மின்னல் 14

Advertisement

Rakshi

Writers Team
Tamil Novel Writer
அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே கதவு தட்டுப்பட
"வாங்கம்மா" என்று குரல் கொடுத்தான் அபி சாரதாவாகத் தான் இருக்கும் என்று. அங்கு கதவைத்திறந்து தயங்கியபடியே யுவா காபித்தட்டைக் கையில் ஏந்தியபடி நிற்கவும் எழுந்த அபி

"உள்ள வா யுவா! ஏன் அங்கயே நிற்கிற?" என்றபடி இயல்பாக அவளருகில் சென்று கையில் இருந்த தட்டை வாங்கிக் கொண்டான். இதைக் கண்ட விக்ரமின் முகத்தில் சாரதாவின் முகமே மின்னி மறைந்தது.

'ஒருநாளாச்சும் சார் நம்ம மாதாஜிக்கு இப்படி செய்யலயே! மாதாஜி நீங்க டெப்போசிட் காலி' என்று எண்ணிக்கொண்டான்.

அபியுடன் உள்ளே வந்து அமர்ந்த யுவா விக்ரமைப் பார்த்து வரவேற்பாகத் தலை அசைக்கவும் ஒரு புன்னகையுடன் அதை ஏற்றுக்கொண்டவன் இப்பொழுது அபியை நோக்கினான் 'அடுத்து என்ன' என்பதைப் போல. புரிந்தவிதமாய் யுவாவை நோக்கித் திரும்பிய அபி

"யுவா! நாங்க விதுரனோட கேஸை ரீ ஓபன் பண்ண ரிக்வஸ்ட் பண்ணலாம் என்று இருக்கோம்" என்றதும் இயல்பாக அவன் புறம் திரும்பியவள்

"நானே கேட்கனும் என்று தான் இருந்தேன் மாமா! உண்மையிலேயே எனக்கு அந்தத் தாக்கத்தில இருந்து வெளியில வர கொஞ்ச நாள் எடுத்துது. அந்த நினைவுல இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு தள்ளிப் போகனும் என்று தான் இங்க இருந்து தள்ளிப் போனதே. விதுரனோட கேஸ் முடிஞ்சதாலதானே என்னை நீங்க ஃபாரினுக்கு அனுப்புனீங்க? குற்றவாளியைக் கண்டு பிடிச்சாச்சு என்ற ஒரு மைன்ட் செட் தான் எனக்கு. அதுக்குப் பிறகு அந்த நினைவுகளில இருந்து வெளியில வரனும் என்று போராடுனனே தவிர விதுரனை உண்மையில கொன்றவங்களை கண்டு பிடிக்கனும் என்று நினைக்கல. பட் அரவிந்தன் அங்கிள் அப்படிச் சொல்லலயே? நான் தான் ஏதோ உங்களை யூஸ் பண்ணி கேஸைக் க்ளோஸ் பண்ணிட்டேன் என்று சொல்றாங்க. அதோட எனக்கும் இப்போ அடிக்கடி உண்மையான குற்றவாளி கண்டுபிடிக்கப்படலயோ என்று மனசுல வந்துட்டே இருக்கு" மறந்தும் கனவுகளைப் பற்றிக் கூறவில்லை அவள். ஆயினும் அது அபிக்குத் தெரியுமே!

"நீ நினைக்குறது சரிதான். விதுரனைக் கொன்ற உண்மையான கொலைகாரன் இன்னும் கண்டு பிடிக்கப் படல யுவா"

"எப்படி மாமா? அரவிந்தன் சார் உங்களோட ஹையர் ஆபிஸர். நீங்களும் எவ்வளவு திறமையானவர் என்று மல்ஹோத்ராவோட கேஸை முடிச்ச விதத்துலயே எனக்குத் தெரியும். அப்படி இருக்கிறப்போ"

"யுவா! நான் ஃபேஸ் பண்ண கேஸஸும் இதுவும் வேற வேற. மல்ஹோத்ரா கேஸ் உண்மையிலேயே டிரெக்ட் டார்கெட் தான். என்னோட சந்தேகத்தில இருந்த அந்த வீட்டு வேலைக்காரியோட கணவன் தான் அதை செய்து இருந்தாங்க. பிகாஸ் அவனைக் கொன்றதுக்கு ரீஸன் அவன் பொண்ணுங்ககிட்ட தப்பா நடந்துக்கிட்டது என்ற ஒரு துருப்பு எங்ககிட்ட இருந்திச்சு. ஸோ அவனால பாதிக்கப்பட்டவங்களை வைச்சே குற்றவாளியைக் கண்டு பிடிச்சோம். மற்ற கிரைம் கேஸஸும் கூடுதலா எங்களுக்கு ஏதாவது துருப்பு கிடைக்கும். அந்த நூலைப் பிடிச்சுட்டே போய்டுவோம். பட் விதுரனோட கேஸ் அப்படியே வேற"

"என்ன வேற மாமா? துருப்பு ஒன்றுமே கிடைக்கலயா?"

"ம்ஹும்! துருப்பைத் தேடுறதுக்கு சார்க்கு சந்தர்ப்பமே கிடைக்கல மேம்" என்று விக்ரம் கூறவும் புரியாமல் இருவரையும் பார்த்துக் கொண்டு இருந்தவளின் முகம் மெல்ல மெல்லத் தெளிந்து அதில் வருத்தம் மேலோங்கியது.

இன்றுவரை அவள் வருந்திக் கொண்டு இருக்கும் அவளது செயல். அன்று அங்கே அபியை அழைத்தது. அவன் தன் பக்கம் என்று காட்டியது. அதனால் அபியின் பக்கமும் அனைவரது சந்தேகப்பார்வை திரும்பி இருக்கும் என்று புரிந்தது. ஆனால் அன்று அவனைத்தவிர வேறு யாருமே அவள் நினைவில் எழவில்லையே!

அவள் முகம் வருத்தம் காட்டவும் அவள் அருகில் அமர்ந்து இருந்தவன் இன்னும் சற்று நெருங்கி அவளது வலது கையைப் பிடித்துக் கொண்டான். விக்ரம் அதை வாயின் மீது விரல் வைக்காத குறையாய் பார்த்ததை உணர்ந்தாலும் அசரவில்லை அபி.

அப்போது அவளை ஆறுதல் படுத்த வேண்டும் அவ்வளவு தான். அதில் சற்றுத்தெளிந்தவள் அவனது கையையும் "ஐம் ஓகே" என்பது போல சற்று அழுத்த புன்னகைத்த அபி

"நீ நினைக்கிறது தான் யுவா! என்னை இந்தக் கேஸில இருந்து டோடலா ஒதுக்கிட்டாங்க. அவங்க ஆடரை மீறி இருக்கலாம். பட் மீற பிடிக்கல. அப்போ எனக்கு உன்னையும் மாமாவையும் பார்க்கவேண்டி இருந்துது. அம்மா இவ்வளவு உடைஞ்சு போய் நான் பார்த்ததே இல்ல. அவங்களும் டோடலி கொலாப்ஸ். அதோட நீ இல்லை என்று எனக்கு அவ்வளவு உறுதியா தெரியும். இவ்வளவு நாள் டிப்பார்ட்மென்ட் ல இருக்கோம். ஆட்களோட முகத்தை வைச்சே ஒரு அளவு யூகிப்போம். அதுவும் உனக்கெதிரா ஆதாரத்தை அரவிந்தன் சாரே கிரியேட் பண்ணதுல தான் அரவிந்தன் சார் இந்தக் கேஸில இன்வால்வ் ஆகாம போகக் காரணம்.அதோட அவங்க வைஃபும் விதுரனோட இறப்பால கொஞ்சம் ஹெல்த் இஷ்ஸூஸ் ல இருந்தாங்க. அவரையும் குற்றம் சொல்ல முடியாது. எல்லாமே அந்த நேரத்துக்கான பிரதிபலிப்புகள் தான்" என்று கூறவும் அதிர்ந்தவள்

"அரவிந்தன் அங்கிள் எதுக்கு எனக்கு எதிரா ஆதாரம் சேர்க்கனும்"

"விதுரனோட உனக்கு ப்ரேக் அப் ஆனது அவருக்குத் தெரியும். நீ லாயர். அவனோட பிரேக் அப்புக்கு நீ ஏதும் போலிஸ் கோட் என்று போய் இருந்தா அவருக்கு சந்தேகம் வந்து இருக்காதோ என்னவோ! அமைதியா இருந்தது அவனைக் கொல்றதுக்குத் தான் என்று அவருக்குள்ளயே ஒரு எண்ணம். உன்னை சந்தேகத்தில அரெஸ்ட் பண்ணதுமே நீ தான் என்று அவர் முடிவே பண்ணிட்டார். இட் வாஸ் டோடலி அன் எமோஷனல் டிஷிஷன். அப்போ அவர் ஒரு அப்பாவா தான் பிஹேவ் பண்ணார். உன்னை அரெஸ்ட் பண்ண வைக்கனும் என்று உன்னோட வீட்டுக்குள்ள விதுரனோட ப்ளட் சாம்பிள வைச்சு கத்தி ஒன்றை அரேஞ்ச் பண்ணி உன்மேல கேஸை ஸ்ட்ராங்க் ஆக்கப் பார்த்தார். பட் அதை நான் ப்ரேக் பண்ணேன். ஒரிஜினல் ஆதாரமும் அதுல கிடைச்சது. அதுல அவருக்கு கோவம். என்னை சஸ்பென்ட் பண்ணார். ஆனாலும் கேஸை ஒரு அளவு என்னோட டீம் மூலம் என்னோட பார்வையில தான் வைச்சு இருந்தேன். அவர்தான் அதை செய்தது என்று ஆதாரங்களை ஹையர் மனேஜ்மென்ட்க்கு அனுப்பி இரகசியமா அவரை வார்ன் பண்ண வைச்சேன். அதுல அவருக்கு இன்னும்..ம்ச்.. என்னோட சஸ்பென்ஸை எவ்வளவு முடியுமோ அவ்வளவு எக்ஸ்டென்ட் பண்ணார். எகெய்ன் ஹையர் மனேஜ்மென்ட் ஓட ப்ரஷர். சஸ்பென்ட்டை கான்சல் பண்ணிட்டார். இதுக்குள்ள உன்னை ஃபாரின் அனுப்பனும். கேஸில நீ இருக்கிறதால அதுக்குப் பிறகு நான் கேஸை யோசிக்கல. பிகாஸ் எனக்கு வேற வேற ப்ராஜெக்ட்ஸ் அசைன் பண்ணி நான் அதுல இன்வால்வ் ஆகிட்டேன்" என்று தனது அன்றைய நிலையைக் கூறிவிட்டுத் தோளைக் குலுக்கவும் யுவாவிற்கு கண்ணைக் கட்டியது.

தலையை ஒரு முறைக் குலுக்கி "ஊப்" என்று குலுக்கியவளைக் கண்ட இரு ஆண்களின் முகத்திலும் புன்னகை. ஒரு மாதிரியாகத் தெளிந்தவள் அபியின் புறம் திரும்பி

"இப்போ விதுரனோட கொலையில சரண்டர் ஆனவங்க கொலைகாரன் இல்லை என்று எப்படி சொல்றீங்க மாமா?" என்று கேட்கவும் தோளைக் குலுக்கியவன்

"ஒரு சந்தேகம் தான்! உனக்கு பின்னொரு நாளில் சொல்லுவேன்" என்று முடித்துக் கொண்டான். அவன் அதன் விபரங்களை இப்போதைக்கு அவளுக்கு கூற விரும்பவில்லை என்று புரிந்து கொண்டவளாய் தலை அசைத்தவள்

"இப்போ நான் என்ன செய்யனும் மாமா? உங்களுக்கு இதுல என்ன உதவி என்றாலும் நான் செய்றேன்" என்றவளை யோசனையாகப் பார்த்தவன்

"எனக்கு உதவி செய்ய நீ முதல்ல தெளிவாகனும் யுவா! ஃபர்ஸ்ட் எல்லாருக்கும் நீ குற்றவாளி இல்லை என்று ப்ரூவ் பண்றதை நிறுத்து. எல்லாத்துக்கும் பயந்துட்டே இருந்தா எனக்கு ஹெல்ப் பண்ண உன்னால எப்போவும் முடியாது. என்னோட யுவா எப்போவும் தைரியமானவளா இருக்கனும்" என்று கூற பட்டென்று நிமிர்ந்த அவளது பார்வை அவனது பார்வையைக் கவ்விக் கொண்டது. அதைப் பார்த்து விக்ரமிற்கு நெஞ்சு வலியே வந்து விட்டது

'ஒரு வயசு பையனை வைச்சுக்கிட்டு இதுங்க ரெண்டையும் பாரேன்' மனதுக்குள் கடுகடுத்தவன் 'க்கும்" என்று செறும பதறாமல் அவன் புறம் திரும்பிய அபி

"காபியைக் குடிடா" எனவும் பட்டென்று கப்பை எடுத்து வாயினுள் சரித்துக் கொண்டான்.

"அய்யோ சூடு" என்று யுவா பதறவும்

"சூடா? அது ஆறிப்போய் அரைமணி நேரம் ஆயிட்டு" என்று உம்மென்று உரைக்கவும் அவனின் பாவனையில் "ஹாஹா" என்று சிரிக்கத் தொடங்கினாள் யுவரத்னா.

பின்னர் தலையைக் குலுக்கியபடி அபியைப் பார்த்தவள்
"மாமா! உடனே முடியுமா தெரியல. நான் இப்படியான என்னோட பயங்களில இருந்து வெளியில வரனும் சட்டத்துக்கு கொஞ்சமாச்சும் நன்மை செய்யனும் என்று தான் லாயர் தொழிலையே எடுத்தேன். நான் முடியுமான அளவு உங்களுக்கு சப்போர்ட்டா இருக்கேன். தைரியமா" என்று கூறி கண்சிமிட்டினாள்.

அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே கதவை தட்டிய சாரதா
"யுவா! ரிஷி உன்னைத் தேடி வந்து இருக்கான் பாரு" என்றுவிட்டு விக்ரம் புறம் திரும்பியவர் "டேய் விக்ரம் வாடா. உனக்குப் பிடிச்ச பஜ்ஜி போட்டேன்" என்றவுடன் பட்டென்று இருக்கையில் இருந்து எழுந்தவன் அபியைக் கண்டு தயங்கி நின்றான்.

அவனது செய்கையில் புன்னகைத்த அபி
"போ" என்பதாகத் தலை அசைக்கவும் சாரதாவையும் இடித்துக் கொண்டு ஓடியே போனான். அவனது பசி அவனுக்கு.

"சப்பா! எப்பிடி ஓடுறான் பாரு. சாப்பிடவும் விடாம அவனைக் கொடுமை படுத்துற நீ" என்றவரின் விழிகளில் அபியின் கையில் இருந்த யுவாவின் கையின் விம்பம் விழாமல் இல்லை. மனதிற்குள் சிரித்துக்கொண்டவர் "யுவா நீயும் வா" என்றவாறே ஹாலை நோக்கிச் செல்ல தானும் செல்ல எழுந்தவளின் கைகளைச் செல்லவிடாமல் பற்றி இருந்தான் அபி!

அவனது கையில் தனது கரம் சிக்கி இருப்பதைப் பார்த்தவள் முகம் சிவக்க கையை விடுவிக்கப் போராடினாள். எங்கே அவன் விட்டால் அல்லவோ? இழுத்து இழுத்துப் பார்த்தவள் அவன் கையை விடாமல் இறுக்கவும் அவனை இலேசாக முறைத்தாள். முறைத்தவளைப் பார்த்து புருவம் உயர்த்தியவன் பட்டென்று கையை இழுக்கவும் அவன் மீதே விழச்சென்று சமாளித்தி அவனருகில் தொப்பென்று அமர்ந்தாள் யுவரத்னா. படபடவென வந்தது பெண்ணிற்கு.

அவனை நோக்காமல் சற்றுத்தள்ளி அமர்ந்தவாறே
"கையை விடுங்க மாமா" என்று கூறிய குரல் சற்றுக் கொஞ்சலாக வந்ததோ. அவளின் தவிப்பில் இலேசாகச் சிரித்தபடிகையை விலக்கியவன்
"ரிஷி ஏன் உன்னைப் பார்க்க வந்து இருக்கான்?" என்று கேட்டான்.

"அது அவர் கிட்ட ஒரு ஹெல்ப் கேட்டேன். அதைப் பற்றி டிஸ்கஸ் பண்ணத்தான் வந்து இருப்பார்" 1
"ஹெல்ப்பா? ஏன் என்க்கிட்ட கேட்காமல் அவன் கிட்டக் கேட்ட?" என்றவனின் குரலில் இலேசாக பொறாமை தெரிகின்றதோ?

அவனது கேள்வியில் குஷி ஆகிப்போனவள் "அவர் என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட். அதுனால தான்" என்று அவனை இன்னும் பற்ற வைத்துவிட்டு ஹாலை நோக்கி ஓடிச்செல்ல கையில் இருந்த வெள்ளிக்காப்பை எரிச்சலுடன் முறுக்கிக் கொண்டான் அபிஷிக்த்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top