மாயவனின் அணங்கிவள் -13

Advertisement

Priyamehan

Well-Known Member
அருவிக்கு அவளுடைய சொத்து போய்விடுமோ என்ற பயமெல்லாம் இல்லை, இவர்களை தாங்கி வளரும் கொடிப் போல் ஆக்கிவிடுவார்களோ என்ற பயம் தான் ..அதனால் தான் தனியாக சென்று சொந்த காலில் நிற்கவேண்டும் என்று நினைத்தாள். அதை வேந்தன் தடுத்துக் கொண்டிருந்தான்.

மனதில் கொஞ்ச நேரத்தில் பலதும் ஓடி மறைய... சாப்பிடாமல் பிசைந்துக் கொண்டிருந்தவள் சாப்பிட பிடிக்காமல் எழுந்துக் கொண்டாள்..

அவளை சுற்றி அறுசுவை உணவு இருந்தும் அவளால் நிம்மதியாக ஒரு வாய் சாப்பிட முடியவில்லை... வயலில் வேலை செய்பவர்களிடம் வாங்கி திங்கும் போதுக் கூட மனநிறைவுடன் வயிறும் சேர்ந்து நிறைந்திருந்தது.

சாப்பிடாமல் எழுந்தவளிடம்,
"உக்கார் அருவி உன் கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றார் சேனாதிபதி.

எதுவும் சொல்லாமல் உக்கார்ந்தவள் யாரையும் பார்க்காமல் சுவரை வெறித்துப்பார்க்க ஆரம்பித்தாள்.

"நம்பகிட்ட வேலை செய்யறவிங்களுக்கு நம்ப முதலாளி ..அவங்ககிட்டையும் நம்ப அப்படி தான் நடந்துக்கனும்.. அவங்ககூட சரி சமமா உறவாட ஆரம்பிச்சா அவங்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாம போய்டும்.. நம்ப குடும்பத்துக்குன்னு ஒரு கவுரவம் இருக்கு, ஊருக்குள்ள பெரிய வீடுன்னு தனி மரியாதை இருக்கு... அதை உன் செயலால கெடுத்துடக் கூடாது, எனக்கு என்னோட கவுரவம் தான் முக்கியம் அதுக்கு ஏதாவது குறை வந்தா நான் மனுசனாவே இருக்க மாட்டேன்" என்று கோவமாக சேதுபதி சொல்ல...

அவர் பேச பேச அந்த இடமே ஊசி விழுந்தாலும் சத்தம் கேக்கும் அளவிற்கு அமைதியாக இருந்தது.

ஆனால் அருவிதான் அவர் பேசியதை கேட்டும் கேளாதவள் போல் இருந்தாள்.

"அருவி உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கார் அப்பா" என்றார் நிர்மலா.

அவரைப் பார்த்தவள் எழுந்து நின்று, "அதுதான் அம்மா எனக்கும் புரியல இதை எதுக்கு என் கிட்ட சொல்லிட்டு இருக்கார்னு?" என்று நிர்மலாவிடம் சொல்லிவிட்டு சேனாதிபதியைப் பார்த்தவள்

"இதை உங்க பேரன் பேத்திக்கிட்ட சொல்லுங்க தாத்தா என்கிட்ட எதுக்கு சொல்றிங்க?, நான் மக வீட்டு பொண்ணு தானே எப்போனாலும் இங்க இருந்து போறவ, என்னால உங்க கவுரவத்துக்கு என்ன குறை வந்திடப் போகுது... அப்படியே குறை சொல்லணும்னாலும் இன்னார் மகள்ன்னு எங்க அப்பாவை தான் சொல்லுவாங்க " என்றாள் அழுத்தம் திருத்தமாக...

அவர் வார்த்தையில் அனைவரும் அதிர்ந்துப் பார்க்க..

"அப்போ நீ யாரு அருவி? எங்க பேத்தி இல்லியா?" என்ற அம்புஜத்திற்கு நாவலெல்லாம் வறண்டு போனது...

"இந்த வீட்டு வேலைக்காரிப் பாட்டி..." என்றாள் நிறுத்தி நிதானமாக..

"அருவி" என்று அனைவரும் ஒன்றாக சத்தம் போட வேந்தன் மட்டும் எதுவும் பேசாமல் அவளையேப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.அந்த பார்வையின் அர்த்தம் பேசுடி பேசு எது வரைக்கும் பேசரன்னு பார்க்கரேன்" என்பதாகும்

"எதுக்கு சத்தம் போடறீங்க? உண்மையை சொல்லிட்டேன்னுனா...?அவங்க குடுத்த சாப்பாட்டை சாப்பிட்டுட்டேன்னு இவ்வளவு பேசறீங்களே அவங்களோட ஒன்னா வேலை செஞ்சிட்டு வந்தேனே அப்போ உங்க கவுரவத்துக்கு எந்த பிரச்சனையும் வராதா...?அதைப் பத்தி யாருமே பேசல, அப்போ நான் வேலைக்காரி தானே...உங்க பேரன் என்னைய இந்த வீட்டுப் பொண்ணா நடத்திருந்தா எனக்கும் அந்த எண்ணம் வரும் அவருக்கு நான் வேலைக்காரி தானே அதை தான் சொன்னேன்"என்றாள்.

'இனி எது சொல்றதா இருந்தாலும் இந்த வீட்டுக்கு சமந்தப்பட்டவிங்ககிட்ட மட்டும் சொல்லுங்க நான் இந்த வீட்டுக்கு சமந்தப்பட்டவ இல்லை...' என்று வாய் வரை வந்த வார்த்தைகளை மென்று முழுங்கிக் கொண்டு நின்றாள்.

அங்கு சுற்றி இங்கு சுற்றி தன்னிடம் தான் வருவாள் என்று வேந்தனுக்கு தெரியும் அதனால் தான் அமைதியாக அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.

இப்போ அனைவரின் பார்வையும் வேந்தனிடம் போக...

எழுந்து நின்றவன், " அவ படிச்ச படிப்பை வேலை செஞ்சி கத்துக்கணும்னு நினைச்சேன்.." என்று தட்டிலையே கைக் கழுவியவன். அதை கையில் எடுத்துக் கொண்டு

"இனியும் வேலை செஞ்சிதான் ஆகணும் வேலைக்காரி மாதிரி ட்ரீட் பண்றேன்னு தோணுதுனா ஐ டோன்ட் கேர்" என்று தட்டை கழுவ சென்றுவிட்டான்.

இதில் யாரின் பக்கம் பேசுவது என்று குழம்பி போனது அங்கிருந்தவர்கள் தான்.

"அப்போ நானும் அவங்களோட தான் சாப்பிடுவேன், கவுருவம் போவுது கத்திரிக்கா போகுதுனு சொன்னா ஐ டோன்ட் கேர்" என்று கத்திவிட்டு அவளது அறைக்குச் சென்றுவிட்டாள்.

இருவரும் இப்படி எதற்கு எடுத்தாலும் அடித்துக் கொண்டு எதிர் எதிர் துருவமாக நிற்பதைப் பார்த்து அனைவருக்கும் தலை வலித்தது ஒரு ஜீவனை தவிர, அது வேறு யாருமில்லை தேவா தான் அவளுக்கு இங்கு நடக்கும் அனைத்தையும் பார்த்து உள்ளுக்குள் துள்ளிக் கொண்டிருந்தாள்.

"சரி சரி அவங்க ரெண்டு பேரைப் பத்தி தான் தெரியும்ல விடுங்க... சாப்பிட்டு கோவிலுக்கு தேவையானதைப் பாருங்க" என்று கிருபாகரன் எழுந்து விட்டார்...

அன்று இரவு அனைவரும் கோவிலுக்கு தயாராகிக் கொண்டிருக்க அருவி மட்டும் தயாராகாமல் சரவணனுடன் மெசேஜில் பேசிக் கொண்டிருந்தாள்.

பெரியவர்கள் தயாராகி ஹாலில் ஒன்றுக் கூடிவிட...

"நீங்க கிளம்புங்க தாத்தா... அபிஷேகத்துக்கு நீங்க இருக்கனும், வரவிங்க எல்லோரும் உங்களை காணலைனு தான் கேப்பாங்க" என்று கார்த்திக்கின் காரில் சேனாதிபதி, அம்புஜம், கிருபாகரன், தினகரன் மாலதி, அமுதா நிர்மலா என்று பெரியவர்களை வேந்தன் அனுப்பிவிட...

நிரூபனும் இனியனும் பைக்கில் முன்னால் சென்றுவிட்டனர் அங்கு சென்று பூஜைக்கு தேவையானதைப் பார்க்க...

வேந்தன் மட்டும் சோபாவில் அமர்ந்து அனைவருக்காகவும் காத்திருந்தான்.

"அண்ணா கிளம்பலாமா?" என்றப்படி கார்த்திக் கையின் மடிப்பை எடுத்து விட்டுக் கொண்டே வந்தான்.

"போலாம் போலாம் இப்படி உக்காரு?" என்றவன் மில்லைப் பற்றிய பேச்சில் இறங்கி விட்டான்.

ரித்துவும் தேவாவும் கிளம்பி வந்தார்கள்.. அருவியை காணாமல்

"எங்க அவ.... மகாராணிக்கு நேர நேரத்துக்கு வெத்தலைப் பாக்கு வெச்சி கூப்பிடணுமா? கிளம்பி வர தெரியாதாமா?" என்று வேந்தன் கடுக்கடுக்க....

"அவ போன் பார்த்துட்டு இருந்தாண்ணா, கிளம்புன மாதிரி தெரியல," என்ற ரித்து தேவாவிடம் திரும்பி "இன்னைக்கு நம்ப கோவிலுக்கு போன மாதிரி தான்... வா டிவியாவது பார்க்கலாம்" என்றான்.

"உனக்கு எதுக்கு இந்த எட்டப்பன் வேலை, அவளைப் போட்டு குடுக்கறதுலையே குறியா இருக்க" என்றான் கார்த்திக்

ரித்து சொன்னது வேகமாக எழுந்தவன் ... நீங்க கார்ல போய் வெயிட் பண்ணுங்க " என்று வேக வேகமாக மாடிப்படி ஏறி அருவியின் அறைக்குச் சென்றான்...

அருவியின் அறைக்குக் கதவு மூடப்படாமல் திறந்து இருக்க படுக்கையில் அமர்ந்து போனை நோண்டிக் கொண்டிருந்தாள்.

கதவை இரண்டு தட்டியாவேன் உள்ளே நுழைந்து "ஏய் கோவிலுக்கு வரலையா?" என்றான் அதிகாரமாக..

"வரல"

"ஏன்?"

"நான் வரக்கூடாது"

"புரியல"

"அது..." என்று சொல்ல தயங்கியவள் "நான் தலைக்கு தண்ணி ஊத்திருக்கேன்" என்றாள்.

அவளையே உற்றுப் பார்த்தவனின் கண்களில் அனல் தெறிக்க..அந்த பார்வையில் நடு நடுங்கிப் போய்விட்டாள் அருவி...

"பொய் நீ எப்போ தலைக்கு ஊத்துவன்னு எனக்கு தெரியும், கோவிலுக்கு போறதுக்குக் கூட பொய் சொல்லுவியா?" என்றான் கர்ஜனையாக..

அதிர்ச்சியில் எழுந்து நின்றேவிட்டாள் அருவி...

"என்ன சொல்றிங்க...உங்களுக்கு தெரியுமா?"

"போன மாசம் 10 தேதி தான தலைக்கு ஊத்துன"

இதுலாம் இவனுக்கு எப்படி தெரியும் என்று அதிர்ச்சியில் கண்கள் தெறித்து விடுவதுப் போல் பார்த்தவளை ஏளனமாக பார்த்தவன்..

"இன்னைக்கு தேதி 26 தானே ஆகுது அதுக்குள்ள என்ன?" என்றான்.

"உங்களுக்கு எப்படி தெரியும்? இதுலாம் எதுக்கு நீங்க தெரிஞ்சி வெச்சிருக்கீங்க..." என்றவளுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது...

"இந்த வீட்டுல இருக்கறவீங்க எல்லோர் பத்தியும் தெரியும்? முக்கியமா உன்னப் பத்தி..." என்று நிறுத்தியவன்,பின்பு "உனக்கே தெரியாத விஷயம் கூட" என்றான்

"வேற விஷயம்னாக் கூட ஓகேன்னு சொல்லலாம் இது எப்படி?" என்று தயங்க...

"இப்போ கோவிலுக்கு வரியா இல்லையா?" என்ற வார்த்தைகள் வேந்தனிடம் இருந்து அதட்டலாக வந்தது...

"இல்லை இதுல வேற எதுவோ இருக்கு... இதுலாம் சாத்தியமே இல்லை எங்கம்மாவுக்கே எனக்கு எப்போ டைம்னு தெரியாது இவனுக்கு எப்படி...?" என்று சந்தேகமாக அவனைப் பார்த்தவள். "நீங்க போங்க நான் ரெடியாகிட்டு வரேன்" என்றாள்.

ஆனால் வேந்தனோ போகாமல் அவளை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அருகில் வந்தவன், "அப்போ பொய் தான் சொல்லிருக்க" என்று அழுத்தமாக கேட்டான்..

"இ..ல்..ல..." என்று தடுமாறினாள் வஞ்சி

அருவியின் கீழ் உதட்டை தன் இருவிரல்களால் பிடித்து இழுத்தவன் " இந்த உதடு இன்னும் எத்தனை பொய் சொல்லும் சொல்லு" என்றாள்.

"ஸ்ஆஆ... வலிக்கு...விடுங்க"

"வலிக்கட்டும் இன்னும் உன்னைய எந்த அளவுக்கு கீழ இறக்கிப்பன்னு தெரியல உன்னைய மாதிரி ஒரு பொண்ணைப் பார்க்கவே முடியாது" என்று வெறுப்பாக உரைத்து விட்டு அங்கியிருந்து சென்று விட்டான்.

"காட்டு மிராண்டி.... உதட்டைப் போட்டு எப்படி இழுக்கறான், வலிக்குது" என்றப்படி உதட்டை தடவிக் கொண்டவள்..

"நான் இந்தக் காரணத்தை சொல்லிருக்கக் கூடாது... என்னைய என்ன நினைச்சிருப்பான் என்னோட டேட் இவனுக்கு எப்படி தெரியும் ஒரே ஷாக்கா இருக்கு...?" என்று குழம்பியப்படியே ஏற்கனவே எடுத்து வைத்திருந்த வெள்ளை நிற பாவாடை ரவிக்கையும், சிவப்பு தாவணியையும் அணிந்து தலை முடியை தளர்வாக பின்னிக் கொண்டாள்.

பேரழகி என்று சொல்லும் அளவிற்கு அழகு இல்லை என்றாலும், அருவிக்கே உரிய அழகில் கீழே சென்றாள்.

மற்றவர்களுக்கு அருவியைப் பார்க்கும் போது சாதாரண பெண்ணாக தான் தெரியும் ஆனால் அவளுடையவனுக்கு தேவதையல்லவா அவள்.

கார்த்திக் முன்பெல்லாம் அருவியிடம் எப்போதும் வம்பிழுத்துக் கொண்டு தான் இருப்பான்..ஆனால் அவள் முகம் சோகமானால் அவனால் தாங்க முடியாது... அதனாலையே இப்பொழுது எல்லாம் அருவிக்கு ஆதரவாக அவளின் பின் நிற்கிறான்.

நிரூபன் செய்ய வேண்டியதை கார்த்திக் செய்யும் போது அவனிடம் ஒன்றிக் கொள்ள ஆசைப்பட்டாள் அருவி.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top