மாலை சூடும் வேளை-26

Advertisement

laxmidevi

Active Member
மாலை-26
பாடல் வரிகள்
ஆழியிலே முக்குளிக்கும் அழகே ஆவியிலே தத்தளிக்கும் அழகே உன் தின்னென்ற கன்னத்தில் திம்மென்ற நெஞ்சத்தில் இச்சென்ற இதழ் வைக்கவா
இச்சைபோல் இலை வைக்கவா
உன் உம்மென்ற சொல்லுக்கும் இம்மென்ற சொல்லுக்கும் இப்போதே தடை வைக்கவா
மௌனத்தில் குடி வைக்கவா
அகம் பாதி முகம் பாதி
நகம் பாயும் சுகம் மீதி
மறைத்தாலும் மறக்காது அழகே
அடிவானம் சிவந்தாலும் கொடி பூக்கள் பிளந்தாலும்
உன்னை போல இருக்காது அழகே
அடிவானம் சிவந்தாலும் கொடி பூக்கள் பிளந்தாலும்
உன்னை போல இருக்காது அழகே...


விஜய்ஆனந்த் தன் அறையில் தன் காதல் மனைவிக்காக காத்துக்கொண்டிருந்தான். பொற்சிலையென நடந்து வந்தவளை கண்டவனின் விழிகள் இமைக்க மறந்தன.

தன்னவனின் அருகில் வந்த மலர்விழி என்னால் நடந்த எதையும் நம்பவே முடியவில்லை ஆனந்த் என்றாள்.

உடனே அவள் கண்ணத்தில் முத்தமிட்டு இப்போது நம்புகிறாயா என்று கேட்டான் பொதுவாக இப்படி யாராவது சொன்னால் எல்லோரும் கிள்ளி தான் வைப்பார்கள். நீங்கள் எண்ணை முத்தமிடுகிறீர்கள் என்று வினவினாள்.

இப்ப இந்த கேள்வி ரொம்ப அவசியம் தானா என்றான் அவன் பதிலுக்கு?
அவள் கிளுக்கி சிரித்தாள் .
ஏற்கனவே உன்னை காதலித்து கல்யாணம் செய்ய ஏழு வருடங்கள் ஆகிவிட்டது இன்னும் என்னால் காத்திருக்க முடியாதுமா..

என்னை ஏன் உங்களுக்கு இவ்வளவு பிடித்திருக்கிறது என்று கேட்டாள் மலர் விஜயின் தோளில் சாய்ந்து கொண்டு.
தெரியவில்லையே ஆனால் என்று அந்த சூப்பர் மார்க்கெட்டில் உன்னை பார்த்தேனோ அன்றிலிருந்து உன் நினைவுதான் இன்று வரை.
அப்போது நான் காலேஜில் சேரும் முன்பே என்னை உங்களுக்கு தெரியுமா?


ம்ம்.. என்று விஜய் தன் காதல் கதையை கூறினான்.
மலரும் விஜயை கிரிக்கெட் கிரவுண்டில் பார்த்து ரசிப்பது முதல் அனைத்தையும் கூறினாள்.
இருவரும் தத்தம் துணையின் நேசத்தின் ஆழத்தை அறிந்தபின் இன்னும் மகிழ்ச்சியாக உணர்ந்தனர்.
விஜயானந்த் நோ மோர் டயலாக்ஸ் ஒன்லி ஆக்ஷன் என்ன சரிதானே என்று கேட்டான் விஜய்.

அவனின் கேள்வியில் மலர் குங்குமமாய் சிவந்தாள். அவளின் கன்ன சிவப்பும் நாண பார்வையும் ஆணவனை போதை கொள்ள செய்தது . மலரின் நெற்றிலிருந்து தன் முத்த யுத்தத்தை ஆரம்பித்தான்.
அவர்களின் நெருக்கத்தில் பூக்கள் கூட வெட்கம் கொண்டு முகம் மறைத்து கொண்டன. இருவரும் தாம்பத்திய வாழ்க்கையின் முதல் அத்தியாயத்தை காதலால் நிரப்பியிருந்தனர்.

விக்ரம் மலர் விஜயின் திருமணம் அலைச்சலில் களைத்திருந்தால் இரு நாட்கள் விடுமுறை எடுத்திருந்தான். மங்கையின் கல்லூரி விடுமுறை என்பதால் அவளும் வீட்டில் இருந்தார்.ஒரு வேலை காரணமாக விக்ரம் பாலாவை சந்திக்க சென்றான்.அவன் சென்றவுடன் குளித்துவிட்டு அத்தையுடன் கோவிலுக்கு சென்று வரலாம் என்று எண்ணியவாறு கதவை லாக் செய்ய போனால் மங்கை. அந்த தாழ்ப்பாள் சரியாக வேலை செய்யாமல் போகவே தன்னிடம் இருந்த சாவியால் பூட்டி விட்டு குளிக்கச் சென்று விட்டாள்.
விக்ரம் படியில் இறங்கி கொண்டிருக்கும் போது ஒரு ஃபைலை மறந்து விட்டதால் எடுக்க அறைக்கு திரும்பி சென்றான் .

கதவை இரண்டு முறை தட்டி தட்டி பார்த்தான். மங்கை குளிக்க சென்று விட்டதால் அவளுக்கு கதவு தட்டும் சத்தம் கேட்கவில்லை . அம்மாவை பார்க்க போய் விட்டாளோ என்று தன்னிடம் இருந்த சாவியால் கதவை திறந்து உள்ளே வந்தவன் கட்டிலுக்கு அடியில் இருந்த சீக்ரெட் லாக்கரில் வைத்திருந்த ஃபைலை குனிந்து தேடிக்கொண்டிருந்தான்.

குளித்து முடித்துவிட்டு தன்னுடைய மாற்று துணியை எடுக்கும் போது சுவற்றில் இருக்கும் பல்லி தாவ பார்க்கவே ஆடையை தண்ணீரில் போட்டு விட்டாள்.பின் அங்கிருந்த இன்னொரு டவலை மார்பிலிருந்து முட்டி வரை கட்டிக் கொண்டு வெளியே வந்தாள் . தன்னுடைய பிரோவை திறந்து துணி மாற்ற சென்றாள். அப்போது விக்ரம் எழுந்து நிற்கவே திடிரான அவனைக் கண்டதும் தடுமாறி அவன் மேலேயே எழுந்துவிட்டாள் திடீரென அவள் விழுவாள் என்று எதிர்பார்க்காததால் விக்ரம் அவளுடன் சேர்ந்து கட்டிலில் விழுந்தான்.

பனியில் நனைந்த மலரை போல் இருந்தவளை கண்டவனின் கண்களில் காதலும் காமமும் மடைதிறந்த வெள்ளமாய் வழிந்தோடியது.

அந்த நேரத்தில் விக்ரமிற்கு அவள் என் மனைவி நான் அவளின் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருந்தது.

என்னுடைய அரசி என்று அவளை சேர்த்து அணைத்துக் கொண்டான். அவளின் வெட்கத்தையும் தயக்கத்தையும் தன் முத்தமெனும் ஆயுதத்தால் தகர்த்தெறிந்தான்.அரசி என் அரசி என்று கொஞ்சிக் கொண்டிருந்தவன் அவளின் ஆடை விலக்கி தன்னையே ஆடையாக்கினான் அவனின் அரசிக்கு.

தன் அரசியை முழுமையாக தன் வசமாக்கினான். பெண்ணவளுக்கு புதியதோர் உலகினை அறிமுகப்படுத்தினான்
தன் மனைவியுடன் காதலாய் காமமாய் கலந்து தன் பிரம்மச்சாரியத்தினை முடித்துக் கொண்டான்.
காதலிப்பவர்களுக்கு காதலும் காமமும் ஒட்டி பிறந்த இரட்டையரை போல தானே.
பின் அவளின் பிறை நெற்றியில் முத்தமிட்டு தன் மார்போடு அவளை சேர்த்து அணைத்தவாறே தூங்கிப்போனான். மங்கையும் களைப்பில் தூங்கி போனாள்.
இருவரும் சாப்பிடுவதற்கு கூட எழுந்து கொள்ளவில்லை .என்னவென்று பார்த்து வருகிறேன் என்று கிளம்பிய முரளிதரனை அம்பிகா வேண்டாம் எனத் தடுத்து விட்டார் .அவருக்கு ஏதோ கொஞ்சம் புரிவது போல் இருந்தது.


காலையில் கண் விழித்து பார்க்கும்போதும் தன் கணவனின் கையணைப்பில் தான் இருந்தாள். நிமிர்ந்து தன் கணவனின் முகம் பார்த்தாள் தூங்கும்போதும் கூட சிறு அழுத்தத்துடன் இருந்தது. அதை ரசித்து பார்த்தவளுக்கு இரவு நடந்தது நினைவு வந்தது. தன் கணவனை காண வெட்கம் கொண்டவளாய் சீக்கிரமாக குளித்து விட்டு தன் அத்தையிடம் சென்றுவிட்டாள்.

சில நாட்களாக மங்கையின் மனதில் இருந்த சஞ்சலம் மறைந்தது. மனதில் ஒருத்தியை வைத்து கொண்டு இன்னொரு பெண்ணுடன் சுகிப்பவன்
அல்ல தன் கணவன் என்று முழுமையாக நம்பினாள். தன் கணவன் தன்னை நேசிக்கிறான் என்று எண்ணினாள். அவளுடைய நம்பிக்கையின் ஆயுள் இன்னும் ஒரு நாள் தான் என்பதை அறியாமல்..
முகம் நிறைய பூரிப்புடன் வந்த தன் மருமகளை கண்ட அம்பிகாவின் மனம் நிறைந்து விட்டது.

துயில் கலைந்து விழித்த விக்ரமின் விழிகள் மனைவியின் தரிசனம் காண ஏங்கியது.உடனே தன் மனைவியை அழைத்து தங்கள் அறைக்கு காபி கொண்டு வர சொன்னான்.


காபிக் கொண்டு வந்தவளுக்கோ வெட்கம் பிடிங்கி தின்றது இரவின் நினைவில்.அவளின் பார்வையை விக்ரமின் கைகளை விட்டு மேல் ஏறவில்லை .நாணத்தில் நிலம் நோக்கியவளின் கன்னம் காஷ்மீர் ஆப்பிள் போல சிவந்திருந்தது. மங்கையைப் பார்த்து அவளின் மனத்தில் என்ன நினைக்கிறாள் என்று தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்துதான் அவளை அழைத்து இருந்தான். அவள் குனிந்தவாறு இருக்கவே ஒருவேளை நேற்று நடந்தது அவளுக்கு பிடிக்கவில்லையோ அதனால்தான் என் முகம் பார்க்காமல் இருக்கிறாளோ என்று குழம்பினான்.
சரி கேட்டே விடலாம் என்று எண்ணினேன்.

பின் அவன் மங்கை என்று கூப்பிடவும் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது என்று அங்கிருந்து ஓடிவிட்டாள் அவன் மனைவி.

அதன்பின் அவன் சாப்பிடும்போது கூட அவனின் அன்னையின் பின்னே ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி ஆடினாள்.
விக்ரம் வேலை இருக்கிறது என்று கிளம்பி சென்று விட்டான் இரவு வந்து அவளிடம் பேசிக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தான்.

முரளிதரன் மணியின் குழந்தைகளை அழைத்து வந்ததால் மங்கை அவர்களுடனே தூங்கி விட்டாள்.
தன் மனைவியின் முகம் காண ஆவலாக தன் அறைக்கு விரைந்தான் விக்ரம். குழந்தைகளுடன் குழந்தையாக உறங்கிக்கொண்டிருந்தாள் அவனின் ஆசை மனைவி. அவர்களைப் பார்த்து புன்னகைத்தவாறு அவனுடைய ஸ்டடி ருமிற்கு சென்று தூங்கி விட்டான்.

இப்படியாக 2 நாட்கள் மங்கை தன் மணாளனுடன் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தாள்.

மனைவியின் பாராமுகம் விக்ரமின் ரொம்பவே வாட்டியது. அன்றைய நிகழ்வு அவளுக்கு பிடிக்கவில்லையா? சிறு பெண் தானே பேசி புரிய வைக்கலாம் என்று எண்ணினான்
ஆனால் அதற்கான வாய்ப்பை அவன் மனைவி அவனுக்கு தரப்போவதில்லை என்பதை அறியாமல்.

மங்கையை அழைத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு சென்றான் விக்ரம்.
சாரிமா என்றான் விக்ரம்.
எதற்கு என்றால் கேள்வியாக மங்கை.
இல்லை அன்றிரவு நான் அப்படி என்ற வார்த்தைகளை தொடுத்துக்கொண்டிருந்தான் விக்ரம்.
மங்கையின் கோபப் பார்வையில் தடுமாறினான் விக்ரம் .பிறகு அன்று நான் அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது என்று அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே இவ்வளவு நேரம் வெட்கத்தில் சிவந்து இருந்த அவளது கன்னங்கள் கோபத்தில் சிவந்தது . நிமிர்ந்து விக்ரமினை பார்த்தவளின் முகத்தில் இருந்த கோபம், வருத்தமாய் மாறியது அழுது கொண்டே அங்கிருந்து சென்றுவிட்டாள்.

மங்கையின் மனதில் தன்னை பற்றி என்ன நினைக்கிறாள் என்று கேட்டு விட்டு தன்னுடைய காதலை உரைக்க எண்ணியிருந்தான் விக்ரம். அதனால தனியாக மொட்டை மாடிக்கு அழைத்து வந்திருந்தான்.அதில் பாதியைக் கேட்டு விட்டு இப்படி அழுது கொண்டு செல்வாள் என்று எதிர்பார்க்கவில்லை. எத்தனையோ வழக்குகளில் குற்றவாளிகளின் மனநிலையை கணித்து அதற்கு ஏற்ப காய் நகர்த்தி வெற்றி வாகை சூடியவன் தன் மனையாளின் மனதை கணிக்க இயலாமல் திணறினான். அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்தான்.

அறைக்கு வந்த மங்கை தன் மனதில் இருக்கும் பாரம் முழுவதும் கரையும் மட்டும் அழுது தீர்த்தாள் ஏன் இவர் அபபடி என்று சொன்னார். அவர் என்னை தன் மனைவியாய் நினைத்து உறவாடவில்லையா ?யாரோ ஒரு பெண்ணிடம் சாரி சொல்வதுபோல் சொல்கிறார் .அப்பொழுது இவ்வளவு நாளில் அவருடைய மனைவியாய் கொஞ்சம் கூட அவர் மனதில் இடம் பெற வில்லையா? இல்லை என் நேசத்தை உணரவில்லையா? உணர்ந்து கொள்ள மறுக்கிறாரா என்று எண்ணி தவித்தாள்.
இப்படியாக மங்கையின் தவிப்பிலும் விக்ரமின் குழப்பத்திலும் ஒரு நாள் கழிந்தது .

அம்பிகா தன் மகன் மருமகள் இருவரையும் அழைத்து மலரையும் விஜய்யையும் விருந்து அழைக்க வேண்டும் நீங்கள் இருவரும் நேரில் சென்று அழைத்து வாருங்கள் என்று கூறினார்.

சரி அத்தை இருவரும் போய் அழைத்து வருகிறோம் என்று கூறினாள் மங்கை.
அங்கே அவள் அறியப்போகும் விஷயம் அவள் வாழ்வின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைக்கப் போகிறது என்பதை அறியாமல்.

மாலை தொடுக்கப்படும்...


வணக்கம் நண்பர்களே ,
கதை எப்படி போகிறது என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டு போனால் இந்த சின்ன பிள்ளை மிகவும் சந்தோஷப்படுவேன் .நிறைகளை மட்டும்மல்ல குறைகளையும் கூறலாம் அது என்னை திருத்திக்கொள்ள உதவும்.

இப்படிக்கு
உங்களது கருத்துக்களை எதிர்நோக்கி இருக்கும் அன்பு தோழி
லக்ஷ்மி தேவி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top