மாலை சூடும் வேளை 38

Advertisement

laxmidevi

Active Member
மாலை-38

கார்த்திக் சொன்னதுபோல விக்ரமும் கார்த்திக்கும் கமிஷனரிடம் மற்ற விவரங்களை சேகரித்து விட்டு பொறுப்பு ஏற்றுக்கொள்வதாக கூறி விட்டனர்.

கமிஷனரும் உங்களுக்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்யுங்கள் என்று அவர் முழு சுதந்திரம் கொடுத்துவிட்டார்.

கார்த்திக்கும் விக்ரமும் வீட்டில் உள்ள பிரச்சனைகள் சற்று பின்னுக்கு தள்ளிவிட்டு இதில் கவனத்தை செலுத்தினார்.

தங்கள் வீட்டிலிருந்து ஏதேனும் செய்தால் மற்றவர்கள் கண்காணிக்க கூடுமென்று விஜயின் பண்ணை வீட்டினை பயன்படுத்தினர்.

விஜய்யும் கார்த்திக்கும் வேலை முடிந்து அந்த பண்ணை வீட்டிலேயே தங்கி விட விக்ரம் மட்டும் தன் மனையாளை காண தன் வீடு வந்து சேர்ந்தான்.

அங்கே சுந்தர் காத்துக் கொண்டிருந்தான் விக்ரமிற்காக.

விக்ரம் நான் நாளை பெங்களூர் கிளம்பலாம் என்று இருக்கிறேன்.

ஏன் சுந்தர் இன்னும் ஒரு இரண்டு நாட்கள் இருந்து விட்டு போகலாம் அல்லவா

இல்லை விக்ரம் இரண்டு நாட்கள் மட்டும்தான் விடுமுறை எடுத்து இருந்தேன்.

சரி சுந்தர் போய் வாருங்கள் நாளை எத்தனை மணிக்கு ஃப்ளைட்.

காலை 10 மணிக்கு பிளைட் விக்ரம்.

சரி தூங்குங்க சுந்தர் காலையில் பார்க்கலாம் என்று சுந்தரை அனுப்பி விட்டு தன் மனைவியை பார்க்க தங்கள் அறைக்கு வந்தான் விக்ரம்.

மங்கை தூங்காமல் கட்டிலில் அமர்ந்திருந்தாள்.

என்ன மங்கை தூங்கலையா என்று கேட்டவாறே அவள் அருகில் அமர்ந்தான்.

தூக்கம் வரலை.

என்னம்மா உடம்புக்கு ஏதும் பிரச்சனையா? நன்றாக சாப்பிட்டாயா?

உடம்புக்கு ஒன்றுமில்லை பகலில் நிறைய நேரம் தூங்கி விட்டேன் அதனால் தான் தூக்கம் வரவில்லை என்றால் அவன் மனைவி.

அப்படியா நான் பயந்து விட்டேன். இவ்வளவு நேரம் விழித்திருக்கவும் உனக்கு உடம்பு சரியில்லையௌ எனறு.அது சரி .உன்னிடம் எத்தனை முறை கூறினேன் பத்திரமாக இரு என்று .உன்னை திரும்ப நம் வீட்டில் பார்க்கும் வரை என் உயிர் என்னிடம் இல்லை. வயிற்றுபிள்ளைகாரி வேறு என்ன செய்கிறாயோ என மனம் ஒரு நிலையில் இல்லை.நல்ல வேளை நீயும் நம் செல்லக்குட்டிகளும் பத்திரமாக வந்து விட்டீர்கள். இனி எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும் சரியா. அன்று என்னவாயிற்று மங்கை உன்னை எப்படி கடத்தினார்கள்?

கணவனின் அன்பில் மகிழ்ந்தாலும் தன் பிள்ளைகளுக்காக தான் வருந்துகிறாரோ என்ற அச்சமும் கொண்டாள் உள்ளுக்குள்.

கல்லூரியில் மார்க் ஷீட் வாங்கி கொண்டு கவி மதியுடன் கோவை பஸ் ஸ்டாண்ட் வந்தேன் .அவர்கள் இருவரும் பஸ் ஏறியதும் வெளியில் வந்து மாமாவிற்கு அழைப்பதற்காக போனை எடுத்தேன். அப்பொழுது என்னுடைய இரண்டு புறமும் கார் வந்து நின்றது யார் என்று பார்க்கும் முன் நான் மயக்கமாகி விட்டேன் அதை சொல்லும்போதே மங்கையின் உடல் அந்த பயத்தில் நடுங்கியது.

பயப்படாதே நான் இருக்கிறேன் அல்லவா இனிமேல் இப்படி எதுவும் நடக்காது .நீ நிம்மதியாக தூங்கு நான் உன்னை அருகிலேயே இருக்கிறேன் என்று அவளின் அருகிலேயே அணைத்தவாறே படுத்து இருந்தான்.

இருவரும் தமது துணையின் அருகாமை தந்த பாதுகாப்பிலும் அமைதியிலும் நிம்மதியாக தூங்கி விட்டனர்.

காலையில் சுந்தர ஊருக்கு செல்வதால் விக்ரமும், முரளிதரனும் வீட்டிலேயே இருந்தனர்.

சுந்தர் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு இருக்கும் போது கணி சம்முவை கூட்டிக் கொண்டு வந்தால்.

எப்படியும் சுந்தர் கனியை பார்க்க செல்ல மாட்டான் என்று அறிந்த விக்ரம் கனியை தங்கள் வீட்டிற்கு அழைத்திருந்தான்.

சம்மு சுந்தரை பார்த்தவுடன் அப்பா என்றழைத்து அவனிடம் போய் விட்டாள்.

சுந்தரும் தன் அம்மு வை தூக்கி நெற்றியில் முத்தமிட்டு அப்பா ஊருக்கு செல்கிறேன் நீங்கள் சமத்து பெண்னாக இருக்க வேண்டும் சரியா என்றான்.

இல்லை நானும் உங்களுடன் வருவேன் என்றாள் அவன் மகள் .

இல்ல குட்டிமா நீ எங்க அம்மா கூட ஊருக்கு வாங்க சரியா.

இல்லை சுந்தர் இனிமேல் கணியை எங்கும் தனியே அனுப்பும் எண்ணம் எங்களுக்கு இல்லை. அவள் வேலையை ரிசைன் செய்துவிட்டு இங்கேயே இருக்கட்டும் என்றார் முரளிதரன் .

ஏதோ கூற வந்த விக்கிரமாதித்தனை தன் பார்வையாலேயே அடக்கினார் முரளிதரன்.

அவரின் வார்த்தையை கேட்ட சுந்தர் அதிர்ச்சியாய் கனியை பார்த்தான். அவளுக்கும் இந்த செய்தி அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

ஒரு நிமிடம்தான் பின் தன் பார்வையை திருப்பி சரிங்க அப்பா நான் வருகிறேன் என்று கூறி கிளம்பி விட்டான். மறந்தும் தன் பார்வையை கனியின் புறம் திருப்பவில்லை.

இரு சுந்தர் உன்னை ஏர் போர்டில் ட்ராப் செய்கிறேன் என்று முரளிதரன் சுந்தரரை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.

சுந்தர் கிளம்பவும் கனி விக்ரமிடம் பார்த்தாயா விக்கி அவர் என்னை நிமிர்ந்துகூட பார்க்கவில்லை நான் தவறு செய்தேன் தான் ஆனால் என்னை மன்னிக்க கூடாதா என்றால் சிறு பிள்ளை போல்.

நீ என்ன செய்திருக்கிறாய் என்று தெரியுமா கனி ? முன்பு நம்பக்கூடாதவனை நம்பினாய். இப்போதோ நம்ம வேண்டியவரை நம்பாதது போல் இருக்கிறது உன் செய்கை.முன்பு எங்களிடம் எதுவும் சொல்லாமல் இங்கிருந்து போய்விட்டாய் பின் அதே போல அவரிடமும் எதுவும் கூறாமல் எங்கோ செல்லத் துணிந்து விட்டாய்.உன் நல்ல நேரம் இரண்டு முறையும் தப்பி விட்டாய் ஏதேனும் தவறானவர்களின் கையில் சிக்கி இருந்தால் என்ன செய்வது. பிரச்சினைகளை சமாளிக்க பழகவேண்டும் கனிமா விடுத்து அதைக்கண்டு ஓடக்கூடாது. நாம் உயிராய் நினைப்பவர்கள் நம்மை விட்டு பிரிந்துவிட்டால் எப்படி இருக்கும் தெரியுமா .உடம்பின் ஒவ்வொரு செல்லும் வேதனையில் துடிக்கும். வாழும்போது நரக வேதனையை தரும். அதை அனுபவித்தவர்களுக்கு தான் புரியும். அதை எந்த ஒரு தவறும் செய்யாத ஒரு மனிதருக்கு தந்துவிட்டு இப்பொழுது அவரை உடனே உன்னை மன்னிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி ?கொஞ்சநாள் பொறு எல்லாம் சரியாகிவிடும் என்றான் விக்ரம்.

மங்கையை கடத்திய போது இருந்த தன் மனநிலையைப் பற்றிக் விக்ரம் கூற மங்கையோ சாருவல பிரிந்ததால் வந்த வலி என்று நினைத்துக்கொண்டாள்.

விக்ரமின் பேச்சில் இருந்த உண்மையை உணர்ந்த கனியின் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது.

மங்கையோ விக்ரமிடம் என்னங்க நீங்க அவங்களே கவலையில் இருக்கும் போது நீங்க வேற ஏதாவது பேசி அவங்க மனசு கஷ்டப்படுத்தாதீங்க.

கவலைப்படாதீங்க கனிக்கா அத்தான் சீக்கிரம் உங்களை புரிந்து கொள்வார் என்று ஆறுதல் கூறினாள்.

சாரி கனி ஏதோ கோவத்துல அப்படி பேசிவிட்டேன் என்று மன்னிப்பு வேண்டினான் விக்ரம்.

பரவாயில்லை விக்ரம் நீ சரியாகத்தான் கூறினாய் தவறு என் மீதுதான் என்றாள் கனி.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே விஜய் விக்ரமை கால் செய்து உடனடியாக பண்ணை வீட்டிற்கு வர சொன்னான்.

விக்ரம் இரு பெண்களிடமும் வேலை இருப்பதாக கூறி கிளம்பினான்.

சுந்தர் தன் அன்னை பத்மாவிற்கு போனில் தொடர்பு கொண்டு தற்போது கனி அவளின் பெற்றோர்களுடன் இருப்பதாகவும் திருமணத்தை தள்ளி வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறினான் மறுத்து பேசிய பத்மாவை நீங்கள் என்னை மீறி ஏதேனும் செய்தால் உங்களுக்கு ஒரு மகன் இருப்பதையே மறந்துவிட நேரிடும் என்று கடுமையாகக் கூறினான்.

தன் கணவன் கனியிடம் பிரிவை பற்றி கூறும் போது அவன் வார்த்தைகளில் தெறித்த வருத்தமும் அவன் கண்களில் தெரிந்த வலியும் அவளை வெகுவாக பாதித்தது. தன்னை ஏற்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் அல்லாடும் தன் கணவனுக்கு நிம்மதி வேண்டுமானால் தான் அவனை விட்டு பிரிவது தான் சரி.அவனாவது அவன் விரும்பிய வாழ்வை மகிழ்ச்சியாக வாழட்டும் என்று விக்ரமை பிரிய வேண்டும் என முடிவு செய்தால் மங்கை. அவள் தான் விக்ரமின் வாழ்வு என்று அறியாமல்.


சுந்தர் தினமும் கணிக்கு போன் செய்து சம்மு உடன் பேசுவான்.ஆனால் கனியிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.அவளாக பேசினாலும் பேச மாட்டான்.சுந்தரின் இந்த மௌனம் கனியின் மனதை வாள் கொண்டு அறுப்பது போல் வலித்தது.

இப்படியாக ஒவ்வொரின் நாட்களும் ஒவ்வொருவாறு கழிந்தது.

விக்ரம் கார்த்திக் விஜய் மூவரும் கிட்டத்தட்ட அவர்களுக்கு தேவையான எல்லா விபரங்களையும் சேகரித்து விட்டனர்.

மங்கை அன்னை மகாலட்சுமி அம்பிகாவிடம் தன் மகளுக்கு வளைகாப்பு செய்து தங்கள் இல்லம் அழைத்து செல்வதாக கூறினார்.

சரி மகா வளைகாப்பு தாராளமாக செய்யலாம் .ஆனால் அது முடிந்தவுடன் மங்கை இங்கேயே இருக்கட்டும் பிரசவத்திற்கு ஒரு பத்து நாட்கள் முன்னதாக அனுப்பி வைக்கிறோம் என்றார் அம்பிகா.

தன் மகன் தன் மனைவியை பிரிந்து இருக்கமாட்டான் என்பதாலேயே அவ்வாறு கூறினார்.

ஆனால் மகாலட்சுமியும் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் அண்ணி. பிள்ளை படிப்பை முடிக்கும் முன்னரே திருமணம் செய்துகொடுத்து விட்டோம்.
கொஞ்ச நாட்கள் கூட எங்கள் வீட்டில் எங்களுடன் இல்லை. ஒரு ஆறு மாதமாவது எங்கள் வீட்டில் இருக்கட்டும் .எங்களூடன் வைத்துக் கொள்கிறோம் .இனி வாழ்நாள் முழுவதும் உங்களது வீட்டில் தானே இருக்க போகிறார்கள் என்றார்.

ஒரு பெண்ணைப் பெற்ற அன்னையாக அவரின் ஏக்கமும் அவருக்கு புரிந்தது .சரி அப்படியே செய்து கொள்ளலாம் என்று விட்டார்.

இரு வீட்டாரும் கலந்து பேசி வளைகாப்பிற்கு நல்ல நாள் குறித்தனர். விக்ரமோ மங்கையின் வளைகாப்பு முடிந்து பின் திரும்ப அழைத்து வந்து விடலாம் என்று தன் வீட்டினரிடம் கூறியிருந்தான். அதனால் அதைப்பற்றி அம்பிகாவிடம் அவன் எதுவும் கேட்கவில்லை.தங்கள் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்வதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தனர் விக்ரமும் கார்த்திக்கும்.

அதில் இதைப்பற்றி விக்ரமிடம் சொல்ல மறந்து இருந்தார் அம்பிகா.

அனைவரும் எதிர்பார்த்த வளைகாப்பு நாளும் வந்தது.

சாருவின் அப்பா மட்டும் விழாவிற்கு வந்திருந்தார்.

விக்ரம் சாருவை பற்றி கேட்டதற்கு அவர் சாரு யாரிடமும் சொல்லாமல் மறுபடியும் வெளிநாடு சென்று விட்டதாகவும் இந்தியா திரும்பப் போவதில்லை என்று கூறியதாகவும் கூறினார்.

ஏன் அங்கிள் இப்படி என்றான் விக்ரம் வருத்தமாக.

என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை விக்ரம். தன் மனதில் இருப்பவனை மறக்க முடியவில்லை என்கிறாள்.

வீட்டில் அம்மாவிடமும் என்னால் எதுவும் பேச முடியவில்லை. கொஞ்ச நாள் அங்கேயே இருக்கட்டும். இடமாற்றமாவது அவளுக்கு மன நிம்மதி தருகிறதா என்று பார்க்கலாம் என்றார் சாருவின் அப்பா.

சாரி அங்கிள் நான் தான் இந்த பிரச்சனைக்கு காரணம்.என்னை மன்னியுங்கள்.என்னை சாரு மிகவும் நம்பினால் அவளின் நம்பிக்கையை என்னால் காப்பாற்ற முடியவில்லை

விடுப்பா ஏதோ நடந்து விட்டது.அதற்கு நீ மட்டும் எப்படி பொறுப்பாக முடியும்.தவறு சாருவின் மீது தான்.அவள் பாட்டியை பற்றி தெரிந்தும் இப்படி செய்து விட்டால். ஆனால் நீ முன்னாடியே இது பற்றி சொல்லி இருந்தால் இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது என்றார் ஆற்றாமையுடன்.

அவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த மங்கைக்கு தான் எடுத்த முடிவுதான் சரியானது என்ற எண்ணம் வலுப்பெற்றது.

நல்ல நேரம் ஆரம்பிக்கவே மங்கையை மனையில் அமர சொன்னனர்.

திருமண புடவையில் தாய்மையை அழவோடு மிளிர்ந்த தன்னவளை காண தெவிட்டவில்லை விக்ரமிற்கு.

அனைவரும் வளை பூட்டி முடிக்கவும் கடைசியாக விக்ரம் தன் மனைவிக்கு வைரம் பதித்த தங்க வளையல்களும் ஒரு ஆரமும் அணிவித்து சந்தனம் பூசினான். அவன் தொடுகையில் சிலிர்த்தது போனாள் மங்கையவள். இனிமேல் இவ்வளவு அருகில் தான் அவனை காண முடியுமா என்ற ஏக்கமே மனம் எங்கும் நிறைந்திருந்தது.

விக்ரமை பிரிய வேண்டும் என்று முடிவெடுத்த பின் மங்கை விக்ரம் வீட்டில் இருக்கும் நேரங்களில் எல்லாம் அவனுடனே இருந்தாள்.



அவனுக்கு காபி தருவது ,சாப்பாடு பரிமாறுவது, டிரஸ் எடுத்து வைப்பது ,மாடி ஏறுவது கஷ்டமாக இருந்தாலும் அவளே அவனுக்கு தேவையான அனைத்தையும் செய்தாள்.

விக்ரம் ஏன்மா கஷ்டப்படுகிறாய்? நான் செய்து கொள்ள மாட்டேனா என்பான் .

அதற்கு அவள் புன்னகையை மட்டுமே பதிலாக தருவாள்.

விக்ரமிற்கும் தன் மனைவி தன்னை பூனைக்குட்டி போல ஒட்டிக்கொண்டே திரிவது மிகவும் பிடித்திருந்தது. காதல் மனைவியின் அருகாமை எந்த கணவனுக்குத் தான் கசக்கும்?

தன் கணவனுடன் ஆனந்தமாய் கழித்த இந்த நாட்களின் நினைவு தான் பின்னாளில் அவளுக்கு ஆறுதல் அளிக்கப் போகிறது என எண்ணி தன் வருங்காலத்திற்காக தன்னவனுடனான நிகழ்கால நினைவுகளை தனது நெஞ்சத்தில் சேமிக்கத் தொடங்கினாள்.


இது ஏதும் அறியாமல் தன் மனைவியின் நேசத்திலும் நெருக்கத்திலும் அகமகிழ்ந்து போனான் விக்ரம்.

விழா நல்லபடியாக முடிந்தது. நல்ல நேரத்திற்கு சற்று நேரம் இருக்கவே அனைவரும் ஹாலில் அமர்ந்தனர்.

அப்போது கனியிடம் சம்மு அம்மா எனக்கு இந்த செயின் வேண்டாம் கழட்டுங்கள் என்று கூறிக்கொண்டிருந்தாள்.

அங்கு இருந்த உறவுக்காரப் பெண் மாலதி இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் கையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு சுற்றுகிறாள்.ரொம்ப நல்லவள் போல என் மகனுக்கு பெண் கேட்ட போது அவளுடைய அப்பா தர மறுத்து விட்டார். காரணம் கேட்டதற்கு பையன் ஒழுக்கம் சரி இல்லாதவனாம். இவள் மட்டும் என்ன பெரிய உத்தமி இரத்தினமா என்று வாய்க்கு வந்த வார்த்தைகளைப் பேசினார்.

உண்மையில் அந்த பெண் மாலதியின் பையன் ஒரு ஊதாரி, குடிகாரன் அதனால் அவனுக்கு யாரும் பெண் தர முன்வரவில்லை.

இப்போது கனி தனியாக ஒரு குழந்தையுடன் வந்திருக்கவும் இதை தனக்கு சாதகமாகக்கி தன் மகனுக்கு பெண் கேட்டார் அவளை. ஏதோ கனி ஒழுக்கமகல்லாமல் சுற்றித்திரிந்தால் சம்மு பிறந்ததாகவும் பெரிய மனது பண்ணி தன் மகனுக்கு கனியை திருமணம் செய்து வைப்பது போல செய்தி பரப்பி இருந்தார் உறவினர்கள் மத்தியில்.

கனி குடும்பத்தினர் தம் உறவினர்கள் இடத்தில் கனி வெளிநாட்டில் தங்கி படிப்பதாக கூறி இருந்தனர். அனைவரும் ஏற்றுக் கொண்டிருந்த போதிலும் அவர்கள் மத்தியில் கனி குழந்தையுடன் வந்தது. அந்த குழந்தை கனியை அம்மா என அழைத்தது அனைவரையும் கேள்வியாக பார்க்க வைத்தது. ஆனால் யாரும் எதுவும் அவளிடம் கேட்கவில்லை. அவர்கள் குடும்ப விவகாரம் என்று விட்டனர்.

தன் மகனுக்கு பெண் தராத கோபத்தில் கனியின் மீது சேற்றை வாரி இறைத்தார் அந்தப் பெண்மணி.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த குடும்பத்தினருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை அந்தப் பெண்மணியுடன் சரிக்கு சரி பேசினால் சாக்கடையில் கல்லெறிவது போலத்தான் அசிங்கம் நமக்கு தான். தங்கள் வீட்டுப் பெண்ணை இப்படி அடுத்தவர் பேசுவதை பற்றி நினைக்கையில் நெஞ்சம் வருந்தியது ராகவனுக்கும் முரளிதரனுக்கும்.


கனி இதுபோல பல பல பேச்சுகளைக் கேட்டு இருந்ததால் யாரோ யாரையோ கூறுவதுபோல இன்முகத்துடன் மகளின் கழுத்தில் இருந்த செயினை கழட்டிக் கொண்டிருந்தாள்.




விக்ரமும் கார்த்திக்கும் பேசும் முன் சுந்தரோ என்ன சொன்னீர்கள் கனி யார் தெரியுமா? என் மனைவி. அம்மு என் மகள். என் மனைவியை எதற்கு நீங்கள் உங்கள் மகனுக்கு பெண் கேட்டீர்கள்?ஏன் உங்களுக்கு வேறு பெண்ணே கிடைக்கவில்லையா அடுத்தவன் பெண்டாட்டியை தான் பெண் கேட்க வேண்டுமா என்றான் கோபமாக.

உங்களுக்கு எப்போது திருமணம் ஆனது என்று யாருக்கும் தெரியாது நீயாக ஏதேனும் கதை விடாதே என்றார் அப்போதும் விடாமல் அந்த பெண்.

நானும் கனியும் அந்த நாட்டு முறைப்படி மணந்து கொண்டோம்.என் வேலையில் இருந்த சில பிரச்சனைகள் காரணமாக என் மனைவி மகள் என்று தெரிந்தால் அவர்களின் உயிருக்கு ஆபத்து வரலாம் என்று எண்ணியே இவ்வளவு நாட்கள் மறைத்து வைத்திருந்தோம்.எங்கள் திருமணம் முடிந்தது எங்கள் வீட்டில் அனைவருக்கும் தெரியும் .அதனால் தான் இவ்வளவு நாட்கள் கனி என்னுடன் அதாவது தன் கணவனுடன் அந்த நாட்டில் இருந்தாள்.இது எதுவும் தெரியாமல் நீங்கள் எஏதேதோ பேசுகிறீர்கள் .இன்னொருமுறை இப்படிப் பேசினால் என் குடும்பம் பற்றி அவதூறு பேசியதாக மான நஷ்ட வழக்கு தொடருவேன் என்று மிரட்டினான்.

அதற்கு மேலும் அங்கு இருக்க அந்த பெண்ணிற்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது. விழுந்தடித்துக் கொண்டு ஓடி விட்டார்.

நல்லநேரம் ஆரம்பித்து விட்டது கிளம்பலாம் என்றார் ராமநாதன்.

மங்கையை அழைத்து வர அவர்களது அறைக்கு சென்றான் விக்ரம். அவர்களுக்கு தனிமை கொடுக்க என்ணி யாரும் அவனுடன் செல்லவில்லை.

நல்ல நேரம் வந்துவிட்டதாம்
மாமா கிளம்பி சொன்னார் என்றவாறு தன் மனைவியின் அருகே வந்தான் விக்ரம் .

இப்போது கிளம்பி விட்டால் இனிமேல் தான் இங்கு திரும்பி வரக்கூடாது என்ற முடிவில் இருந்தாள் மங்கை.

கடைசியாக ஒருமுறை தன் கணவனை தன் கண்களில் நிரப்பிக்கொண்டு அவனை அணைத்தாள். அப்போது மேடிட்டிருந்த அவளது வயிறு லேசாக இடித்தது.

சின்ன சிரிப்புடன் அவளை தள்ளி நிறுத்தி மங்கையின் பின்புறமாக தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டு அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்து பத்திரமாக இரு சீக்கிரம் வந்துவிட வேண்டும் சரியா என்றான்.

கணவனிடம் பாய்ந்தோடிய மனதை கட்டுப்படுத்தி விழி வழி வர துடித்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள் பெணணவள்.


மலர் கூட மங்கையை கேலி செய்தால் என்ன மாமாவை பிரிந்து போகிறோம் என்ற வருத்தமா மங்கை?

அனைவரிடமும் வருகிறேன் என்ற ஒற்றைச் சொல்லில் விடைபெற்று உண்மையில் இங்கு திரும்பி வர முடியாத ஏக்கத்துடனும் தன் கணவனின் வீட்டில் இருந்து தன் பிறந்தகம் சென்றால் மங்கை.


மாலை தொடுக்கப்படும்...

வணக்கம் நண்பர்களே..


கதையை பற்றிய உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்..

என்றும் அன்புடன்
உங்கள் தோழி லக்ஷ்மி தேவி.
 

Saroja

Well-Known Member
இந்த மங்கை எப்போதும் தப்பான
முடிவு தான் எடுக்கிறா
 

Saroja

Well-Known Member
இந்த மங்கை எப்போதும் தப்பான
முடிவு தான் எடுக்கிறா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top