யாருடன்? யார் நீ? EP 23

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
#1
யாருடன்? யார் நீ?
-செசிலி வியாகப்பன்


ஹாய் ப்ரெண்ட்ஸ்
கிறிஸ்மஸ் செலபரேஷ்ன் பிஸில கதை பக்கம் கவனத்தை திருப்ப முடியல. ஒரு பக்கம் வீட்டு வேலை, இன்னாெரு பக்கம் அக்கா பசங்க, சர்ச்ல கிறிஸ்மஸ் பாட்டு க்ளாஸ் வேற. அதனால தான் தாமதம். இந்த அப்பாவி பிள்ளைய மன்னிச்சுடுங்க. புது வருடத்துக்கும் பிஸியா தான் இருப்பேன். அதனால கிடைச்ச நேரத்தில எப்பி டைப் பண்ணி வைச்சிட்டேன்.அடுத்த எப்பி செவ்வாய் காலை.... இந்த எப்பிக்கு மறக்காம லைக் கமென்ட் காெடுங்க.....தேடல் 23

அன்று....
சஜனி தன் முன் நகர்த்திய ஃபைலில் இருந்த செய்தியை படிக்க படிக்க மானவ் மனதில் சஜனி மீதிருந்த மாய பிம்பம் மறைய ஆரம்பித்தது. காதலுக்காக தன் வாழ்க்கையையே அவள் காலடியில் வைக்க தயாராக இருந்தாலும்; எந்த ஒரு சூழ்நிலையிலும் அவனால் ஏற்றுக் கொள்ள முடியாத சிலவும் உண்டு. அப்படிப்பட்ட செயலை செய்வதாக உறுதி கேட்கும் ஒப்பந்த பத்திரத்திரத்தை தன் முன் நீட்டி இதில் கையழுத்திட நிர்பந்திக்கும் சஜனியை விட்டு மனதளவில் மானவ் விலக ஆரம்பித்தது போல உணர்ந்தான்.

தனக்கு அதில் விருப்பமில்லை என்பதை தெரிந்த பிறகாவது அவள் தன் தவறை உணர்ந்து சஜனி வருந்துவள் என மானவ் நினைத்திருக்க, அவளோ மீண்டும் தன் முன் அந்த ஒப்பந்த பத்திரம் அடங்கிய ஃபைலை நீட்டியதை அவனால் அச்செயலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சஜனி மானவ்விடம் தந்தது திருமண ஒப்பந்த பத்திரம். அதின் சாரம்சம்

>அவர்கள் திருமணம் இலன்டனில் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற வேண்டும்.
>திருமணத்திற்கு பிறகு சஜனி அவள் தொழிலையும், ரிச்சட் நிர்வாகத்தின் கீழ் லன்டனில் இருக்கும் தொழில்களையும் நிர்வகிக்க மானவ் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது.
>சஜனிக்கு சொந்தமான எந்த சொத்துக்களிலும் மானவ் உரிமை கேட்க கூடாது.
>சஜனி பெயரில் உள்ள சொத்துக்கள் பிற்காலத்தில் இலன்டனில் தங்கி இருந்து அதை கவனித்துக் கொள்ளும் அவளுக்கு பிறக்கும் வாரிசை மட்டுமே சென்றடையும்.

முதல் நான்கு விஷயங்கள் கூட மானவ்வை பெரிதும் பாதிக்கவில்லை. இவற்றையெல்லாம் சஜனி வாய்மொழியாக கேட்டிருந்தாலே அவன் ஒத்துக் கொண்டிருப்பான். அவன் காதலித்தது சஜனியை மட்டுமே அவள் சொத்துக்களை அல்லவே. ஆனால் அதன் பிறகு இருந்த நிபந்தனைகளே அவனை கொதிப்படைய செய்தது.

>மணமுறிவு, பிரிவு இரண்டும் சஜனியின் விருப்பமே. அதற்கு மானவ் உடன்பட வேண்டும்.
>இருவரும் பிரிய நேர்ந்தாலும் மறுமணம் செய்ய மானவ் நினைக்க கூடாது.
>எந்த ஒரு சூழ்நிலையிலும் சஜனியின் கலாச்சார, வாழ்க்கை முறையை குறிப்பிட்டு மானவ் வீட்டார் இழிவாக பேசினாலோ, மணமுறிவு செய்ய தூண்டினாலோ மானவ் சஜனியுடன் இலன்டன் வந்து விட வேண்டும்.
>அப்படி சஜனியுடன் வர விருப்பமில்லதா பட்சத்தில் சஜனி எடுக்கும் முடிவுக்கு கட்டுபட வேண்டும்.

இன்னும் சில நிபந்தனைகள் இருக்க அதையெல்லாம் வாசிக்கும் பொறுமை கூட அவனுக்கு இருக்கவில்லை. ஏதோ ஒரு வேகத்தில் தன் கையை ஓங்கியிருந்தாலும், சஜனியை காயப்படுத்தும் அளவு மானவ் தனது சுய நினைவை இழக்கவில்லை. ஓங்கிய தன் கையை மானவ் இறக்கும் முன் சஜனி ஸ்மித்தின் பாதுகாப்பில் இருந்தாள்.

ஏற்கெனவே ஒப்பந்த பத்திரத்தில் சஜனி மீது கோபத்தில் இருந்தவனுக்க, ஸ்மித்தை கண்டதும் நேற்றைய நிகழ்வுகள் கண் முன் தோன்றி அவன் பொறாமை உணர்விற்கு தூபம் போட பல்லை கடிப்பதை தவிர வேறு வழியில்லை.

"அட் லாஸ்ட்... நீ உன் அம்மாவுக்கு பொண்ணுன்னு நிருபிச்சுட்ட." என்று மானவ் கூற, அதுவரை கலங்கி நின்ற சஜனி ஸ்மித்தின் கரங்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மானவ் சட்டை பிடித்து தன்புறம் இழுத்து

"மானவ் ஐ லவ் யூ. அதுக்காக என் அம்மாவ பத்தி ஒரு வார்த்தை பேசினாலும் நான் சும்மா இருக்க மாட்டேன். வாட் டிட் யூ சே..... எஸ் நான் சியோனா ஜூலி பொண்ணு சஜனி இம்மார்க்ரெட் தான்... பட் அவங்கள மாதிரி ஏமாளி இருக்க மாட்டேன்." என்று கோபத்தில் கத்த, அவள் கையை தட்டிவிட்ட மானவ்

"நானும் தான் உன்ன லவ் பண்றேன் அதுக்காக உன் காலுக்கு அடியில நாய் குட்டி மாதிரி இருக்கனும்னு நீ நினைச்ச ஐ சாரி டு சே திஸ்.... குட் பாய்...." என்று கூறி விட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தவன் அடுத்த விமானத்தில் சென்னைக்கு செல்ல தேவையான வேலையை ஆரம்பித்தான்.

"மார்க்ரேட்.... வொய் டூ யூ டு திஸ்?" என்று தன்னிடம் கேட்ட ஸ்மித்தை பார்த்த சஜனி,

"பிகாஸ் ஐ லவ் ஹிம்.... அட் தி சேம் டைம் ஐ டோண்ட் வாண்ட் டூ பி ஏ நெக்ஸ்ட் சியோனா." என்று கூறி விட்டு தளர்ந்து நிற்க, உற்ற தோழனாக அவளை தாங்கிக் கொண்டான்.

தன் திருமணத்திற்கு மானவ்வை அழைத்த மேத்யூ, சஜனி பற்றி விசாரிக்க மௌனம் மட்டுமே பதிலாக கிடைத்தது. தன்னிடம் எதுவும் கூற விரும்பாதவனை கட்டாயப்படுத்த விரும்பாத மேத்யூ

"ஒருவேளை உங்களுக்கு நடுவில் மிஸ் அண்டர்ஸ்டேன்டிங் இருந்த உன் ஈகோவ ஒதுக்கி வச்சிட்டு இறங்கி போகலாம். என்னடா இவன் அவனோட ப்ரெண்ட்டுக்கு சாதகமா பேசுறதா நினைக்காத மானவ். பணத்தை மட்டும் வைச்சு பார்த்த சஜனி ஃபான் வித் சில்வர்ஸ் ஸ்பூன் தான். ஆனா உண்மையிலே அவள ஒரு துரதிஷ்டசாலி. உன்ன மாதிரி எல்லாம் இருக்கிற ஒருத்தரலயும், என்ன மாதிரி எதுவுமே இல்லாதவனாலயும் சஜனிய புரிஞ்சுக்க முடியாது. ஏன்னா அவக்கிட்ட இருக்கிற எதுவும் அவளுக்கு சொந்தமில்ல; உரிமை இருந்தும் உறவு இல்ல. எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத ஒரு வாழ்க்கை தான் அவளோடது. நான் 'எல்லாம்'னு சொன்னது பணத்த இல்ல பந்த பாசத்தை." என்று சஜனியின் நிலையை விளக்கிவிட்டு செல்ல மானவ் யோசனையில் ஆழ்ந்தான்.

சஜனி பிறப்பு முதல் இப்போது வரை அவள் வாழ்ந்து வரும் சூழ்நிலையை நிதாரனமாக யோசித்து பார்த்தவனுக்கு, அந்த திருமண ஒப்பந்தம் பற்றிய சஜனி மனநிலையை ஓரளவு கணிக்க முடிந்தது. பாதுகப்பற்ற நிலையில் இருப்பவள் தனக்கான பற்று கோலாக அந்ந ஒப்பந்தத்தை பயன்படுத்த நினைத்திருப்பாள் என்ற முடிவிற்கு வந்தவனுக்கு சஜனி மீதிருந்த கோபம் முழுமையாக குறையவில்லை என்றாலும், காதல் மனது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சாமாதனமடைந்தது.

இலன்டன் சென்று வந்த பிறகு மானவ் ஏதாவது கூறுவான் என அவன் வீட்டார் எதிர் பார்த்து காத்திருக்க, அவனோ உறுதியாக எதையும் கூற முடியாமல் அவர்கள் பார்வை தன்னை சுற்றுவதை உணர்ந்தும் தவிர்க ஆரம்பித்தான். மகன் தவிர்ப்பை உணர்ந்தும் பிரஷாத் நேரடியாக கேட்டுவிட,

"ப்பா எனக்கு கொஞ்சம் டைம் வேணும்.... இது என் லைப் அவசரப்பட்டு எதையும் செய்ய முடியாது. என்னோட இறுதி முடிவு சஜனி மட்டும் தான்: பட் எங்களுக்குள்ள சார்ட்டவ்ட் பண்றதுக்கு நிறைய ப்ராளம் இருக்கு. சோ நான் யோசிச்சிட்டு சொல்றேன்." என்று தன் முடிவை கூறி விட, பிரஷாத் ஒரு பெருமூச்சுடன்

"மானவ் இதுவரைக்கும் உன்ன என் மகன்னு சொல்லும் போது எனக்கு பெருமை மட்டும் தான் இருக்கும். அதுக்கு காரணம் உன் கிட்ட இருக்கிற தெளிவும், நீ எடுக்கிற காரியத்தை சரியாவும்; நேர்மையாகவும் செய்து முடிக்கிறது தான். ஆனா இன்னைக்கு உன் கிட்ட அந்த தெளிவு மிஸ்சிங்.... பாத்து முடிவெடு. இது உன் லைப் மட்டும் இல்ல. நீ எடுக்கிற எந்த ஒரு முடிவும் ரெண்டு குடும்பத்தில் உள்ள எல்லாரையும் பாதிக்கும்." என்று கூறிவிட்டு சென்றார்.

தந்தையின் வார்த்தைகளை மனதில் நிறுத்தி யோசித்தவன் ஒரு முடிவுடன் மேத்யூ ஔிர்மதி திருமணத்திற்கு சஜனி வரவை எதிர்பார்த்து வர, அவன் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டியவளே தனியே வராமல் ஸ்மித்துடன் வந்து சேர்ந்தாள். தனியே அவளிடம் பேச வாய்ப்பு கிடைக்குமா என காத்திருக்க, அவளோ அந்த தனிமையை அவனுக்கு தரவில்லை.

ஒருபுறம் அன்று தான் பேசி விட்ட அதிகப்படியான வார்த்தைகளின் விளைவு இது என மூளை இடித்துரைத்தாலும், மனது மட்டும் அவள் அருகில் நிற்பவனை தமிழில் மட்டுமல்லாமல் தனக்கு தெரிந்த அனைத்து மொழியிலும் காய்ச்சி எடுத்துக் கொண்டு இருந்தது. பந்தியில் அமரும் போதாவது பேசலாம் என காத்திருக்க, சஜனி அவனை கடந்து சென்று ஔிர்மதி மற்றும் ஸமித் இருவருக்கும் இடையில் அமர்ந்து கொண்டாள்.

மனமக்கள் மதிய விருந்து முடிந்தும் புறப்பட இருப்பதாள் சஜனியும் சென்னைக்கு தான் புறப்பட்டு விடுவாள் என கணக்கிட்ட மானவ் எங்கு, எப்படி அவளிடம் பேசி என்பதை முடிவெடுத்த பின்னே அமைதியானான்.


"மாப்பிள்ளயும் பொண்ணும் எப்பாே கிளம்புறாங்க...." என்று உறவினர் ஒருவர் கேட்க, ஔிர்மதி அண்ணன் மருதுவளன்

"நாளைக்கு மாப்பிள்ளைக்கு வேலைக்கு போகனும் அதனால ரெண்டு மணி வாக்குல புறப்படுறாங்க, நாலு மணிக்கு மதுரையில ப்ளைட் இருக்கு...." என்று கூற, அவரோ,

"ஏலே... அவுக ஏரோப்ளைன்ல போன சீர் வரிசையை எதுல தூக்கிட்டு போறது..." என்று கேட்க

"அதையெல்லாம் காலையயில எட்டு மணிக்கே துரை பெரியப்பா அவருக்கு தெரிஞ்ச லாரில போட்டு அனுப்பிட்டாரு... சாய்ங்காலம் இவுக வீட்டுக்கு போகும் முன்ன பொருள் அங்க இருக்கும்." என விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் போது அவனை தள்ளி விட்டு செல்லும் அளவுக்கு வேகமாக வேலம்மாள் உள்ளே வர, அவரை கவனித்து மருதுவளன் விலகி நின்றார்.

"எங்கடி அவ என் குடும்ப மானத்த சந்தி சிரிக்க வச்சவ...."என்று திருமண வீட்டில் இசைத்துக் கொண்டிருந்த ஒலிப்பெருக்கி சத்திற்கு மேலே தன் வெண்கல குரலை உயர்த்தி கத்த அடுத்த நொடி திருமண வீடே நிசப்த்த அமைதியை தத்தெடுத்தது. அங்கிருந்த அனைவருக்கும் சஜனியை தான் வேலம்மாள் குறிப்பிடுகின்றார் என்பது புரியந்தது.

உறவினர்கள் பலர் கல்யாண வீட்டில் இது என்ன தேவையில்லாத பிரச்சனை என நினைக்க, சிலரோ வேடிக்கை பார்க்கும் எண்ணத்தில் நின்று கொண்டு இருந்தனர். வேகமாக சஜனி அருகில் வந்த வேலம்மாள் அவள் ஸ்மித் அருகில் இருப்பதை சுட்டி காட்டி

"இப்படி கண்டவன் கூட கூத்தடிக்க தான் நாங்க பார்த்த மாப்பிள்ளைய வேண்டான்னு சொன்னியா? எப்போவும் உன் கூட சுத்துறவன விட்டுட்டியா? இவன் யாரு புதுசா? ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொருத்தனா? ஆத்தாக்காரி புத்தி அப்படியே இருக்கு...."

வேலம்மாள் நாக்கு சவுக்காக சுழன்றடிக்க, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கே வேலம்மாள் பேசுவது அதிகப்படியாக தோன்றியது. தன் மகள் வாழ்வின் முதல் நாளிலே இப்படி ஒரு நிகழ்வை எதிர்பார்க்காத ரத்தினம், ஊருக்குள் பெரிய வீட்டுக்காரர்களை பகைத்துக் கொள்ள கூடாது என வேலம்மாளை சமாதனப்படுத்த முயன்று தோற்றார்.

திருமண உடையை மாற்றிவிட்டு சாதாரண உடையில் வெளிவந்த மேத்யூவிற்கு வேலம்மாளை இதற்கு முன் பார்த்திராததினால் அடையாளம் தெரியவில்லை. ரத்தினமும் வேலம்மாளும் பேசிக் கொண்டிருப்பதை வைத்து அவர்களுக்குள் ஏதோ பிரச்சனை என நினைத்ததுக் கொண்டிருக்க சற்று தாமதமாகவே பிரச்சனை சஜனிக்கும் வேலம்மாளுக்கும் என்பது புரிந்தது. அதே நேரம் தொழில் சம்மந்த அழைப்பு வந்திருக்க அதை பேசி முடித்துவிட்டு மானவ்வும் வந்து சேர்ந்தான்.

"நேரத்துக்கு ஒருத்தன்னு சுத்துன உன் ஆத்தாக்காரி வே### புத்தி உனக்கு...." என வேலம்மாள் அடுத்த வார்த்தை பேசும் முன்

"ஏய்ய்ய்ய்...." என்ற வார்த்தைகள் இரு வேறு திசையிலிருந்து குரல் ஒரு சேர வர அதில் வேலம்மாள் குரல் சற்று அடங்கியது.

ஒரு பக்கம் மானவ் தன்னவளுக்காக பொங்கி எழ, தான் தங்ககையாக நினைப்பவளுக்கு தன் கண் முன்னே நடைபெற்ற அவமானத்தில் மேத்யூ சீற்றமடைந்தான். அதே நேரம் அங்கிருப்பவர்கள் பேசுவது புரியவில்லை என்றாலும், வேலம்மாள் சஜனிக்கு எதிராக குரலுயர்த்துவதை உணர்ந்த ஸ்மித் அலைபேசியை எடுத்து

"கார்ட்ஸ்..." என்று அழைக்க திடகாத்திரமான உருவம் கொண்ட இருவர் வந்து சஜனி ஸ்மித் இருவருக்கும் அரணாக நின்று கொண்டர். அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு இப்பாெழுது சற்று சுவாரஸ்யம் கூடியது.

"இதுக்கும் மேல ஒரு வார்த்தை உங்க வாயில இருந்து வந்துச்சு நான் சும்மா இருக்க மாட்டேன்." என்று மேத்யூ வேலம்மாள் முன்வந்து விரலை நீட்டி பேச, சாதாரண உடையில் தேமத்யூவை மணமகன் என்பதை அறியாத வேலம்மாள்

"நீ யாருடா என்ன பேசக் கூடாதுன்னு சொல்ல.... இவளுக்கு அடுத்த ஆளா..." என்று மேத்யூவையும் சேர்த்து பேச, அதில் பொறுமையிழந்த ஆண்கள் பேசும் முன் ஔிர்மதி தாய் அருள் நேசம் சூழ்நிலையை கையில் எடுத்துக் கொண்டாள்.

"இங்க பாருங்க பெரியம்மா.... உங்க வீட்டு பொண்ண கண்டிக்க நினைச்சிருந்த அத உங்க வீட்டுல வைச்சு செய்யனும், அத விட்டுட்டு என் வீட்டுல அதுவும் என் பொண்ணு கல்யாணத்தில வந்து கலாட்ட பண்ற மாதிரி கத்த கூடாது. அதே மாதிரி எங்க வீட்டு மாப்பிள்ளைய பத்தி இன்னொரு தடவை பேசுனீங்க அப்புறம் நான் அமைதியா இருக்க மாட்டேன்." என்று அருள் நேசம் பேச,

"வாடி மா வா... உன் ராசி கெட்ட பொண்ண கல்யாணம் கட்டிக்கிட்ட மகராசன் இவன் தானா? அதானே பாத்தேன் இவளுக்கு போய் கலெக்டர் மாப்பிள்ளையான்னு...." வேலம்மாள் தரம் தாழ்ந்த பேச்சில் ஊரார் அனைவரும் வெறுப்பான பார்வையை அவர் மீது வீச, அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் சஜனியையைும், அவளை சார்ந்தவர்களையும் காயப்டுத்தும் நோக்குடன் பேசிக் கொண்டிருந்தார்.

மானவ் பொருத்துக் கொள்ள முடியாமல் வேலம்மாளை நோக்கி முன்னேற சஜனி தன் பார்வையால் வேண்டாம் என்று கேட்க, அதையே வார்தையால் மேத்யூ கூறினான்.

"மானவ் நீ இப்போ பேசினா பிரச்சனை வேற மாதிரி திசை திரும்பிடும்" என்று மேத்யூ கூற, மானவ் தன் நரம்பு புடைத்து வெடிக்க தயாராக இருக்கும் எரிமலையின் நிலையில் இருந்தான்.
 
#3
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
செசிலி வியாகப்பன் டியர்

ஒரு கல்யாணம்ங்கிறது ஆண் பெண் இரண்டு பேரும் பரஸ்பரம் நம்பிக்கை வைச்சு கல்யாணம் பண்ணுறது
அதிலே சஜனி இத்தனை கண்டிஷன்ஸ் போடுவது சரியில்லை

என்னதான் தெய்வீகக் காதலா இருந்தாலும் பெண்ணுக்கு சாதகமாகவே எல்லா கண்டிஷன்ஸ்ஸும் இருந்தாலும் ரோஷம், மானமுள்ள எந்த ஆண்மகனும் இதுக்கு ஒப்புக் கொள்ள மாட்டான்

இவளுடைய அம்மா சியோனா ஜூலி முட்டாள்தனமாக ஏமாந்து போனால் இவளையும் மானவ் ஏமாற்றுவான்னு சஜனி நினைக்கக் கூடாது

அப்பா கார்த்திகை செல்வத்தை விட்டுட்டு அம்மா சியோனா ஜூலி லண்டனுக்கு ஏன் போனாள்?
அதனாலதானே பிரச்சினை பெருசாச்சு

இப்போக் கூட யாருடைய கல்யாணத்திலோ வந்து மகன் வயிற்று பேத்தின்னு ஒரு துளி பாசம் எதுவுமில்லாமல் சஜனியை கண்டபடி பேசுற வேலம்மாளின் வாயைக் கிழிக்காமல் விட்டுட்ட கோழை கார்த்திகை செல்வத்தைப் போல் மானவ் பிரஷாத் நிச்சயம் இருக்க மாட்டான்

வேலம்மாளின் அந்த கொள்ளி வாயை யாரு இரண்டாக கிழிக்கப் போறாங்களோ?
 
Last edited:

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
#7
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
செசிலி வியாகப்பன் டியர்

ஒரு கல்யாணம்ங்கிறது ஆண் பெண் இரண்டு பேரும் பரஸ்பரம் நம்பிக்கை வைச்சு கல்யாணம் பண்ணுறது
அதிலே சஜனி இத்தனை கண்டிஷன்ஸ் போடுவது சரியில்லை

என்னதான் தெய்வீகக் காதலா இருந்தாலும் பெண்ணுக்கு சாதகமாகவே எல்லா கண்டிஷன்ஸ்ஸும் இருந்தாலும் ரோஷம், மானமுள்ள எந்த ஆண்மகனும் இதுக்கு ஒப்புக் கொள்ள மாட்டான்

இவளுடைய அம்மா சியோனா ஜூலி முட்டாள்தனமாக ஏமாந்து போனால் இவளையும் மானவ் ஏமாற்றுவான்னு சஜனி நினைக்கக் கூடாது

அப்பா கார்த்திகை செல்வத்தை விட்டுட்டு அம்மா சியோனா ஜூலி லண்டனுக்கு ஏன் போனாள்?
அதனாலதானே பிரச்சினை பெருசாச்சு

இப்போக் கூட யாருடைய கல்யாணத்திலோ வந்து மகன் வயிற்று பேத்தின்னு ஒரு துளி பாசம் எதுவுமில்லாமல் சஜனியை கண்டபடி பேசுற வேலம்மாளின் வாயைக் கிழிக்காமல் விட்டுட்ட கோழை கார்த்திகை செல்வத்தைப் போல் மானவ் பிரஷாத் நிச்சயம் இருக்க மாட்டான்

வேலம்மாளின் அந்த கொள்ளி வாயை யாரு இரண்டாக கிழிக்கப் போறாங்களோ?
All points noted.
Next EP la vachu seiyalam
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes