மாயவனின் அணங்கிவள் -12

Advertisement

Priyamehan

Well-Known Member
ஒருத்தியால் வீடே அமைதியாக இருந்தது.

"இப்போ எல்லோரும் சாப்பிட வரிங்களா இல்லையா?" என்று அம்புஜத்தின் குரல் ஓங்கி ஒலிக்கவும் ஹாலில் இருந்த பெரியவர்களும் , அறைக்குச் சென்ற இனியனும் வந்து சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தனர்.

வேந்தன் கைக் கழுவ செல்ல அவன் பின்னாலையே வால் பிடித்த மாதிரி சுற்றினாள் தேவா..

"கை கழுவிட்டிங்களா மாமா?"

"ம்ம்"

"நானும் கழுவிட்டேன்... இன்னைக்கு என் பக்கத்துல தான் நீங்க உக்காந்து சாப்பிடணும்." என்று வேந்தனின் கையைப் பிடித்துக்கொண்டு சொல்ல... அவளது கையை விலக்கி விட்டவன்...

"அதுக்கு என்ன சாப்பிட்டா போச்சி" என்று சொன்னபடி தேவாவின் அருகில் அமர்ந்தான்

டிவிப் பார்த்துக் கொண்டிருந்த ரித்துவை அனைவரும் பார்க்க, "இதோ வந்துட்டேன்" என்று டிவியை அணைத்துவிட்டு கைகழுவ ஓடினாள்.

"நிர்மலா, நிரு எங்க?" என்றார் கிருபாகரன்.

"அவனுக்கு பண்ணையில எதோ வேலை இருக்குனு போயிருக்காண்ணா"

"நீ போய் அருவியை அழைச்சிட்டு வா" என்றார் சேனாதிபதி

என்றும் அரும்மா என்பர் இன்று அருவி என்னும் போதே தன் மகள் செய்த காரியத்தின் வீரியம் புரிந்தது நிர்மலாவிற்கு.

"இல்லப்பா அவ வரமாட்டா நீங்க சாப்பிடுங்க, நான் அப்பறம் அவளை சாப்பிட வெச்சிக்கறேன், அவ வர வரைக்கும் எதுக்கு காத்துட்டு இருக்கீங்க" என்று சமாதானம் சொல்ல

"கூட்டிட்டு வானு சொன்னேன்" என்றார் அழுத்தமாக..

அவரின் பேச்சை மறுக்க முடியாமல் நிர்மலாவே மாடிப் படி ஏற ...

"அத்தை நீங்க இருங்க நான் போய்ட்டு வரேன்" என்று அப்போது தான் அறையில் இருந்து வந்த கார்த்திக் கூறினான்.

சரி என்றுவிட்டு மாலதியுடன் அனைவருக்கும் பரிமாறினார்.

இதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் தங்கள் உலகில் இருந்தது இரு ஜீவன் தான் வேந்தனும் தேவாவும் தான் அது.

அவர்களுக்குள் எதையோ பேசி சிரித்துக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருக்க.. மாலதியின் கண்கள் இருவரையும் தன் கணவனிடம் சுற்றிக் காட்டியது.

மாலதிக்கு தன் மகனுக்கு எது விருப்பமோ அது தான் அவரின் விருப்பமும்... வீட்டை தன் அதிக்காரத்தால் கட்டி வைத்திருப்பதைப் பார்த்து தாயாக மகனின் ஆளுமையைப் பார்க்கும் போது பெருமையாக இருந்தது..

மனைவியின் கண் ஜாடையை புரிந்துக் கொண்ட கிருபாகரனுக்கு, மனதில் ஒரு பக்கம் ஏமாற்றம் சூழ்ந்தது...

தந்தை இல்லா அருவிக்கு இவ்வளவு காலமும் தந்தைக்கு தந்தையாகவும் தாய் மாமனுக்கு தாய் மாமனாகவும் இருந்தாகிவிட்டது..

இனியும் அதையே தொடர வேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் மனதில் நிறைந்திருக்க அதற்கு தடையாக யாரும் வந்துவிடக்கூடாது என்று தன் மகனில் ஒருவனுக்கு அருவியை கொடுக்கலாம் என்று நினைத்தார்.. அப்படி நினைக்கும் போதே அவர் கண் முன் வந்தது வேந்தன் மட்டும் தான்.

வேந்தனின் ஆளுமைக்கும் அருவியின் ஆர்ப்பாட்டத்திற்கும் ஒத்துப்போகும் என்று நினைத்தார்.ஆனால் இன்று இவர்களின் நெருக்கம் பார்த்தால் அது நடப்பதற்கு சாத்தியம் இல்லை என்பது புரிய மனதின் ஓரம் ஏமாற்றம் சூழ்ந்தது.

இனியனுக்கும் அருவி சரியாக தான் இருப்பாள் என்றாலும் வேந்தனுடன் தான் கனகட்சிதமாக பொருந்தி போனாள்.

மனைவிக்கு தலை அசைப்பைக் கொடுத்துவிட்டு அருவியை எதிர்ப்பார்த்து மாடியையேப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவருக்கு நிர்மலா அருவியை அடித்ததில் உடன்பாடு இல்லை.

சேனாதிபதி தான் ஜாதி கவுரவம், ஏற்றதாழ்வு பார்ப்பாரே தவிர கிருபாகரன் அப்படியில்லை.

"சோறு சாப்பிட்டதுக்காக இவ்வளவு பெரிய பஞ்சாயத்து?" என்று தான் தோன்றியது அவருக்கு, அதை சொன்னால் இந்தப் பக்கம் தகப்பனிடமும் அந்தப் பக்கம் மகனிடமும் பத்து நிமிடத்திற்காகவாது அறிவுரை வாங்க வேண்டும் இந்த வயதில் அது முடியாது என்று தான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார் ஏற்கனவே பட்ட அனுபவம் வேறு.

கார்த்திக் அருவியின் அறைக்கு சென்றப் போது அவள் குப்புற படுத்து தேம்பி தேம்பி அழுதுக் கொண்டிருந்தாள்.

"அரு..."

"ப்ளீஸ் கார்த்தி என்னைய தனியா விடு."

"எனக்கும் உன்னை தொந்தரவு பண்றதுல இஷ்டம் இல்லதான் ஆனா தாத்தா உன்னைய கூட்டிட்டு வர சொன்னார்."

---------------

"அரு வா..."

-------------

"அரு எழுந்திரு இப்போ எதுக்கு அழற அடிச்சது உன் அம்மா தானே... வேற யாரோ ஒருத்தர் அடிச்சிருந்தா உங்க அம்மாவுக்கு வலிச்சிருக்கும்,, அதான் அவங்களே முன்னாடி வந்து அதை பண்ணி யாரையும் பேசவிடாம பண்ணிட்டாங்க..

எந்த அம்மாவுக்கு தன்னோட பொண்ணை யாரவாது கேள்வி கேக்கறது புடிக்கும் அதுக்காகக் கூட உன்னைய அடிச்சிருக்கலாம், வா அரு..." என்று சமாதானம் சொல்லிப் பார்த்தான்.

அவளிடம் எந்த மாற்றமும் இல்லை...

"சரி நீ அழு நான் உங்க கடம்பூர் பாட்டிக்கு போன் பண்றேன் அவங்க கிளம்பி வரட்டும்" என்றவன் போனை எடுக்க

"ப்ளீஸ் வேண்டாம் கார்த்தி."

"அப்போ வா"

"ம்ம் "

"முகம் கழுவிட்டு வா"

"ம்ம்.."என்றவள் முகம் கழுவி வர அவளை அழைத்துக் கொண்டு சாப்பிட சென்றான்

"வா அருவி" என்ற தாத்தாவை நிமிர்ந்துப் பார்க்கவில்லை அருவி.

அங்கிருந்த அனைவரின் பார்வையும் தன்னை ஏளனமாக பார்ப்பதுப் போல் பிரம்மை உண்டாக அருவியின் மனம் ரணமானது.

பண்ணைக்குச் சென்ற நிரூபனும் வந்துவிட அவனும் சாப்பிட அமர்ந்தான்.

தங்கையின் முகத்தில் சந்தோசம் இல்லை என்றதும் அவனின் முகம் வாடியது... அவள் இந்த அளவிற்கு கஷ்டப்பட தானும் ஒருக் காரணம் என்று தோன்ற, அருவியின் முகத்தில் சந்தோசத்தை வர வைக்க முன்பு தான் யோசித்து வைத்த திட்டத்தை இப்போது செய்ய முடிவு செய்தான்.

"பண்ணைக்கு பக்கத்துல ஒரு 50 சென்ட் இடம் விலைக்கு வருதுனு சொன்னேன்ல" என்று அமைதியாக இருந்த இடத்தில் பேச்சை ஆரம்பித்தான் நிரூபன்.

"ஆமா அது கிடைக்கற மாதிரி இருக்கா?" என்றார் தினகரன்.

"ஆமா மாமா... அதை வாங்கிடலாம்னு இருக்கேன்".

"நல்லது வாங்குப்பா" என்றனர்.

அவன் மேலும் எதோ சொல்ல வருவதும், தயங்குவதுமாக இருக்கவும்

"வேற என்ன நிரு? ஏதாவது சொல்லணுமா? என்றான் வேந்தன் நிரூபனின் மனம் அறிந்து..

"ம்ம் அங்க ஒரு வீடு எடுக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்" என்றான் தங்கையைப் பார்த்துக் கொண்டே...

அவன் பார்வை போன திசையில் பார்த்த வேந்தனுக்கு எதற்காக இதை சொல்கிறான் என்பது புரியாமல் இல்லை...

நிரு சொன்னதும் அருவி அதிர்ந்துப் போய் அண்ணனைப் பார்த்தாள்.

அவன் கண்களால் ஆமா என்று தலையாட்ட அருவியின் முகத்தில் மத்தப்பூ போல் ப புன்னகைப் பூத்தது.

அதில் யோசனை ஆனது வேந்தன் தான்... "அவ்வளவு சீக்கிரம் உன்னைய இங்க இருந்து அனுப்பிடுவனா....? இன்னும் நீ அனுபவிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு" என்று நினைத்துக்கொண்டவன்

"என்ன திடீர்னு வீடு எடுக்கற முடிவு?"

"வீடு தேவைப்படும் தானே கையில் கொஞ்சம் பணம் இருக்கு அதைப் போட்டு கட்டிடலாம்னு நினைக்கறேன் இன்னும் கொஞ்சம் நாள் போனா மணல் செங்கல் விலை எல்லாம் ஏறிடும்" என்று இழுத்தவனை

"அதுனால என்னப்பா கட்டு... நாளைக்கு நமக்கும் போக வர வசதியா இருக்கும்... பண்ணையில வீடு இருக்கிறது நல்லது தானே" என்றார் கிருபாகரன் அவன் நோக்கம் புரியாமல்.

அவருக்கு தான் புரியவில்லையே தவிர வேந்தனுக்கு நன்றாக புரிந்திருக்க..

"இல்லை நிரு இப்போதைக்கு வீடு வேண்டாம்... நீ பண்ணைய டெவலப் பண்ணிட்டு இருக்கற, அதுக்கு கையில் பணம் வேணும், இருக்கற எல்லாத்தையும் ஒன்னுலயே போட்டு முடக்கக் கூடாது அப்புறம் தேவைப் படும் போது சிக்கல் ஆகிடும், இப்போதைக்கு இடத்தை மட்டும் வாங்கு" என்று நிரூபனை வேந்தன் மூளை சலவை செய்ய.... அதில் சோர்ந்து போனது என்னவோ அருவி தான்.

வேந்தன் சொன்னதுக்கு பின் மறுத்து பேசுவானா நிரூபன். "சரி" என்று விட்டான்.

அதைக் கேட்டதும் அருவிக்கு வேந்தன் மீது அளவுக்கு அதிகமாக வெறுப்பு வந்தது.

"நாங்க தலை நிமிர்ந்து வாழ்ந்திடவே கூடாது... எப்போவும் இவங்க சொல்றதுக்கு ஆமா சாமி போட்டுட்டு இவங்க காலை சுத்துற நாய்க் குட்டி மாதிரி வாழ்ந்து செத்துறனும், அதுக்கு தான் வீடு கட்ட வேண்டாம்னு சொல்றான்.. ச்சை என்ன மாதிரியான புத்தி இது" என்று நினைத்தவளுக்கு வேந்தனை கண்டு எரிச்சலானது.

பத்து வயது சிறுமியாக இந்த வீட்டிற்கு வந்தப் போது அவளுக்கு இதுப் போன்ற எண்ணங்கள் மனதில் எழுந்ததில்லை.

சிறக்கடிக்கும் பட்டாம்பூச்சியாக தான் அந்த வீட்டை வலம் வந்துக் கொண்டிருந்தாள்.

வயதாக வயதாக அருவியையும், ரித்துவையும் வீட்டில் இருப்பவர்கள் இளவரசியாக பார்த்துக்கொள்ள இருவருக்கும் இடையே வேறுபாடு வந்துவிடக் கூடாது என்று எதை வாங்கினாலும் இருவருக்கும் ஒரே மாதிரி ஒரே விலையில் தான் வாங்குவர்... தெரியாதவர்கள் யாராவது பார்த்தால் கூட அக்கா தங்கையா என்று தான் முதலில் கேப்பார்..

வருடம் வருடம் வரும் ஷர்மிளாவிற்கு அருவியை அவர்கள் நடத்தும் விதம் மனதில் உறுத்த ஆரம்பித்தது. அப்பன் இல்லாத பிள்ளைக்கு இவ்வளவு சலுகையா...என்ற பொறாமை எழ...

அடுத்த முறை வரும் போது அருவியின் மனதில் விஷத்தை விதைத்தார்.

"உங்க குடும்பத்தை இங்க இருக்கிற எல்லோரும் எதுக்கு நல்லாப் பார்த்துகிறாங்கனு தெரியுமா? உங்க அப்பா இல்லாதது ஒரு காரணம்னா உங்க அப்பா சொத்தும் அவங்களுக்கே வரணும்ங்கறது ஒரு காரணம் தான்... நீங்க தனியா போய்ட்டா சொத்தும் உங்களோட போய்டும்ல இதே உங்களை கூடவே வெச்சிக்கிட்டா அவங்க ஆட்டுற மாதிரி தானே நீங்க ஆடியாகனும் அதுக்காக தான் உன்னையும் உன் அண்ணனையும் இப்படி பாசமாக பார்த்துக்கறாங்க எங்க அண்ணிங்களை பத்தி உனக்கு தெரியாது ரெண்டுப் பேரும் விஷம்...இங்கையே இருக்கறவன்னு உன்னைய அவங்க பசங்களுக்கு கட்டி கொடுப்பாங்கனு நினைக்காத...சம்பளம் இல்லாத வேலைக்காரி மாதிரி தான் நீங்க வேலை வாங்கற வரைக்கும் வாங்கிட்டு... வழியில போறவனை பிடிச்சி உனக்கு கல்யாணம் பண்ணி வெச்சிடுவாங்க.. அதே மாதிரி தான் உன் அண்ணனுக்கும்... புரிஞ்சி நடந்துக்கோ" என்று போறப் போக்கில் அருவியின் மனதை குழப்பிவிட்டுச் சென்றார்.

பதின்பருவ தொடக்கத்தில் இருந்த அருவிக்கு அப்படியும் இருக்குமோ என்று தோன்ற செய்ய, அந்த எண்ணத்தை அன்பு காட்டி மறக்க செய்துவிடுவார்கள் அமுதாவும் மாலதியும்...

ஷர்மிளா வரும் போது எல்லாம் இதுதான் நடந்தது... அந்த சமயம் தான் வேந்தன் தன்னுடைய ஆளுமையை வீட்டில் காட்ட ஆரம்பித்த நேரம்,

அருவியின் சேட்டையை அனைவரும் ஆதரிக்கும் போது அவன் மட்டும் எதிர்த்து நின்றான், அப்போது தான் அருவியின் மனதில் ஷர்மிளா சொன்னதுப் போல் இருக்குமோ என்ற எண்ணம் வேர் விட்டு எழ ஆரம்பித்தது .

அதற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்தான் வேந்தன்.

வேந்தன் அருவிடம் நடந்துக் கொண்ட விதத்தில் சித்தி சொன்னது தான் உண்மை என்று ஆழப் பதிந்துப் போனது..

அதை வெளிக்காட்டிக் கொள்ளா விட்டாலும் வளர்ந்த பின் இங்கு இருக்க வேண்டாம் என்பதை மட்டும் அடிக்கடி நிரூபனிடம் கூறினாள் அருவி.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Saroja

Well-Known Member
என்ன இந்த வேந்தன்
ரொம்ப எரிச்சல் படுத்துறான்
அருவிய

சித்திக்காரி நயவஞ்சக நரி
 
MEGALAVEERA

Well-Known Member
Nice epi
ivana yella yarupa herova pottathu arambathuleye ivlo irritate panran
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top