மாயவனின் அணங்கிவள் -33

Advertisement

Priyamehan

Well-Known Member
நீல மையை தான் அனைவரும் அடித்துக் கொண்டு சுற்றினர்.. அருவியின் உடையில் சிவப்பு நிறத்தில் இருக்கவும் பார்ப்பவர்கள் அதை மாதவிலக்கு என்றே எண்ணினர்.

அருவியின் தோழிகள் இருவர் அவளை அருகில் அழைத்தவர்கள்... "அருவி நீ ஹாஸ்டல் போய் டிரஸ் சேன்ஜ் பண்ணு" என்றனர்.

"ஏன் இந்த டிரஸ்க்கு என்ன நல்லா தானே இருக்கு..?"

"பின்னால பாரு..பீரியட் ஆனது டிரஸ்லைலா பட்டுருக்கு... போயி மாத்து..."

"என்னது பீரியட்டா...?எனக்கு இது டைம்மே இல்லையே என்னடி சொல்றிங்க?" என்று பின்புறம் திரும்பிப் பார்க்க முயன்று முடியாமல் போக உடையை இழுத்து முன்புறம் கொண்டு வந்து பார்த்தாள்...

பார்த்தவுடன் அது மை என்று தெரிந்துவிட்டது அவளுக்கு... இது யார் செய்த வேலையாக இருந்தாலும் தன்னை அவமானப் படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தெளிவாக செய்திருக்கிறாள் என்று நொடியில் புரிந்தது அருவிக்கு..

என்னதான் மையாக இருந்தாலும் பார்ப்பவர்கள் அனைவருக்கும் அது மை என்று சொல்லி புரியவைக்க முடியாதே அவர்கள் தப்பாக தானே பார்ப்பார்கள் என்று நினைக்கும் போது கண்கள் கலங்கிவிட

அன்று வேந்தன் தன்னுடைய மாதவிலக்கு தேதியை தெரிந்து வைத்திருக்கிறான் என்று தெரிந்தப் போதே அவ்வளவு கவலைப்பட்டவள் இன்று அனைவரும் தன்னை எவ்வாறுப் பார்ப்பார்கள் என்று நினைக்கும் போது அழுகையே வந்துவிட்டது.

அந்த இடத்தை விட்டு நகரவே பயமாக இருக்க.. அங்கிருப்பவர் வேற ஏதாவது வேலை செய்துக் கொண்டிருந்தாலும் என்னவோ அவளை தான் அருவருப்பாக பார்ப்பதுப் போல் இருந்தது.....

அங்கிருந்து விடுதிக்கு ஓடியவளை அனைவரும் கேலியாக பார்த்தனர்.

விடுதிக்கு சென்று உடை மாற்றும் போது....கண்களில் கண்ணீர் வழிய "எனக்குன்னே எங்கிருந்துடா வருவீங்க...?என்னைய தொல்லை பண்ணனும் அவமானப்படுத்தணும்னா அவ்வளவு சந்தோசமா?" என்று கத்திக் கொண்டே உடையை மாற்றிக் கொண்டவள் உடையை அலசி காயப்போட்டாள் என்ன தான் சோப்பு போட்டு துவைத்தாலும் முழு மையும் போகவில்லை... அந்த இடத்தில் சிவப்பு நிறத்தில் தடம் இருந்தது.

அழுது முடித்து தன்னை தேற்றிக் கொண்டு மீண்டும் கல்லூரிக்குச் சென்றாள்....

அவள் வருவதைப் பார்த்த ஜீவா... "இவ்வளவு பண்ணியும் இவ திமிரு அடங்கலப் பாரு... பண்ணதுக்கு அடங்கி உக்கார்ந்து அழுதுட்டு இருப்பான்னு பார்த்தா டிரஸ் மாத்திட்டு திரும்ப இங்கையே வரா இவளுக்கு எவ்வளவு திமிரு இருக்கும்... இவளை என்று பற்களை கடித்தவாறு அருகில் இருந்த நண்பனிடம் சொல்ல...

"ஏய் யாருடா என்மேல ரெட் இங்கை ஊத்துனது..?"என்று அனைவரையும் பார்த்து கொலைவெறியுடன் கத்தினாள்.

எல்லோரும் திரும்பி திரும்பி மற்றவர்களின் முகத்தைப் பார்க்க.. ஜீவாவே முன் வந்து "நான்தாண்டி ஊத்துனேன், இப்போ என்ன அதுக்கு?" என்றான் திமிராக.

வேகமாக ஜீவாவின் அருகில் சென்று அவன் கன்னத்திலையே ஓங்கி ஒரு அறை விட்டாள்.

"ஏய்... என்னையவே அடிக்கிறியா..?"என்று அவன் எகிற மீண்டும் மறுக் கன்னத்தில் அறைந்தாள்.

"எவ்வளவு தைரியம் இருந்தா என்ன அடிப்ப?"

"அப்படி தாண்டா அடிப்பேன்...உன்னோட பொறந்த அக்கா தங்கச்சிக்கு இப்படி பண்ணிடுவியா? இல்ல நாளைக்கு உனக்கு ஒரு பொம்பள பிள்ளை பிறந்தா தான் யாராவது இப்படி பண்ணுனா சும்மா இருப்பியா..? உங்க வீட்டு பொண்ணுங்கன்னா உனக்கு அவ்வளவு உஷத்தி வெளிய இருக்க பொண்ணுங்கனா அவ்வளவு கேவலமா..? மத்த பொண்ணுங்களை கிள்ளு கீரைன்னு நினைச்சிட்டிங்களா? என்ன வேணுனாலும் பண்ணலாம்ன் அவங்க அசிங்கப் பட்டு தலை குனிஞ்சிட்டு போய்டுவாங்க எதுவும் கேக்க மாட்டாங்கன்னு தானே இதை யெல்லாம் பண்ண...?

இப்போ இந்த இங்கை என் மேல ஊத்துனதுல என்ன நீ சாதிச்சிட்ட... நாலுப் பேரு கேவலமா பார்த்தா அழுதுட்டு ரூமை விட்டு வெளி வரமாட்டா ன்னு தானே... நான் அருவிடா அருவியா கொட்டி அதுல உன்னைய அடிச்சிட்டு போவேனே தவிர ஒரு இடத்துல முடங்கி உக்கார மாட்டேன்... ஆனா எல்லாப் பொண்ணுங்களும் அப்படி இருக்கறதில்லை... சில இந்த மாதிரி அவமானத்துக்கு பயந்து படிக்கறதையே விட்டுறாங்க... நாங்க என்னடா பாவம் பண்ணோம் கடவுளா பார்த்து எங்களுக்கு கொடுத்த வரம் இது... இது இல்லைனா இன்னைக்கு நீ இங்க நின்னுருக்க மாட்ட ....உங்க அம்மா உன்னைய பெத்துருக்கவே மாட்டாங்க நியாபகம் வெச்சிக்கோ..

ஒரு மெடிக்கல் ஷாப் போய் கா**ம் குடுன்னு ஓபனா கேக்க முடியுது உங்களால... விஸ்பர் குடுங்கன்னு எங்களால கேக்க முடியாத மாதிரியும் ஏதோ தீண்ட தகாதபொருளை கையில வாங்கிற மாதிரியும் அதக்கு நாலு பேப்பரை சுத்தி யாரும் பார்த்துடப் போறாங்கனு மறைச்சி மறைச்சிட்டு போற நிலைமையில தானே இன்னும் எங்களை வெச்சிருக்கீங்க...அதான் இதுமாதிரி தைரியமா பண்றீங்க? " என்று மீண்டும் ஒரு அடியை ஜீவாவின் கன்னத்தில் வைத்தவள்...

" இனி இதுமாதிரி யாருக்காவது பண்ணுன அப்புறம் பொண்ணுங்களை அபியூஸ் பண்றேன்னு போலீஸ்ல கம்பளைண்ட் பண்ணிடுவேன் ஜாக்கிரதை" என்று விரல் நீட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டாள்..

பெண்கள் தவறை கண்டு தனிந்து போனால் ஏறி மிதிப்பவர்களை மிதிக்க தான் செய்வார்கள்.. அடுத்தவர்களுக்கு நடக்கும் போது கேக்கவில்லை என்றாலும் தனக்கு நடக்கும் போதாவது தலை நிமிர்ந்து கேக்க வேண்டும்.. இதற்காக அடுத்தவர் வருவார் என்று காத்திருக்க முடியாது ...

அறைக்கு வரும் போது ரித்து ஊருக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தாள்.

"அரு என்ன காலையில் வேற டிரஸ் போட்டுருந்த இப்ப வேற டிரஸ் போட்டுருக்க..?"

"அது நான் அப்போவே ரூமூக்கு வந்து டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டேன்.."

"ஓ சரி கார் கடம்பூர் தாத்தா எப்போ வரேன்னு சொன்னாரு..?"

"வந்துடுவாங்க.."

"நம்ப காரும் வந்துரும், நான் பேசுனதுல சரவணன் வீட்டுல வந்து பேசறேன்னு சொல்லிருக்கான்...பாப்போம்"

"ம்ம் நானும் அவன் கிட்ட பேசுனேன் மாமாகிட்ட பேச சொன்னேன். அவங்க அப்பா மட்டும் தான் பிரச்சனைப் போல" என்று மென்று முழுங்கி பதில் சொன்னவளை

"என்னாச்சி நீ ஏன் ஒரு மாதிரி பேசற?"

"அதுலாம் எதுமில்லையே"

"சரி மத்ததை வீட்டுக்கு போய் பேசிக்கலாம்...வா கீழேப் போலாம்.."

"ம்ம்" என்றவள் அவளுடைய பையை எடுத்துக் கொண்டாள்.

"கூட்டிட்டு போக யாரடி வரா?"

"இனி, இல்லனா காக்கா தான் வருவான் வேந்தன் அண்ணாவுக்கு வேலை இருக்குனு சொல்லிட்டாரு..." என்று ரித்து சொல்லவும் அருவியின் முகத்தில் வெளிச்சம் வந்தது.

"பரவால அவன் என்னைய கூட்டிட்டு போக தான் வரமாட்டான்னு தப்பா நினைச்சிட்டேன் ,அவன் தங்கச்சியையும் கூட்டிட்டு போகவும் வரல..ஹப்பா இப்போதான் நிம்மதியா இருக்கு... அன்னிக்கு ஏதோ போனா போகுதுனு தேவாவை கூட்டிட்டு வர போயிருப்பானா இருக்கும்" என்று தனக்கு தானே ஆறுதல் சொல்லிக் கொண்டு கீழே செல்ல அங்கு கடம்பூர் தாத்தாவான காசிலிங்கம் நின்றிருந்தார்...

அவரை இருவரும் ஓடி சென்று அணைத்துக் கொண்டனர்.

"கண்ணுங்களா... " என்று அவரும் இருப்பக்கமும் இரு பேத்திகளை அணைத்துக் கொண்டவர்., "எப்படி கண்ணு இருக்கீங்க...?"

"எங்களுக்கு என்ன தாத்தா நல்லா இருக்கோ கிழவி என்ன பண்ணது..?"என்றாள் அருவி.

"கிழவி வாரேன்னு தான் சொன்னா... நான் தான் எதுக்கு அவளை கூட்டிட்டு திரியனும்னு வேணானு சொல்லிபுட்டேன் .. ஏங் கண்ணு ரித்து நீயும் அருவோட ஊருக்கு வாரலாம்ல..."

"நீங்க எங்க என்னைய கூப்பிட்டீங்க? உங்க பேத்தியை தானே கூப்பிட்டீங்க.. என்ன இருந்தாலும் அவ உங்க மகன் வீட்டு பேத்தி, நான் மக வீட்டுப் பேத்தி தானே அதான் எப்போமே அவளை மட்டும் கூப்பிடறது கொஞ்சறதெ ல்லாம்.." என்று முகத்தை விளையாட்டாக திருப்ப

"என்ற கண்ணு இப்படி சொல்லிப்புட்ட எனக்கு நீயும் ஒன்னு தான் இந்த புள்ளையும் ஒன்னு தான், நான் எப்போ பிரிச்சி பார்த்துருக்கேன்... உனக்கு தான் ரூம்ல ஏசி வேணும்... இல்லனா இருக்க மாட்ட அருவி அப்படி இல்லைல எங்க போனாலும் அதோட ஒன்னாகிடும்ல" என்றவர் அருவியின் பையை டிக்கியில் வைக்கப் போக...

"ஏண்டி தாத்தாகிட்ட இப்படி பேசற? அவர் உன்னையும் தான கூப்பிட்டாரு.. நீ தானே அண்ணா வரும் போது வரேன்னு சொன்னா... இப்போ என்னவோ மகன் வீட்டு பேத்தின்னு என்னைய கொஞ்சறாங்கன்னு சொல்ற...?"

"ஒரு தடவை சொன்னதுக்கே அவங்களுக்கு கஷ்டமா இருக்கும்னு சொல்றியே மொத்த குடும்பமும் உன்னைய தாங்கற இடத்துல நீ சேது தாத்தாவையும் ரெண்டு அப்பாவையும் இப்படி தான் பேசற, அவங்களுக்கு எப்படி இருக்கும் நினைச்சிப் பாரு.. நம்ப வீட்டைப் பொறுத்த வரைக்கும் யாருமே பாகுப்பாடு பார்த்து பழகல அதை உனக்கு புரிய வைக்க தான் இப்படி பேசுனேன்" என்று சொல்லும் போதே ஊரில் இருந்து கார் வந்துவிட்டது...

அதில் இருந்து வேந்தன் இறங்க...

"இவன் வரமாட்டானு சொன்னா இப்போ வந்து நிற்கறான்... போச்சி போச்சி இதை நினைச்சி இன்னைக்கு நான் தூங்க மாட்டேன்." என்று உள்ளுக்குள் குமுற ஆரம்பித்து விட்டாள்.

"தாத்தா..."

"ராசா...வேந்தா...."

"எப்படி இருக்கீங்க அம்மாயி எப்படி இருக்காங்க?"

"கிழவிக்கு என்ன சொகமா தான் இருக்கா...நீங்க யாரும் அங்கிட்டு வரைலையேன்னு கொஞ்சம் வருத்ததுல இருக்கா...மத்தப்படி குந்தாணி கிழவி மோனு வேலைக்கு ஆறு வேலைல சாப்பிட்டு குத்துகல்லாட்டம் உக்கார்ந்து கிடைக்கறா.."

"தாத்தா இதுதான் சாக்குன்னு அம்மாயியை பேசுறீங்களா...?" என்றவன்
"வந்துடறோம் தாத்தா... எப்படியும் இந்த நோம்பிக்கு வந்தா ஒரு வாரம் அங்க தானே இருக்கப் போறோம் அப்புறம் என்ன...?"

"ஏதோ இந்த முறையாவது நீயே கூப்பிட்டு அருவியை கூட்டிட்டு போக சொன்னியே ராசா அதுவரைக்கும் சந்தோசம் ... இல்லனா புள்ளய அந்த பக்கம் வரவே விடமாட்டியே எத்தனை தடவை உங்கிட்ட கேட்டுட்டேன்.. அவ படிப்பு முடியட்டும் தாத்தான்னு எங்களையில வந்து பார்த்துட்டு போக வெச்சிட்டு இருந்தவன்..." என்றதும் அருவி வேகமாக வேந்தனை திரும்பிப் பார்க்க அவளைப் பார்க்காமல் எங்கோ பார்த்திருந்தவனின்
முகத்தில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

"என்ன ரித்துவையும் எங்களோட அனுப்பிருந்தா இன்னும் சந்தோசமா இருந்துருக்கும்"

"நான் ஊருக்கு வரும் போது கூட்டிட்டு வரேன் தாத்தா ..."

"ம்ம் சரி ராசா இப்போ கிளம்புனா தான் இருட்டுறதுக்குள்ள வூடுப் போய் சேர முடியும்..."

"சரி பார்த்துப் போங்க..." என்றவன் டிரைவரிடம் பார்த்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று எச்சரித்துக் கொண்டிருக்க தாத்தா முன் பக்கம் ஏறி அமர்ந்தார்.

ரித்து தாத்தாவிடம் சொல்லிக் கொண்டு வேந்தனின் காருக்குச் சென்று விட... அருவியும் வேந்தனும் தான் வெளியே நின்றுக் கொண்டிருந்தனர்.

அருவி வேந்தனிடம் எதையோ கேக்க முயல்வது அவனுக்கு நன்றாகவே புரிந்தது.

"நீங்க எங்களோட இருக்கறதை விட அவளோட இருக்கறதுக்கு தான் விரும்பனீங்க அதான் தாத்தாக்கிட்ட சொல்லி கூட்டிட்டு போக சொன்னேன். இனி உங்களுக்கு விருப்பம் இருந்தா வரலாம் இல்லனா அங்கையே இருக்கலாம்" என்று எங்கோப் பார்த்து சொல்லிவிட்டு அவனுடைய காருக்கு சென்றுவிட்டான்.

முகம் பார்த்துக் கூட பேசாமல் செல்லும் வேந்தனை கவலையாகப் பார்த்தாள் அருவி...வேந்தனின் உதாசினம் வெகுவாக மனதை பாதித்தது..அன்று பேசிய வார்த்தைகளை அருவி மறந்தே விட்டாள்... பேசியவர்கள் மறந்து விடுவார்கள்... வாங்கியவர்களால் மறக்க முடியுமா..?

கடம்பூர் போக வேண்டும் என்று தான் இவ்வளவு நாள் ஆசைப்பட்டாள்... இன்று அது நடக்கும் போது மனம் ஏனோ பாரமாக இருந்தது. இந்த ஒரு மாதமாக தானே பலப் பிரச்சனை ஆனால் இதற்கு முன் ஊருக்கு போகும் நாளை எதிர்ப்பார்த்து காத்திருந்தவள் தானே அவளும்.

கூட்டுக் குடும்பம் என்பது அழகான கூடு ... அதில் இருக்கும் போது பெரிதாக அதன் பலன் தெரியாது .. விட்டு பிரியும் போது தான் அதன் அருமை புரியும்... இப்போது அருவியின் நிலைமையும் அப்படி தான் இருந்தது.

போறேன் போறேன் என்று சொல்லும் போது தெரியாத ஒன்று... போ என்று அவர்கள் சொன்னதும் மனம் வலித்தது.

தேர்வு ஆரம்பித்ததில் இருந்து முடியும் வர பல தடவை வேந்தனை பார்க்க வேண்டும் என்றுக் கூட நினைத்துவிட்டாள் ஆனால் அதற்கு மேல் அவள் யோசிக்கவில்லை ஒருவேளை யோசித்திருந்தால் அவள் மனம் புரிந்திருக்குமோ...
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top