தேவா பாவமில்லையா???? அவபக்கமும் நியாயம் இருக்கலாம்..... தேவா பேசினால் தான் உண்மை தெரியும்........
அவ என்ன பாவம்.. ஆரம்பத்தில் இருந்தே இந்த வீட்டுல அவளும் பாட்டியும் தான் ராஜ்ஜியம் பண்றாங்க... ஷேஷா விருப்பத்தை தான் மதிக்க ஆள் இல்லை...
அவன் விருப்ப பட்டு ஒன்னு கேட்டால் அவன் அம்மாவ தூண்டி விட்டு அழுது நாடகம் போட்டு அவனை தடுத்துடுறாங்க
அவன் ஆசை பட்ட படிப்பை படிக்க விடல
அவன் அப்பா அவனுக்காக உருவாக்குன கம்பெனிய கொடுக்கல .. இவன் அப்பா சொத்தை எடுத்து அவங்க மகளோட பொண்ணுக்கு கொடுக்க பாட்டிக்கு என்ன உரிமை இருக்கு.....
அவன் அப்பா கம்பெனிய தனக்கு வேண்டும் என்று இவ ஏன் கேட்கிறா ... கல்யாணத்துக்கு பிறகு தேவா பட்டது கஷ்டமா தெரியலாம்.. ஆனால் அந்த கல்யாணமே அவளும் பாட்டியும் அவனோட அம்மாவ வச்சு மிரட்டி சாதிச்சது தான் ....
பாட்டியும் பேத்தியும் கலைய முட்டாளாக்கி தாங்கள் விருப்பத்துக்கு ஆடுற பொம்மையா வச்சிருக்காங்க... இவங்களுக்கு காரியம் ஆகனும்னா இந்த பொம்மைக்கு கீ கொடுக்க வேண்டியது
ஷேஷாவோட அம்மா எந்த இடத்தில் ஒரு நல்ல அம்மாவா நடந்து இருக்காங்க
காதல் விஷயத்தில் மட்டும் தான் பாட்டி ஷேஷாவோட விருப்பத்தை எதிர்த்தாங்களா ... அப்படி இருந்தால் பாட்டி பண்றதுல ஏதோ நியாயம் இருக்கு என்று நினைக்கலாம் ஆனால் அவன் படிப்பில் இருந்து எந்த விஷயத்திலும் அவனோட விருப்பத்துக்கு மதிப்பு கொடுக்கல
ஷேஷாவோட நல்லதுக்கு என்று சொன்னாலும் இவ்வளவு அடக்குமுறை காட்டுனா தப்பா தான் போவான்..