மாலை சூடும் வேளை-34

Advertisement

laxmidevi

Active Member
மாலை-34

பாடல் வரிகள்

ஊர் ஊரா போகுற மேகக் கூட்டமே
என் பைங்கிளி போகக் கண்டீரோ
ஊருக்கே வெளக்கேத்தும் சூரியரே
என் தாமரைப் பூவைக் கண்டீரோ
போன தெச புரியலையே
பொசுங்குதடி எம் மனசு
புங்கமரக் கிளை தொங்கதூண்டுதடி என் உசுரு
நெருப்பாற்றில் குளிப்பாட்டி போனாயடி....


தன் போனுக்கு வந்த வீடியோவை பார்த்த விக்ரம் உடனே தன் தந்தையின் செல்லுக்கு போன் செய்தான். அவரோ அலுவலகத்தில் இருப்பதாக கூறினார். மங்கையின் நம்பரோ சுவிட்ச் ஆப் என்று வந்தது.


தன் மனைவியை அங்கே அப்படி ஒரு நிலையில் பார்த்ததும் அடுத்து என்ன செய்வது என்று அவனுக்கு தோன்றவில்லை. விக்ரம் யாரிடமும் ஏதும் கூறாமல் கார்த்திக்கு அழைத்து விபரம் கூறினான்.அவனும் உடனே தான் வருவதாக கூறினார்.

இல்லை கார்த்தி வேண்டாம் என்னை யாராவது கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். நீ இங்க வரவேண்டாம் ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் பார்த்து முடிவு எடு.

சரி விக்கி அவர்கள் என்ன கேட்கிறார்கள் .

நேற்று மாலை ஒரு வேன்காரன் நம்ம பாலாண்ணாவை அடித்து விட்டான். விசாரித்துப் பார்த்ததில் அது வேன் ஒரு அரசியல்வாதி சொந்தமானது என தெரியவந்தது. நான் அங்கே சென்றதும் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். வேனை மட்டும் எடுத்து வந்து நிறுத்தி விட்டோம். சோதனை செய்தபோது பெரியதாக எதுவும் இல்லை. ஒரு இரண்டு நாட்கள் நிற்க வைத்துவிட்டு அந்த டிரைவருக்கு ஒரு பாடம் கற்பித்து விட்டு அனுப்பி விடலாம் என்றிருந்தேன்.ஆனால் அதற்காக நம் வீட்டுப் பெண்ணை கடத்தி வைத்துக்கொண்டு மிரட்டும் போதுதான் அதில் வேறு ஏதோ விஷயம் இருக்கும் என்று சந்தேகிக்கிறேன்.

நீ சொல்வது சரிதான் அவர்களுக்கு கேட்டவாறு அந்த வேனை அனுப்பிவிடலாம் .நீ அதில் வேறு எதுவும் சோதனை செய்ய வேண்டாம். ஆனால் நாம் வேனை அனுப்பினாலும் மங்கையை நம்மிடம் பத்திரமாக அனுப்புவார்களா என்பதுதான் சந்தேகம்?

என்ன செய்யலாம் கார்த்தி

ஒன்றும் கவலைப்படாதே விக்கி நீ மங்கைக்கு அன்று அணிவித்த மோதிரத்தில் டிரக்கிங் டிவைஸ் உள்ளது. அதன்மூலம் அவள் எங்கிருக்கிறாள் என்று எளிதாக கண்டு விடலாம். நான் போகிறேன் நீ வந்தால் அவர்களுக்கு சந்தேகம் வந்து விடும். சரியா

விக்ரமுக்கு அப்போதுதான் நிம்மதியாயிருந்தது.அன்று கார்த்திக் மங்கையிடம் ஏன் மோதிரத்தை கழற்றக்கூடாது என்று கூறினான் என்று இப்பொழுது தெரிந்து கொண்டான்.அவனின் புத்திக் கூர்மையை எண்ணி வியந்தான் வழக்கம் போல.

நான் இப்போது நம் ஆபிஸ் அருகில் டீக்கடை வைத்துள்ளவரின் போனில் இருந்து தான் பேசுகிறேன் . ஏதாவது பேசணும் என்றால் இந்த நம்பருக்கு கூப்பிடு என்னுடைய நம்பரை அவர்கள் டிராக் செய்தாலும் செய்யலாம் என்றான் விக்ரம்.

விக்ரம் கார்த்தியிடம் போன் பேசி வைத்ததும் அவளுடைய போன் அடித்தது. எடுத்து பார்த்த்தில் சுந்தர் அழைத்தான்

சொல்லுங்க சுந்தர்

விக்ரம் நீங்க இப்போ ப்ரீயா இருக்கீங்களா நான் உங்கள் அலுவலகத்தின் வெளியே நின்று கொண்டிருக்கிறேன். உங்களை பார்க்கலாமா கொஞ்சம் விசயம் பெரியது என்றான்.

ஒரு வேலை மங்கை கடத்தப்பட்டது சுந்தருக்கு தெரிந்திருக்குமோ அதை சொல்வதற்காக வந்து இருக்கிறாரா என்று யோசித்தவாறு வாங்க சுந்தர் என்றான் விக்ரம்.

விக்ரமின் அறைக்கு வந்த சுந்தர் நேராகவே நான் திருமணம் செய்துகொள்ள போகும் பெண்ணை காணவில்லை என்று கூறினான்.

என்ன நடந்தது என்று கேட்டான் விக்ரம் பதட்டமாக.




சுந்தரி எதையும் மறைக்காமல் விக்ரமிடம் நடந்ததைக் கூறினான்.

நேற்றிரவு பேசினேன்.

காலையில் மறுபடியும் போன் செய்ததேன் அவள் எடுக்கவில்லை. ஒருவேளை கோபமாக இருக்கிறாளோ என்று எண்ணி சிறிது நேரம் விட்டு மீண்டும் முயற்சித்தும் கனி எடுக்காமல் இருக்கவே பயத்தில் ஹவுஸ் ஓனருக்கு போன் செய்து விசாரித்தேன். அவர் காலையிலேயே கனி குழந்தையை தூக்கிக்கொண்டு தோழியின் திருமணத்திற்கு செல்வதாக கூறி விட்டு சென்று விட்டாள் என்று கூறினார் .நான் உடனே அந்த வீட்டை திறந்து பார்த்த போது அவளுடைய போணும் அதனடியில் என்னை மன்னித்துவிடு சுந்தர் நான் போகிறேன் என்று ஒரு லெட்டர் இருந்தது.

எனக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. உங்கள் ஞாபகம்தான் வந்தது உடனே பிளைட் பிடித்து இங்கு வந்து விட்டேன்.இனி நீங்கள்தான் ஏதாவது செய்யவேண்டும் .இது இன்னமும் வீட்டில் யாருக்கும் தெரியாது. ஒரு மாதத்தில் அம்மா வேறு திருமணத்திற்கு தேதி குறித்திருக்கிறார்கள்.

சரி அவர்களின் புகைப்படம் ஏதாவது இருக்கிறதா .அதை எனக்கு தெரிந்த பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சியிடம் கொடுத்து விசாரிக்கலாம்.

சுந்தரிடம் இருந்து போட்டோவை வாங்கி பார்த்த விக்ரம் அதிர்ச்சி அடைந்தான் .

விக்ரமின் அதிர்ந்த முகத்தை சுந்தர் என்ன ஆச்சு விக்ரம் என்றான்.


இது என்று இழுத்தான் விக்ரம்.

கனிமொழி நான் திருமணம் செய்து கொள்ள போகும் பெண் என்றான் சுந்தர்.

இது யார் தெரியுமா சுந்தர் என் மாமா ராகவனின் மூத்த பெண் கனிமொழி . மலரின் அக்கா. உங்களுக்கு இந்த விஷயம் தெரியாதா?


இல்லை விக்ரம்.நானும் இதுவரை எவ்வளவோ முறை கனியிடம் அவளின் பெற்றோரைப் பற்றிக் கேட்டு விட்டேன் அவள் இதுவரை எதுவும் சொல்லவில்லை.


அவள் சொல்ல மாட்டாள். சரியான பிடிவாதக்காரி .சரி என்னைப் பற்றி ஏதாவது சொல்லி இருக்கிறீர்களா சுந்தர்?

இல்லை விக்ரம். மங்கையின் கணவர் ஒரு போலீஸ் என்று மட்டும் தான் தெரியும் மற்ற விவரங்கள் எதுவும் நான் அவளிடம் சொல்லியதில்லை.

நல்லவேளை நீங்கள் சொல்லவில்லை.கனி புத்திசாலி அவளுடைய போனை வைத்து டிராக் செய்வோம் என்று தான் போனை வீட்டிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டாள். ஆனால் இதில் ஒரு நல்லது உள்ளது. இந்த போனில் உள்ள அனைத்து நம்பர்களுக்கும் போன் செய்து இந்த போன் கீழே கிடந்தது உங்கள் நம்பர் இதில் இருந்தது. உங்களுக்கு தெரிந்தவருடையதா? வந்து வாங்கி கொள்ள சொல்கீறீர்களா என்று கூறிலாம். ஒருவேளை கனிமொழி இந்த நம்பரில் இருக்கும் யாரோ ஒருவரின் இடத்தில் இருந்தால் அவர்கள் நாங்கள் வந்து வாங்கிக் கொள்கிறோம் என்று கூறுவார்கள் இல்லை நமது போனை எடுக்க மாட்டார்கள். இதில் இல்லாமல் வேறு தோழிகள் யாரிடமும் போயிருக்கலாம். முயற்சி செய்து பார்க்கலாம் சுந்தர் என்றான் விக்ரம்.

விக்ரம் சுந்தரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே அந்த டீக்கடைக்காரரின் போன் அடித்தது.

கார்த்திக் தான் பேசினான். விக்ரம் ட்ராக் செய்தாயிற்று . மங்கையை திருநெல்வேலியில் வைத்திருக்கிறார்கள். இடத்தை கண்டுபிடித்துவிட்டேன். அங்குள்ள நமது நண்பன் சிவாவிடம் கூறியிருக்கிறேன் அந்த இடத்தை கண்காணிக்க சொல்லி. ஹெலிக்காப்டரில் கிளம்புகிறேன்.அப்படியே மதுரையிலுள்ள நமது வெற்றியின் டிடெக்டிவ் ஆட்களையும் கூட்டி செல்கிறேன்.



கார்த்திக்.




சரி கார்த்திக். சொல்லத் தேவையில்லை இருந்தாலும் சொல்கிறேன் மங்கை பத்திரம் வயிற்று பிள்ளைக்காரி வேறு. அப்புறம் நீயும் கவனமாக இரு.நீங்கள் இருவருமே எனக்கு முக்கியம் சொல்லும் போதே விக்ரமின் விழிகள் கலங்கியது.இவ்வளவு நேரம் தைரியமாக இருப்பவன் போல காட்டிக் கொண்டு இருந்தவன் முற்றிலும் உடைந்து விட்டான்.

கவலைப்படாமல் இரு விக்ரம். நான் மங்கை இருவருமே பத்திரமாக வந்து விடுவோம்.வந்த பின் உன்னை தொல்லை செய்து கொண்டே இருப்போம்.விக்ரமை இயல்பாக்க அவனை நீட்டினான் கார்த்திக்.

நான் இங்கு இருந்தாலும் என் மனமும் உயிரும் உன்னுடன் தான் வரும் கார்த்தி.உங்களுக்காக காத்துக்கொண்டு இருப்பேன்.


அவர்களின் பேச்சை கவனித்த சுந்தர் மங்கைக்கு என்னாச்சு விக்ரம் அதனால்தான் உங்க முகம் ஒரு மாதிரியாக இருந்ததா? நான் கூட வேலை டென்சன் என்று நினைத்தேன்.

ஆமாம் சுந்தர்.மங்கையை கடத்தி விட்டார்கள். கார்த்திக் மங்கை இருக்கும் இடம் பற்றி கண்டுபிடித்து விட்டான் .அவன் தான் அழைத்து வரப் போகிறான்.

நான் வேண்டுமானால் கார்த்திக்குடன் செல்லவா?

வேண்டாம் சுந்தர். நீங்களே பிரச்சினையில் இருக்கிறீர்கள். கார்த்திக் பார்த்துக்கொள்வான்.நாம் கனியை கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம்.

மங்கை பற்றி கவலைப்பட கூட நேரமில்லாமல் கனியை கண்டுபிடிக்க வேண்டிய வேலை விக்ரமை இழுத்துக்கொண்டது. எப்படியும் கார்த்திக் மங்கையை பத்திரமாக கூட்டி வந்து விடுவான் என்ற நம்பிக்கையிலும் ஏற்கனவே ஒருமுறை கணியை தொலைத்தாயிற்று இனிமேலும் அவளை தொலைத்து விடக்கூடாது .எப்படியாவது சீக்கிரம் கண்டு பிடித்து விட வேண்டும் என்று தேடும் முயற்சியில் ஈடுபட்டான் விக்ரம்.


அவர்கள் கண்டு பிடிக்க நினைக்கும் கனிமொழி தன் குழந்தையை அழைத்துக் கொண்டு தன் தோழி கண்மணியுடன் கோவிலுக்கு வந்திருந்தாள்.

கணியின் முகம் வாட்டமாக இருக்கவே கண்மணி கனியிடம் என்னாச்சு ஏன் உன் முகம் வாடி இருக்கிறது என்று கேட்டாள்.

அதெல்லாம் ஒன்றுமில்லை பயண களைப்பு தான் . நான் கூட இங்கேயே தங்கி விடலாமா என்று யோசிக்கிறேன் கண்மணி. எனக்கு ஏதேனும் வேலை ஏற்பாடு செய்து தர முடியுமா?

சூப்பர்.எனக்கும் சந்தோஷம்தான் நீ என் அருகில் இருந்தால் நன்றாக இருக்கும்.நான் என் கணவரிடம் கூறி உனக்கு வேலைக்கு ஏற்பாடு செய்ய சொல்கிறேன். அதுவரை நீ நம் வீட்டிலேயே இரு சரியா? இப்போது கோவில் திருவிழா நடந்துகொண்டிருக்கிறது. திருவிழா முடியட்டும் .வேலை விஷயம் பற்றி பார்க்கலாம் என்றாள் கண்மணி.

ரொம்ப நன்றி கண்மணி .

என்ன நன்றி எல்லாம் சொல்ற. நமக்குளள இதெல்லாம் தேவை இல்லை.சரி வா வீட்டுக்கு போகலாம். சம்முக்குட்டிக்கு பசிக்க போகுது.

இருவரும் கண்மணியின் இல்லம் வந்து சேர்ந்தனர்.

விக்ரமும் சுந்தரரும் பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சியிடம் தகவல்களைக் கூறி விரைவில் கண்டுபிடித்து தருமாறு கூறினார்கள். இருந்தாலும் விக்ரம் கனியின் போனில் இருந்த அனைத்து நம்பர்களுக்கும் போன் செய்து அவர்களின் திட்டத்தின்படி பேசினான்.

கனியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இருந்தாலும் விக்ரமின் மனமோ தன் மனைவியை எண்ணி கலங்கிக் கொண்டு இருந்தது. அவளுககு ஏதும் ஆக கூடாது.அதை தாங்கும் சக்தி எனக்கில்லை.என்னவளை என்னிடம் பத்திரமாக திருப்பி கொடு இறைவா என மனதில் இறைவனை வணங்கி கொண்டு இருந்தான்.கார்த்திக்கிடம் இருந்து எப்போது நல்ல செய்தி வரும் என எதிர்பார்த்து கொண்டு இருந்தான்.

எல்லோருமே சரி சார் நான் என் தோழியிடம் கூறுகிறேன் என்று ஒரே மாதிரியாக பதிலளித்தார்கள். சோர்வாக இது வேலைக்கு ஆகாது என்று நினைக்கும்போது ஒரே ஒரு நம்பரில் மட்டும் அழைப்பை ஏற்காமல் மூன்று முறை கட் செய்தார்கள்.

விக்ரம் அந்த நம்பரை கொடுத்து எந்த இடத்தில் அந்த போன் நம்பர் இயங்குகிறது என்று கமிஷனர் ஆபீஸில் சொல்லி கண்டுபிடிக்க சொன்னான்.

கமிஷனர் ஆபீஸிலிருந்த வந்த செய்தியை கேட்டவனின் விழிகள் வியப்பில் விரிந்தன.


மாலை தொடுக்கப்படும்...

வணக்கம் நண்பர்களே
கதையை பற்றிய உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

என்றும் அன்புடன்
உங்கள் தோழி லக்ஷ்மி தேவி.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top