யாருடன்? யார் நீ? EP 27

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
#1
யாருடன்? யார் நீ?
-செசிலி வியாகப்பன்


ஹாய் ப்ரெண்ட்ஸ்
ஒருபெரிய இடைவேளைக்கு பின் உங்களை சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ... இதாே அடுத்த எப்பி. இவ்னிங்குள்ள லாஸ்ட் எப்பி காெடுத்துட்டு காெஞ்ச நாளுக்கு டாட்டா பாேயிட்டு வரேன். மறக்காம என் எப்பிக்கு கமென்ட் லைக் காெடுத்துடுங்க..

தேடல் 27

சஜனி மானவ் கல்யாண ஏற்படுகள் வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட காதல் மனங்கள் இரண்டும் திருமண நாளை எதிர்பார்த்து காத்திருந்தது. நாள் நெருங்க நெருங்க சஜனி மனதிற்குள் ஏதோ தவறக நடக்க போவதை போல தோன்றி அவள் முகத்தில் கவலை கோடுகள் அவ்வபோது வந்து மறைய ஆரம்பித்து.

அந்த இனம் புரியா பயத்தை பற்றி யாரிடம் கூறுவது என தெரியாமல் சஜனி தவித்துக் கொண்டிருக்க, அவள் மீது உன்மையான பாசம் வைத்திருக்கும் நபர்களுக்கு அவள் முகமே அவள் மனதின் கவலையை காட்டி கொடுத்துவிட்டது. அதை நேரடியாக கேட்டு தெரிந்து கொண்ட அனைவரும் சொல்லி வைத்ததை போல எல்லா மணப்பெண்களுக்கும் வரும் திருமண பயம் என்று கூறிவிட அப்படி இருக்குமோ என்று சஜனியும் நினைக்க ஆரம்பித்தாள்.

ஆனால் அவளது கவலைகள் பொய்யல்ல நிஜம் என்பதை நிறுபிப்பதை போல அடுத்தத்து நடந்தேறிய நிகழ்வுகள் உறுதியான மனம் படைத்த சஜனியையே உருகுலைய வைத்தது.

முதலில் திருமண ஏற்பட்டை நிறுத்த கூறி முகம் தெரியாத நபர்களிடமிருந்து மிரட்டல் அழைப்புக்கள் வர அதை சஜனி பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அடுத்ததாக மானவ் வேறு பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போல புகைப்படக்களும் காணொலி காட்சிகளும் வர அதில் யார் இதை எல்லாம் செய்வது என யோசனை வந்தாலும் மானவ் மீது துளி சந்தேகம் கூட வரவில்லை.

இனியும் பொறுத்திருப்பது நல்லதல்ல என நினைத்த சஜனி நடந்த அனைத்தையும் மேத்யூ, சாலித் இருவரிடமும் தெரியப்படுத்திவிட, அதன் பலம் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு அதை செய்த நபர் பிடிபட, அவனோ சுபாஷினியை கை காட்டினான்.

"நீ பொண்ண இருக்க போய் இதோட விடுறேன்... இனி ஒரு தடவை எனக்கும் என் மானவ்க்கும் இடையில வந்த அப்புறம் உன்ன கொன்னு புதைக்கிறதுக்கு கூட தயங்க மாட்டேன்." என்று வீடு பகுந்த சஜனியின் நேரடி மிரட்டலில் சுபாஷினியின் பெற்றோர் அவளை அடக்கி வைப்பதாக வாக்களித்த பின்னே சஜனி அமைதியடைந்தாள்...

இங்கு சுபாஷினியின் ஆட்டத்தை அடக்கிவிட்ட நிம்மதியில் சஜனி இருக்க, அதை குழி தோன்டி புதைக்கும் நோக்கத்தில் ஆர்யா அதற்கான முயற்சியில் மானவ் பெற்றாேரிடம் நேருக்கு நேராகவே இறங்கினான். மானவ் பெற்றோர் இருவரிடமும் பேசிவிட்டு சென்ற பிறகு சஜனியுடனான தனது மகன் திருமணத்தை நிறுத்தி விடலாமா என்று கூட யோசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதை அறியாத மானவ் வழக்கம் போல வருங்கால காதல் மனைவியுடன் நேரம் செலவளித்துக் கொண்டிருந்தான்.

"சஜனி இன்னும் எவ்வளவு நேரம் வெய்ட் பண்ணனும்.... இட்ஸ் கெட்டிங் லேட்..." என்று மானவ் தான் அணிந்திருந்த வாட்ச்சை காட்ட, கார் இஞ்சினிலிருந்து தலையை நிமிர்த்திய சஜனி

"இதோ முடிச்சிடேன்... ஜெஸ்ட் டென் மினிட்ஸ் ப்ரெஸ் அப் ஆகிட்டு வேரேன்..." என்று தன் சொந்த உபாயோக அறைக்குள் சென்றவள் சொன்னது போலவே மின்னல் வேகத்தில் தயாராகி வந்திருந்தாள்..

இப்பொழுதெல்லாம் சஜனி முடிந்த வரை நவநாகரிக உடைகளை தவிர்த்துவிட்டு வெளியிடங்களுக்கு செல்ல சுடிதார், குர்தா, போன்ற உடைகளை மட்டும் தேர்தெடுக்க, அது மானவ் கவனத்தை கவரவே செய்தது. தனக்காக இவ்வளவு மெனக்கெட தேவையில்லை என கூறிய போது சஜனி தன் மாற்றத்தை விரும்பியே ஏற்றாள். இருவரும் புறப்பட்டு மனம் போன போக்கில் சுற்றிவிட்டு இறுதியாக கடற்கரையை வந்தடைய, இருவரும் ஒருவித அமைதியுடன் ஒருவர் மற்றவரின் அருகாமையை ரசித்துக் கொண்டிருந்தன.

"உன் ஷோ ரூம்ல இருந்து வரும் போது அந்த பொண்ணு ஏன் நம்மள முறைச்சு பார்த்தாங்க... ஐ திங் அவங்க கிட்ட ஏதோ ப்ராப்ளம் இருக்கு..." என்று மானவ் கேட்க, சஜனி எந்த பெண் என்று பதில் கேள்வி கேட்கவில்லை...

"ஆர்த்தி நம்மள முறைச்சு பாக்கல... என்ன மட்டும் தான் முறைச்சு பாத்திருப்பா..." என்று சரியாக கூற, ஏன்? என்று வினா மானவ் பார்வையில் தொக்கி நிற்க, அதை புரிந்து கொண்டவள்

"ஆர்த்தி எனக்கும்... சாலிக்கும்... ஜூனியர். சாலி மேல ஒன் சைட் லவ்... இது எல்லாம் இன்ஃபேக்சுஷேன்னு நான் சொன்னதுல சாலி ஆர்த்தி பக்கம் திரும்ப கூட மாட்டான்... அவ லவ் ஸ்டோரிக்கு நான் என்டு காட் போட்டது எப்படியோ அவளுக்கு தெரிஞ்சிட்டு. அதுல பாப்பா என் மேல கோபத்துல இருக்காங்க..."

"ஏன் அப்படி செஞ்ச? உனக்கு லவ் பிடிக்காதா?" என்று மானவ் வினவ

"லவ் பிடிக்காம தான் மேத்யூக்கு ஹெல்ப் பண்ணேனா.... அவ லவ் ப்ரெபோஸ் பண்ணும் போது வி ஆர் ஜெஸ்ட் சிக்ஸ்டீன்... அவ போர்டீன்... அப்போ அது சரின்னு தோணல. இப்போ எனக்கு மட்டும் இல்ல சாலி அண்ட் ஆர்த்தி வீட்டுக்கும் ஓகே... நம்ம மேரேஜ் முடிஞ்ச நெக்ஸ்ட் 3 மந்த்ஸ்ல அவங்க மேரேஜ் சாலி பிக்ஸ் பண்ணிடான். அந்த அளவு சாருக்கு ஆர்த்தி மேல லவ்சு.."

"உனக்கு ஏன் ஔிர்மதியை பிடிக்கும்" என மானவ் கேட்க, அலை கடலை பார்த்து பேசிக் கொண்டிருந்த சஜனி திரும்பி

"பிகாஸ் ஷீ இஸ் மை ஹேப்பினஸ்..... நான் ரத்தினபுரியில ஒட்ட முடியாம கஷ்டப்பட்ட நாட்கள்ள ஔிர் கலகலப்பு மட்டும் தான் என்ன சிரிக்க வைச்சுது... தமிழ் சரியா தெரியாத என்ன எல்லாரும் வித்தியாசமா நினைச்சு பேச மாட்டாங்க... தனிமையில இருந்த எனக்கு அவங்க செய்யிற சேட்டைய வேடிக்கை பாக்கிறது பிடிக்கும்...."

"பட் நீ அவங்க கூட பேசினதே இல்லயே..." என்று தன் மனதின் சந்தேகத்தை கேட்க,

"சில விஷசயங்கள் மாற கூடாதுன்னு ஆசை எல்லாருக்கும் இருக்கும்... எனக்கு இருந்த ஒரே ஆசை ஔிர்மதி... அவங்களுக்கு சின்ன வயசுல மார்டன் அண்ட் இங்லீஷ் பேசுறவங்கள பாத்தாலே புடிக்காது... ஒருவேளை நான் அவங்க கிட்ட பேச போய் அவங்க என்ன பிடிக்கலன்னு சொல்லிட்டா? அதான் பேசுனதே இல்ல... மறைஞ்சு நின்னு பாத்துட்டு வந்துடுவேன்....

வேற ஸ்கூல்... வேற ஊர்ன்னு மாறினாலும் வாய்ப்பு கிடைக்கும் போதுல்லாம் பாத்துட்டு வந்துடுவேன். லாஸ்ட் ஃபைவ் இயர் பாக்க முடியால... பட் ஔிர் ப்ரெண்ட் லெனின் எங்க சர்ச் சோ அவங்கள ப்ரெண்ட் ஆக்கி விசாரிச்சதுல ஔிர் டெல்லில இருக்கிறத தெரிஞ்சிகிட்டேன்... அப்புறம் நடந்த ஏட்போட் மீட்டிங் எல்லாம் உங்களுக்கு தெரியுமே..."

கல்யாண நாட்கள் நெருங்க நெருங்க இருவரின் உறவின் நெருக்கமும் அதிகரித்தது.... இடையே ஒருமுறை சஜனியை அழைத்துக் கொண்டு இலன்டன் வந்த மானவ் ரிச்சட் அனுமதியுடன் சஜனியை அங்குள்ள தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைபடி மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்ள இதை சஜனி கொஞ்சமும் ஏதிர்பார்க்கவில்லை...

"இப்பவும் சொல்றேன் நல்லா கேட்டுகோ.... ஒரு நல்ல வாழ்க்கை துணையா உன் வாழ்க்கை முழுதும் வர நினைக்கிற என்னுடைய உறவ வாழ்ந்து கோட்டுவேனே தவிர வார்த்தையாலயோ.... எழுத்தாலயோ காட்ட மாட்டேன்..." என்று மானவ் திருமண ஒப்பந்தத்தை செயல் வழியே ஒவ்வொன்றாக நிறைவேற்ற அதில் ரிச்சட் பெரிதும் ஈர்க்கப்பட்டார்....

இலன்டனிலிருந்து மனநிறைவுடன் திரும்பி வந்த மானவிற்கு வீட்டின் அமைதியான சூழ்நிலை பெரிய வியப்பை தந்தது... இன்னும் இரு வாரங்களில் திருமணம் என்ற நிலையில் அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாதது வியப்பளிக்க, பெற்றவர்களின் முகத்தில் காணப்பட்ட கலக்கம் விடை தெரியாத பல கேள்விகளை தன்னகத்தே கொண்டிருந்தது.

"ப்பா.. ம்மா.. எனி ப்ராபளம் நான் இல்லாத ஒரு வாரத்துல எதாவது பிரச்சனையா? என்கிட்ட ஏன் சாெல்லல?" என்று கேட்க,

"ப்ரச்சனை தான் பட் அத பத்தி பேசுறதுக்கான சன்ஸ் நீ எங்களுக்கு தரலயே... மேரேஜ் பிக்ஸ் ஆகிட்டா சேஞ்சஸ் வரது சகஜம் தான். ஆனா நீ நாங்க தேவையில்லன்னு யோசிக்கிற அளவு போவன்னு நினைக்கல." என்று பிரசாத் கோபமா பேச, மானவ் தந்தையின் புரிய அவதாரத்தில் அதிர்ந்து நின்றான்.

சிறு வயதிலிருந்து எதற்காககவும் கோவப்பட்டிராத தந்தையா தன்னிடம் கோபமாக பேசுவது என்று நினைத்தபடி தாயையும் தங்கையையும் பார்க்க, அவர்கள் முகமும் அதே உணர்வுகளை பிரதிபலித்தது.

"ப்பா என்ன நடந்துச்சுன்னு தெளிவா சொல்லுங்க... உங்க கோபத்துக்கு காரணம் தெரியாம தலை வெடிக்கிற மாதிரி இருக்கு... இட்ஸ் ஹட்ஸ் மீ எ லட்..." என்று இதயத்தை தொட்டு காட்ட, திவ்யா

"எங்களுக்கு கூட தான் நீ செய்யுறது கஷ்டத்த கொடுக்குது.... காதல் உன் கண்ண மட்டும் இல்ல குடும்பத்தையும் மறைச்சிட்டு...." என்று வருத்தப்பட, அதன் காரணம் புரியாது மானவ் தவிக்க, அதன் விடையை பிரசாத் மானவ் முன் வைத்தார்.

பிரசாத் தன் முன் வைத்த பொருளை எடுத்து பார்த்தவன் ஒருவித அலட்சிய மனோ பாவத்துடன் அதை கீழே வீசி விட்டு

"இதுக்காகவ இவ்வளவு ரியாக்ட் பண்ணீங்க. ம்மா.. ப்பா.. இது இலன்டன்ல ஒரு பார்ட்டில சஜனி டான்ஸ் ஆடும் போது எடுத்தது. நான் கூட அப்போ அங்க தான் இருந்தேன். இதுக்காகவா இவ்வளவு பீல் பண்றீங்க..."என்று சாதாரணமாக கூற, அதில் மற்றவர்களிடம் அதிர்ப்தி வெளிப்படவே செய்தது.

"ஓகே மானவ் நீ சொல்ற மாதிரி இந்த போட்டோ ஜெஸ்ட் டான்ஸ்ன்னு அவாய்ட் பண்ணிடலாம்.... ஆனா இத என்ன பண்ணலாம்ன்னு சொல்லு..." என்று ஒரு பத்திரத்தையும் சில புகைப்படத்தையும் தர இம்முறை மானவ் வெளிப்படையாகவே அதிர்ந்தான்.

எனெனில் அதில் இருப்பது சஜனி தன்னிடம் கையெழுத்து கேட்ட திருமண ஒப்பந்த பத்திர நகல்... மற்றும் சஜனி மானவ் இருவருக்கும் இலன்டனில் நடைபெற்ற திருமணத்திற்கான நிழல் ஆதாரங்கள்.... யார் இதை எல்லாம் அனுப்பியிருக்க கூடும் என மானவ் மூளை வேகமாக யோசிக்க ஆரம்பித்தது....

"எங்கள பிரிஞ்சு போறதுன்னு முடிவு பண்ணிடியா மானவ்... பெத்தவங்க உறவு அவ்வளவு தானா?" என்று பிரசாத் நிறுத்தி நிதாரனமாக கேட்க, அவரை நிமிர்ந்த பார்த்த மானவ்

"ப்பா இப்ப நான் சொல்ற விஷயம் உங்களுக்கு புரியுமான்னு தெரியல... சஜனி சின்ன வயசு பத்தி எல்லாம் உங்களுக்கு தெரியும்... எனக்கு அவள முழு மன நிம்மதியோட திருமண வாழ்க்கைக்குள்ள கொண்டு வர இந்த இலன்டன்ல நடந்த மேரேஜ் தேவைபட்டுச்சு... தென் இந்த பத்திரத்தில நாங்க ரெண்டு பேரும் சைன் பண்ணல... இது வெறும் பேப்பர் இது எந்த உறவையும் தீர்மானிக்க முடியாது. நான் எப்பவும் உங்க மகன் தான். என்னைக்கும் இதுல கையெழுத்து போட மாட்டேன்..." என்று மானவ் தன் நிலை கூறிவிட அதன் பிறகு திருமண ஏற்பாடுகள் ஒருவித தயக்க நிலையிலே நடைபெற்றது...

இதனிடையே பெரியவர்கள் பிரச்சனைக்கும் தனக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்னும் விதத்தில் சஜனியுடம் ஒட்டிக் கொண்டு திரிந்த மதீஷா தன்னை பின் தொடர்ந்த கண்களை கவனிக்கவில்லை...

விடிந்தால் திருமணம் என்ற நிலையிலும் திவ்யா, பிரசாத், இருவரும் அரைகுறை மனதுடன் அனைத்திலும் பங்கேற்க, அது சஜனி கவனத்திற்கு வர, பலமுறை கேட்டு மதீஷா மூலம் தெரிந்து கொண்ட சில தகவல்கள் என்ன நடந்திருக்கும் என்பதை உணர்த்த சஜனி திவ்யாவிடம் வந்து

"நீங்க எதுக்காகவும் ஒரி பண்ணிக்காதீங்க ஆன்டி... நானே இந்த மேரேஜ்ஜ ஸ்டாப் பண்றேன்..." என்று கூற வைத்தது.

"சாரி ஆன்டி நான் உங்க மனச எவ்வளவு கஷ்ட படுத்தியிருந்த நீங்க இவ்வளவு வருத்தபட்டுருப்பீங்க.... எனக்கு அப்போ வேற வழி தெரியல... ஐ வாஸ் இன் கன்ப்யூஷன்... இப்பாே புரியுது. தப்பு தான்... என் பேரன்ஸ் லைப்ப வைச்சு நான் முடிவெடுத்துருக்க கூடாது....நீங்க எதுக்காகவும் ஒரி பண்ணிக்காதீங் ஆன்டி... நானே இந்த மேரேஜ்ஜ ஸ்டாப் பண்றேன்..." என்று கூற, அவளை தடுத்த திவ்யா

"உன் தப்ப நீ ரியலைஸ் பண்ணா மட்டும் போதும். வேற எதுவும் எனக்கு தேவையில்ல... நடந்து முடிஞ்ச விஷயத்த மாத்த முடியாது... பட் இனி நடக்க போறதுல கொஞ்சம் கவனமா இரு..." என்று திவ்யா கூற, அவர் உள்ளங்கையில் தன் கையை வைத்த சஜனி,

"ஐ ப்ராமிஸ் யூ ஆன்டி... என்னால குடும்பம் பிரியாது... எனக்கு என் குடும்பம் வேணும். நீங்க எல்லாரும் தான் என் குடும்பம்..."என்று சஜனி முழு மனதுடன் கூற, திவ்யா மன நிறைவுடன் சஜனியை அணைத்துக் கொண்டார்.

திவ்யாவிடம் பேசிவிட்டு சஜனி தனது அறைக்கு வர, அவள் அலைபேசி பல முறை அழைத்து ஓய்ந்திருந்தது. முக்கியமான விஷயத்தை தவிர தன்னை அழைக்க வேண்டாம் என சஜனி கூறியிருக்க, அலுவலக எண்ணிலிருந்து வந்த தவறி அழைப்புக்களை பார்த்து புருவங்களுக்கிடையே முடிச்சு விழ, ஆர்த்திக்கு அழைத்தாள்... மறுபுறம் கூறப்பட்ட தகவலில் திகைத்த சஜனி தன்னை திடப்படுத்திக் கொண்டு

"போலீஸ் கேஸ் வேண்டாம் ஆர்த்தி ஜெஸ்ட் லீவ் இட்... நான் இத பாத்துக்கிறேன். சிசி டீவி புட்டேஜ் எல்லாம் டெலிட் பண்ணிடு.... புது ஹர்ட் டிஸ்க்ல தேவையானத ஸ்டோர் பண்ணி அத சிஸ்டம்ல வை... ஷோ ரூம்ல இருக்கிற தேவையில்லாத எல்லா பொருளையும் மினிஸ்டர் பினாமி கொடவுன்க்கு நம்பிக்கையான ஆள்கள் மூலமா மாத்திடு... உன் கிட்ட என் வீட்டு கீ ஒன்னு இருக்கு தான... சாலித்த கூட்டிக்கிட்டு போ... என் ரூம் லாக்கர ஒன்ஸ் செக் பண்ணு..." என்று அடுக்கடுககாய் கட்டளை பிறப்பித்தபடி இருந்தாள்.

இன்னும் ஆறு மணி நேரத்தில் திருமணத்தை வைத்துக் கொண்டு சஜனி மணதில் அமைதியின்றி தவித்துக் கொண்டிருந்தாள். நேரில் சென்று பிரச்சனை தீவிரமடையாமல் தவிர்த்துவிட முடியும்... ஆனால் தான் மண்டபத்தில் இல்லாத விஷயம் காட்டுத்தீ போல பரவும் ஆபாயம் இருப்பதால் நெருப்பின் மீது அமர்ந்திருப்பதை போல இருந்தாள்.

வள்ளி திருமண வேலைகளில் பிஸியாக இருக்க, மற்றவர்களுக்கு சஜனியை கவனிக்கும் அவசியம் இருக்கவில்லை... திவ்யா சஜனியின் சமாதானத்தை ஏற்றுக் கொண்டாலும் திருமண ஒப்பந்த விஷயம் ஒருவித நெருடல் இருந்து கொண்டே அவராலும் சஜனியிடம் சகஜமாக இருக்க முடியவில்லை... சாதாரணமாக மணப்பெண்னை சுற்றியிருக்கும் உறவு கூட்டம் இல்லாது போக சஜனி தவிப்பு யாரையும் சென்றடையவில்லை...

நண்பர்களுக்கு விருந்து கொடுத்து முடித்துவிட்டு வந்த மானவ், தன்னவளை காண வேண்டும் என்ற ஆவல் மேலிட நடு இரவில் இனிய அதிர்ச்சி கொடுக்க நினைத்து வர, அவளோ ஏற்கெனவே அதிர்ந்த தோற்றத்தில் தான் இருந்தாள். தான் உள்ளே வந்ததை கூட உணராமல் கையில் இருந்த செல்போனை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவளின் தோளை தொட, கனவிலிருந்து விழித்தவளை போல மலங்க மலங்க விழித்தாள்....

"சஜனி ஆர் யூ ஓகே..." என்று பரிவுடன் கேட்க, அனைத்தையும் கூற ஆரம்பித்தாள்.

"வெற்றி ஷோ ரூம்ல வச்ச பாக்ஸ எடுத்தாச்சு... எனி டைம் ரைடு வர சான்ஸ் இருக்கு. என்னோட ஷோ ரூம்ல சில கார்ஸ்ல இம்பார்ட்டன் டாக்குமென்ட்ஸ் இருக்கு... அது எல்லாம் அரசியல்வாதிகள், பிசினஸ் மேன்ஸ்க்கு சொந்தமான கார்ஸ். புக் பண்ணதுக்கு அப்புறமும் பல மாசமா ஷோ ரூம்ல தான் இருக்கும். இன்கம் டாக்ஸ் மட்டும்ன்னா ஔிர் மூலம் எனக்கு தகவல் கிடைச்சிடும்னு வேற எதோ பெரிசா ப்ளன் பண்ணிருக்காங்கன்னு நினைக்கிறேன்...."

"ப்ளன் பண்ணிருக்காங்கன்னா.... யாரு? எதுக்காக இதெல்லாம் பண்ணனும்? அவங்களுக்கு இதுல என்ன லாபம்? அப்படிப்பட்டவங்களுக்கு வெற்றி ஏன் உதவி பண்றான்..." என்று மானவ் பல கேள்விகளுக்கு விடை தேட, சஜனி

"யார்? இந்த ஒரு கேள்வியை தவிர எல்லாத்துக்கும் ஓரளவு பதில என்னால சொல்ல முடியும்... இத எல்லாம் பண்றவங்க ஒரே நோக்கம் நாளைக்கு கல்யாணம் நடக்க கூடாதுங்கிறது மட்டும் தான். அப்புறம் வெற்றி..... கண்டிப்பா அவன் மனசுல துளி கூட கெட்ட எண்ணம் கிடையாது. ஏதோ ஒரு விதத்துல நான் அவனன மனச கஷ்டப்படுத்திருக்கேன், அதுக்கான பதில் தான் இது.

என்னோட வருத்தம் எல்லாம் வெற்றி மனசில இருக்கிற வன்மம் அவன அழிச்சிட கூடாது. நாளைக்கு ரைடு நடந்தா என் கல்யாணம் நிக்கலாம்... ஆனா விசாரணை ஆரம்பிச்சிட்டா அதுல மாட்டப்போறது வெற்றி தான். முடிஞ்ச வரை எல்லாத்தயைும் சரி பண்ணிட்டேன். பட் எங்ககோ எதையோ மிஸ் பண்ணிட்ட மாதிரி தோனுது..மேத்யூ முக்கியமான வேலையா தூத்துக்குடி வரை பாேய்யிருக்கான் அவன் இருந்த என்ன பண்ணலாம்ன்னு சாெல்லியிருப்பான். வள்ளியம்மா பாவம் அவங்களுக்கு வெற்றி தான் உலகம்..." என்று அனைத்தையும் கூறி முடித்த சஜனி பாரம் தாங்காமல் தலையை தாங்கி பிடித்தாள்.

"என் கிட்ட சொல்லிட்டல்ல நான் பாத்துக்கிறேன்... சாலித், ஆர்த்தி நம்பர் மட்டும் சென்ட் பண்ணு."

மானவ்விடம் தனது மனபாரத்தை இறக்கி வைத்த சஜனி கவலைகளை மறந்து விடியலை எதிர்பார்த்து காத்திருக்க, காலை கதிரவனும் கண் திறந்து தன் கரங்களை விரித்து உலகத்ததை தன்னுள் இணைத்துக் கொண்டது.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes