மையல் கொண்டேன் - 2

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
மையல் – 2

நிகா அந்த போக்குவரத்து காவலரிடம் வழக்காடி கொண்டிருக்க சூர்யா ஆட்டோவில் இருந்து அந்த இடத்தை நோக்கி சென்றான் அவன் அருகே செல்ல அதற்கு முன்பே இவர்களிடம் SI வேந்தன் நெருங்கி என்ன பிரச்சனை என்றான்

நிகாவோ அவனை பார்த்து அவனுடைய சட்டையில் இரண்டு நட்சத்திரமும் அதற்கு கீழே சிவப்பு ரிப்பனும் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என எழுதியிருப்பதை பார்த்து அவன் SI என அறிந்து கொண்டு அவனிடம் சார் என பிரச்சனையை கூற தொடங்க அவர்களை நெருங்கினான் சூர்யா

தான் அருகே யாரோ வந்து நிற்பதை உணர்ந்து நிகா திருப்பி பார்க்க அவளின் அருகே சூர்யா நிற்பதை கண்டு ஒரு நிமிடம் அதிர்ந்தாள் பின் நிர்ப்பது தன்னுடைய நிலவன் தான என அவனை திரும்ப பார்க்க தன்னுடைய நிலவன் என அறிந்து கொண்டாள் முகம் விசிக்க மனதில் மகிழ்ச்சி ஊற்றெடுக்க அதை முகம் பிரதிபலிக்க நீண்ட ஐந்து ஆண்டுகளுக்கு பின் தன்னவனை கண்டதும் பேச்சின்றி சிலையாக நின்றாள் அவளுடைய முகம் மட்டும் உணர்ச்சிகளை கட்டியது

முதலில் மகிழ்ச்சி,எப்படி இருக்கிறான் என ஆராய்ச்சி, எப்பொழுது சென்னை வந்தான் இதை ஏன் அண்ணன் தன்னிடம் சொல்லவில்லை என்ற யோசனை என்று நிமிடத்தில் அவளுடைய முகம் பல்வேறு பாவனைகளை காட்டியது பின் அவன் செய்தவை அவளது நினைவில் தோன்ற அவனை முறைக்க ஆரம்பித்தாள்

வேந்தனோ என்ன மா கேட்கிறேன் இல்ல சிலை மாதிரி நிற்கிறாய் என்ன பிரச்சனை எதற்காக இவருடன் சண்டையிட்டு கொண்டிருக்கிறாய்

நிகா தனது நிலையில் இருந்து வெளிவது வேந்தனிடம் “சார் எனக்கு முன்பு ஒருவர் சென்று கொண்டிருந்தார் அவரை நிறுத்தி இவர் வண்டியின் பேப்பர் லைசென்ஸ் கேட்டார் அவரும் அனைத்தும் காண்பித்தார் எல்லாம் சரியாக இருந்தும் இவர் அவரிடம் பணம் கேட்கிறார். எதற்கு பணம் தரவேண்டும் என கேட்டதற்கு என்னிடம் பாய்கிறார்”

சூர்யாவோ அந்த காவலரிடம் “நீங்க எல்லாம் சரியாக இருந்தும் பணம் கேட்டிர்களா” என்று வினவ அந்த காவலரோ அதை கேட்க நீ யார் என்னமோ பெரிய ACP மாதிரி கேள்வி கேட்கிறாய்

வேந்தன் “சரி அவரை விடுங்க நீங்க பணம் கேட்டிர்களா இல்லையா அதை முதலில் சொல்லுங்கள்”

நீயும் என்னை மாதிரி SI தானே என்னை கேள்விகேக்கும் அதிகாரம் உனக்கு இல்லை உன்னுடைய வேலை என்னவோ அதை பார்த்து கொண்டு கிளம்பு

நிகா “பார்த்திர்களா சார் எப்படி பேசுகிறார் என்று நான் இவர் மீது வழக்கு தொடுக்கிறேன் அப்பொழுது இவர் என்ன செய்கிறார் என பார்க்கலாம்”

சூர்யா “ஓ அப்ப சார் யார் வந்து கேட்டால் சரியாக பதில் சொல்வீங்க. கேட்டதற்கு மட்டும் பதில் கூறுங்கள்”

அதை கேட்க உனக்கு என்ன அதிகாரம் இருக்கு ஏய் உன்மீதும் வழக்கு போட்டு கோர்ட்டில் பைன் கட்ட வைத்துவிடுவேன் இங்கிருந்து சென்று விடு வந்துட்டான் இவளுக்கு வக்காலத்து வாங்க ஒரு பொம்பள வந்து கேட்டாள் போதும் அவளுக்கு வக்காலத்து வாங்க வந்திடுவாணுக

அதை கேட்ட சூர்யா அவனை அறைந்து விட்டு என்ன டா போன போகுது என அமைதியாக பேசினாள் பெண் என்று மரியாதையை கொடுக்காமல் அவள், இவள் என்கிற அதுமில்லாமல் கேட்க வந்த SIயிடமும் திமிரா பேசற உன்னையெல்லாம் எவண்டா இந்த வேலைக்கு வர சொன்னது இப்படி பணம் மட்டுமே முக்கியம் என்றால் வேறு வேலைக்கு செல்ல வேண்டியது எதற்கு காக்கி சட்டையை போட்டு கொண்டு அதை கலங்க படுத்துகிறாய்

சூர்யா விட்ட அறையில் ஐந்து விரல்களும் அவனின் கன்னத்தில் பதிந்து சிவந்திருந்தது அவன் கொடுத்த அடியில் கன்னத்தை ஒரு கைகளால் பற்றி கொண்டு இப்பொழுது சிறிது மைரியதையுடன் சார் நீங்க யாரு என்னை கேட்க என பணிவாக வினவ

சூர்யா “நான் வந்த உடனே கேட்டியே இதை கேட்க நீ என்ன ACPயா என்று ஆமாம் நான் புதிதாக வந்துள்ள ACP சூர்யநிலவன்”

அவ்வாறு சூர்யா கூறியதும் SI வேந்தன் மற்றும் அந்த போக்குவரத்து காவலர் இருவரும் அவனுக்கு சல்யூட் அடித்தனர் அதை ஏற்று கொண்டவனோ இப்போ சொல் என்ன நடந்தது இங்கே என்ன பிரச்சனை

சார் இவங்க தான் ஒன்றும் இல்லாத பிரச்சனையை பெரிதாக்குகிறார்கள் நான் எப்பொழுதும் போல் என்னுடைய வேலையை மட்டுமே செய்தேன்

நிகா சூர்யாவை முறைத்து கொண்டே சார் “இவருடன் சண்டையிட எனக்கு என்ன ஆதாயம் இருக்கு இவர் தவறு செய்ததால் தட்டி கேட்டேன் வேண்டும் என்றால் இங்கே நிர்ப்பவர்களிடம் கேட்டு கொள்ளுங்கள்”

அவர்களை சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களும் வந்திருப்பது ACP என தெரிந்து கொண்டு நிகாவிர்க்கு ஆதரவாக கூற அந்த காவலரை ஒரு வாரம் பணியிடை நீக்கம் செய்து அதன் பின்பு போக்குவரத்தை சரிசெய்தான்.

தான் வந்த ஆட்டோவை பணம் கொடுத்து அனுப்பிவிட்டு வேந்தனுடன் சென்றான் அவன் போகும் வரை அவனையே கோவத்துடன் முறைத்து கொண்டிருந்த நிகா அவன் சென்றதும் தன்னுடைய ஸ்குட்டி எடுத்து கொண்டு தனது கல்லூரியை நோக்கி பயணித்தாள்

நிகாவின் முகத்தில் தோன்றிய பாவனைகளை ரசித்தவன் அவள் கடைசியாக தன்னை கோவத்துடன் முறைப்பதை கண்டு சூர்யாவின் இதழ்களின் ஓரம் சிறு புன்னகை உதயமானது. நிகா முறைப்பதை கண்ட வேந்தனும் இன்னும் எதற்கு இந்த பெண் முறைக்கிறாள் ஒரு வேளை இவளுக்கு போலீஸ் என்றாலே பிடிக்காது போல ஆனால் இவளுக்கு உண்மையில் ஜான்சிராணி என பட்டம் சூட்டலாம் அப்பா என்ன தைரியம் என நினைத்து கொண்டான்

வேந்தனுடன் பைக்கில் அமர்ந்த சூர்யாவோ உங்க பேர் என்ன என்று வினவ அதில் கலைந்தவன் வேந்தன் சார். ம் சரி வேந்தன் இப்பொழுது சிட்டியின் நிலவரம் என்ன, அதிக தொல்லை உள்ள பகுதிகள் யவை என்று அறிந்து கொண்டான்

இருவரும் காவல் தலைமை அலுவலகத்தை அடைய அங்கிருந்த SI யாழினி என்ன வேந்தன் சார் எப்பொழுதும் சரியான நேரத்திற்கு வந்துவிடுவிர்கள் இன்று ஏன் இவ்வளவு நேரம் அதுவுமில்லாமல் புதிதாக வர ACPக்கு வேற ஓவர் பில்டப் கொடுக்கறாங்க விட்ட நம்ம கமிஷனர் அவருக்கு ஒரு பாராட்டு விழாவே வைப்பார் போல அவ்ளோ பெருமையாக பேசுறார்

வேந்தனோ “மேடம் கொஞ்சம் அமைதியாக இருங்க என பக்கத்தில் நின்றிருந்த சூர்யாவை பார்த்து கொண்டே கூற”

யாழினியோ “என்ன சார் அவர் என்னமோ இங்கே இருக்கிற மாதிரி சொல்றிங்க அது சரி இவர் யாரு என்று பக்கத்தில் நின்றிருந்த சூர்யாவை காட்டி கேட்க” வேந்தன் பதில் கூறும் முன்பே நீங்க இவ்வளவு நேரம் ஓவர் பில்டப் கொடுக்கிறதா சொன்னிங்களே அந்த ACP நான் தான்

உடனே யாழினி சாரி சார் என கூறி சல்யூட் அடிக்க இதுவரை அலச்சியமாக நின்றிருந்த காவலர்களும் அவனுக்கு மரியாதையை கொடுத்தனர்

அலுவலகத்தின் உள்ளே நுழைந்து தன்னுடைய பொறுப்பை ஏற்று கொண்டவன் காக்கி உடையணிந்து கமிஷனரை கான சென்றான்

கமிஷ்னரின் அனுமதியுடன் அவருடைய அறையில் பிரதேசித்து அவருக்கு மரியாதையை செலுத்தினான் அதை ஏற்றுகொண்ட கமிஷனர் வாங்க சூர்யா உங்களுடைய ப்ரோபைல் பார்த்தேன் ரொம்ப நல்லா வேலை பார்த்திருகீங்க இங்கேயும் உங்களுடைய பொறுப்பை சிறப்பாக செய்ய வாழ்த்துகள்

சூர்யா “தேங்க்ஸ் சார், கண்டிப்பாக என்னுடைய பொறுப்புகளை சரியாக செய்வேன்”

நிகா கல்லூரியில் தனது வண்டியை நிறுத்திவிட்டு நண்பர்களை காண அவர்கள் எப்பொழுதும் அமர்ந்துள்ள இடம் நோக்கி சென்றாள் அங்கே அவளுடையா தோழன் வருண் “வாங்க மேடம் இன்று என்ன பச்சாயத்தோ”என கேலியாக வினவினான்

சுபா “இன்று போலீஸ் கூட மேடம் வாக்குவாதம் செய்தாங்க வருண்”

மித்ரன் “என்ன ஆச்சு வருணி ஏதாவது பெரிய பிரச்சனையா” அக்கறையாக வினவ

சுபா “மித்ரா நீ வேற இவளால் அவங்களுக்கு தான் பிரச்சனை வரும் இவளுக்கு என்ன ஆக போகிறது”

நிகா “உனக்கு எப்படி தெரியும் நான் போலீஸிடம் சண்டையிட்டது”

ஆமா இது அப்படியே உலக அதிசயம் தெரியாமல் போக நானும் அங்கு தான் இருந்தேன் என் அப்பாவுடன் இறங்கி வர பார்த்தேன் அதற்குள் ACP வந்துவிட்டார் அதுமில்லாமல் அப்பா வேறு இறங்க அனுமதிக்கவில்லை

வருண் “வருணி நீ பேசாமல் மெடிக்கல் காலேஜில் படிப்பதற்கு பதிலாக வக்கீலுக்கு படித்திருக்கலாம் எங்கு தவறு நடந்தாலும் அதை தட்டி கேக்க முதல் ஆளாக நீ நிற்கிறாய்”

ஏன் வருண் வக்கீல்,போலீஸ் மட்டும்தான் தவறு செய்பவர்களை தட்டி கேட்கணுமா என்னால் அப்படி இருக்க முடியாது என்னுடைய ஆசை மருத்துவர் ஆவது என் கண்களின் முன் தவறு நடந்தால் தட்டி கேட்பது நானும் இந்த சமுதாயத்தில் ஒரு அங்கமாக வாழ்வதால் என்றாள்

மித்ரன் “சரி வரு நீ செய்வது சரிதான் ஒத்து கொள்கிறோம் ஆனால் இதன் மூலம் நாளை உனக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் என்ன செய்வாய்”

அதையும் எதிர் கொள்ள வேண்டியதுதான் ஆனால் எனக்கு பிரச்சனை வர என்னுடைய குடும்பம் விட மாட்டார்கள் அவனும் விட மாட்டன் என சூர்யாவை நினைத்து கொண்டு சொன்னாள்

சுபா “அவனா யார் அவர் வரு”

நிகா “என்னை கட்டி கொள்ள போறவனை சொன்னேன்”

யாரு அந்த அதிர்ஷ்டசாலி எங்களுக்கு தெரியாமல் என கோரசாக சுபாவும் வருணும் வினவ

அது தெரியும் போது தெரியும் என்றுவிட்டு தன்னுடைய பயிற்சி செய்யும் மருத்துவமனை நோக்கி சென்றாள்

மித்ரனோ இவளும் அவனுடைய நினைவில் இருக்கிறாள் ஆனால் இருவரும் பேசிக்கொள்ள மாட்டார்களாம் இதில் நடுவில் என்னை கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் இவளுக்கு மட்டும் நான் சூர்யாவின் தம்பி என தெரியும் போது என்ன ஆட்டம் ஆட போறாளோ சாமி அப்பொழுது என்னை மட்டும் காப்பாற்று தனக்கு தானே புலம்பிக்கொண்டு தன்னுடைய பயிற்சியை தொடர சென்றான் அவனுடன் சுபாவும்,வருணும் சென்றனர்


மையல் தொடரும்..........................

Hai friends next updateவுடன் வந்துவிட்டேன் படித்து எப்படி உள்ளது என சொல்லுங்கள் உங்கள் கருத்துகளை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன் friends and i will give the 2 update on week that are Monday and Thursday பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top