மாலை சூடும் வேளை 41

Advertisement

laxmidevi

Active Member
மாலை-41

பாடல் வரிகள்.

குலதெய்வமெ எந்தன் குறை தீர்க்கவா
கை நீட்டினேன் என்னைக் கரை சேர்க்கவா
நீயே அனைக்க வா
தீயை அனைக்க வா
நீ பார்க்கும்பொது பனியாகிறேன்
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்
எது வந்த பொதும் இந்த அன்பு போதும்

விக்ரம் தன் மனைவி தன் கையணைப்பிலிருந்து எழுந்திருக்கவுமே விழித்து விட்டான். என்ன செய்கிறாள் என்று பார்க்கலாம் என் கண்களை மூடி படுத்திருந்தான்.

ஆனால் அவள் முத்தமிட்டது விக்ரமே எதிர்பாராத ஒன்று. மங்கை அவனின் தலையை வருடி நெற்றியில் முத்தமிட தூங்குவது போல் நடிக்க மிகுந்த சிரமப்பட்டான். திருமணமாகி இத்தனை நாட்களில் தன் மனைவி தந்த முதல் முத்தம் ஆணனவனை சிலிர்க்க வைத்தது.

பின் மங்கை குளித்து ரெடியாகி வரவும் விக்ரமும் ரெடியாகி காலை உணவு சாப்பிட்டனர்.

சாப்பிடும் போது மங்கையை வம்பிழுத்துக் கொண்டு இருந்தான் அவளின் மணவாளன்.

அத்தை நீங்கள் செய்த பொங்கலும் மெதுவடையும் அருமையாக இருக்கிறது. ஒருநாள் கூட மங்கை எனக்கு செய்து தரவில்லை என்று அவரிடம் புகார் கூற ஆரம்பித்தான்

அங்கே விக்ரமின் வீட்டில் சமையல்காரம்மா நீலா தான் சமையல் செய்வது ஏதேனும் விசேஷம் என்றால் அம்பிகா ஒரு சில பதார்த்தங்கள் மட்டும் செய்வார் .இது மகாலட்சுமிக்கும் தெரியும்.இருந்தும் தன்மருமகன் கூறியதைக் கேட்டு மங்கையை முறைத்தார்.

ரூமுக்கு வாங்க உங்கள வச்சிக்கிறேன் என்று வார்த்தைகளை கடித்து தூப்பினாள் மங்கை விக்ரமிற்கு மட்டும் கேட்கும் விதமாக.

அதற்காகத்தான் ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறேன் அரசி என்று கூறினான் விக்ரம் குறும்பாக .

சாப்பிட்டு முடித்ததும் விக்ரமும் மங்கையும் ஹாலில் இருந்து டீவி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது மகாலட்சுமி தன் மரூமகனுக்காக ரவை பணியாரம் பால் கொழுக்கட்டை எல்லாம் செய்து கொடுத்தார் .எல்லாம் சாப்பிட்டு விட்டு குட்டி தூக்கம் போட்டான். இருவரும் எழுந்து மதிய சாப்பாடு சாப்பிட்டுவிட்டு பின்னால் உள்ள தோட்டத்தில் அமர்ந்து மங்கையின் பாட்டியுடன் கதையடித்துக் கொண்டிருந்தான் விக்ரம்.

மருமகன் வந்து இருப்பதால் ராமநாதனும் வேலைக்கு சென்று விட்டு சீக்கிரமாக வீடு வந்து விட்டார்.

மாதவன் விக்ரமிடம் மாமா கிரிக்கெட் விளையாட போகலாமா என்று கேட்டான்.

இன்னைக்கு உங்க அக்காவை பார்க்கில் வாக்கிங் கூட்டிட்டு போகலாம்னு இருக்கேன் நாளைக்கு விளையாடுவோமா மாது?

ம்ம் சரிங்க மாமா நான் இன்னைக்கு போய் விளையாடுகிறேன் நீங்க நாளைக்கு வாங்க என்று கூறி அங்கிருந்து சிட்டாக பறந்து விட்டான் இன்னும் இருந்தால் ராமநாதன் ஏதும் சொல்வாரோ என்ற பயத்தில்.

மாமா நான் மங்கையை அழைத்துக்கொண்டு அந்த பிளவர் பூங்கா சென்று வரவா என்று கேட்டான்.

தன் மனைவியானாலும் அவளை உடன் அழைத்துச் செல்ல தன்னிடம் அனுமதி கேட்கும் தன் மருமகனை என்று நினைத்து பெருமை கொண்ட ராமநாதன்.

போய்ட்டு வாருங்கள் மாப்பிள்ளை இரவு சாப்பாட்டிற்கு வீட்டுக்கு வந்து விடுங்கள் என்றார்.

தன் மருமகனுக்காக ராமனாதன் வாங்கி வைத்திருந்த புது காரை எடுத்துக்கொண்டு போக சொன்னார்.


காரில் விக்ரமின் அருகில் முன் சீட்டில் அமர்ந்திருந்தாள் மங்கை.மியூசிக் ப்ளேயரில் பாடலை ஒலிக்க விட்டான்.

உன் கைகள் கோர்த்து உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே தினம் உயிர் வாங்குதே..

என்ற பாடல் இருவரின் மனதை நிறைத்தது.புது காரில் தன் மனைவியுடன் ஏகாந்த மனநிலையில் பூங்காவிற்கு சென்றான் விக்ரம்.

பூங்கா வந்தது விட்டது.காரில் இருந்து இறங்கியதும் தன் சட்டையிலிருந்த கூலரை எடுத்துக் கண்களில் பொருத்தினான்.




வெந்தய கலர் ஷர்ட் அதற்கு மேட்சாக பேண்ட் கண்களில் கூலர்ஸ் சும்மா பார்க்க ஹாலிவுட் ஹீரோ போல் இருந்தவனை அங்கிருந்த பெண்களின் பார்வை ரசனையாய் தழுவி சென்றது.


இதைக்கண்ட மங்கைக்கோ உள்ளுக்குள் எரிச்சலாய் இருந்தது.

இப்போ இந்த கூலர் ரொம்ப அவசியமா என்று கேட்டால் கடுப்பாக தன் கணவனிடம்

என்னமா நல்லா இல்லையா என்றான் விக்ரம் அறியாதவன் போல.

நல்லா இருக்கு . அந்த சோளக்கொல்லை பொம்மை மாதிரி இந்த கூறி விட்டு நடைபாதையில் வாக்கிங் சென்றாள் மங்கை.

தன் மனைவியின் சிறுபிள்ளைத்தனமான பொறாமையை கண்ட விக்ரம் இன்னும் அவளை வம்பிழுக்க எண்ணி அங்கிருந்த பெண்களை நோக்கி ஹாய் என்றான்.

ஹாய் சார் என்றனர் அவர்களும் பதிலுக்கு.

இதையெல்லாம் கோபத்துடன் பார்த்தும் பார்க்காதவாறும் நடந்து கொண்டு இருந்தாள் மங்கை.

மங்கை அருகில் வந்தவுடன் அந்தப் பெண்களைப் பார்த்து விக்ரம் யூ கேர்ள்ஸ் ஆர் பீயூட்டிபுல் என்றான்.

அவர்கள் ரியலி ஹேண்ட்சம் என்று கொஞ்சினர் அவனை.

மங்கை அந்தப்பக்கம் செல்லவும் எஸ் மை சிஸ்டர்ஸ் என்றான் சிரிப்புடன்.

என்னது சிஸ்டரா என்று அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்து விடும் போல் இருந்தது.

என்ன சார் இப்படி சொல்லி விட்டிர்கள் என்றனர்.

தன் மனைவியை சும்மா வெறுப்பேற்றவே அவ்வாறு கூறியதாக அவர்களிடம் கூறினான்.

மங்கை இதையெல்லாம் பார்க்க முடியாதவளாக வாக்கிங் முடித்துவிட்டேன் என்று சற்று நேரத்திலேயே வந்து விட்டாள்.

பாய் ப்யூடீஸ் நாளை பார்க்கலாம் என்று அந்த பெண்களிடம் விடைபெற்று தன் மனைவியை அழைத்துக்கொண்டு காருக்கு வந்தான் விக்ரம்.

முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அமர்ந்திருந்தால் விக்ரமின் மனைவி

என்ன மங்கை கோபமாக இருக்கிறது போல் தெரிகிறதே?

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று முகம் திருப்பியவளை இழுத்து தன் மேல் சாய்த்து கொண்டான் விக்ரம்.

ப்ளேயரில் நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியை தான் என்ற பாடல் ஒலித்தது.

அதில்
அந்த இயற்கையும் அவள்
மேல் காதல் கொள்ளும்
அவள் நினைவாலே என் காலம் செல்லும்
என்ற வரிகளை ரசித்துப் பாடினான் விக்ரம்.

சாருவை நினைத்து பாடுகிறானோ என்ற எண்ணம் மங்கையின் மனதில் நொடிப்பொழுது வந்து போனது.

எதுவாக வேண்டுமானாலும் இருந்து போகட்டும் இப்பொழுது தன்னவன் தன்னுடன் இருக்கும் இந்த மகிழ்ச்சியான நாட்கள் தான் தன்னுடைய வறண்ட வருங்காலத்தினை கொஞ்சம் உயிர்ப்புடன் வைத்திருக்கப் போகிறது என தன் கணவனுடனான இந்த நாட்களை மகிழ்ச்சிடன் பிறந்த வீட்டில் கழித்தால் மங்கை.

விக்ரம் மாதவனிடம் சொல்லியது போல் மறுநாள் அவனுடன் சென்று கிரிக்கெட் விளையாடினான்.

தான் தமிழ்நாட்டில் முக்கிய பொறுப்பு வகிக்கும் ஒரு போலிஸ் அதிகாரி என்றில்லாமல் விக்ரம் அவர்களுடன் சேர்ந்து விளையாடிதைப் பார்த்த மாதவனுக்கு மட்டுமல்லாமல் அவனின் நண்பர்களுக்கும் விக்ரம் ஹிரோவாகிப் போனான்.

மாதவன் வீட்டில் இருக்கும் நேரங்களில் எல்லாம் மாமா மாமா என் விக்ரமையே சுற்றி வந்தான்.

இதை கண்ட மங்கை நான் ஒருத்தி பைத்தியமாக இவர் பின்னால் சுற்றுவது போதாதா?இவனுமா என்று மனதில் நினைத்தாள்.
அனைவரையும் எளிதாக கவர்ந்து விடும் கள்வன் அவன் என் செல்லமாக திட்டினாள்.

காலையில் மங்கையுடன் வாக்கிங்
மதியம் மங்கையின் தோட்டத்திற்கு செல்வது .இடையில் மாமியாரின் நளபாகத்தில் தயாரான உணவினை சாப்பிட்டு குட்டி மதியத்தூக்கம். மாலையில் மாதவனுடன் கிரிக்கெட் .
இரவு மனைவியுடனான சின்ன சின்ன தீண்டல்களுடனும் முத்தத்துடன் தன் இரவுறக்கம் என அழகாய் கழிந்ததன விக்ரமின் நாட்கள்.

கடந்த ஆறு மாத கால அலைச்சலுக்கு இந்த ஓய்வு விக்ரமிற்கு மிகவும் தேவையாய் இருந்தது.அதை மிகவும் மகிழ்ச்சியாக ரசித்துக் கழித்தான் தன் மனைவி குடும்பத்தினருடன் .

ஒருநாள் கார்த்திக் விக்ரமிற்கு போன் செய்து இருந்தான் .

என்னடா அப்படியே போய் மாமனார் வீட்டில் செட்டிலாகிவிட்டாய் போல என்றான் கேலியாக.

ஆமாம் அப்படித்தான் வைத்துக்கொள்ளேன். நீயும் வேண்டுமானால் மாமனார் வீட்டில் போய் செட்டிலாகு.நானா வேண்டாம் என்கிறேன் என்றால் பதிலுக்கு விக்ரம்

என் மனைவி என் ஆபிஸ் வேலையாக அலைகிறாள். நான் இந்த கேசில் மீதமுள்ள குற்றவாளிகளை பிடித்து மாமியார் வீட்டிற்குஅனுப்புவதற்கு அலைந்துகொண்டிருக்கிறேன் .இதில் எங்க மாமனார் வீட்டில் செட்டில் ஆக. என் மனைவியின் முகத்தை நன்றாக பார்த்தே பல நாட்கள் ஆகிறது.நீ எல்லாம் நன்றாக விருந்து சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டு ஜாலியா இருக்கிறாய் என்றால் கடுப்பாக கார்த்திக்.

சரி சரி ரொம்ப வருத்தப்படாதே. இன்னும் இரண்டு நாட்களில் அங்கு வந்து விடுவேன். அதன்பின் நீ விடுமுறை எடுத்துக் கொள் என்றான் விக்ரம் சமாதானமாக.

இல்லை விக்ரம் நான் சும்மாதான் சொன்னேன். நீ வேண்டும் என்றால்
இன்னும் கொஞ்ச நாட்கள் மங்கையுடன் இருந்துவிட்டு வா. இந்த மாதிரி நேரத்தில் தான் பெண்கள் கணவனின் அருகாமை எதிர்பார்ப்பார்கள் என்றான் கார்த்திக்.

கார்த்திக் சொன்னதை யோசித்துப் பார்த்த விக்ரம் ஊருக்கு செல்லும்போது தன்னுடன் மனைவியை அழைத்து சென்று விடலாம் .பின்பு பிரசவத்தின் போது மறுபடியும் அழைத்து வந்துவிடலாம்.மங்கையும் தன்னுடன் இருக்கத்தான் விரும்புவது போல் தோன்றியது விக்ரமிற்கு. தன்னாலும் அவளைப் பிரிந்து இருக்க முடியாது என்று தோன்றியது.


தன் அறையில் துணிகளை மடித்து ப்ரோவில் வைத்துக் கொண்டு இருந்த மங்கையை பின்னிருந்து அணைத்து அவளின் தோளில் தன் முகம் வைத்தவாறே நாளை ஊருக்கு கிளம்ப வேண்டும் . நீயும் வருகிறாயா . டெலிவரிக்கு பத்து நாட்கள் முன்னதாக இங்கு வந்து விடலாம் என்றான் விக்ரம்.

இல்லை நான் வரவில்லை.நீங்கள் போய் விட்டு வாருங்கள் என்றாள் மங்கை.

நீ இல்லாமல் வீடே வெறுமையாக இருக்கிறதாய் அம்மா கூட சொல்கிறார்.வந்து விடேன் மங்கை.

இல்லை நான் வரவில்லை.

மறுபடியும் விக்ரம் விட்டு தன்னுடன் வந்துவிடுமாறு பேச மங்கைக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன தன் கணவனுடன் தன் வீட்டிற்கு செல்ல.ஆனால் அங்கு சென்றால் தான் நினைத்தது போல் விக்ரமை விட்டு பிரிந்து அங்கிருந்து வர முடியாது.அதனால் வரவில்லை என்றால்.

இப்போது விக்ரம் மீண்டும் கேட்கவே தன்னவனை விட்டு பிரிய வேண்டும் என்ற வருத்தத்திலும், இயலாமையிலும் நான் அங்கு வரமாட்டேன்.வரவே மாட்டேன் என்று கத்தினாள் மங்கை.

தன் மனைவி கூறியதைக் கேட்டு அதிர்ந்து நின்றான் விக்ரம்.


மாலை தொடுக்கப்படும்.



வணக்கம் நண்பர்களே

கதையை உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்..



என்றும் அன்புடன்
உங்கள் தோழி லக்ஷ்மி தேவி.
 

Saroja

Well-Known Member
என்ன தான் இந்த
மங்கை மனசுல
நினைக்கிறா
 

Padmaja

New Member
கதை நடை மிக அருமை. முடிவு இன்னும் போடலையா சகோதரி. பதிவிட்டு ரொம்ப மாதம் ஆச்சு போலையே. Pls சீக்கிரம் போடுங்க. ஒரே மூச்சுல கதை படிச்சாச்சு. வெயிட்டிங்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top