மாயவனின் அணங்கிவள்-3

Advertisement

Priyamehan

Well-Known Member
அனைவரும் பண்ணை வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்.

"அரு கிளம்பிட்டியா...?"

"எங்க?"

"பண்ணை வீட்டுக்கு.."

"நீ போடி நான் வரல அங்க வந்தாலும் உன் நொண்ண ரூல்ஸ் ராமானுஜம் ரூல்ஸ் பேசியே கொல்லுவான், ஏற்கனவே ஹாஸ்டல் வார்டன் தொல்லை தாங்காம தான் இங்க வந்தேன்,இங்க உன்ன நொண்ண தொல்லை அதுக்கு மேல இருக்கு" என்றாள்.

"நீ வரலையானாலும் திட்டு விழும்டி, உனக்கே தெரியும் நான் வேற தனியா சொல்லனுமா?" என்று ரித்து சொல்லிக் கொண்டிருக்க
இனியன் அறையின் உள்ளே வந்தான்..

"என்னங்கடி வானராங்களா இன்னும் கிளம்பலையா....?"

"டேய் என்னைய டி சொல்லாதன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்... உங்க நொண்ணனுக்கு இதுலாம் கண்ணுக்கு தெரியாதா...?எப்போ பாரு நான் என்ன தப்பு பண்ணுவேன்னு விளக்கெண்ணயை கண்ணுல ஊத்திக்கிட்டு பார்க்கறான்ல. குறை சொல்லனும்னா அந்த லூசு வேந்தனுக்கு அருவி தான் இளக்காரமா போய்ட்டா.. கேக்க யாரும் இல்லைல,அண்ணன்னு இருக்கற ஒருத்தனும் அவன் பின்னால வால் பிடிச்சிட்டு சுத்தறான்ங்கற தைரியம்," என்று கடுகு போல் பொறிந்தவளை...

"இப்போ என்ன உனக்கு பிரச்சனை...? எதுக்கு இப்படி பொறியற?"

"யாருடா காலையில நான் தூங்குனதை அந்த காட்டன்கிட்ட சொன்னது..? உங்க ரெண்டுப் பேர்ல எவனோ ஒருத்தன் தான் சொல்லிருக்கீங்க., அந்த நிரூபன் தெண்டம் வேந்தன் லூசுக் கூட சுத்துனாலும் தங்கச்சுனு கொஞ்சம் பாசம் அவன் மனசுலையும் எங்கையோ ஒட்டியிருக்கு அதனால அவன் சொல்ல வாய்ப்பில்லை.சொல்லுங்க யார் சொன்னது?" என்று மூச்சு விடாமல் பேசினாள்.

"ஏய் ரிலாக்ஸ் ரிலாக்ஸ், நான் சொல்லல அரும்மா.."

"அப்போ அந்த காக்கா பையன் தான் சொல்லிருப்பான் சரியான திமிறுப் பிடிச்சவன், காலையில எழுந்ததுமே என்னா திட்டு தெரியுமா...இவன்கிட்ட திட்டு வாங்கிட்டு போனா அந்த நாளே நாசமா தான் போகும், இன்னைக்கு இன்னும் என்ன என்ன காத்திருக்கோ எனக்கு?" என்று சிணுங்கியவளை..

"சரி சரி விடு இதுலாம் மைனர் வாழ்க்கை சாதாரணமில்லையா...அருக்கு இதுலாம் தூசி மாதிரி"

"உனக்கு என்னப்பா உங்க நொண்ணன் எது சொன்னாலும் எருமை மாட்டு மேல மழை பேஞ்ச மாதிரி சுரணையே இல்லாமல் இருப்ப... எனக்கு அப்படியா...?எனக்குலாம் நிறைய சூடு சுரணை இருக்கு"

"ரொம்ப தப்பும்மா அதுலாம் இருக்கவேக் கூடாது முதல அதை எல்லாம் அழி" என்று இனியன் இழுத்துப் பேச...

"கிளம்பலாமா? நீங்க ரெண்டு பேரும் அப்புறமா சண்டைப் போட்டுக்கோங்க, இப்போ அண்ணா ரெடியா இருப்பாரு கீழே போகலைனா இன்னைக்கு பட்டினி பலகாரம் தான் எப்படி வசதி?" என்றாள் ரித்து...

"நீ முன்னாடி போடி... நான் அரும்மாவை அழைச்சிட்டு வரேன்"

"எதுக்கு? அத்தை பொண்ணுனு ரொமான்ஸ் பண்ணி கடலை போடவா..வேந்தன் அண்ணா சொல்லிருக்கார் இவளை தனியா விட்டுட்டு எங்கையும் போகக்கூடாதுனு ஒழுங்கா ரெண்டு பேரும் கிளம்பி என்னோட வாங்க" என்றாள் ரித்து.

"இல்லனா மட்டும் உங்க அண்ணன்ங்க மூனுப் பேரும் அப்படியே அன்பு மழையைக் என்மேல கொட்டி மூச்சு முட்ட மூழ்கடிச்சிட்டி தான் வேற வேலைப் பார்க்க போறாங்க போடி" என்று ரித்துவின் முதுகில் ஒரு அடி வைத்தாள் அருவி .

"இப்போ நான் உன்னைய அடிச்சனா...வாயில தானே சொன்னேன் அப்போ நீயும் வாயில தான் பேசணும் எதுக்குடி அடிச்ச ஒழுங்கா அடி வாங்கிக்கோ..."

"முடியாது போடி" என்று அருவி அங்கிருந்து ஓட.... ரித்து அருவியின் முடியை எக்கி பிடிக்கப் போயி முடியாமல் அவளை தூரத்த ஆரம்பித்தாள்.

ரித்து தூரத்தவும் ஓடி வந்த அருவி எதன் மீதோ இடித்து விழப் போக... ஒரு வலியக் கரம் அவளை தாங்கியது...

நிமிர்ந்து யார் என்றுப் பார்க்க அங்கு கிஷோர் நின்றிருந்தான். அவன் மாலதி மற்றும் அமுதாவின் ஒன்றுவிட்ட தங்கை மகன் சொல்லப்போனால் அருவிக்கு ஒருவகையில் முறை மாமன்.

அனைவரும் பண்ணை வீட்டிற்கு செல்கிறார்கள் என்றும் அருவி விடுமுறைக்கு வந்திருக்கிறாள் என்றும் பறந்து அடித்துக் கொண்டு வந்துவிட்டான்.

அவனிடம் புன்னகையை சிந்தியவள் "என்ன மாமோய்? காலையிலையே இந்தப் பக்கம் காத்து பலமா அடிக்குது. என்ன விஷயம்?"

"நான் எதுக்கு வந்தேன்னு உனக்கு தெரியாத அரு..." என்று வழிந்தவனை

"ஐயோ இவன் விடற ஜொள்ளுல வீடே மூழ்கிடும் போலையே" என்று தலையை தடவிய அருவியை "மாட்டுனியா...?" என்று முடியைப் பிடித்து இழுத்தாள் ரித்து...

"ரித்து வலிக்குதுடி. விடு.."

"வலிக்கட்டும் எனக்கும் அப்படிதானே வலிக்கும்" என்று அருவியின் தலையில் இரண்டு கொட்டுக் கொட்டினாள் ரித்து..

"ஏய் ரித்து எதுக்கு அவளை அடிக்கற..?"என்று கிஷோர் இடைப்புக

"வாடா ஜொள்ளு..."

"என்னது...!?"

"அப்புறம் இவளைப் பார்த்து ஜொள்ளு விட தானே வந்த... இரு எங்க பெரியண்ணாகிட்ட சொல்லி வைக்கிறேன்..."

"வேந்தன் அண்ணாகிட்டையா!!" என்றவனின் கண்கள் பயத்தில் ஜொலித்தது.

"இங்க என்ன பண்றீங்க...? எப்போ கிஷோர் வந்த..?" என்று கேட்டப்படி தனது முழுக்கை சட்டையை மடக்கி விட்டப்படி வந்தான் வேந்தன்.

"அருவி வந்துட்டா இவனால வீட்டுல இருக்க முடியுமாண்ணா?, அதான் ஆஜர் ஆகிட்டான்" என்று இனியன் வேந்தனுக்கு மட்டும் கேக்கும்படி சொன்னான்.

அதில் சிரித்தவன்... அருவியைப் பார்த்தான்.. அவளோ யாருக்கு வந்த விருந்தோ என்று போனில் யாருடனோ கடலை வறுத்தவாரே அங்கிருந்து நகர்ந்து விட்டாள்..

கிஷோரை வேந்தன் எச்சரிக்கலாம் தான் ஆனால் அதை அவ்வளவு எளிதில் விட மாட்டார் கிஷோரின் தந்தை பிரகாசம்..

"நீ மட்டும் முறை மாமன் இல்ல வேந்தா என்னோட பையனும் முறை பையன் தான் அவனுக்கும் உரிமை இருக்கு", என்று போர் கொடி தூக்கிக் கொண்டு வந்துவிடுவார். அதன்பிறகு அவனது குடும்பமே அவருக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும், இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டியவளோ அதை சாதாரணமாக எடுத்துக் கொள்வதால்... தனக்கு மட்டும் என்ன அக்கறை வந்தது என்று விட்டுவிட்டான்...

"எல்லோரும் சாப்பிட வாங்க.. சாப்பிட்டு சீக்கிரம் கிளம்புனா தான் மதிய சாப்பாட்டை அங்க செய்ய முடியும்" என்று மாலதியும், நிர்மலாவும் அழைத்தனர்.

அனைவரும் உக்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு இருந்த சாப்பாட்டு மேஜையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கம் உக்கார்ந்தனர்.

சாப்பிடும் நேரம் மட்டும் தான் குடும்பத்தில் அனைவரையும் பார்க்க முடியும். அதனால் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் யாரும் தங்கள் அறையில் தங்கிச் சாப்பிடக் கூடாது என்பது சேதுபதியின் கட்டளை..

'நான்தான் தாத்தா பக்கத்துல உக்காருவேன்..." என்று அருவி ஆரம்பிக்க

"அப்போ நான் என்ன பண்றதா ...? நீ அந்தப் பக்கம் போய் உக்கார் இன்னிக்கு நான்தான் தாத்தா பக்கத்துல உக்காருவேன்" என்று கார்த்திக் வேண்டும் என்றே சண்டைக்கு வந்தான்.

"கட்டுன பொண்டாட்டி குத்துக் கல்லாட்டம் இருக்கேன் இதுங்க ரெண்டு அடிச்சிக்கறதைப் பாரேன்.." என்று அம்புஜம் சிரித்தப்படியே சொன்னார்.

வயதானவர்களை கண்டடுக் கொள்ளாமல் எத்தனையோ குடும்பங்கள் இருக்க... இங்கோ தங்கள் அருகில் அமர சண்டையிட்டுக் கொள்ளும் பேரன் பேத்தியைப் பார்க்கும் போது பெரியவர்களின் மனம் எப்போதும் போல இன்றும் குளிர்ந்து போனது..

"கிழவி நீ குத்துக்கல்லாட்டம் இருந்து என்ன புரோஜனம் என்னோட டார்லிங்கை நீ ஒழுங்காவே கவனிச்சிக்கறதில்லை, பாரு போன மாசம் நான் வந்தப்பா நல்ல அழகா பம்பிளிமாஸ் மாதிரி இருந்தார் இப்போ செத்த கருவாடு மாதிரி நசுங்கிப் போயிருக்கார்" என்று பாட்டியிடம் சொன்னவள்.

"ஏண்டா தடிமாடே... நீ இங்க தானே இருக்க... அப்போ உக்கார்ந்து கொட்டிக்க வேண்டியது தானே, . என்னைய தான் ஹாஸ்டலுக்கு நாடு கடத்திட்டாரு உங்க நொண்..... ஹா... அண்ணா" என்று மாற்றி சொன்னவளை அழுத்தமாக பார்த்தான் வேந்தன்..

அந்த ஒற்றைப் பார்வை அருவின் 5 1/2 அடி உடலை நடுங்க செய்தது.

"இப்போ என்ன சொல்லிட்டோம்னு இந்த முறை முறைக்கறான்.."என்று அருவி யோசித்துக் கொண்டிருக்க...

அவளைப் பார்த்தவாரே..."அம்மா இப்படியே லேட்டானா யாரால லேட் ஆகுதோ அவங்களை வெச்சி மதிய சமையலை முடிச்சிருங்க..." என்ற மறுநொடி இருவரும் சேதுபதியையும் அம்புஜத்தையும் கண்டுக் கொள்ளாமல் கிடைத்த இடத்தில் அமர்ந்து கிடைத்த உணவை அரக்க பறக்க சாப்பிட்டு முடித்தனர்.

"அது" என்பது போல் வேந்தன் வெற்றிப் பார்வையுடன் அருவியைப் பார்க்க...

"நான் சாப்பிட்டுட்டேன்" என்று எழுந்து சென்றுவிட்டாள்...

"அரு ரெண்டு இட்லி போதுமா .. வாம்மா அவன் பேசனா பேசிட்டு போறான்...வேந்தன் சொன்னதும் உன்னைய வேலை செய்ய விட்டுருவமா? நாங்கல்லாம் எது இருக்கறோம் " என்று அமுதா கத்த

சத்தம் யாவும் காற்றில் கரைந்து போனதே தவிர அருவி அதைக் கண்டுக் கொண்டதாக தெரியவில்லை.

"பாவம் புள்ள வேக வேகமா சாப்பிட்டுச்சி, ஏன் வேந்தா இப்படி பண்ற?அவளே வாரம் ஒரு தடவையோ மாசம் ஒரு தடவையோ தான் வரா அவக்கிட்டப் போய் வம்பு பண்ணிட்டு ஒழுங்கா சாப்பிடாமக் கூட போகுது என்று கிருபாகரன் குறைப்பட்டுக் கொள்ள..தினகரன் அதற்கு தலையை ஆட்டிக் கொண்டார்.

நிரூபனுக்கும் தங்கை சாப்பிடாமல் சென்றதை நினைத்து வருத்தம் தான், அதற்கு மேல் சாப்பிடு என்று சொல்லும் அளவுக்கு அவனுக்கு தைரியமில்லை.

தங்கையிடம் பேச சென்றாலே "எனக்கு இங்க இருக்க பிடிக்கல நிரு, என்னைய எங்கையாவது கூட்டிட்டு போ... இப்போதான் நீ சொந்தமா சாம்பாரிக்க ஆரம்பிச்சிட்டல இன்னும் எதுக்கு இவங்க கூட இருந்து அந்த வேந்தன் பேசr வார்த்தையையும் போடற ரூல்ஸையும் கேட்டுட்டு இருக்கனும், அவன் என்னமோ நம்ப அவன் வீட்டு வேலைக்காரங்க மாதிரி நடத்துறான் நமக்கு என்ன தலை எழுத்தா?"'என்று புலம்பி தள்ளி இரண்டு நாள் உண்ணாவிரதப் போராட்டம் செய்வாள்.

நிரூபனுக்கு இன்று வரை வேந்தன் செய்வது எதுவுமே தப்பாக தெரிந்ததில்லை. வளரும் பிள்ளைகள் ஒழுக்கமாக கட்டுப்பாடுகளுடன் வளர வேண்டும் என்பது தவறா என்று வேந்தனுக்கு தான் ஆதரவாக பேசுவான், அப்படி இருக்கும் போது வீட்டை விட்டு எப்படி வருவான்.அதுமட்டுமில்லாமல் இத்தனை உறவுகளை விட்டுவிட்டு தனியாக சென்று தங்குவது என்பது அவன் அகராதிலையேக் கிடையாது, இதை பற்றி எல்லாம் நிரூபன் யோசித்துக் கொண்டிருக்க...

"நான் மட்டும் என்ன இங்கையேவா இருக்கேன்... இருந்தாலும் உங்க எல்லோர்க்கும் அவனா உசத்தீ தான்" என்றாள் ரித்து..

"ஏய் ரித்து இது என்ன புது பேச்சி... அவ சாப்பிடாம போறாளேனு தானே சொன்னோம்..இதுல உசத்தீ தாழ்த்தி எங்க இருந்து வந்தது" என்று அமுதா மகளை சாட...

"அண்ணா சொல்லலைன்னா அவ சாப்பிடவே ஒரு மணி நேரம் பண்ணுவா மாலதிம்மா ... ஹாஸ்டல தினமும் அவளை சாப்பிட வைக்கறதுக்குள்ள நான் படர பாடு உங்களுக்கு தெரியாது" என்று அண்ணனுக்கு சார்பாக ரித்விகா பேச.

அதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் சாப்பிட்டு எழுந்த வேந்தன்.. "நான் வெளியே வெயிட் பண்றேன் சீக்கிரம் வாங்க" என்று மட்டும் சொல்லிவிட்டு சென்று விட்டான்.
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member
அனைவரும் பண்ணை வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்.

"அரு கிளம்பிட்டியா...?"

"எங்க?"

"பண்ணை வீட்டுக்கு.."

"நீ போடி நான் வரல அங்க வந்தாலும் உன் நொண்ண ரூல்ஸ் ராமானுஜம் ரூல்ஸ் பேசியே கொல்லுவான், ஏற்கனவே ஹாஸ்பிடல் வார்டன் தொல்லை தாங்காம தான் இங்க வந்தேன்,இங்க உன்ன நொண்ண தொல்லை அதுக்கு மேல இருக்கு" என்றாள்.

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top