மாலை சூடும் வேளை-36

Advertisement

laxmidevi

Active Member
மாலை-36

பாடல் வரிகள்


காலங்கள் மாறி வரும் காட்சிகள் இங்கே
நியாயங்கள் ஆறுதலை கூறுவது எங்கே
மஞ்சள் குங்குமம் மார்பில் சந்தனம்
சூடும் கன்னிப் பாவை
மஞ்சள் குங்குமம் மார்பில் சந்தனம்
சூடும் கன்னிப் பாவை
பாச தீபம் கையில் ஏந்தி வாழ வந்த வேளை
கண்களாலே பெண்மை பாட இன்பம் கண்ட மங்கை
நாம் வாடி நின்றாலும் நலமோடு வாழ்கவே...



கார்த்திக் ,மங்கை,கனிமொழி சம்மு அனைவரையும் அழைத்துக் கொண்டு கோவை வந்து கொண்டிருந்தான். எப்போதும் அமைதியாகவே இருந்த மங்கையிடம் என்னடாம்மா என்றான் பாசமாக.

ஒன்றும் இல்லை அண்ணா என்றாள்.

மங்கை கனிமொழியிடம் அறிமுகப்படுத்தி வைத்தான்.மரியாதை நிமித்தமாக இருவரும் ஒரீரு வார்த்தைகள் பேசினர்.

கனிமொழி தன் குடும்பத்தினரை சந்திக்க போகிறோம் என்ற ஆர்வத்திலும் தயக்கத்திலும் அமைதியாக இருந்தால் மங்கையோ தன் கணவன் தன்னை இன்னும் பார்க்க வராதது குறித்து வருத்தத்திலும் இருந்த இரு பெண்களும் தத்தம் யோசனையில் மூழ்கி இருந்தனர்.

கார்த்திக்கோ நம் வீட்டு பெண்ணையே தூக்கி இருக்கிறானே. அவன் யாராக இருக்கும் என்ற யோசனையில் இருந்தான். ஒருவாறு அனைவரும் விக்ரமின் இல்லம் வந்து சேர்ந்தனர்.

இவர்கள் வருவதற்கு முன்பாகவே விக்ரம் ராகவனையும், பூரணியையும் வீட்டிற்கு வாருங்கள் என்று அழைத்து இருந்தான். ஆனால் கனி வருவதைப் பற்றி எதுவும் கூறவில்லை. விஜயிடமும் மலரிடமும் தன் வீட்டிற்கு வருமாறு அழைத்தான்.

விஜய் வேலை இருக்கிறது நான் நாளைக்கு வருகிறேன் என்று கூறவே வேறு வழியில்லாமல் விக்ரம் கனி வருவதை பற்றி சொல்லி மலரை அழைத்துக் கொண்டு வருமாறு கூறினான்.

விஜய் மலரிடம் அதை கூறியபோது மலர் நான் அவளை பார்க்க வரவில்லை என்று கண்டிப்பாக மறுத்து விட்டாள்.

என்னம்மா... நீ உன் அக்காவுக்காக இவ்வளவு ஏங்கினாய் என்று எனக்கு நன்றாக தெரியும் பிறகு ஏன் அவர்களை பார்க்க வர மறுக்கிறாய்?


இல்லை விஜய் நான் அங்கு வரவில்லை வந்தால் நான் என்னையும் அறியாமல் அவளை ஏதும் காயப்படுத்தி விடுவேன் .எங்க அப்பா அவள் மேல் எவ்வளவு பாசமாக இருந்தார் என்று உங்களுக்கு தெரியுமா? கனியம்மா என்றுதான் அழைப்பார். பொதுவாக எல்லா அப்பாக்களுக்கும் என் பெண்பிள்ளைகளை பிடிக்கும் என்றாலும் என்னை விட கனியைதான் அப்பாவிற்கு அதிகம் பிடிக்கும். அதில் எனக்கு பொறாமை ஏதுமில்லை எனக்கு அவள் ஒரு அக்காவாக மட்டுமல்ல ஒரு நல்ல தோழியாக அம்மாவாகத் தான் இருந்தாள். என்னுடன் அவ்வளவு நெருக்கமாக பழகியும் தான் காதலிக்கும் விஷயத்தை மறைத்து அப்பா அம்மாவை பற்றிக் கூட கவலைப்படாமல் எங்களையெல்லாம் விட்டுவிட்டு சென்றுவிட்டாள். ஏதேதோ நடந்து விட்டது . அதன் பிறகாவது என்னிடம் வந்து இருக்கலாம் அல்லவா
இல்லை என்னிடம் மட்டுமாவது தொடர்பு கொண்டு இருந்திருக்கலாம். அதையும் கனி செய்யவில்லை இப்போது கூட கார்த்திக் அண்ணா அவளை பார்க்கவில்லை என்றால் நம்மிடம் வந்து இருக்க மாட்டாள். நான் இப்போது இருக்கும் மனநிலையில் அவளை பார்த்தால் கண்டிப்பாக என்னால் அமைதியாக இருக்க முடியாது .கொஞ்ச நாள் போகட்டும் பிறகு போய் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறும் போதே அழுது விட்டாள்.

வரமாட்டேன் என்றவளை ஒருவாறு சமாதானப்படுத்தி அழைத்து வந்தான் விஜய்.

கார்த்திக் மங்கை கனி எல்லோரும் வரவும் வீட்டில் இருப்பவர்கள் அனைவரின் பார்வையும் கவனமும் கார்த்திக்கின் பின்னாலுள்ள கனி,சம்முவின் மீதே இருந்தது.

விக்ரமும் கனியை பார்த்து வரவேற்பாக தலையசைத்துவிட்டு தன் மனைவியை பார்த்தான் .ஒரே நாளில் களைத்துப் போயிருந்தாள்.

சுந்தரோ கனியின் மீது கோபப் பார்வையை வீசினான். கனிடமிருந்த சம்மு சுந்தரை அப்பா என்று போய் சுந்தரை கட்டிக் கொண்டாள்.




அனைவரும் அதை வியப்புடன் பார்த்தனர். சுந்தரோ கனியை உறுத்து விழித்து விட்டு சம்மூவை தூக்கிக் கொண்டு தோட்டத்திற்குச் சென்று விட்டான்.

சாவின் விளிம்புவரை சென்று வந்திருக்கிறேன் என்னை பற்றி யாராவது கவலைப் படுகிறார்களா? எல்லோரும் அவர்கள் வீட்டு பெண்ணைத் தான் பார்க்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டே தன்னுடைய அறைக்கு சென்றுவிட்டாள்.யாரும் அதை கவனிக்கவும் இல்லை.

மங்கை கடத்தப்பட்ட விஷயமே வீட்டில் யாருக்கும் தெரியாது. அது தெரியாமல் அவளாகவே ஏதோ எண்ணிக் கொண்டாள்.

கிட்டத்தட்ட செத்துவிட்டதாய் நினைத்து இருந்த தங்கள் வீட்டு பெண் உயிருடன் வந்து இருந்தது அவர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது. இத்தனை நாட்கள் காட்டாத பாசத்தையும் சேர்த்து கணியிடம் காட்டிக் கொண்டிருந்தனர். கனி இவர்களின் பாசத்தில் மகிழ்ந்தாலும் சுந்தரின் பாராமுகம் அவளை என்னவோ செய்தது.

விக்ரம் யாருக்கும் தெரியாமல் தன் மனைவியை பின் தொடர்ந்து தங்கள் அறைக்கு சென்றான்.

மங்கை உனக்கு வேறு ஏதும் பிரச்சினை இல்லையே என்றவன் தன் மனைவியின் பக்கத்தில்சென்று அவளின் வயிற்றில் கை வைத்து பார்த்தான். அவனின் குழந்தைகள் அவனின் கைகளில் உதைத்து தங்களின் இருப்பை அவனுக்கு உணர்த்தினர்.



மங்கை என்று ஆரம்பிக்கும்போதே அவனுடைய போன் சத்தமிட்டது. போனை எடுத்து சொல்லுங்க பாலாண்ணா என்றான்.

சார் கொஞ்சம் சீக்கிரமாக வேளாண்மை ஆராய்ச்சி கழகத்திற்கு வருகிறீர்களா?

நான் மதியம் வந்து பார்க்கட்டும்மா பாலாண்ணா

இல்ல சார் நாம எதிர்பார்த்ததை விட இது கொஞ்சம் சீரியஸாய் இருக்கிறது. நீங்கள் வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. மேலும் ஆராய்ச்சியாளர்களும் உங்களைப் பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

சரி நான் இப்போது வருகிறேன்.

நீ குளித்து சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது போய்விட்டு வருகிறேன். அப்புறம் நீ கடத்தப்பட்டது வீட்டில் யாருக்கும் தெரியாது .யாரிடம் சொல்ல வேண்டாம் நான் வந்துவிடுகிறேன் சரிதானா என்று தன் மனைவியின் நெற்றியில் முத்தமிட்டு அவசர அவசரமாக கிளம்பி போனான் விக்ரம்.


மங்கையோ அப்ப நான் வீட்டில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்றுதான் போல. இவர் இப்போதும் தன்னுடைய வேலையை தான் பார்த்துக் கொண்டு இருக்கிறார் என்று நினைப்பில் வருந்தினாள்.

இந்த நிமிடம் ஏனோ தான் மட்டும் தனியாக இந்த வீட்டில் இருப்பது போல் தோன்றிதது. தன் தாயின் மடியில் படுத்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது.

விக்ரம் வேகமாக வீட்டிலிருந்து கிளம்புவதை பார்த்த சுந்தர் கனியை பார்ப்பதற்காக சென்றான்.

மங்கை கட்டிலில் கால்களை நீட்டி கண்ணை மூடி சாய்ந்தவாறு அமர்ந்திருந்தார். மங்கை வந்தவுடன் அவளை பார்க்க வேண்டுமென்று தோன்றியது சந்தருக்கு ஆனால் விக்ரமிற்கும் மங்கைக்கும் தனிமை தரவேண்டும் என்று தான் குழந்தையை தூக்கிக்கொண்டு தோட்டத்திற்கு சென்றான். தற்போது விக்ரம் கிளம்பவே உடனடியாக மங்கயைக் கான வந்துவிட்டான்.

மங்கை என்னாச்சும்மா ஆதரவாக அவள் தலையை தடவினான்.

அத்தான் நீங்கள் எப்படி எங்கே என்று கேட்டால் மங்கையை ஆச்சர்யமாக

அதைப்பற்றி அப்புறம் சொல்கிறேன் உனக்கு உடம்புக்கு பிரச்சினை இல்லையே என்று கேட்டான்

ஒன்றும் இல்லை அத்தான் நன்றாக இருக்கிறேன் . நானும் உன் மடியில் படுத்துக் கொள்ளவா என்றாள் சிறுகுழந்தையென.

படுத்துக்கொள் குட்டிமா உனக்கில்லாததா என்றவன் அம்முவை தன் பக்கத்தில் அமர வைத்துக்கொண்டான்.

கார்த்திக் நடந்த விஷயங்கள் அனைத்தையும் அங்கிருந்தவர்களிடம் கூறி முடித்தான். ராகவனுக்கும் பூரணி தன் மகள் இவ்வளவு கஷ்டப்பட்டு உள்ளால் என்று நினைத்து வருந்தினர்.




தன் குடும்பத்தினர் தன்னை திட்டி இருந்தால் கூட கனி மனதிற்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்திருக்கும் ஆனால் அவர்கள் அனைவரும் எதுவும் சொல்லாமல் தன் மீது பாசத்தை மட்டுமே காட்டவும் கனிமொழி மிகவும் உடைந்து போனாள்.

தன் தாயின் மடியில் படுத்து அழுது தீர்த்தாள் கனிமொழி.

ஒருவாறு கனிமொழியை சமாதானப்படுத்தி அவளின் அழுகையை நிறுத்தினர்.

ஆனால் மலர் மட்டும் தன் அக்காவிடம் எதுவும் பேசவில்லை நடப்பது அனைத்தையும் ஒரு பார்வையாளராக அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

பின் முரளிதரன் நடந்ததைப் பற்றி எதுவும் பேச வேண்டாம் நடக்கப்போவதை பற்றி பேசலாம் என்றார் பொதுவாக.


சுந்தர் எங்கே அவரை அழைத்து வாருங்கள். அவரிடம் பேசிவிட்டு அவர் அம்மாவிடமும் பேசலாம் என்றார்.

மாமா குறுக்கே பேசுவதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள் .என்ன ஆனாலும் சரி நான் யாருக்காகவும் என் சம்முவை விட்டுத்தர முடியாது என்றாள் கனி.


சரிமா கனி. நீ கவலைப்படாதே.நான் அவர்களிடம் பேசிப் புரிய வைக்கிறேன்.இனிமேலாவது நீ மகிழ்ச்சியாக ஒரு நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும்.

சுந்தரியின் மடியில் படுத்திருந்த மங்கை அசதியில் அப்படியே தூங்கி விட்டாள் .மங்கை தூங்கி விடவே அவளை கட்டிலில் படுக்க வைத்து விட்டு வெளியில் வந்தான் சுந்தர் சம்மூவை தூக்கிக் கொண்டு.

வாப்பா சுந்தர் .உன்னை தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மா என்ன சொல்லிகிறார்கள் உங்கள் திருமணத்தைப்பற்றி என்று கேட்டார் முரளிதரன்.

மன்னித்துக்கொள்ளுங்கள் அப்பா அம்மா என்ன நினைக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை .ஆனால் எனக்கு இப்போது திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை.

என்னாச்சு சுந்தர் ஏன் இப்படி சொல்கிறாய்?

இல்லப்பா இப்போது இந்த திருமணம் நடப்பது சரியாக இருக்காது என்று தோன்றுகிறது.

கனி மீது ஏதம் கோவமா சுந்தர் சொல்லுங்க என்றான் கார்த்திக்.

இல்லை கனியின் மீது எனக்கு கோபம் இல்லை . எனக்கு என் மீதுதான் கோபம் கனியையும் சம்முவையும் என் உயிரினும் மேலாக நேசிக்கிறேன்
இனிமேலும் நேசிப்பேன் என் உயிருள்ளவரை.ஆனால் அவளோ என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் என்னை விட்டு விட்டுப் போய்விட்டாள். என்ன பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக் கொள்வேன் என்ற நம்பிக்கையை அவளுக்கு தரவில்லை என்று நான் நினைக்கிறேன். அவளின் நம்பிக்கையை நான் இழந்து விட்டேன். எப்போது அவளுக்கு என் மீது முழு நம்பிக்கை வருகிறதோ அப்போது திருமணம் பற்றி யோசிக்கலாம் என்றான் சுந்தர்.


இல்லை சுந்தர் நான் என்று கனி பேசும்போதே

இனிமேலும் இது பற்றி பேச நான் விரும்பவில்லை என்று கூறி அங்கிருந்து சென்று விட்டான். சுந்தரின் முகம் இறுகிப் போயிருந்தது.

மறுபடியும் தன் மகளின் வாழ்வில் பிரச்சனையா என்று கலங்கினார்கள் ராகவனும் பூரணியும்.

கனியோ அழுது கொண்டே அங்கிருந்து சென்று விட்டாள்.

கார்த்திக் என்னடா இது புது பிரச்சினை இதை எப்படி சமாளிப்பது என்ற யோசனையில் ஆழ்ந்து விட்டான்.

அங்கே விக்ரமும் பாலாவும் ஆராய்ச்சியாளர் ஜெகன் கூறிய செய்தியைக் கேட்டு அதிர்ந்து விட்டனர். அவர்கள் எதிர்பார்த்ததை விட பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து இருந்தது.

விக்ரம் அந்த பிரச்சனை சரி செய்வானா?

மங்கை தன் கணவனின் நேசத்தை புரிந்து கொள்வாளா?

சுந்தரும் கனியும் இணைவார்களா பார்ப்போம்

மாலை தொடுக்கப்படும்....


வணக்கம் நண்பர்களே..

கதையை பற்றிய உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்..

என்றும் அன்புடன்
உங்கள் தோழி லக்ஷ்மி தேவி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top