யாருடன்? யார் நீ? EP 21

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
#1
யாருடன்? யார் நீ?
-செசிலி வியாகப்பன்


தேடல் 21

ரத்தினபுரியையே ஒரு கலக்கு கலக்குமளவுக்கு ரத்தினம் தன் செல்ல மகளின் திருமண ஏற்பட்டை விமரிசையாக நடத்திக் காட்டினார். தான் சாதாரண விவசாயியாக இருந்த போதிலும் தன் பிள்ளைகளுக்கு இதுவரை எந்த ஒரு விஷயத்திற்கும் குறை வைத்ததில்லை. நல்ல படிப்பு, வாழ்க்கை என அனைத்தையும் தன் சக்திக்கு உட்பட்டு கடன் வாங்காமல் ஏற்படுத்திக் கொடுத்தார்.

நான்கு மகன்களுக்கும் தனித்தனியே வீடு, வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து, மூத்த மூன்று மகன்களுக்கு நல்ல இடத்தில் பெண் பார்த்து திருமணமும் செய்து வைத்தார். கடைக்குட்டி மகன் ஜீவனுக்கும் பெண் பார்த்து விட்டார். மகன்களுக்கெல்லாம் தந்தையாக தன் கடமையை நிறைவேற்றியவர் தவறியது என்னவோ தனது ஒற்றை மகளின் விஷயத்தில் மட்டுமே.

தம்பிக்கு திருமண பேச்சு ஆரம்பமாகியும் ஔிர்மதிக்கு சரியான வரன் எதுவும் தகையாது போக, அருள்மொழி தன் மகளுக்காக வெளிப்படையாக கண்ணீர் வடித்தார் என்றால், ரத்தினம் ஊமையாக பாரத்தை தன் மனதுக்குள் சுமந்து வந்தார். இத்தனைக்கு ஔிர்மதி பெயருக்கு ஏற்றார் போல அழகானவள் தான், முதுகலை பட்டம் பெற்றவள். மத்திய வருவாய் துறையில் நல்ல பதவில் இருப்பவள்.

அவளின் அதிகப்படியான தகுதியே அவளை திருமண வாழ்வின் நுழைவாயிலை தாண்ட விடவில்லை. எல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தார் போல அவளது நேர்மை குணம் மாப்பிள்ளை வீட்டாரை ஓட வைத்தது. கிராம புறங்களில் பதினெட்டு வயதிலேயே திருமண பேச்சுக்கள் ஆரம்பமாகிவிடும். வசதியில்லாதவர்கள் கூட இருவதின் முன்பாதிக்குள் தன் மகள்களுக்கு திருமணத்தை முடித்திருப்பர்.

இதில் இருவத்தி ஏழு வயதாகியும் தனித்து நிற்க்கும் மகளை நினைத்து பயந்து கொண்டு இருந்தவருக்கு எல்லா விதத்திலும் தன் மகளக்கு பொருத்தமான மேத்யூவை கண்டதும் இத்தனை நாள் மனதின் பாரங்களை இறக்கி வைத்துவிட்டு வயது பையன் போல உற்சாகமாக திருமண வேலைகளை கவனிக்க ஆரம்பித்துவிட்டார்.

நிச்சயம் முடிந்த அடுத்த நாளிலிருந்தே அச்சிட்ட இரண்டாயிரம் பத்திக்கைகளையும் வினியோகம் செய்யும் பணிகளை தன் அங்காளி பங்காளிகளுடன் சேர்ந்து ஆரம்பித்து விட்டார். இதில் மூத்த மருமகளுக்குத்தான் ஏகப்பட்ட கடுப்பு அதை மறைக்காமல் தன் கணவர் ஜெயராஜுடம்

"எங்க நம்ம கல்யாணத்துக்கு உங்க அப்பா ஆயிரத்து ஐநூறு பத்திரிக்க தான் அடிச்சாரு.... இப்ப பாருங்க உங்க தங்கச்சிக்கு மட்டும் ரெண்டாயிரம் பத்திரிக்கை. என்ன இருந்தாலும் உங்க அப்பாருக்கு மூத்த புள்ளன்னா ஏழக்காரந்தான்." என்று மாமனாரை பற்றி குறை கூற, தன் மனைவியை அழுத்தமாக பார்த்த ஜெயராஜ்

"நீ என் முறப்பொண்ணு... நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே சொந்தந்தான், அதனால ஆயிரத்து ஐநூறு பத்திரிக்க போதும். நமக்கு அப்புறமா என் ரெண்டு தம்பிகளுக்கும் கல்யாணமாச்சு... அதுவும் அந்நியத்துல. இப்போ அவங்க சொந்தம், என் தங்கச்சி கூட படிச்சவுக... வேலை பக்கிறவுக எல்லாருக்கும் சேத்து தான் இந்த ரெண்டாயிரம் பத்திரிக்கை புரியுதா. தேவையில்லாம என்ன தூண்டி விட்டு என் தங்கச்சி கல்யாணத்துல கரச்சல் பண்ண நினைச்ச... அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்." என்று எச்சரிக்க, அதை தூசு தட்டுவது போல தட்டிவிட்ட உத்ரியா

"உங்க அப்பாவ சொன்ன வரிஞ்சு கட்டிக்கிட்டு வந்துடுவீகளே... ஆம்பிள புள்ளைக யாருக்காவது உங்க அப்பா இவ்வளவு ஆடம்பரமா கல்யாணம் பண்ணினாரா. அப்பு எதுக்கு அடுத்த வீட்டுக்கு போற பொட்ட புள்ளைக்கு இத்தன ஆர்பார்பாட்டம்" என கூறும் பொழுதே உள்ளே வந்த ரத்தினத்தை பார்த்து பேச்சை நிறுத்தினாள்.

மருமகளின் வஞ்சக எண்ணம் தன் பிள்ளைகளிடையே பிளவை ஏற்படுத்தி விட கூடாது என்பதை யோசித்த ரத்தினம் தன் மக்கள் அனைவரையும் அழைத்து,

"உங்க எல்லாருக்கும் ஔிரு கல்யாணத்த ஆரம்பரமா பண்றது பிடிக்காம இருக்காலம்..." என்று கூற, இடையில் பேச வந்தவர்களை தடுத்து

"நான் சொல்லி முடிச்சிடுதேன். பசங்க நாலு பேருக்கும் தனித்தனி வீடு, ஒவ்வொருத்தருக்கும் எட்டு ஏக்கரா வயலு, அது போக தென்காசியில வீட்டு மணை ஆறு சென்டு கொடுத்துருக்கேன். மகளுக்கு சொத்து கொடுக்குற வழக்கம் நம்ம வகையரால இல்ல. அதுக்காக என் மகள சும்மா அனுப்ப முடியாது. உங்களுக்கு செய்ததுல பாதியாவது அவ கல்யாணத்தப்பவே அவளுக்கு செஞ்சு பாத்தாதான் எனக்கு நிம்மதி.

மீதிய அவளுக்கு சீமந்தம், புள்ளை பொறந்த செய்யுற சீரு, இப்படி எனக்கு தோனும் போது கொடுத்துக்குவேன். இது எதுவும் உங்க யாரு சம்பாத்தியமும் இல்ல. என் தனிப்பட்ட உழைப்பு அத கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்ல. உங்க பணத்தையோ இல்ல உங்க பொண்டாட்டிங்க கொண்டு வந்ததையோ நான் என் மவளுக்கு தரல." என்று கூறிவிட்டு சென்றவர் எதற்கும் தன் பிள்ளைகளிடமிருந்த பணத்தை வாங்கிக்கொள்ளவில்லை.

வேலைகளை பகிர்ந்து கொடுத்தவர் செலவை மட்டும் முழுதாக தன்னிடம் வைத்துக் கொண்டார். தெரியாமல் மகன்கள் செலவு செய்தாலும் அதை அவர்கள் மனைவிமார்களிடம் தந்து விடுவார். தந்தையின் நடவடிக்கையில் மகன்கள் நல்வரின் சுய மரியதை பெரிய அடி வாங்கியது.

தாங்கள் ஒன்றுக்கும் வக்கில்லாதவர்களா? தங்கைக்கு சீர் செய்ய மாட்டோமா? எங்களுக்கு ஔிர் மீது பாசம் இல்லையா? என பல விதத்தில் கெஞ்சியும், கோவப்பட்டும் எதற்கும் ரத்தினமும் மசியவில்லை. தந்தையிடம் வேலையாகது என்று எண்ணி தாயை அணுக, அவரோ,

"இந்த முடிவு நானும் உங்க அப்பாவும் சேர்ந்து எடுத்தது தான். இப்போ இல்ல... ஔிரு காலேச்சு படிக்க பிரச்சனை வந்தப்பவே எடுத்தது. தாயா புள்ளயா இருந்தாலும் வாயும் வயிரும் வேற வேற தான்." என்று கணவருக்கு அனைத்திலும் உறுதுணையாக நின்றார்.

தெருவை அடைத்து பந்தல் போட்டு, ஊர் முழுக்க ஒலிப்பெருக்கியை அலற செய்து, ஔிர்மதியின் திருமணத்தை திருவிழா போல ஏற்பாடு செய்ய ஊரே வியந்து தான் போனது. அதில் சில பொறமை பிடித்தவர்கள்

"கலெக்டரு மப்பிள்ளன்னு தல காலு புரியாம ஆடுறாங்க..." என்று காது பட பேசினாலும் அதை கண்டு கொள்ள யாருக்கும் நேரமில்லை.

விமரிசையாக அரங்கேறிய திருமண ஏற்பட்டை பார்த்து பயந்ததென்னவோ மேத்யூ மட்டுமே. வெள்ளை வேட்டிகளில் ஆண்களும், பட்டு சேலைகளில் பெண்களுமாக குடும்பம் குடும்பமாக வந்திறங்கிய சொந்தங்களை எண்ணிக்கையை பார்த்ததும் ஏதோ கட்சி மீட்டிங்கிற்கு வந்து போல இருந்தது.

சென்னையிலிருந்து மதுரை வரை விமானத்திலும் அதன் பிறகு ரத்தினபுரி வரை காரிலும் என மேத்யூ இரவும் தொடங்கும் நேரத்தில் வந்து சேர்ந்தான். ஊர் எல்லையிலே அவன் வந்த காரை மேள தாளத்தோடு ஆர்பாட்டமாக வழி மறித்த ஔிர்மதி உறவினர்கள் மாப்பிள்ளை அழைப்பு என்ற பெயரில் ஊர்வலமாக நடத்தியே அழைத்து செல்ல அது ஒரு வித புதிய அனுபவம் தான்.

மாப்பிள்ளையையும், அவர்கள் உறவுகளையும் வரவேற்பதற்கே இந்த நிகழ்வு. ஆனால் மேத்யூ தனது நண்பர்கள் இருவருடன் மட்டும் வந்திறங்க, அதை கவனித்த வள்ளியம்மையும் ஔிர்மதி பெரியப்பா துரையும் தங்கள் சொந்தங்களை மேத்யூவுடன் நடந்து வர செய்தனர்.

மேத்யூவும் அவனுடன் வந்தவர்களும் முத்து பொன்னையாவின் அத்தான் வீட்டில் தங்க வைக்கப்பட அவனுக்கு ராஜ மரியதை தரப்பட்டது என்பது தான் உண்மை. அருகாட்சியகத்திற்கு முதல் முறையாக செல்லும் சிறுவன் வியந்து பார்ப்பது போல ஔிர்மதி உறவுகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு தன் நிலவு பெண்ணின் நினைவுகள் கூட பின்னுக்கு தள்ளப்பட்டது.

"மப்பிள்ளை தம்பி வாங்க ஒரு எட்டு சாப்பிட போகலாம்... ஊர் சாப்படுக்கு எல்லாரும் காத்திருக்கிறாக." என பெரியவர் ஒருவர் அழைக்க அவனும் அவர்களுடன் புறப்பட்டான். சாப்பாடு என்றதும் டைனிங் டேபிள் என்று எதிர்பார்க்கவில்லை என்றாலும் உறவினர்கள் ஐம்பது இல்லை அருபது பேருடன் அமர்ந்து சாப்பிடுவது என்று நினைத்திருக்க, அங்கு வரிசையாக போடப்படிருந்த நாற்காலிகளில் ஏற்கனவே முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருந்தனர்.

இது மூன்றாவது பந்தி என்றும் இன்னும் மூன்று பந்தி ஆட்கள் இருப்பதாகவும் கூறப்பட்ட தகவலில் மேத்யூவிற்கு மயக்கம் வராத குறைதான். சாப்பிட்டு முடித்ததும் ஔிர்மதி தந்தையை தனியே அழைக்க அந்த இடமே பரபரப்பானது.

திருமணத்திற்கு முந்தய இரவில் மணப்பெண்ணின் தந்தையிடம் மணமகன் பேச அழைக்க அது வரதட்சணை பற்றி இருக்கும் எனவும், மாப்பிள்ளைக்கும் திருமணத்தில் விருப்பமில்லை எனவும் சில நிமிடங்களின் உறவினர் அனைவரிடமும் வதந்தி பரவியது. ரத்தினம் மேத்யூ முன் வந்து சேர்வதுக்குள் இவ்வளவும் நடந்தேற அவருக்கு முன் உறவினர் கூட்டம் அனைத்தும் மேத்யூவை சூழ்ந்து கொண்டது.

"மாப்பிள்ள எதுன்னாலும் நாளைக்கு கல்யாணம் முடியட்டும் அப்புறமா பேசிக்கலாம்... ஔிரு நல்ல புள்ள அது மொகத்துக்காவது யோசிங்க... பொண்ணு பாவம் பொல்லது தம்பி...." என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பேச தலைமுடியை பிய்த்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டான். அதற்குள் ஔிர்மதி தந்தை வந்து விட 'அப்பாட தப்பிச்சோம்' என்று பெருமூச்சி விட நினைக்கும் முன் அவரும் அதே பல்லவியை பாட நொந்துவிட்டான்.

அதற்குள் விஷயம் கேள்விப்பட்டு வள்ளியம்மையும் வந்து விட, பேச வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இருந்தான். உறவினர்கள் சலசலப்பை சமாளித்து

"என்ன தம்பி எதுக்காக ரத்தினம் அண்ணே கிட்ட தனியா பேச கூப்பிட்டிக." என விசாரிக்க, அனைவரையும் ஒரு முறை பார்த்து தயங்கிய மேத்யூ அவர்கள் தான் உண்மையை கூறாமல் விடப்போவதில்லை என்பதால் வேறு வழியின்றி ரத்தினத்தின் முன் வந்து

"மாமா... கல்யாணம் பொண்ணு வீட்டு செலவுன்னு சொன்னதுனால நானும் அத பத்தி கேட்கல. சொந்தக்காரங்க முன்னூறு நானூறு பேர் வருவங்கன்னு நான் நினைச்சிக்கிட்டு இருந்தேன். இங்க வந்ததுக்கு அப்புறமா தான் எனக்கு உங்களுக்கு இவ்வளவு பேர் கல்யாணத்துக்கு வருவாங்கன்னு தெரியும். எப்படியும் செலவு நிறைய வந்திருக்கும் அதான் எவ்வளவுன்னு கேட்டு உங்களுக்கு தர கூப்பிட்டேன்..." என மேத்யூ கூறி முடிக்கும் முன் சுற்றியிருந்த கூட்டமே ஏதோ நகைச்சுவையை கேட்டது போல சிரிக்க ஆரம்பித்தது. கூட்டத்திலிருந்த பெரியவர்

"தம்பி இது ஒன்னு உங்க பட்டணமில்ல... அடுத்தவன் எப்படி போனாலும் பரவாயில்லன்னு போறதுக்கு. இது கிராமம் தம்பி... ஔிருக்கு எட்டு தாய் மாமன். தாய் மாமன் மெய் மட்டும் எம்புட்டு தெரியுமா? நாங்க ஒன்னு சொத்துக்கு வக்கத்து சாப்பிட வரல. எங்க தகுதிக்கு ஏத்த மாதிரி நாங்களும் செய்யுவோம். எல்லா சேர்ந்து உங்க மாமனார் செலவு பண்ணத விட அதிகமா தான் வரும்." என காரமாக கூற, அதில் இருந்த தன்மான உணர்வை புரிந்து கொண்டவன் தன் இரு கரங்களையும் குவித்து

"எல்லாரும் என்ன மன்னிக்கனும்... இது வரைக்கும் பட்டணத்தில தனியா இருந்ததுனால கிராமத்து உறவு பத்தி எனக்கு தெரியல. கல்யாணம் பண்ணுற பொண்ணு வீட்ட கஷ்டப்படுத்த கூடாதுன்னு தான் நான் கேட்டேன். அது உங்கள கஷ்டப்படுத்தியிருந்த என்ன மன்னிச்சிடுங்க." என மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்க, ஊர் மக்கள் அனைவரின் மனதிலும் நல்ல மாப்பிள்ளை என்னும் இடத்தை பிடித்தான். அதே நேரம் மறைந்திருந்து மேத்யூவை பார்த்துக் காெண்டிருந்த ஔிர்மதியும் புன்னகை முகமாக தன்னவனை நினைத்து கனவுலகில் அவனிடம் காதலை கூற ஆரம்பித்தாள். அதுவரை மகளை நினைத்து மனதில் இருந்த கொஞ்ச பாரமும் ரத்தினம் தம்பதியருக்கு இல்லாமல் போனது.
ஹாய் ப்ரெண்ட்ஸ்
மாப்பிள்ளை அழைப்பு ஓவர். கல்யாணத்தை அடுத்த எப்பில முடிச்சிடலாம். கல்யாணத்துக்கு சஜனி, மானவ் மற்றும் பலர் கண்டிப்பா வருவாங்க. நீங்களும் வந்துடுங்க. பத்திரிக்கை இல்ல வரமாட்டேன்னு மட்டும் சாெல்லிடாதீங்க. ஔிர், மேத்யூ வெய்ட்டிங் ஃபார் யூ
 
Saroja

Well-Known Member
#6
ஆர்ப்பாட்டமான கல்யாணம்
ஊர்வலம்o_O:p
மருமக மூக்க உடச்சு:sick:
தனி ஒருவனா மக கல்யாணத்த
சீரு சிறப்புமா செய்யும்
ஒளிர் அப்பா(y)
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes