யாருடன்? யார் நீ? Ep6

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
#1
யாருடன்? யார் நீ?
-செசிலி வியாகப்பன்

ஹாய் நட்புக்ளே
புதன் கிழமையே தர வேண்டிய எப்பி தாமதத்திற்கு மன்னிக்கவும். அண்ணி பாெண்ணுக்கு சடங்கு பங்சன் அதுல அம்மா கூட பிசி , அத முடிச்சு ப்ரீ ஆனதும் எலுமிசைக்கு மருந்தடிக்க, தண்ணீ பிடிச்சுொடுக்குறது, கடலை பிண்ணாக்கு உரம் பாேட்டு உழுது நாத்து பாவுரதுன்னு அப்பா கூட காெஞ்சம் பிசி. எல்லாம் முடிச்சு ப்ரீ ஆகி எப்பி டைப்பிங் முடிச்சு உங்களுக்கு தர தாமதமாகி விட்டது.

நீ லேட்ட வந்துட்டன்னு எனக்கு பனிஷ்மென்ட் காெடுத்துடாதீங்க. மீ பாவம்..... படிச்சு பாத்து மறக்காம கமென்ட் காெடுங்க... நாத்து நடவைக்கு பாேறதுக்கு முன்ன 5 இருந்து 8 எப்பி காெடுக்க பாக்கிறேன்.

தேடல் 6

"ண்ணா இது தான் நான் கேட்ட மாடல். எனக்கு இந்த கார் தான் வேணும்." என்று மதீஷா தன் விருப்பப்பட்ட மாடல் காரை கேட்லாக் புத்தகத்தில் பார்த்துவிட்ட சந்தோஷத்தில் துள்ளி குதிக்க, சிறுபிள்ளையாய் மாறிய தங்கையின் மகிழ்ச்சியில் மனம் நிறைந்தவனாய்

"உனக்கு ஓகே வா." என்று தங்கையின் விருப்பத்தை உறுதிபடுத்த மானவ் கேள்வி கேட்கும் நேரம் அவர்கள் அருகில் வந்து சேர்ந்த ஷாே ரூம் மேலாளர்

"சாரி சார் இந்த கார் நீங்க கேக்கிற டேட்ல நாட் அவைலபிள். நீங்க வேற கார் பாருங்க. வி சோ யு சம் பெஸ்ட் கார்ஸ் ஒருவேளை உங்களுக்கு இந்த கார்தான் வேணும்னா யூ ஹேவ் டு வெயிட் 45 டேஸ் ஃபார் கிட்ஸ் கார்." என்று மதீஷா விரும்பிய கார் இல்லாததை கூறி வேறு பல வண்ண கார்களை காட்ட நினைக்க, மதீஷா

"அண்ணா ஐ டேண்ட் வாண்ட் எனிதிங் எல்ஸ். எனக்கு இந்த கார் தான் வேணும் அதுவும் என்னுடைய பர்த்டே அன்னைக்கு வேணும்." என்று குரலை உயர்த்தி பேச, அந்த தளத்தில் இருந்த ஊழியர்களும், கார் வாங்க வந்த சிலரும் திரும்பி பார்த்தனர்.

தங்கையின் இந்த செய்கை மானவ்விற்கே பிடிக்கவில்லை என்றாலும் கூட செல்ல தங்கையை கடிந்து கொள்ள மானமில்லை. சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் மதீஷா அடம்பிடிக்க மானவ்விற்கு தன் பொறுமை தன்னை விட்டு போய்விடுமோ என்ற பயம் வர ஆரம்பித்தது.

மதீஷாவை பொறுத்தவரை பிறந்தது முதல் 'இல்லை' என்ற வார்த்தையை தன் வாழ்வில் இல்லை என்னும் விதமாக வழக்கப்பட்டதால் அடம்பிடிக்கும் குணம் அதிகம். தேவை என்று அவள் வாயிலிருந்து ஒரு வார்த்தை உதிரும் முன்பே அவளுக்கு தேவையான பொருள்கள் அவள் முன் வைக்கப்பட்டு இருக்கும்.

நினைத்தது எல்லாம் நினைக்கும் முன்பே கிடைக்கப்பெற்ற மதீஷா இப்பொழுது தான் விரும்பிய காருக்காக அடம் பிடிப்பது ஒன்றும் பெரிய விஷயம் அல்லவே. மேலும் அரை மணி நேரம் மானவ், ஷோரூம் மேலாளர் இருவரும் எவ்வளவு எடுத்துக்கூறியும் மதீஷா தன் பிடியில் இருந்து இறங்கி வராமல் இருக்க, வேறு வழி இல்லாத மேலாளர் சஜனியை அழைத்து விஷயத்தை சுருக்கமாக கூற அடுத்த சில நிமிடங்களில் சஜனி மானவ் முன்பு பிரசன்னமானாள்.
கண்ணாடி சுவருக்கு மறுபுறம் நடந்து வந்து கொண்டிருந்த சஜனியின் தோற்றத்தில் மானவ் இதயம் ஒரு நொடி நின்று துடிக்க ஆரம்பித்தது. சஜனியை மனதில் தன்னவளாக நினைக்க ஆரம்பித்து விட்டதாலோ என்னவோ மானவ் கண்கள் உரிமையுடன் தன்னவளை ரசிக்க ஆரம்பித்தது.

கருப்பு நிற ஜீன்ஸ், வெள்ளை நிற சட்டை அதன் கைகளை முழம் கை வரை மடித்து விட்டிருந்தாள். வழக்கம் போல விரித்து விடப்பட்ட கார் கூந்தல் அவள் தோள்களில் நடனம் புரிய, கால்களில் அணிந்திருந்த கீல்ஸ் செருப்பு சத்தம் அவள் வருகையை முன்னறிவிக்க வந்தவளை தன் கண்களில் வழியே மனதில் நிறைப்பிக் கொண்டான்.

இனி யாரை பார்க்க கூடாது என்று சஜனி தனக்குள் சபதம் எடுத்துக்கொண்டாளோ அவனை சில மணி நேரத்திலே தன் ஷோரூமிலே சந்திப்போம் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. நடந்து வரும் போதே மானவ்வை பார்த்துவிட்ட சஜனி எதிர்பாராமல் சந்தித்ததில் எற்பட்ட படபடப்பை சமாளித்துக் கொண்டு,

"ஹல்லோ மானவ் நீங்க எங்க இங்க?" என்று இயல்பாக வினவ, அதற்குள் அருகில் இருந்த மேலாளர் நடந்ததை கூற,

"இட்ஸ் ஓகே ரவி, இவங்க எனக்கு தெரிஞ்சவங்க தான். ஐ வில் டேக் கேர் ஆஃப் தேம்."என்று கூறி இருவரையும் தனது அறைக்கு அழைத்துவந்தாள்.

மானவ், மதீஷா இருவரையும் சஜனி தனது அலுவலக அறையின் இடது புறம் இருந்த தனது பிரத்யாக பயன்பட்டு இடத்தில் அமர வைத்து அவர்களுக்கு குடிப்பதற்கு தன் கையால் பழச்சாறு கொடுத்த பின்பு அவர்கள் வந்த விஷயம் பற்றி பேச ஆரம்பித்தாள்.

வந்ததில் இருந்து சஜனி நடவடிக்கையை கவனித்துக் கொண்டிருந்த மானவ், சஜனி ஒருமுறை மட்டுமே சந்தித்த தனக்கும், இதுவரை சந்தித்தே இராத தன் தங்கைக்கும் முக்கியதுவம் கொடுத்து அவள் அறைக்குள் அழைத்து வந்தது, உள்ளே வந்ததும் தனது நாற்காலியில் அமராமல் தங்களை சொந்த உபயோக பகுதிக்கு அழைத்து வந்து தங்களுடன் அமர்ந்தது, வேலையாளை ஏவாமல் தன் கையால் பழச்சாறு கொடுத்தது என்று அவள் அனைத்து செயல்களும் ஈர்ப்பாய் அவன் மனதில் நுழைந்த உணர்வை காதல் பரிணாமத்திற்குள் இழுத்து சென்றது.

பழச்சாறு அருந்தும் நேரத்திற்குள் சஜனி மூளை சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்று வேகமாக யோசிக்க ஆரம்பித்தது. மதீஷா கேட்பது ஒன்றும் சாதாரணமாக கிடைக்கும் பொருள் அல்ல. கேட்ட உடன் கொடுப்பதற்கு.

என்ன தான் சஜனி திறமையாக தொழிலை நடத்தினாலும் அவளுக்கு இந்த கார் ஷோ ரூம், வாடிக்கையாளர்களை கையாள்வது என்பது புதிதே. இரண்டு வருடங்களுக்கு முன்பு ஷோ ரூமை துவங்கி, அதுவும் அரம்பத்திலே பல கோடிகளை தண்ணீராக செலவளித்து ஆரம்பித்த தெரழிலில் சஜனி விழ்ந்து விடாமல் இருக்கு மிகவும் கவனமாக இருக்கு வேண்டியது அவசியமானதும் கூட.

ஆரம்பம் முதலே பாதி பணம் கட்டி முன்பதிவு செய்த பிறகே சஜனி கார் விற்பனை ஒப்பந்ததிற்குள் நுழைவாள். கார் ஒப்பந்தம் கையொழுத்தான 30 இருந்து 40 நாட்களுக்குள் வாடிக்கையாளருக்கு கிடைக்கும் படி இருக்கும். பணம் மதிப்பில் அதிகம் உள்ள கார்களையும் பைக்குகளையும் அதிகளவில் இருப்பு வைப்பது சஜனிக்கு சாத்தியமிருந்தாலும் அகல கால் வைக்க விரும்பவில்லை.

இருப்பு வைத்திருப்பது விற்காமல் தேங்கி விட்டால்?
நாள் கணக்கில் தேங்கும் கார் எண்ணிக்கையால் புதிய மாடலுக்கு இடமில்லாமல் போய் விட்டால்?
பழையதை தள்ளுபடி செய்யது விற்பனை செய்யும் மட்டமான வழிமுறையை கையாளும் சூழ்நிலை வந்து விட்டால்?

இப்படி பல காரணங்களுக்காகவே சஜனி அதிகம் யோசிப்பாள். பாதி பணம் கைக்கு வந்த பிறகே கார், பைக் ஆடர் ஏற்று கொள்ளப்பட்டும். ஒவ்வொரு வார புதன் கிழமையும் தேவையான கார், பைக், உதிரி பாகங்களையும் ஆடர் செய்து வரவழைப்பாள். பொருட்கள் வந்து சேர எடுத்துக் கொள்ளும் நாட்கள் அதன் பிறகு வேலை முடிய ஆகும் நாட்கள் என அனைத்தயும் கணக்கிட்டே பைக் வாங்குவதற்கு 15 தினங்களுக்கு முன்பும், கார் வாங்க 30 தினங்களுக்கு முன்பும் பதிவு செய்வது கட்டயம் என்ற கட்டுபட்டை உருவாக்கினாள்.

தன் உருவாக்கிய கட்டமைப்பின் படி மதீஷா விரும்பும் காரை அவள் பிறந்த நாளுக்கு முன்பு கொடுக்க முடியாது. அது மட்டுமின்றி கிறிஸ்மஸ் நைட் கொண்டட்டதிற்காக இலன்டன் செல்லவிருக்கும் சஜனி புத்தாண்டு கொண்டங்கள் முடிந்த பிறகே திரும்ப வர முடியும். தன் பயணத்தை திட்டமிட்டே தொழிலிலும் பல திட்டங்களை வகுத்திருந்தாள். பெரும்பன்மையான கொடுக்கல் வாங்கள் அனைத்தும் டிசம்பர் 22 முன்பும் ஜனவரி 2 பின்பும் இருக்குமாறு திட்டமிட்டு பயண நேரத்தை ஒதுக்கியிருந்தாள்.

கிறிமஸ், புத்தாண்டு இரண்டிற்கும் கார் புக் செய்தவர்களுக்கு தேவையான கார் அனைத்தும் டிசம்பர் 22 தயார் நிலையில் இருக்கும். டெலிவரி மட்டும் அவர்கள் விரும்பும் நாளில் இருக்கும். சஜனிக்கு என்ன செய்வது என்று யோசித்து முடித்ததும்

"மதீஷா வாங்க ஒரு டெஸ்ட் ட்ரைவ் பாத்துட்டு வரலாம்." என்று கூறி தன்னுடன் அழைத்து சென்றாள். உடன் வந்த மானவ்வை தடுத்துவிட்டு

"கார் உங்க சிஸ்டர்க்கு தான, சோ அவங்க மட்டும் போதும்."

மதீஷா கைகளில் கார் சீறி பாய அருகில் இருந்த சஜனி கார் கட்டுப்பாட்டை இழக்காமல் பார்த்துக் கொண்டாள். மேலும் சில கார்களை ஓட்டி பார்க்க செய்த பின்னே இருவரும் அறைக்குள் வந்தனர். புன்னகையுடன் பேசியபடி உள்ளே வந்த இருவரையும் கண்ணிமைக்கமல் பார்த்துக் கொண்டிருந்த மானவ்விற்கு இனிய ஆச்சர்யமாக மதீஷா வேறு காரை தேர்தெடுத்தது தான். நம்பமுடியாமல் பரர்க்க

"அண்ணா நான் கேட்டத விட இந்த கார் அட்வான்ஸ்டு மாடல் கார். சோ இதவே நான் வாங்கலாம்னு முடிவு பண்ணிடேன்." குதுகலமாக தங்கையிடமிருந்து சஜனி புறம் திரும்பிய மானவ்,

"விக்காத எங்க தலையில கட்ட பாக்குறீங்கலா?" என்று கேட்க, இது தன்னை சீன்டி பார்ப்தற்கான கேள்வி என்பதை உணர்ந்து,

"மிஸ்டர் மானவ் இந்த ஷோ ரூம்ல விக்காத கார், பைக் எதுவும் இல்ல, எல்லாமே பாதி பணம் கட்டி சேல்க்காக நிக்கிற வண்டி தான். இப்போ உங்க தங்கச்சிக்கு காட்டின கார் அவள் விருப்பப்பட்ட கார்ல இருந்து ஒரு ஐந்து லட்சம் அதிகமா இருக்கும் பட் அதுல உள்ளது எல்லாமே அட்வான்ஸ்டு டெக்னாலஜி இஞ்ஜின், பிச்சர்ஸ் இருக்க கூடியது. மதிஷாக்கு 80 கிலோ மீட்டர் ஸ்பீட் க்ராஸ் பண்ணும் போது கை, கால்ல அவள அறியாமலே ஒரு நடுக்கம் வருது, அது ட்ரைவிங்ல ரிப்லெக்ட் ஆகுது. சோ அவளுடைய ட்ரைவிங் ஸ்டைல்க்கு நான் காட்டுன மூனு கார்ஸ்சும் நல்ல சூட் ஆகும். அதுல உங்க தங்கச்சி செலக்ட் பண்ண கார் ஒரு செலப்ரெட்டி அவருடைய செக்கன்ட் ஓய்ப்க்கு புக் பண்ண கார்." என்று இயல்பாக கூற,

"இப்பாே அவர் புக் பண்ண காரை என் தங்கைக்கு கொடுத்துட்ட அவர் பிரச்சனை பண்ண மாட்டாரா?" என்று தங்களுக்கு உதவுவதால் சஜனிக்கு பிரச்சனை வருமோ என்ற ஐயத்தில் மானவ் கேட்க,

"பிரச்சனை வர வாய்ப்பு இல்ல. அவர் ஜனவரி 4 கார் டெலிவரி கேட்டிருக்கிறார். அதுமட்டும் இல்லாம ஐடி ரைடுக்கு பயந்து ப்ளக் மணில பினாமி பெயர்ல வாங்குற கார் சோ நோ ப்ராப்ளம். ப்ராபளம் வர சின்ன வாய்ப்பு இருந்த கூட அத நான் செய்ய மாட்டேன்." என்று தனக்கு பிரச்சனை எற்பட வாய்பில்லை என்று சஜனி விளக்கினாலும், ப்ளக் மணி ட்ரென்ஷாக்ஷென், முக்கிய பிரமூகர் இதையெல்லாம் நினைத்து மானவ் மனது சமன்பட மறுத்தது,

"மானவ் யூ டோண்ட் வொரி எபௌட் திஸ். அவங்களுக்கு தான் அது ப்ளக் மணி பட் எனக்கு எல்லாம் பக்கா வெய்ட் மணி தான்." என்று சஜனி மானவ்வை சமாதானம் செய்ய மேலும் சில நிமிடங்கள் தேவைப்பட்டது.

"அப்புறம் மானவ் தங்கச்சிக்கு கார் வாங்கி கொடுக்குறது ஓகே பட் அவங்களுக்கு ஒன் வீக்காவது எக்ஸ்பீரியன்ஸ்டு ட்ரைவர் கிட்ட கார் ட்ரைவிங் கேண்டில் பண்றத பத்தி கத்துக்கிட்ட நல்லது." என்று மேலும் பல பாதுகாப்பு தகவல்களை கூற அனைத்தயைும் பொறுமையுடன் மானவ், மதீஷா இருவரும் கேட்டுக் கொண்டனர்.

அனைத்த ஒப்பந்தம் பற்றி பேசி முடித்து பணத்தை சஜனி கணக்கிற்கு மாற்றிய பின்பு நேரம் ஏழு மணியை தாண்டி செல்ல அதை கவனித்த மதீஷா,

"அண்ணா மணி இப்பவே 7:10 இனி வீட்டுக்கு போக எட்டு மணிக்கு மேல ஆகிடும், அதனால நாம ஏன் ஹோட்டல் போக கூடாது எனக்கு கார் புக் பண்ணத செலப்ரெட் பண்ண மாதிரியும் ஆச்சு, எனக்கு புடிச்சத சாப்பிட்ட மாதிரியும் ஆச்சு." என்று அண்ணனை சமாளித்து ஒத்துக் கொள்ள வைத்துவிட்டு

"மிஸ் சஜனி நீங்களும் எங்க கூட வாங்களே." என்று சஜனியையும் தங்களுடன் வர சொல்லி கட்டாயப்படுத்த, மறுத்து பேச முடியாமல் சஜனியுடம் தன் காரில் அவர்களை பின் தொடர்ந்தாள்.

ஹோட்டலில் இருந்த 1 மணி நேரத்தில் சஜனி மதீஷா இருவரும் சிரித்து பேசும் அளவிற்கு தோழிகளாயின. நெடு நாளுக்கு பின் மனவிட்டு பேச கிடைத்த பெண் தோழியை சஜனிக்கு மிகவும் பிடித்து.(மானவ் தங்கச்சி அதுதான் முக்கிய காரணம்) தனக்கு ஐந்து வயது இளையவளான மதீஷாவிடம் தங்கை போன்ற பாசம் உருவாகவும் செய்தது.

இடையில் உணவை நகர்த்துவது தண்ணீர் எடுத்து கொடுப்பது, நன்றி கூறமல் புன்னகையை பரிசளிப்பது என்று மானவ் சஜனி இருவரின் நேரமும் புரிதலுடன் நகர்ந்தது.

சஜனி மனநிறைவுடன் வீடு திரும்ப, வேறு வழியின் அண்ணன் தங்கை இருவரும் பயணப்பட்டனர். செல்லும் வழியில் மதீஷா

"என்ன ண்ணா... உனக்கான இதயத்தை கண்டுபுடிச்சிட்ட போல." என்று சாதரணமாக கேட்டு வைக்க, தங்கையின் கேள்வியில் மானவ் மனதுக்குள் அதிர்ந்து தான் போனான். இருந்தாலும் அதை தன் தங்கையிடம் காட்டிக் கொள்ளாமல்

"நீயா எதாவது கற்பனை பண்ணீக்காத, இது தான் நான் சஜனிய பார்க்கிற இரண்டாவது முறை." என்று சமாளிக்க,

"ம்ஹீம்... நான் ஒத்துக்க மாட்டேன். அண்ணா நான் அடம் பிடிக்குற முரட்டு சுபாவம் உள்ளவ தான். அதுக்காக என்னை சுத்தி நடக்கிறத கண்டு பிடிக்க முடியாத அளவு முட்டாள் இல்ல. உண்மைய சொன்ன உனக்கு நல்லது இல்லன்ன நான் போன் பண்ணி சஜனி கிட்டவே கேட்டடுகிறேன்." என்று மிரட்ட வேறு வழியில்லாமல் மானவ் ஒத்துக் கொண்டான்.

"இப்போதைக்கு இது ஒன் சைட் தான் சீக்கிரமா டூ சைடா மாத்தனும் அதுவரைக்கும் நீ மூக்கு உள்ள நுழைச்சு ஆட்டத்த களைச்சு விட்டுடாத தீஷிமா ப்ளீஸ்." என்று கெஞ்ச, அவன் பாவப்பட்ட முகத்திற்காக விட்டு கொடுத்த மதீஷா

"ஓகே அண்ணா...என்ன அந்த சுப்பம்மா கொடுமையில இருந்து தப்ப வைக்க, எனக்கு ஒரு அழகாக, திறமையான அண்ணியை நீ செலக்ட் செய்தாதால ஒத்துக்கிறேன். சரி நீ எப்படி அம்மாவ ஒத்துக்க வைக்க போற." என்று கவலை பட,

"பஸ்ட் நான் உன் அண்ணிய சரி கட்டனும். அம்மாவ சரி கட்டுறது ஈசி, எனக்கு பிடிக்காததை அம்மா செய்ய மாட்டாங்க." என்று தாயின் மீது உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையில் பேச, விரைவில் அந்த நம்பிக்கை ஆட்டம் கான போவதை என் அவனிடம் கூறுவது.

விலகி செல்ல வேண்டும் என முடிவெடுத்த சஜனி இன்று எதிர்பாரமல் சந்தித்த மானவ் பற்றி சிந்தித்தக் கொண்டு இருந்தாள். இன்று அவன் பார்வையில் தன் மீதான ஆர்வதையும் தாண்டிய உணர்வை புரிந்து கொண்டவளுக்கு தன்னுள் எழும் நூதன உணர்வை கட்டுப்படுத்த முடியவில்லை.

"குடும்பத்தை பெரிச நினைக்கிற ஆம்பிளைங்களுக்கு அவங்கள நம்பி வாழ வந்த பொண்ணும் அவனுடைய குடும்பத்தில் ஒருத்தின்னு புரிஞ்சுக்க முடியல. மகனை உயிரா நினைக்கிறவங்களுக்கு அவன் உயிரை வயத்தில் சுமந்து பெத்து தருபவளை மனுஷியா கூட மதிக்க தெரியலை. நீ என்னைக்கும் காதலை நம்பி ஏமாந்து விட கூடாது. காதல் கண்ண மறைச்சு கல்யாணம் வரை கொண்டு வந்துடும். கல்யாணம் கண்ண திறந்து நிதர்சனத்தை புரிய வைக்கும் போது காதல் கானாம போயிடும்."

எட்டு வயதில் தாயின் தோழி தன்னிடம் புலம்பிய வார்தை இன்று சஜனி காதில் எதிரொலிக்க மகிழ்சிக்கும் வேதனைக்கும் இடைப்பட்ட மனநிலையில் சஜனி சிக்கி தவித்தாள்.

மானவ் சஜனி வாழ்வை மகிழ்விப்பானா?
அல்லது மீளா வேதனையை பரிசளிப்பானா?

தேடல் தொடரும்....
 
n.palaniappan

Well-Known Member
#4

இரண்டும் இல்லைல்ல
 
Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
#9
Good..Neenga vivasayathugu help panninathu romba santhosam sis..Keep it up:love::love::love:
நன்றி வேணி
நிச்சயமாக என் பணி விவசாயத்திற்கு உண்டு. அப்பாே தான் நுங்கு, பதினீ, இளநீ எல்லாம் எனக்கு மட்டும் நிறைய கிடைக்கும்.:whistle::whistle:
 
sveni

Well-Known Member
#10
நன்றி வேணி
நிச்சயமாக என் பணி விவசாயத்திற்கு உண்டு. அப்பாே தான் நுங்கு, பதினீ, இளநீ எல்லாம் எனக்கு மட்டும் நிறைய கிடைக்கும்.:whistle::whistle:
Wow super enjoy pannunga..Natural foods good for health always..
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement