மெல்லிய காதல் பூக்கும் Epilogue

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
download (14).jpg

சிவரஞ்சனி, சரவணகுமரன், திலகா மூவரையும் சுற்றுலா அனுப்பி வைத்திருந்தான் ரிஷி. பேரப்பசங்களை சுற்றுவதுதில் தான் பா சுகம் என்று மறுத்தவர்களை வலுக்கட்டாயமாக இந்தியா முழுவதும் சுத்திப்பார்த்து விட்டு வரும் படி உத்தரவிட்டிருந்தான். சுற்றுலா சென்றவர்களின் மனமோ வீட்டை சுற்றியே இருக்க ஞாயிறு அன்று வீடியோ காலில் பேர பசங்களோடு செல்லம் கொஞ்சாமல் அவர்களின் சுற்றுலா முழுமையாகாமல் இருந்துக் கொண்டிருக்கின்றது.



அமுதன் குடும்பம் சென்னை வாசம் தான். வெள்ளி மாலையே விமானம் ஏறி மும்பை வருபவர்கள் குடும்பத்தோடு ஒன்றாக இருந்து ஞாயிறு மீண்டும் சென்னையை நோக்கி பயணிப்பது வழக்கம். தன் மகள் குடுப்பத்தாரோடு ஒன்றாக இருக்க வேண்டும் என்று இது மலர்விழி எடுத்திருக்கும் முடிவு.



தியா, பிரதீபன் ரிஷி, கயல் பக்கத்து பக்கத்தில் இன்றும் ஒற்றுமையாக, ஒன்றாக வசித்து வருகின்றனர். அவர்களின் தொழில் இந்தியா முழுவதும் வியாபித்திருந்தாலும் குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க விரும்பாமல் அனைவரும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பது அனைவரினதும் விருப்பமாக இருக்க, மலர்விழியின் குடும்பத் தொழில் காரணமாக அவர்கள் மாத்திரம் சென்னையில் வசிக்கின்றனர்.

download (16).jpg

"யாரு டாடி இந்த தாத்தா டெய்லியும் காலைல ஸ்கூல் போகும் போது வணங்கிட்டுதான் போகணும்னு சொல்லுறீங்க சரி அதுக்காக லீவு நாளையும் தூங்க விடாம தூக்கிட்டு வந்து ரிஷி மாமா வீட்டுல விடுறீங்க" தியாவை போலவே ப்ரதீபனை உண்டு இல்லை என்று பண்ண பிறந்தவன் தான் பிரபாத். பிரதீபன் தியாவின் இரண்டாவது வாரிசு.



மோகனசுந்தரத்தினால் தான் தனக்கு இந்த வாழ்க்கையும், குடும்பமும் கிடைத்ததென்றதை என்றுமே மறக்காமல் தன் பிள்ளைகளுக்கும் அவர் தெய்வமாக வழிகாட்டுவார் என்று நம்பலானான் பிரதீபன்.



"அப்படியே உன் அம்மா மாதிரி... இவரு பெரிய காலேஜ் படிக்கிறாரு லீவு விட. எல்.கே.ஜி. போற உனக்கே இவ்வளவு அலுப்பு" மனசுக்குள் திட்டினாலும் "தாத்தா தான்டா நமக்கு எல்லாமே! அவரு தெய்வமா இருந்து நம்மள பாத்துக்கொண்டு இருக்குறாரு. தப்பா பேசாத என்ன சரியா" மிரட்டலும், அன்பும் கலந்து கூறியவாறே ரிஷியின் வீட்டினுள் நுழைய ஐந்தே வயதான பிரபாத் இறங்கி ஓடி பூஜையறையில் ஐக்கியமானான்.


images (11).jpg


அங்கே ஸ்ரீராம் பெரியவனாக நின்று சாமி பாடல் பாட ப்ரதீபனின் செல்ல மகள் ஏழு வயதான தீக்ஷனா கூட பாடிக் கொண்டிருந்தாள். அவர்களை சுற்றி ரிஷியின் செல்லமகள் சஹானா, ப்ரதீபனின் கடைசி வாரிசு பியூஸ் மற்றும் அமுதனின் மகள் மஹிமா வணக்கியவாறு கண்களை மூடி அமர்ந்திருக்க பிரபாத் அவர்களை சீண்டும் வேலையில் இறங்கி இருந்தான்.

download (13).jpgimages (9).jpg

நான்கு வயது கூட ஆகாத மஹிமா சமத்தாக அண்ணன் ஸ்ரீராம் சொன்னதைக் கேட்டு பிஞ்சுக் கைகளை கூப்பி சுவாமியை வணங்கிக் கொண்டிருக்க அவளின் தலையின் மேல் வீற்றிருந்த குட்டி தென்னை மரத்தில் கட்டப்பட்டிருந்த ஹேர் பெண்டடை உருவி தன்கையில் அணிந்துக் கொண்டான் பிரபாத்.



"பாத்தியா உன் பையனுக்கு இருக்கும் சேட்டையை... அப்படியே அப்பன் புத்தி நீ என்ன சீண்டுற மாதிரியே உன் பையனும் என் பொண்ண சீண்டிக்கிட்டே இருக்கான். அவனுக்கு என் பொண்ண தர மாட்டேன் சொல்லிட்டேன்" அமுதன் முறிக்கிக் கொள்ள

download (18).jpgm50-393616.jpg

"போடா டேய் என் மருமகளை தூக்கிட்டு போய் தாலி காட்டுவாண்டா என் சிங்கக்குட்டி"



"என்ன பேச்சு பேசுறீங்க காலையிலையே... ஷூ... அமைதியா இருங்க" தியா அதட்ட கப்சிப் என்றானான் பிரதீபன்.



மோகனசுந்தரத்தின் படத்தை வணங்கி விட்டு ஒவ்வொரு குழந்தையாக வெளியே வர பெற்றோர்களிடம் முறையிடுவதுதான் முதலில் நடக்கும். எல்லாம் பிரபாத்தின் அட்டகாசங்கள். அவனை அதட்டினாலும், மிரட்டினாலும் அஞ்சாமல், பணியாதவன் கொஞ்சமாலும் அடங்குவான் என்றால் அது அகல்யாவிடம் மாத்திரம். ஆனால் அவளும் திருமணமாகி பெங்களூரில் வசிப்பதால் அவனை அடக்கும் வழிதான் தெரியவில்லை.



தீக்ஷனா பிறக்கும் போதே ஸ்ரீராமுக்கு என்று முடிவு செய்திருக்க அதை சிறுவர்கள் மனதில் திணிக்க விரும்பாமல் ரிஷி அவளை நீதான் நல்லா பார்த்துக்கணும் என்ற சொல்லி வைக்க வீட்டுக்கே மூத்தவனான அவன் அதற்கு பின் பிறந்த அன்னைவரையும் காக்கும் கடவுளானான். பெற்றோரிடம் முறையிட்டு அடங்காத பிரபாத்தை பதினோரு வயதான ஸ்ரீராம் வீடியோ கேம் கொடுக்காமல் மிரட்டி பணிய வைத்துக் கொண்டிருக்க குட்டி வாண்டுகளுக்கு அவன் ஹீரோவாகிப்போனான்.



சஹானா கயலை போல் பொறுமையின் மறு உருவமாக இருந்தாள்.



"அவசர பட்டுட்டியே ரிஷி பொறுத்ததும் பொறுத்த பிரபாத் பிறந்த பிறகு சஹானா பிறந்திருந்த அவளை என் மருமகளாக்கி இருப்பேனே" பிரதீபன் மனமுருகி சொல்ல



"அப்போ என் பொண்ணு" அமுதன் முறைக்க



"அதான் பியூஸ் இருக்கானே!"

download (15).jpg

"ஆமாடா... அவன் தங்கமான பையன் சொன்ன பேச்சு கேக்குறவன் அவனுக்காக ஒரு பொண்ண பெத்துக்கணும்" அமுதன் முந்திக்கொள்ள



"கொன்னுடுவேன். அவனை ரிஷியோட பெண்ணுக்குத்தான் கொடுப்பேன் ரிஷி நீ ஏன் இன்னொரு பொண்ணு பெத்துக்க கூடாது"



ப்ரதீபனை முறைத்தவன் "உனக்கென்ன விளையாட்டா போச்சா... சஹானா உண்டானப்போ வார் மசக்கையாள எவ்வளவு கஷ்டப்பட்டா பொறக்குறப்போ வ்வளவு துடிச்சா அதெல்லாம் பார்த்துட்டு குழந்தேயே வேணாம்னு இருக்கேன்" வாய்விட்டு கூறியவன் மனதுக்குள் "குடிச்சாநாம நம்ம கண்ட்ரோல்லையே இல்ல முதல்ல ஸ்ரீராம் அப்பொறம் சஹானா சத்தியமா இனி சரக்க இனி மோந்து கூட பார்க்க மாட்டேன்"


images (10).jpg
"உனக்குத்தான் அதெல்லாம் பெருசா தெரியுது அண்ணி கிட்ட கேளேன் ஒண்ணுமே இல்லனு சொல்வாங்க, மலரும் அப்படிதான் சொன்ன.." அமுதன் சொல்ல




"என்ன இங்க மாநாடு நடக்குது... வாரத்துக்கு ரெண்டு நாள் மும்பாய் போலாம்னு சொன்னப்போ முடியாது தொழிலை பார்க்கணும்னு அந்த குதி குதிச்சீங்க, இங்க வந்த ஒட்டிக்கிட்டு திரியிறீங்க முதல்ல வாங்க பசங்களெல்லாம் அப்பாக்களுக்காக வைட்டிங்..." மலர் அமுதனின் கையை பிடித்து இழுக்க மூவருமே எழுந்து உள்ளே நடந்தனர்.
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
images (7).jpg
அந்த பெரிய சாப்பாட்டு மேசையில் அனைவரும் அமர்ந்திருக்க, இவர்கள் சென்று அமர்ந்ததும் கயல், தியா, மலர் பறிமாற ஊட்டி விடுவதும், பேச்சும், சிரிப்போடும் சாப்பிட ஆரம்பித்தார்கள்.



பியூஸ் பார்வதி பாட்டியின் செல்லம். தன் மகனின் மறுபிறப்பாகவே பார்க்கலானார் அவர். அப்பா.. ராசா.. என்று ஆரம்பித்து அவனுக்காக எல்லாம் செய்வது அவர். இப்பொழுதும் மடியில் வைத்து உணவூட்டிக் கொண்டிருந்தார். பிரபாத்தின் சேட்டைகளில் சிக்கி அல்லல் படும் மற்றுமொரு ஜீவன் பார்வதி பாட்டி முதுமை நன்றாகவே எட்டி இருக்க கோபமும் உச்சத்தில் ஏறும் அப்போது நிறுத்தாத ரெகார்ட் தான். அது பிரபாத்துக்கு சங்கீதமாய் ஒலிக்கும்.



"பாட்டி பாவம்டா... விட்டுடுடா..." தியா சொல்லியும் பாத்தாச்சு, அடிச்சும் பாத்தாச்சு அடங்காமல் அட்டகாசம் செய்து கொண்டிருக்கின்றான்.


Shalini Pandey (16)1551159041.jpg


"விடு தியா சின்னவன் தானே வளர வளர சரியாகிடுவான்" கயல் தியாவை சமாதானப் படுத்த



"நாய் வால நிமிர்த்த முடியாது கயல் இப்போவே இப்படி பெரியவனான இன்னும் என்னெல்லாம் பண்ண போறானோ!" இதே தான் தியாவின் புலம்பலாக இருந்து கொண்டிருக்கின்றது.

download (5).jpg



"பசங்களெல்லாம் தூங்க போய்ட்டாங்களா?" மலர்விழி தூங்குவதற்காக படுக்கையை சரி செய்தவாறு கேட்க



"இங்க வந்தா கயல்மா... ரிஷிபா... தவிர நம்ம பொண்ணுக்கு நம்மள கண்ணுக்கு தெரிய மாட்டேங்குதே! இன்னும் ரெண்டு பொண்ணாச்சும் பெத்துக்கணும் மலர்" சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தவனை முறைத்துப்பார்த்தவள் தலையணையால் வீசியடிக்க அதை லாவகமாக பிடித்தவன் "எனன டி முறைக்கிற... ஓவரா பண்ணுற நீ"



"கல்யாணமான புதுசுல பபா, பபானு என் பின்னாடி சுத்திக்கிட்டு இருந்த பொண்ணு பொறந்ததும் அவள பபானு செல்லம் கொஞ்சிகிட்டு திரியிற இதுல இன்னும் ரெண்டு வேணுமா? அடி விழும். பேசாம போய் தூங்கு"



"உன்னோடு பெரிய ரோதனயா போச்சு டி. நீயும் இதையே சொல்லுறதும், நானும் அதையே பேசுறதும் வாழ்க போரடிச்சு போச்சு"



"என்ன சொன்ன போரடிச்சு போச்சா... வேற எவளாச்சியும் சைட் அடிக்கிறியா?"



"என்னடி நான் என்னமோ சொன்னா நீ வேறென்னமோ சொல்லுற?"



"சொன்னா சொன்னா அகல்யா எல்லாம் சொன்னா நீ எந்த காலேஜ் வாசல்ல நின்னு எந்த பொண்ண சைட்டடிச்சினு சொன்னா?" மலர்விழி முறைக்க



"அகி..... உன் கல்யாணம் அன்னைக்கு பண்ணதுக்கு இன்னுமாடி பழிவாங்குற உன்ன..." மனதால் தங்கையை வசைபாடியவன்



"அது ஒரு புளுகு மூட்டடி கோபத்துல ஏதோ பத்த வைக்க பாக்குறா அதையெல்லாம் நம்புரியே பபா... நான் சொன்னா நம்ப மாட்டியா" வளமை போல் குரலை குழைத்து பேசி மனைவியை தன் வசப்படுத்தினான் அமுதன்.



இவர்களின் வாழக்கை அகல்யாவால் சதா ஒரு சண்டை, சனியன்று சமாதானம் எனும் விதமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. அகல்யா எதையும் கூட்டியோ குறைத்தோ சொல்லவுமில்லை. அமுதனின் குரும்பை அறிந்த மலர்விழி அவள் சொல்லும் பொழுது ரசித்து விட்டு அமுதனின் முன் சண்டைக் கோழியாய் சிலிர்த்து நிற்பாள். அது அவன் கெஞ்சுவதும், அதன் பின் மிஞ்சுவதினாலையே ஆகும்.


அவர்களுக்குள் சண்டையை மூட்டும் மற்றுமொரு ஜீவன் ரத்னவேல். மலர்விழி மாதம் தோறும் அவரை பார்க்க செல்ல முகத்தை தூக்கி வைத்துக் கொள்வான் அமுதன்.


Screenshot_20190714-164044_Instagram.jpg


"குட்டி குரங்கு தூங்கிருச்சு என்ன ஆட்டம் ஆடுறான்"



"என்ன டால் குரங்குனு சொல்லாதனு சொல்லி இருக்கேன்ல" தியாவை கடிந்த பிரதீபன் பிரபாத்தை தூக்கி கட்டிலில் கிடத்தி போர்வையையும் போர்த்தி விட



"பண்ணுறது பூரா சேட்டை, பாதி நேரம் மரத்துலதான் இருப்பான் குரங்குனு சொல்லாம"



அவளின் இடையோடு சேர்த்தனைத்தவன் கன்னத்தில் முத்தம் வைத்து "போதும் டி காலைல இருந்தே அவனை திட்ட ஆரம்பிச்சா தூங்குற வர திட்டி கிட்டே இருக்க, பேசாம அவனை போர்டிங் ஸ்கூலை சேர்த்து விடட்டுமா"



"உதைபட போறீங்க, அவன் பண்ணுறதுக்கு திட்டுறேன் அதுக்காக அவன் இல்லாம இருக்க முடியுமா? இனிமேல் திட்டல" முணுக்கென்று கண்ணீர் எட்டிப்பார்க்க



"ஏய் எதுக்கு இப்போ கண்ண கசக்குற சும்மாதானே சொன்னேன். சொன்ன உடனே அவனை கொண்டு போய் சேர்த்தா மாதிரி அழுற"



"உங்களுக்கு இதே வேலையா போச்சு ஏதாவது பேசி என் மனச கஷ்டப்படுத்துறீங்க"



"சும்மா சொல்லுறதெல்லாம் சீரியஸா எடுத்தா நான் என்ன பண்ணுறது பேபி டால்" மனைவியை அணைத்துக் கொண்டவன் நெற்றியில் முத்தமிட்டான்.



பிரதீபன் தியா வாழ்க்கை மூன்று குழந்தைகளோடு நிறைவாக அமைந்திருக்க இன்னுமே பிரதீபன் ஏதாவது சொன்னால் தியாவின் கண்கலங்கும். பிரதீபன் எல்லாரிடமும் ஒரே விதமாகத்தான் பேசுகிறான் தியாவுக்கு மாத்திரம் வலிப்பது காதலாலா?



"பிறவிக்குணம் டி பேபி டால் மாத்த முடியல, நீ புரிஞ்சிக்க ட்ரை பண்ணு" பிரதீபன் சொல்லி விட பூஞ்சை மனம் கொண்ட தியாவுக்குத்தான் புரியவவில்லை போலும்.

Screenshot_20190714-163728_Instagram.jpg

"எல்லாரும் தூங்கிட்டாங்களா" என்றவாறே அறையினுள் நுழைந்தான் ரிஷி



"ஆமா ஷஹானாவையும், மஹியையும் பார்க்கும் போது இயலையும் என்னையும் பாக்குற மாதிரியே இருக்கு"



குழந்தைகளை முத்தமிட்டவன் "என்ன வார் பேபி இந்த தடவ சிலோன் போகணும்னு சொன்ன டிக்கட் எப்போ போடட்டும்"



"இந்த தடவ நான் போகல, எல்லாருக்கும் டிக்கட் போட்டு இங்க வர சொல்லுங்க"



"இது கூட நல்லாத்தான் இருக்கு, பல தடவ சொல்லியும் வராதவங்க வருவங்களா?" ரிஷி யோசனையாக கேட்க



"எனக்கு உடம்பு முடியல அதனால இந்த முறை வர முடியாதுனு சொன்னா வந்துட போறாங்க"



"பேபி கில்லாடி நீ. ஆமா ஏன் போகல"



"ஏனோ தோணல" சாதாரணமாக சொன்னவள் கணவனின் மடியில் அமர்ந்துக் கொள்ள



"என்ன என் வார் பேபி ரொம்ப சந்தோசமா இருக்கா போல தெரியுது"



"ம்ம்.. ரொம்ப சந்தோசமா இருக்கேன். நிறைவா பீல் பண்ணுறேன்"



"அன்னைக்கி என் கண்ணுல மட்டும் நீ விலலைனா இந்த வாழ்க எனக்கு கிடைச்சிருக்காது. தேங்க்ஸ் டா வார்" மனைவியின் கைகளை பற்றி முத்தம் வைக்க



"உங்க கண்ணுல விம்பமா விழுந்தேனு சொன்னீங்கள்ள நெஞ்சுல என்னவா விழுந்தேன்?" குறும்பாகத்தான் ஆரம்பித்தாள் கயல்.



"என் நெஞ்சுல விலல முளைத்தாய் காதலாக... " ரிஷி மீண்டும் முத்தம் வைக்க



"பிரதீபன் அண்ணாவும் ரொம்ப மாறிட்டாருல்ல"



"அவன் மனசுளையும் காதல் இருந்திருக்கு தியாவ பார்த்ததும் மொட்டு விட்டு மலர ஆரம்பிச்சு இப்போ பூத்து குலுங்குது"



"அப்போ அமுதன்"



"அவனும் என்ன விதி விலக்கா என்ன?" கண்ணடித்து சிரித்தான் ரிஷி.



அனைவரின் மனதிலும் காதல் இருக்கும் சரியான துணை தேடி மொட்டு விட்டு மலர்ந்தால் அழகாக பூத்துக் குலுங்கும்.



முற்றும்.



MILA
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top