மெல்லிய காதல் பூக்கும் P5

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ் ரிஷி, யாழ் எபிலாக் கேட்டவர்களுக்கு.. EPILOGUE ;);)கதைக்கு teaser:geek::geek:

download (35).jpg


மும்பையில் ரிஷியின் வீட்டில் கயல் ரிஷியை திட்டிக் கொண்டிருந்தாள்.



"உங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாதா? என்னை வேல பண்ணி வச்சிருக்கிறீங்க? சின்ன குழந்தை போல? முதல்ல உங்கள போடணும்" என்றவாறே சுற்றி முற்றி பார்த்தவளுக்கு அவனை அடிக்க குச்சி எதுவும் கிடைக்காததால் கட்டிலில் இருந்த தலகணையை அவன் மேல் வீச





அதை லாவகமாக கைப்பற்றியவன் "வார் பேபி உனக்கு திட்டத்தான் தெரியலைனா... அடிக்கக் கூடவா தெரியல... பில்லோவால அடிச்சு என் உயிர் போகப் போகுது" வேண்டுமென்றே சிரித்து மனைவியை சீண்டலானான்.



"இருங்க வரேன்" என்றவள் புடவை முந்தியை இடுப்பில் சொருகிக் கொண்டு அவன் மேல் பாய்ந்தவள் கைகளாலையே! அவனை அடிக்க ஆரம்பிக்க



"இங்க, ஆ.. இங்க" என்று திரும்பி திரும்பி அடிகளை வாங்கிக் கொண்டு "அப்பா.. நல்லா மசாஜ் பண்ணி விட்ட வார் பேபி.. செம்மயா இருந்துச்சு"



அவளோ கை வலிக்க அடிகளை கொடுத்து மூச்சு வாங்கி நிற்க அவனோ மசாஜ் என்றதில் மேலும் கடுப்பானவள் அவன் முடியை பிடித்து இழுக்க



"ஐயோ.. வலிக்குது விடு டி.. விடு டி.. ராட்சசி..." என்று கத்த



"இப்போ வலிக்குதில்ல... இனிமேல் பண்ணுங்க பாக்க பூரிக் கட்டையாலையே மண்டைல போடுறேன்" இடுப்பில் இருந்த புடவை முந்தியை இறக்கி விட்டவள் வியர்த்திருந்த முகத்தை துடைத்தவாறே முகத்தில் விழுந்திருந்த முடிகளையும் காதோரம் ஒதிக்கிக் கொண்டாள்.





"அப்படி நான் என்னை டி... பண்ணேன். இப்படி கொடும பண்ணுற?"



"கண்ணை திறந்து நல்லா பாருங்க... எண்ண பண்ணி வச்சிருக்கிறீங்கன்னு புரியும். வர வர ஸ்ரீராமை விட உங்கள மேய்க்கிறது தான் கஷ்டமா இருக்கு"



"நா என்ன மாடா..." முகத்தை சுருக்கியவாறு ரிஷி.



"மாடு கூட நான் சொன்னா கேக்கும் போல ஆனா நான் எது வேணாம் னு சொல்லுறேனோ! இந்த அப்பனும், மகனும் அத மட்டும் பண்ணுங்க. சுவர் பூரா கலர் சாக்கால கிறுக்கி வச்சிருக்கிறீங்க? சுவரை கழுவிய என் முதுகு வலிக்குது. எத்துணை தடவ வேணாம் னு சொல்ல அதான் இன்னைக்கி நல்லா போட்டேன். எங்க அவன்.. சின்ன ரிஷி... அவனையும் நாலு சாத்து சாத்தினா தான் என் கோபம் அடங்கும்"

images (4).jpg

"வார் பேபி என்னை அடிச்ச நா பொறுத்து கிட்டேன். ஸ்ரீராம் பாவம் சின்ன பையன் அவனை விட்டுட்டு"



"அவன் உயரத்துக்கு எவ்வளவு கிறுக்க முடியுமோ! அவ்வளவு கிறுக்கி இருக்கான் மீதியெல்லாம் உங்க கைவேலை னு புரியுது. ரூமை பாருங்க கன்றாவியா இருக்கு"



"சரி டி பெயிண்ட் பண்ணிக்கலாம்..." மனைவியை சமாதானப் படுத்த



"கலர் சாக்க ட்ராயிங் புக்குல பாவிக்காம அதென்ன சுவருல கிறுக்குறீங்க? டைலியும் அப்பனும், புள்ளையும் இதையே பண்ணுறீங்க. சரி நம்ம ரூம் தான் னு விட்டா வீடு முழுக்க வரைய ஆரம்பிச்சிட்டீங்க.. சொல்லி சொல்லி பாத்தேன் முடியல. வீடா இது ஆர்ட் களறியா?" இன்னும் கத்தலானாள் விழி.


:love::love::love::love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
அதானே
ஏண்டாப்பா ரிஷி அம்பி
வீடு முழுக்க இப்படி டிராயிங்
பண்ணிட்டு வார் பேபியை வேற
கத்த விடுறாய்
அவள் பாவமோன்னோ?

ஏங்கண்ணு மிலா டியர்
எங்கள் பிரதீப்பை எங்கே
காணோமே
போன அப்டேட்டுக்கே அவன்
வரலை
இந்த அப்டேட்லயும் பிரதீபன்
வரலேன்னா வரலேன்னா
வரலேன்னா.........
 
Last edited:

Nachu

Well-Known Member
ஹாஹாஹா சூப்பர்..... வீடு தான் first ஆர்ட் gallery.
 

mila

Writers Team
Tamil Novel Writer
அதானே
ஏண்டாப்பா ரிஷி அம்பி
வீடு முழுக்க இப்படி டிராயிங்
பண்ணிட்டு வார் பேபியை வேற
கத்த விடுறாய்
அவள் பாவமோன்னோ?

ஏங்கண்ணு மிலா டியர்
எங்கள் பிரதீப்பை எங்கே காணோமே போன அப்டேட்டுக்கே அவன் வரலை
இந்த அப்டேட்லயும் பிரதீபன் வரலேன்னா வரலேன்னா வரலேன்னா.........
இப்போ தான் பானுமா எழுத ஆரம்பிச்சேன். பிரதீப், தியா வருவாங்க..:):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top