யாருடன்? யார் நீ? EP 26

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
#1
யாருடன்? யார் நீ?
--செசிலி வியாகப்பன்


தேடல் 26


தேடல் 26

காரை விட்டு இறங்கிய சஜனி வீட்டிற்குள் செல்லாமல் மானவ் முகம் பார்த்து நிற்க, அவளருகில் வந்தவன்

"உள்ள போ சஜனி..." என்று மென்மையாக கூற,

"எனக்கு தனியா இருக்க பிடிக்கல மானவ்.... என்ன உன் கூட கூட்டிகிட்டு போறீயா?" என்று வெறுமையான குரலில் கூறியவளில் மீது இரக்கம் சுரக்க, அவள் கையை பிடித்து அழைத்துக் கொண்டு வந்த மானவ், தோட்டத்தில் இருந்த கல் இருக்கையில் அமர வைத்தான்.

அவள் முகத்தை தன்னிரு கைகளால் ஏந்தி கண்ணோடு கண் நோக்க, அவன் பார்வையின் தீட்சண்யத்தை தாங்கிக் கொள்ள முடியாத சஜனி தலை குனிந்தாள். அவள் சூழ்நிலையை சரியாக புரிந்து கொண்டவன் அவளின் முன் மண்டியிட்டு

"சஜனி எனக்கு உன்ன தனியா விடுட்டு பேறதுல விருப்பம் இல்ல... உன்ன என் கைகுள்ளயே பத்திரமா வைச்சு பாதுகாக்கனும்னு தான் நினைக்கிறேன். என் காலம் முழுக்க என்னுடைய ஒட்டு மொத்த காதலையும் உன் காலடியில வைக்கிறதுக்கும் தயார இருக்கிறேன். பட் என்னால மேரேஜ் அக்ரிமென்ட்ல சைன் பண்ண முடியாது.

வாழ் நாள் முழுசும் தொடரனும்னு நான் நினைக்கிற ஒரு பந்தத்துக்கு பாசம் தான் அடிப்படையா இருக்கனுமே தவிர பத்திரங்கள் இல்ல... நம்ம லவ் அண்ட் மேரேஜ் லைப்ல பிரச்சனையே வராதுன்னு என்னால சொல்ல முடியாது. ஆனா... எந்த ஒரு நிர்பந்தமான சூழ்நிலை வந்தாலும் நான் உன்ன விட்டு கொடுக்க மாட்டேன். நீ தப்பு பண்ணாலும் உன்ன திருத்துவேனே தவிர தண்டிக்க மாட்டேன்.

எதிர்காலத்தில நம்ம பிள்ளைகள் தப்பு செய்தா சொல்லி திருத்த முயற்சி செய்வோம்... அதே மாதிரி நம்ம குடும்பத்துல ஒருதர் நம்மள பத்தி குறைவா ஒரு வார்த்தை சொல்லிட்ட... நாம அப்படி இல்லன்னு வாழ்ந்து காட்டுவோம்." என்று மானவ் எந்த ஒரு இடத்திலும் நீ... என் குடும்பம்... என பிரித்து பேசாமல், நாம்... நம் குடும்பம் என சேர்த்து பேச அதில் நெகிழ்ந்த சஜனி அவனுக்கு சமமாக மண்டியிட்டு,

"அப்பாே என்ன இப்பவே நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போ... எனக்கு தனியா இருக்க வேண்டாம்.." என்று அடம்பிடிக்கும் குழந்தையாக கூற, அவளை கல் இருக்கையால் அமர வைத்து அவளருகில் அமர்ந்த மானவ்,

"நீ நம்ம வீட்டுக்குள்ள காலடி வைக்கும் போது எல்லா உரிமையும் இருக்கிற என் மனைவியா தான் வரனும் யாரோ ஒருத்தியா இல்ல... நம்ம லவ் வீட்டுல எல்லாருக்கும் தெரியும், சோ எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உன்ன கூட்டிக்கிட்டு போறேன்." என்று ஆயிரம் சமதானங்களை கூறி சஜனியை சமாதப்படுத்திவிட்டு மானவ் வீ்ட்டிற்கு வர நேரம் நடு இரவை நெருங்கியிருந்தது. மானவ் வரும் வரை மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவனுக்காக காத்திருக்க, அதில் புன்னகைத்தவன்

"நான் என்ன சின்ன குழந்தையா எதுக்காக இப்படி காத்திக்கிட்டு இருக்கனும்..." என்று அனைவரையும் செல்லமாக கடிய, அதற்கு திவ்யா பதில் கூறும் முன் இடையிட்ட மதீஷா

"ஹலோ ப்ரோ உனக்காக யாரும் வெய்ட் பண்ணல... உன் மனசுல அப்படி ஒரு எண்ணம் இருந்த அத இரேஷர் வைச்சு அழிச்சுடு ஓகே.... நான் என் எக்ஸம்க்கு படிக்கிறேன், எனக்கு கம்பெனி கொடுக்க ரெண்டு பேரும் இருக்காங்க..." என்று வழக்கம் போல தமையனை வம்பிழுக்க அவள் தலையில் வலிக்காமல் ஒரு கொட்டு வைத்த மானவ்

"ப்பா... ம்மா... என்ன விஷயம்?" என்று நேரடியாக கேட்க,

"மானவ் நாங்க உனக்கு பொண்ணு பாத்தோம் உனக்கு பிடிக்கல... நீயா உனக்கு ஒரு பொண்ண பிடிச்சிருக்கின்னு சொன்ன... பட் அத பத்தி இன்னைக்கு வரைக்கும் நீ பேசல... அப்பா கேட்டதுக்கும் டைம் கேட்டியாமே... என்ன நினைச்சிக்கிட்டு இருக்கிற மானவ். எங்களுக்கும் உன் லைப் பத்தி கவல இருக்கு.

இது தான் ரைட் எஜ் ஃபார் மேரேஜ் அத விட்டுட்டு லேட்டா மேரேஜ் பண்ணிக்கிட்டு தாத்தா பாட்டி ஆகுற வயசுல பிள்ளைகள்.... மத்த கமிட்மென்ட்ஸ் இத எல்லாம் லீட் பண்ண முடியாது புரிஞ்சுக்காே..." என்று திவ்யா மூச்சு விடாமல் பேச, அவருக்கு தண்ணிர் அருந்த கொடுத்துவிட்டு

"ம்மா காம் டவுன்.... உங்க விருப்பப்படி நான் இஷ்டப்பட்ட பொண்ணு கூட சீக்கிரம் மேரேஜ் பிக்ஸ் பண்ணிடலாம்.... ஆனா அதுல ஒரு சிக்கல் இருக்கு..." என்று மானவ் சஜனியின் பாட்டி பற்றி ஆதி முதல் அந்தமாக சொல்லி முடிக்க, திவ்யா நம்ப முடியாமல்

"இது என்னடா இப்படி சொல்ற... வழக்கமா சித்தி கொடுமை... பாட்டி தன் பேத்திக்காக போரடுவாங்கன்னு கேள்விப்பட்டுருக்கேன்... ஆனா நீ அத தலை கீழா சொல்ற. இப்படி கூட இருப்பாங்களா...!" என்று வியக்க,

"இருக்கிறாங்களே ம்மா... இதுல நீங்க தான் யோசிச்சு கல்யாண தேதிய சீக்கிரமா முடிவு பண்ணனும்.... ஷீ இஸ் ஃபிலிங் அலோன் ப்பா..." என்று சஜனியின் மனநிலையை ஒரே வாக்கியத்தில் பெற்றவர்களுக்கு கூறி முடித்துவிட, பிரசாத் தீவிர யோசனைக்கு பின்,

"திஸ் யுவர் லைப் மானவ்... நீ இது வரைக்கும் எடுத்த முடிவு ஓகே.... பட் இன் ப்யூஷர் லைப் நிறைய பிரச்சனை வரலாம் ஃப்ரம் சஜனி சைட் அண்ட் ஆல்சோ ஃப்ரம் யூ..... அத ப்பேஸ் பண்ண உங்க ரெண்டு மன உறுதிய விட, மனசில உங்க காதலுக்கான உறுதி இருக்கனும்." என்று அறிவுரைகள் பல கூற, அதை மானவ் ஆமோதித்தான்.

மானவ் பெற்றோர் திருமண காரியத்தை கையில் எடுத்துக் கொள்ள, அடுத்த கட்ட பேச்சு வார்த்தைகள் அனைத்தும் வள்ளியம்மை மூலம் நடைபெற்றது. நடக்கும் நிகழ்வுகளில் ஒன்ற முடியாமல் தவித்த இருவரை தவிர அனைவரும் சஜனி மானவ் திருமண ஏற்பாட்டில் மகிழ்ந்திருந்தன.

ஒருபுறம் வேலம்மாள் தன்னிடமிருந்து தன் மகனை பிரித்தவளின் மகளுக்கு அமைய இருக்கும் நல்ல வாழ்க்கையை நினைத்து நினைத்து வயிறெறிந்து கொண்டிருக்க, மறுபுறம் வெற்றி செல்வன் தன் தாய், அவர் வாழ்க்கையை அழித்த ஒருவரின் மகளுக்காக தன்னை விட்டு விலகுவது போல உணர்ந்தான்....

ஆம் வெற்றியை பொருத்த வரை கார்த்திகை செல்வன் அவன் தாய் வள்ளியம்மையின் வாழ்க்கையை அழித்தவர் தான். விவரம் தெரியாத வரை அவனுக்கு தன் வீட்டில் நிலவும் சிக்கலான உறவு பிரச்சனை புரியவில்லை... ஆனால் வளர வளர அவனுக்கு புரிந்த விஷயங்கள் எதுவும் உவப்பானதாக இல்லை....

வள்ளியம்மையின் படிப்பு கனவை சிதைத்து, பதினேழு வயதில் ஏழு வயது பெண்ணின் தந்தையுடன் நடந்தேறிய திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதிலும் சஜனிக்கும் வேலம்மாளுக்கும் இடையே எழும் வாக்குவாதத்தில் வள்ளியம்மையே மறைமுகமாக தாக்கப்பட சஜனியையும், கார்த்திகை செல்வத்தையும் வெறுக்க ஆரம்பித்தான்.

விடலை பருவத்தின் இடையில் இருப்பவனால் கார்த்திகை செல்வத்திடம் விலகியும், சஜனியின் பேச்சை எடுக்காமலும் மட்டுமே தன் கோபத்தை காட்ட முடிந்தது. அமைதியாக அவன் வெளிப்படுத்திய கோபம் சம்மந்தப்பட்டவர்களை சென்றடையாதது ஒன்று ஆச்சர்யம் அல்ல...

இருவரும் அவனிடம் பெரிதாக பழகியிருக்காததால் அவனின் கோபம் புரிந்திருக்கவில்லை. பின் நாட்களில் அவன் மனதில் கொழுந்துவிட்டு எரிய இருக்கும் கோபத்தீயின் வெம்மை தெரிந்திருந்தால் அவனின் மனதை மாற்ற முயற்சித்திருப்பார்களாே...!

பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் என்பது போல, யாரோ ஒருவரின் பாவச் செயல் சஜனியின் வாழ்க்கையில் வந்து விடியப்போவது தான் காலத்தின் தீர்ப்பா? மணப் பெண்ணாக மங்கல்யம் ஏற்க வேண்டியவளை தனிமை சிறையில் தள்ளிய விதியின் கோரத்தாண்டவதில் மீளுமா இரு காதல் இதயம்?
 
Saroja

Well-Known Member
#4
ரொம்ப அருமையான பதிவு
ஏன் வெற்றிச்செல்வன் என்ன செய்ய போறான்
சஜனிக்கு
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes