யாருக்கு பயமில்லை

#1
யாருக்கு பயமில்லை?

உலக இன்பங்களை நாடுபவன் வியாதி வரும் என அஞ்சுகிறான்.

புகழ் மிக்க குடும்பம் இகழ்ச்சி வருமோ என அஞ்சுகிறது.

அதிக செல்வம் உடையவன் அரசனையோ அல்லது அரசாங்கத்தையோ கண்டு அஞ்சுகிறான்.

கௌரவம் உடையவன் மற்றவர்களிடம் கையேந்த வேண்டிய நிலை வருமோ என அஞ்சுகிறான்.

அதிகாரம் உடையவனுக்கு எதிரியிடம் அச்சம்.

அழகு உடையவனுக்கு முதுமையிடம் அச்சம்.

அறிவுடையவனுக்கு வாத பிரதிவாதியிடம் பயம்.

நற்குணங்கள் உடையவனுக்கு கெட்ட மனிதர்களால் பயம்.

உடம்பிற்கு மரணம் வருமோ என பயம்.

ஆக, இவ்வுலகில் பயம் இல்லாத விஷயமேயில்லை.

ஆனால் அனைத்தையும் துறந்து விட்டால், இறைவனிடம் ஒப்படைத்து விட்டால் எந்த பயமும் இல்லை.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes