேனும் இரக்கம் கொண்டு இவளை பார்க்க மாட்டானா, ஓடி வந்து இவளை தூக்கிட மாட்டானா என்று ஏக்கத்தோடு வலியில் துடித்தாள் மித்ரா.

ஓடி வந்த பிரகாஷ் அனைவரையும் விலக்கி மித்ராவை கைகளில் ஏந்தினான். டாக்டர்க்கு தெரியும் என்ன செய்ய வேண்டுமென்று.

அதனால் தான் வந்தவுடன் அவளை கைகளில் ஏந்தி அருகில் இருந்த கூடாரத்தினுல் நுழைந்தான்.

அவளை தூக்கி வரும் போதே அவன் கையெல்லாம் ரத்தத்தில் நசநசத்தது. பிரகாஷுக்கு அடி மனதில் ஒரு டவுட் உருவாகி அது இப்போது கான்போர்ம் ஆகி இருந்தது.

இருந்தும் அதை அவன் மற்றவர்களின் முன்னிலையில் பகிங்கரப்படுத்தி கொள்ளவில்லை.

உயிர் போகும் வலியில் தலை சுத்தியது மித்ராவுக்கு. காலையிலே வேறு தமிழ் தண்ணீரில் முக்கி எடுத்து பாதி அவளை சாகடித்து விட்டான்.

அதிலிருந்து தெளிந்து உணவு கூட சாப்பிடாமல் குமட்டலும் வாந்தியுமாய் கிடந்தவளை ஒரேடியாக படுக்க வைக்க தமிழ் நடத்திய கால் தடுக்கல் நாடகமும் சிறப்பாகவே அரேங்கேறியிருந்தது.

யாரின் கூடாரமோ தெரியவில்லை. அங்கிருந்த ஒரு டி-ஷர்ட்டை எடுத்த மாட்டிக் கொண்டான் பிரகாஷ்.

பிரகாஷ் : I need a stethoscope ! Faster !

பிரகாஷ் சுத்தமாய் மறந்து விட்டான். இது ஒன்றும் அவனின் மருத்துவமனை அல்ல. அவன் கேட்டது உடனே கிடைக்க.

அதுவும் பிரகாஷ் ஒன்றும் இது போன்ற விஷயங்களை கவனிக்க தெரிந்த டாக்டரும் இல்லை. அவன் ஒரு நியோரோசர்ஜன்.

மனித மூளையின் நரம்புகளை கூறு போடுபவனிடம் வயிற்றில் அடி பட்டு கிடக்கும் இவளை என்ன செய்ய சொல்வது. இதையெல்லாம் stethoscope இன்றி ஒருவனால் மட்டுமே நிவர்த்தி செய்திட முடியும்.

அவனும் முறுக்கி கொண்டு இருக்கிறான். அதை விட முக்கியமான விசியம் அவளின் இந்நிலைக்கு காரணமே அவன்தானே.

மித்ராவை ஆறடிக்குள் இறக்காமல் தூங்கிடவே மாட்டான் தமிழ். இப்படித்தானே கங்கனம் கட்டிக் கொண்டு திரிகிறான்.

அப்படிபட்ட அவனிடம் மித்ராவை காப்பாற்ற உதவி வேண்டும் என்றால் சுத்தம். அவ்வளவுதான். கெட்டது எல்லாம் போ !

எப்போது இவளை கொல்லலாம் என்று காத்திருப்பவனுக்கு நல்ல ரூட்டு போட்டு கொடுத்ததை போல் ஆகிவிடும்.

இருந்தாலும் வேறு வழியில்லையே. அவனை கூப்பிட்டுத்தான் ஆக வேண்டும். பிரகாஷ் அரை மயக்கத்தில் கிடப்பவளின் கையை பிடித்து பார்த்தான்.

அருகில் தவித்து போய் நின்ற நிகிலாவின் கையில் தண்ணீர் போத்தலை கொடுத்தான்.

பிரகாஷ் : நிகி பிளீஸ் மித்ராவே தூங்க விட்றாத ! உடம்பெல்லாம் விஷம் ஏறிடும் !

சமி : பிரகாஷ், நான் மெடிக்கல் கிட்ஸ்கு ஏற்பாடு பண்ணிட்டேன். within 30 minutes reach ஆகிடும். அதுவரைக்கும் எதாவது பண்ணுங்க. பிளீஸ் !

பிரகாஷ் சீரியஸான முகத்தோடு வெளியாகி தமிழை நோக்கி ஓடினான்.

பாறையின் மேல் படுத்து விரல்களில் நட்டு உடைத்துக் கொண்டிருந்த தமிழின் கையை பிடித்து இழுத்து தரதரவென கூட்டிக் கொண்டு போனான் பிரகாஷ்.

தமிழ் : டேய் ! விடுடா ! எங்கடா இழுத்துகிட்டு போறே ?

பிரகாஷ் : ஏ ! மித்ராவே கொல்ல கூட்டிகிட்டு போறேன் ! வா, ஒழுங்கா என் கூட !

தமிழ் : அவ சாவு என் கையில தான் ! அது எனக்கு நல்லாவே தெரியும். ஆனா, இப்போதைக்கு சாகடிக்க மாட்டேன் ! அவ துடிக்கறதே நான் பார்க்கணும் !

பிரகாஷ் : முட்டாள் மாதிரி பேசாதடா ! நீ ஒரு டாக்டர் ! நோ பர்சனல் ரிவேஜ் ஓவர் ஹியர் !

தமிழ் : இப்போ அவளை நான் காப்பாத்தணும் ?! அதானே ?! நோ வேய் ! நான் செத்தாலும் அது நடக்காது !

பிரகாஷ் : அடி இடி மாறி வாங்கிருவே மச்சான் ! ஒழுங்கா வந்துடு ! டைம் ஆகுது ! அவ அங்க செத்துக்கிட்டு இருக்கா !

தமிழ் : சாவுட்டும் ! என்னக்கென்னா ?! செத்து தொலையட்டும் ! பீடை ஒழிஞ்சதுனு விடுவியா !

பிரகாஷ் : இங்க பாரு மச்சான் எனக்கு இதெல்லாம் தெரியாது ! தெரிஞ்சா உன்கிட்ட கெஞ்ச மாட்டேன் ! நான் ஒரு டாக்டர் ! அதுக்கு அப்பறம் தான் பிரகாஷ் ! கெஞ்சி கேட்கறேன் அவ நிலைமை சரியா இல்லே ! ஒழுங்கா வந்துடு ! இல்லே அடிச்சி இழுத்துகிட்டு போவேன் !

தமிழ் : நீ என்ன அடிச்சாலும் சரி ! உதைச்சாலும் சரி ! அவளை நான் காப்பாத்த மாட்டேன் ! சாவோடோ வலி எப்படி இருக்கும்னு இப்போ அவளுக்கு தெரியும் ! என் பிரவீனாவுக்கும் அப்படித்தானே வலிச்சிருக்கும் ! இந்த ரெண்டு கையால என் குழந்தையை தூக்கி கொஞ்சனும்னு எப்படிலாம் கனவு கண்டிருப்பேன் ! அது எல்லாத்துலையும் மண்ணள்ளி போட்டுட்டு, இப்போ நீலி கண்ணீர் வடிக்கறாளா !

பிரகாஷ் : மச்சான் ! அவ தப்பே பண்ணிருந்தாலும், இப்போ நாம அவளை காப்பாத்தி ஆகணும் ! பிளீஸ் மச்சான் ! வாடா !

தமிழ் : வாய்ப்பே இல்லே !

பிரகாஷ் : என்னடா பிரவீனாவே கொன்னுட்டா கொன்னுட்டான்னு ! இல்லே நான் தெரியாமத்தான் கேட்கறேன் நிஜமாவே அந்த மித்ராதான் பிரவீனாவே கொன்னால ? சொல்லு ? சொல்லுடா ? நான் சொல்லட்டுமா அவளை யார் கொன்னான்னு ?! நீ ! உன் கோவம் ! நீ கெத்துன்னு நினைக்கறே உன் ஈகோ ! அதுதாண்டா உன் பொண்டாட்டிய கொன்னுச்சு ! மித்ரா இல்லே ! சாவே பொழைக்க கிடந்தவள யார் கொன்னான்னு நான் சொல்லட்டா ? உன் இப்போதைய பொண்டாட்டி பாப்பு ! அவளாலதானே பிரவீனா செத்தா ? இந்த மித்ராவலையா செத்தா ? மித்ரா தான் கத்தி எடுத்து பிரவீனா கழுத்த கிழிச்சாளா ? சொல்லு ! திமிர் எடுத்து போய் நீ ஆடான ஆட்டத்துக்கும் இன்டெர்ன்ல கத்தி புடிக்க தெரியாத உன் ராவ புட்டும் தான் பிரவீனா சாவுக்கு காரணம் ! இந்த மித்ரா இல்லே ! பிரவீனா, பாப்புனாலத்தான் செத்தாங்கரது உனக்கு தெரிஞ்சும் நீ அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டே ! ஏன் ? ஏன் பண்ணிக்கிட்டே ? சொல்லு ? சரிடா ! நீ அவ்ளோ நல்லவன்னா பிரவீனாவே தவிர வேறே பொண்ண நினைச்சிருக்கவே கூடாது ! அப்போ நீ சொல்றியா மித்ரா கெட்டவன்னு. நான் உன்னே ரெஸ்பெக் பண்றேன் மச்சான். இப்போ சொல்லாதே ! காரி மூஞ்சிலே துப்பிறுவேன் ! பாப்பு மேல உனக்கு எப்படி லவ் வந்துச்சி ? சொல்லு எப்படி வந்துச்சி ? பிரவீனாவோட அத்தனை உறுப்பையும் எடுத்து அவளுக்கு வெச்சதாலே வந்துச்சி, அந்த பாழா போன காதல் ! அது பாப்பு மேல உள்ள காதலா ?! இல்லே மச்சான் ! சத்தியமா இல்ல ! அது பிரவீனா மேல உள்ள காதல் ! அவ்ளோதான் ! பிரவீனாவோட ஹார்ட் எடுத்த மித்ராக்கு வெச்சிருந்த உனக்கு அவ மேலையும் காதல் வந்துருக்கும் ! நீ சைக்கோ டா ! உனக்கு உண்மையா பாப்பு மேல லவ் இருந்தா நீ மித்ராவே இப்படிலாம் பண்ண மாட்டேடா ! ஏன் தெரியுமா ?! நீ பிரவீனாவே மறந்திருப்பே !

பிரகாஷின் ஒவ்வொரு கேள்வியும் தமிழை செருப்பால் அடித்தது போல் இருந்தது.

பதில் பேசாமல் அமைதியாகவே இருந்தான் தமிழ்.

யாழியின் ருத்ர கிரீசன் வருவானா ! யாழியை மீட்டிடுவானா !
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top