மெல்லிய காதல் பூக்கும் P19

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
download (15).jpg

மலர்விழியை தங்களது வீட்டில் எதிர்பார்க்காத அமுதனுக்கு அவளைக் காணக் காண கோபம் பொங்க, அவளை வீட்டார் தங்கியதில் எரிச்சலுடன் அவர்களின் பேச்சில் சேராமல் ஒதுங்கி இருந்தான்.



அவளை தனியாக பிடித்துக் கொண்டு நன்றாக நாலு கேள்வி கேக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் இருந்தவனுக்கு அனைவரும் மலர்விழியை சூழ்ந்தவாறே இருக்க, சந்தர்ப்பம் தானாக அமையாது என்று புரியவே அதை தானே ஏற்பாடு செய்தான்.



அனைவரும் உறங்க சென்ற நேரம் பார்த்து மலர்விழியின் அறையினுள் புகுந்தான் அமுதன். மலர்விழி நன்றாக உறங்கி இருப்பாள் அவளின் வாயை பொத்தி எழுப்பி மிரட்டலாம் என்று உள்ளே சென்றவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.



அறையில் மின் குமிழ் எரிந்துக் கொண்டிருக்க, அவளைக் காணவில்லை. இந்த நேரத்தில் எங்கே சென்றிருப்பாள்? என்று யோசனையாகவே இருந்தவனுக்கு கட்டிலின் மீது அவளின் துணிப்பை இருக்கவே அருகில் செல்ல குளியலறையில் நீர் விழும் சத்தம் கேட்டது.



"ஓஹ்... உள்ளேதான் இருக்கியா? வா வா உனக்கு இன்னைக்கி இருக்கு" பொறுமியவாறே குளியலறை பக்கம் பார்த்து கட்டில் அமர ஏதோ ஒரு புத்தகத்தின் மீது அமர்ந்து விட்ட உணர்வில் அதை கையில் எடுத்தவன் தூக்கிப் போட முனைய, அது அமுதவள்ளியின் டயரி என்று புரியவே!



"போற போற இடத்துக்கெல்லாம் இத சுமந்துக் கொண்டுதான் போறாளா? அப்படி என்ன தான் இருக்கு இதுல?" அதை படிக்கும் ஆவல் எழ, தந்தை சொன்னதும் நியாபகத்தில் வந்தது.



"அவ அம்மா அவளுக்கு ஏதோ எழுதி இருப்பாங்க அத நான் படிக்கிறது தப்பு" தனக்கு தானே! சொல்லிக் கொண்டவன் அதை மேசையின் மீது வைக்க முனைய கீழே விழுந்து திறந்துக் கொண்டது.

images (45).jpg

குனிந்து கையில் அடுத்தவனின் பார்வை அப்பக்கத்தில் விழ கண்கள் தானாகவே அதை படித்தன. திடுக்கிட்டவன் அடுத்த பக்கத்தை புரட்ட குளியலறையில் கதவு திறக்கும் சத்தம் கேட்டு டி ஷர்ட்டில் டயரியை மறைத்துக் கொண்டவன். மலர்விழியின் புறம் திரும்ப



"இங்க என்ன பண்ணுற அமுதா" கண்களை விரித்து மலர் கேட்க,



"ஆ... குட் நைட் சொல்லிட்டு போலாம்னு வந்தேன்" அலட்டலில்லாமல் பதில் சொன்னவனை புரியாத பார்வை பார்த்தவள்



"என்ன விஷயம்?" நேரடியாகவே கேக்க



அவளை மிரட்டி துரத்த வந்தவனோ! டயரியை கொஞ்சம் படித்ததில் மனம் மாறி இருக்க, "குட் நைட் சொல்லத்தான் வந்தேன். சொல்லிட்டேன். நல்லா இழுத்து போர்த்திக் கிட்டு தூங்கு" என்று அவள் அறையை விட்டு வெளியேறி தனதறைக்கு வந்தவன் நிதானமாக டயரியை படிக்கலானான்.



படிக்கப் படிக்க, ரத்னவேலையும், கீதாராணியையும் கொன்று விடும் கோபத்தில் கனன்றவன். காலையில் ப்ரதீபனோடு பேச வேண்டும் என்ற முடிவோடு தூங்கி, காலையிலையே அவனுக்கு அலைபேசி மூலம் அழைப்பு விடுத்து தோட்டத்துக்கு வருமாறு சொல்ல வேண்டா வெறுப்பாக எழுந்து வந்த ப்ரதீபனுக்கும், அவனோடு பேச வந்த அமுதனின் காதிலும் மலர்விழி சொன்னவைகள் விழ பேசாமலே இருவரும் திரும்பி நடந்தனர்.

8 (16).jpg

அதன் பின் மலர்விழி சென்னை திரும்புவதை அறிந்த அமுதன் ப்ரதீபனை அழைக்க அவனோ அவனை வீட்டுக்கு வருமாறு கூற, வந்தவனோ! அவன் கையில் டயரியை கொடுத்து படிக்கும் படி சொல்ல ப்ரதீபனும் அதை படிக்க ஆரம்பித்தான்.

:love::love::love::love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
அடடா அந்த டைரியில் அப்படி என்னதான்ப்பா ரகசியம் இருக்கு
சீக்கிரமா வந்து சொல்லுங்க, மிலா டியர்
ரத்னவேலையும் கீதாவையும் போட்டுத் தள்ள நானும் கூட்டு சேர்ந்துக்கறேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top