யாருடன்? யார் நீ? தேடல் நிறைவு

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
#1
யாருடன்? யார் நீ?
-செசிலி வியாகப்பன்


தேடல் நிறைவு


தேடல் 28

விடியலின் பரபரப்பு அனைவரையும் தொற்றிக் கொள்ள, அந்த கல்யாண மண்டபம் உயிர்புடன் செயல்பட ஆரம்பித்தது. திருமண நிகழ்வுகள் ஆரம்பமானதும் வெற்றியின் இதயம் பந்தய குதிரையை விட வேகமாக துடிக்க, தான் செய்த செயலின் தீவிரம் புரிய ஆரம்பித்தது.

விடியும் முன் நிலமையை சரி செய்து, வெற்றியை சஜனிக்கு எதிராக தூண்டிவிட்ட நபருக்கு தண்டனை கிடைக்க வேண்டிய ஏற்படுகள் அனனத்தையும் மானவ் வெற்றிகரமாக முடித்துவிட்டதை சஜனியிடம் தெரியப்படுத்தியிருக்க, அதை அறியாத வெற்றி கலக்கத்தில் இருந்தான்.

சஜனியின் மீது கொண்ட கோபத்தை தீர்த்துக் கொள்ள தவறான வழியில் சென்றுவிட்டோமாே என்ற எண்ணத்தினால் எற்பட்ட அமைதியின்மையில் தவிக்க ஆரம்பித்தான். அலங்கார தேர் போல மணமேடைக்கு வந்த சஜனியின் கழுத்தில், மங்கல வாத்தியங்கள் முழங்க, கூடியிருக்கும் சொந்தங்கள் ஆசிர்வாதத்துடன் மானவ் திருமாங்கல்யத்தை அணிவித்த நொடி அனைவரையும் விட வெற்றியே நிம்மதியாக உணர்ந்தான். அடுத்த நொடி வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல மண்டபத்திலிருந்து அறைக்குள் சென்று அடைந்து கொண்டான்.

திருமணம் முடிந்து விடைபெறும் நேரம் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதத்தை பெற கூற, மணமக்கள் இருவரும் சஜனியின் தந்தை மற்றும் சித்தி அருகில் வர, கார்த்திகை செல்வம் முள்ளின் மீது நிற்பவரை போல இருந்தார். மானவ் ஆசீர்வாதம் வாங்க காலில் விழாமல் நிற்க, சஜனி இருவருக்கும் பொதுவாக விழுந்து வணங்கி எழுந்தாள். அப்போது அவள் கண்ணிலிருந்து வந்த ஒரு துளி கண்ணிர் செல்வத்தின் காலில் விழுந்து தெரிக்க, உணர்ச்சி பிழம்பானார்.

"சாரி டேட்... என்ன அறியாம உங்கள கஷ்டப்படுத்திருந்தா.. இனி சஜனி இம்மாக்ரெட் உங்க லைப்ல எந்த உரிமையும் கேட்கமாட்டா... பட் ஃபார் லாஸ்ட் டைம்..." என்று சிறு இடைவெளி விட்டு நிறுத்திய சஜனி செல்வத்தை கட்டிபிடித்து அழுது தீர்த்தாள்.

"மேத் என்ன பாக்க அடிக்கடி வீட்டுக்கு வா.....
சாலி ஆர்த்தி அடிச்சாலும் பரவாயில்ல என்ன மறந்துடாத...
ஸ்மித் தாத்தாவ பாத்துக்கோ....
வள்ளிம்மா...... ம்மா..."

ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விடைபெற்று வந்த சஜனி வள்ளியம்மையிடம் வந்தது என்ன கூறுவது என தெரியாமல் தேங்கி நிற்க, மானவ் கரங்கள் சஜனியின் தோள் மீது அழுத்தமாக பதிய அதில் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்த சஜனி வெற்றியை தேட, அவனாே தனியறையில் குற்ற உணர்வில் தவித்துக் கொண்டிருந்தான். சஜனி வெற்றியை தேடி அவனிருந்த அறைக்கு வர, அவள் வரவை எதிர்பாராத வெற்றி எழுந்து நின்றான்.

"போய்யிட்டு வரேன் வெற்றி... அப்புறம் என் ஷோ ரூம்ல எந்த பிரச்சனையும் இல்ல. சோ எத பத்தியும் யோசிக்காம ப்ரியா இரு. குட் பாய்..." என விடை பெற, வெற்றி அசைவற்று நின்றான்.

"நான் வந்து..." என்று வெற்றி கூற வந்ததை கூற முடியாமல் திணற,

"நேத்து நீ எங்க போயிருந்தன்னு எனக்கு தெரியும்... யூ நோ வாட் எனக்கும் சில உண்மையானவங்க எல்லா நேரத்திலும் உதவி பண்ண இருக்காங்க. இன் ப்யூசர் எதுக்காகவும் உன் கேரக்ரரை ஸ்பாயில் பண்ற மாதிரி எதையும் பண்ணாத... உன்ன தூண்டி விட்ட ஆர்யாவுக்கு போலிஸ் விசாரணை ஆரம்பிச்ச நீ தான் மாட்டுவன்னு தெரியும். தெரிஞ்சு தான் எல்லாம் செய்திருக்கிறான். அவனுக்கான தண்டனை அவனுக்கு கிடைக்கும்.

நீ கொண்டு வந்து வச்ச பாக்ஸ்ல என்ன இருந்துச்சு தெரியுமா? ட்ரக்ஸ்.... இது மட்டும் வள்ளியம்மாக்கு தெரிஞ்சா அவங்க நிலைமையை பத்தி யோசிச்சு பாத்தியா? உனக்காக மட்டும் வாழ்ந்துக்கிட்டு இருக்கிறவங்க ஒடஞ்சிட மாட்டாங்களா?

வெற்றி நான் என் அம்மாவ ரெம்ப மிஸ் பண்றேன்... அவங்க பிரச்சனைக்கு பயந்த என் விட்டு போய்டாங்க... பட் உன் அம்மா எவ்வளவு பிரச்சனை வந்தாலும் உனக்காக போரடுவங்க. அவங்கள மிஸ் பண்ணிடாத...." என்று கூறி விடை பெற்ற சஜனி தனது புகுந்த வீட்டை நோக்கி நிர்மலமான மனதுடன் புறப்பட்டு சென்றாள்.

ஆறு வருடங்களுக்கு பின்.......

"டேய் மைதா மாவு கிட்ட வந்த உன் குடல உருவி கையில கொடுத்துடுவேன்... எந்த முஞ்சிய வைச்சிக்கிட்டு என்ன பாக்க வந்த..." என நிறைமாத கர்பினியான மதீஷா பிரசவ வலியையும் பொறுத்துக் கொண்டு தன் சரிபாதி ஸ்மித்தை பார்த்து கத்திக் கொண்டிருக்க, அவனோ அமைதிக்கான நோபல் பரிசு பெறும் நோக்கத்துடன் இருபவனை போல சாந்த முகத்துடன் மதீஷாவை சமாதனப்படுத்தும் முயற்சியில் இருந்தான்.

"பேபி ப்ளீஸ்... காம் டவும்.."

"என்னடா காம் டவுன்னு... அ. என்மேல உனக்கு பாசமே இல்ல. இருந்ததிருந்த என்ன இங்க அனுப்பிட்டு அங்க வெள்ளக்காரிங்க கூட டூயட் பாடிக்கிட்டு இருந்திருப்பியா?"

"பேபி நீ இல்லாம நான் இலன்டன்ல ஹப்பியா இல்ல... யூ நோ வாட் உனக்காக எல்லா பிசினஸ் டீலீங்கையும் விட்டுட்டு வந்துடேன்." என்று கூற அதில் மேலும் கோபமடைந்த மதீஷா

"ஓஓஓ எனக்காக வந்தீங்களா... அப்போ நீ உங்களுக்காக வரல... உனக்கும் என் வயத்துல இருக்கிற பிள்ளைக்குமாவது சம்மந்தம் இருக்கா இல்லயா... அது எப்படி எனக்காகவா... அப்படின்னா உனக்கு என்ன பாக்கனும்னு தோனல..." என்று எண்ணெய்யில் இட்ட கடுகாய் பொறிய, சுற்றி இருந்த பெரியவர்களுக்கும் சஜனி மானவ்விற்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.

சஜனி திருமணத்தின் போது மதீஷாவை பார்த்த ஸ்மித் மனதில் காதல் அரும்ப அதை சொல்லும் வழி தான் தெரியவில்லை. சஜனியின் தொழில் நிர்வாகத்தில் உதவுவதாக கூறி வருடத்திற்கு நான்கு முறையாவது இந்தியா வர ஆரம்பித்தான்.

ஸ்மித்தை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்த சஜனி நண்பனின் மனதை அறிந்தும் அதை காட்டிக் கொள்ளவில்லை. முதலில் ஸ்மித் வரவை பெரிதாக எடுத்துக் கொள்ளாத மானவ் வீட்டார் சஜனி மானவ்வின் தவப்புதல்வன் மாதவ் பிரசாத் பிறந்த பின் கவனிக்க ஆரம்பித்தனர்.

தான் பிடிபட்டதை தெரிந்து கொண்ட ஸ்மித் தன் பெற்றவர்களை அழைத்து வந்து நேரடியாக மானவ் பெற்றோரிடம் பெண் கேட்டுவிட முதலில் எதிர்ப்பு தயக்கம் இரண்டையும் காட்டியவர்கள் பின் ஸ்மித்தை தங்கள் மருமகனாக ஏற்றுக் கொள்ள சம்மதிக்க, பெற்றவர்கள் வார்த்தையை மதீஷாவும் ஏற்றுக் கொண்டாள். இருந்தும் சஜனி மதீஷாவிடம்

"தீஷா உனக்கு ஸ்மித்த மேரேஜ் பண்றதுல முழு விருப்பம் தானா... ஒரு வேளை அங்கிள் ஆண்டிக்காக நீ ஓகே சொல்லிருந்த என் கிட்ட மறைக்காம சொல்லு... நான் ஸ்மித் கிட்ட பேசுறேன்." என்று தயக்கத்துடன் கேட்க,

"யூ டோண்ட் வொரி அண்ணி... உங்களுக்கே தெரியும் நான் ஒரு படிப்ஸ். இது வரைக்கும் மேரேஜ் பத்தி பெருசா எந்த எக்ஸ்பெக்டேஷனும் இல்ல. சோ ஸ்மித் ஓகே தான். இனி நான் யூஸ் பண்ற கார் மாதிரி என் ஹஸ்பண்டும் பாரின் ப்ரேன்டா இருத்துட்டு போகட்டும்... அப்பபுறம் ஸ்மித் இங்க வரும் போதெல்லாம் உங்கள சொந்த சிஸ்டர் மாதிரி ஹேர் பண்ணுறது எனக்கு புடிக்கும்... எனக்கு இந்த மேரேஜ் 99% ஓகே தான் பாக்கி 1% எங்கேச்மெண்டுக்கு அப்புறம் கரெக்ட் பண்ணிக்கிறேன்." என்று கூறிவிட்டு மதீஷா புள்ளி மானாய் துள்ளி குதித்து ஓட, அவள் கண் பார்வையை விட்டு மறைந்ததும் சஜனி வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தாள்.

அடுத்த முறை ஸ்மித் இந்தியா வந்த போது சாலித், மேத்யூ என தன் நண்பர்கள் இருவரையும் அழைத்து மதீஷா கூறிய வார்த்தைகளை அப்படியே பேசி காட்ட, ஸ்மித் முகம் ஒரு லிட்டர் விளக்கெண்ணையை குடித்தவனை போல ஆனது.

"மை டியர் ப்ரெண்ட் டேக் கேர் ஆஃப் யூ... நீ பதினாறு வயசுல எனக்கு ரெட் ரோஸ் கொடுத்த மேட்டர் மட்டும் மதீஷாக்கு தெரிஞ்சுதுன்னு வை அவ ரியாக்ஷன் கோவை சரளா மாதிரி தான் இருக்கும்... யூ நோ கோவை சரளா.... நெட்ல சர்ச் பண்ணு..." என்று எச்சரிக்க, ஸ்மித் மனதுக்குள் பயந்தாலும் அதை காட்டிக் கொள்ளவில்லை.

திருமணத்திற்கு முன் பிருந்தவன நந்த குமாரனாக இருந்தவன், திருமணத்திற்கு பின் மதீஷாவை சுற்றி வர அதில் நண்பர்கள் மூவரும் மயங்காத குறை தான். இதில் சஜனி மானவ்விடம்

"பாரு என் ப்ரெண்ட் ஸ்மித் உன் தங்கச்சிய எவ்ளோ கேர் பண்றான்னு... நீயும் இருக்கியே பிசினஸ் பிசினஸ்ன்னு.... அட்லீஸ்ட் எனக்கு ஒரு செல்ல பெயராவது வச்சிருக்கியா." என்று புலம்ப, அவளை தன் கை வளைவிற்குள் கொண்டு வந்த மானவ்

"நான் உன்ன கேர் பண்ணாம தான் தொட்டில்ல மாதவ் தூங்குறானா..." என்று சஜனியை சிவக்க வைத்தவன் "எப்புடி எப்புடி பதினாறு வயசுல உன்ன ப்ரோபாஸே் பண்ணிட்டு இப்பாே என் தங்கச்சிய கேர் பண்னறதா..." என்று சரியாக கூற

"உனக்கு எப்புடி தெரியும்..." என்று வார்த்தைகள் பின்ன,

"தெரியும்... உன் கூட டான்ஸ் ஆடும் போது லிசா கூட நடந்த ப்ரேக் அப் பத்தி சொல்லி நீ சிரிச்சதும் தெரியும். அவன் அடக்கமா இருக்கிற வரை தான் நானும் நல்லவனா இருப்பேன். அங்க இங்க கண்ணு போச்சுன்னு வை.... அவன நம்ம வீட்டு படுக்கையில வைச்சு பாத்துக்க என்னால முடியும்."

"ஸ்மித் ப்ளே பாய்ன்னு தெரிஞ்சுமா மதீஷா கூட மேரேஜ்க்கு ஓகே சொன்னீங்க." என்று வியக்க,

"மதீஷா ஸ்மித்த சீரியஸ்ஸ லைவ் பண்ண. அது எனக்கு தெரியதுன்னு நினைப்பு. பட் தெரிஞ்சிட்டு, ஸ்மித்தும் சீரியஸ்ஸா இருந்தான். சோ எனக்கு ப்ராப்ளம் இல்ல."

மதீஷா ஸ்மித் திருமணம் இரு நாட்டவர்கள் மத்தியில், இரு குடும்ப ஆசீர்வதத்துடன், இரு மத முறைபடி நடந்தேறியது. திருமணத்திற்கு பின் அவன் கிருஷ்ண லீலைகளை அறிந்து கொண்ட மதீஷா சஜனி கூறியது போல கோவை சரளாவாக மாறினாலும் ஸ்மித் அமைதியின் சிகரமாக மாறி விடுவான்.

தற்போது ஸ்மித்தை பொருத்தவரை குடும்ப அரசியலில் சமாதானம்... சரணாகதி இரண்டு மட்டுமே தாரக மந்திரம். அப்படிப்பட்ட கொள்கைகளை கடைபிடிப்பவன் பிரசவத்திற்கு மதீஷா போக மாட்டேன் என்று எவ்வளவு கூறியும் கேட்காமல் அவள் பெற்றோருடன் அனுப்பிவிட்டு இருபது நாள்கழித்து பார்க்க வந்ததற்கே மதீஷா கோபம் கொண்டாள்.

விட்டு விட்டு வந்த பிரசவ வலி தொடர்ந்த வர, அதை உணர்ந்த செவிலி பெண் டாக்ரடை அழைத்து வர சென்ற பின்னும் மதீஷா கோபம் குறையவில்லை... ஸ்மித் அருகில் வந்த சஜனி அவனிடம் அறிவுரை ஒன்றை கூறிவிட்டு குடும்ப உறுப்பினர்களுடன் வெளியேற அடுத்த ஐந்தவது நிமிடத்தில் மதீஷாவின் கோபத்தை தனித்திருந்தான் தோழி காட்டிய வழியில்(?)

மூன்று மாதங்களுக்கு பின் மதீஷா ஸ்மித் இருவரும் தங்கள் மகளுடன் இலன்டன் திரும்ப, மகளுக்கு உதவியாக திவ்யா, பிரசாத் இருவரும் மூன்று வயது மாதவ்வையும் அழைத்துக் கொண்டு சென்றனர். அவர்களை வழியனுப்பி விட்டு வீட்டு வந்ததும் சஜனி மானவ் தோளில் சாய்ந்து கொண்டு தங்கள் கடந்த காலத்தை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தாள். மனைவியின் முகத்திலிருந்தே அவள் சிந்தனை வயப்பட்டிருப்தை புரிந்து கொண்ட மானவ் என்ன என்று வினவ

"நம் லைப் பத்த திங் பண்ணிட்டு இருந்தேன். இந்த லைப் எவ்வளவு வித்தியாசமானது இல்ல... யாருன்னு தெரியாத ஒருத்தங்க கூட நம்ம வாழ்க்கையை அழக இணைச்சு வைச்சிடுது. யார் நீ?ன்னு கேட்ட ஒருத்தங்க நம்மக்கு எல்லாம மாறிட்றாங்க....
அவங்கள மீட் பண்ற அந்த செகென்ட் வரை நமக்கு நம்ம லைப் யாரு கூடன்னும் தெரியுறது இல்ல? அவங்க யாருன்னும் தெரியாது. இட்ஸ் ஆல் லைக் எ மேஜிக். மேத்யூ-மதி, சாலி-ஆர்த்தி, ஸ்மித்- தீஷா, அப்புறம் நாம ரெண்டு பேரும்... இப்படி வேற வேற துருவத்துல இருக்கிற நம்மல இந்த லைப் இணைச்சிடுச்சு." என்று வியந்து பேச, மானவ்

"நம்ம லைப் மொத்தமும் யாருடன்? யார் நீ? என்கிற ரெண்டு கேள்விக்கான தேடல்ல தான் இருக்கு. அது தான் நம்ம லைப்பையும் சேர்த்திருக்கு... அப்புறம் சஜனி இது பிலாசபிகான நேரம் இல்ல... திஸ் இஸ் பார் மானவ்..." என்று மானவ் தனக்கான நேரத்ததை கணக்கிட ஆரம்பித்தான்.


தேடல் நிறைவுற்றது....
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes