மாயவனின் அணங்கிவள் -10

Advertisement

Priyamehan

Well-Known Member
"நீ ஏன் படிக்கல சுமி?"

"எங்க அம்மாவால என்னை படிக்க வைக்க முடியல"

"உனக்கு படிக்கணும்னு ஆசையா சுமி?"

"ஆமாங்க ஆனா எப்படி முடியும்? இன்னும் ரெண்டு மாசம் போனா மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க"

"என்ன வாங்க போங்கனு பேசற.. இப்படி பேசுனா நான் உன்னோட பேசவே மாட்டேன்... பிரண்ட்டுனு சொன்னதுக்கு அப்புறம் வாங்க போங்கனா யாரோ மாதிரி இருக்கு.."

"இல்லை நீங்க பெரியவிங்க"

"ஏய் நான் உன்னையவிட சின்னவ"

"இல்லை நான் பணத்துல சொன்னேன்."

"பணம் என்ன என் கையிலையா இருக்கு... லூசு மாதிரி பேசாத உனக்கும் எனக்கும் வித்தியாசம்னா நான் அருவி நீ சுமதி அவ்வளவு தான் பணமோ தகுதியோ எதுலையும் வித்தியாசம் இல்லை..."என்றவள்.. "எனக்குனு இங்க யாரும் பிரண்ட் இல்ல உன்னைய பார்த்ததும் எனக்கு புடிச்சிப்போச்சி அதான் பிரண்ட்டாகிக்கலாம்னு வந்தா உனக்கு என்னைய பிடிக்கல போல சரி விடு நான் கருப்பாயி பாட்டிக்கிட்டையே போய்கரேன்" என்று அங்கிருந்து பாட்டியின் பக்கம் போக போனவளை

"வேணா அரு நான் வா போனே பேசறேன்" என்றாள்.

"ம்ம் குட்... நீ படிக்க ஆசைப்பட்டினா நான் அண்ணாகிட்ட சொல்லி படிக்க வைக்கறேன் சுமி"

"இல்ல வேணா வேணா"என்றாள் அவசரமாக.

"ஏண்டி?"

"யாசகம் வாங்கி படிக்க விருப்பமில்லை அருவி... உழைச்சி தான் படிக்கணும் அதுக்கு முடியாதுன்னு தான் படிக்கல..." என்றாள் முடிவாக.

"நீ என்ன லூசா? அவ்வையாரே பிச்சை புகினும் கற்கை நன்றேனு சொல்லிருக்காரு... படி, படிச்சி முடிச்சி வேலைக்கு போனதும் உன் படிப்புக்கு ஆனா செலவை திருப்பிக் குடுத்துடு எப்படி... அண்ணாகிட்ட பேசட்டுமா?"என்ற அருவிக்கு தன் வயதில் இருப்பவள் படிக்காமல் வேலைக்கு வருகிறாளே என்று கவலையாக இருந்தது.

"இல்ல எதுக்கும் அம்மாகிட்ட கேட்டுட்டு...." என்று இழுக்க

"ஓகே கேட்டுட்டு படிக்கிறேன்னு மட்டும் பதில் சொன்னா போதும்" என்று களை எடுப்பதற்கு பதில் நெல் நாத்தை பிடுங்கி எறிந்துக் கொண்டிருந்தாள்

"ஐயோ அருவி இது நாத்து.. இதை எதுக்கு புடுங்கற..?"

"ஓ நான் கூட புல்லுனு நினைச்சிட்டேன் சரி விடு.."

"ஐய்யாவுக்கு தெரிஞ்சா நாங்க தான் புடுங்கி போட்டுட்டோம்னு பேசுவாங்க கண்ணு" என்றார் குப்பாயி பாட்டி..

"பாட்டி அவர் பேசுனா நான் தான் பண்ணேன்னு தயங்காம சொல்லிடுங்க..." என்றவள் "நீங்க எல்லாம் என்ன சாப்பிட கொண்டு வந்திங்க எப்போ சாப்பிடுவிங்க?"

"இப்போதானே தாயி உச்சி பொழுது வந்துருக்கு இனிமே தான் சாப்பிடணும்... நாங்க பெருசா என்ன கொண்டு வந்துட போறோம் பழசும் வெங்காயமும் தான் அதுதான் இந்த வெயிலுக்கு இதமா இருக்கும்" என்றனர்.

"எனக்கு பசிக்குது.."

"மாறா கிட்ட சொல்லி வீட்டுக்கு போ தாயி"

"ஏன் நீங்க சோறு தர மாட்டிங்களா?"

"எங்க சோறுலாம் உனக்கு புடிக்காது கண்ணு, நாங்க ரேஷன் அரிசில சாப்பிடுவோம் நீ பொன்னி அரிசில சாப்பிடறவ எங்க சோறு எப்படிம்மா உனக்கு ஒத்துக்கும்?"

"அதுலாம் ஒன்னுமில்ல" என்றவள் 'காலையில இந்த சோறு கூட எனக்கு கிடைக்கல சாப்பிடாமல் போனாலே என்ன பண்றானு கேக்க ஒரு ஆள் இல்ல...'என்று நினைத்துக் கொண்டாள்.

"உங்ககூட சேர்ந்து சாப்பிட எனக்கு ஆசையா இருக்கு, இப்போ வரப் போறிங்களா? இல்லையா?"

"இன்னும் நேரமாகணுமே அரு" என்று சுமதி சொல்ல

"அதுலாம் நாளைக்கு நேரத்துக்கு சாப்பிட்டுக்கோங்க இப்போ என்னோட வாங்க" என்றவள் அனைவரையும் அழைத்துச் சென்று வரப்பு மேட்டில் அவர்களுடன் அமர்ந்தாள்.

வெயிலில் சாப்பாடு சூடாகி விடக் கூடாது என்று வரப்பு மேட்டில் இருந்த புற்களின் மீது தூக்கு சட்டியை வைத்து அதன் மீது பிடுங்கிய புற்களை போட்டு மூடி வைத்திருந்தனர்.

அதில் இருந்த அவரவர் தூக்குகளை எடுத்து வந்து அருவியின் அருகில் அமர அவர்களின் தூக்குகளை வாங்கி திறந்துப் பார்த்தாள்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சாப்பாடு கொண்டு வந்திருந்தனர்.

பழையது, கத்திரிக்காய் கருவாடு போட்ட குழம்பு, முட்டை தொக்கு, பருப்பு குழம்பு என்று வித விதமாக இருக்க நாக்கை சப்புக் கொட்டிக் கொண்டவள் குழம்பு வாசத்தை இழுத்து முகர்ந்துப் பார்த்து

"சீக்கிரம் சீக்கிரம் ஆளுக்கு ஒரு உருண்டை பிசைஞ்சி கையில் வைங்க பசிக்குது... ம்ம்" என்று அவர்களை அவசரப்படுத்த..

அங்கிருந்த அனைவரும் அவளை விசித்திரமாகப் பார்த்தனர்.

பெரிய வீட்டில் வடை பாயசத்துடன் சாப்பாடு தயாராகிருக்கும்...

வராத பெண் வெளிநாட்டில் இருந்து வந்திருந்த செய்தி வேற அதற்குள் ஊருக்குள் முழுவதும் பரவி இருந்தது, ஒன்று இன்று தடபுடலாக கறிசோறு விருந்தாகவோ இல்லை வடை பாயாச விருந்தாகவோ இருக்கும்... அத்தனை விதமாக உணவுகளை வேண்டாம் என்று பழையதுக்கு கை ஏந்தி நிற்பளைப் பார்க்கும் போது அதிசய பிறவிப் போல் தான் தோன்றியது.

"பசிக்கற பிள்ளைக்கு சோறு குடுப்பிங்களா? இல்ல இப்படியே என்னைய வேடிக்கைப் பார்த்துட்டு இருப்பிங்களா?" என்றதும் ஆளுக்கு ஒரு உருண்டையை உருட்டி அவளிடம் கொடுத்த தயாராக ஒவ்வொருவரிடம் இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி சாப்பிட்டவள்.. "நான் ஒன்னு சொல்லட்டுமா?, எங்க ஹாஸ்டல் சாப்பாட்டை விட உங்க எல்லோரோட சாப்பாடும் தவுட்ஸன் டைம் பெட்டரா தான் இருக்கு"என்றாள்.

அருவி சொன்னது புரியாமல் "என்ன சொன்ன தாயி?"என்று கருப்பாயி பாட்டி கேக்க...

"ஹா ஆயிரம் மடங்கு நல்லா இருக்குனு சொன்னேன் பாட்டி. "என்று சொல்லிக்கொண்டே அவர்கள் கொடுத்ததை சாப்பிட்டு முடித்தவள், "ஹப்பா சாப்பிட்டதுக்கே டையார்டு ஆகிட்டேன் நான் போய் கை கழுவிட்டு வரேன் நீங்க சாப்பிடுங்க" என்று எழுந்துக் கொண்டாள்.

உண்மையாகவே அவர்களின் உணவு அருவிக்கு பிடித்து தான் இருந்தது... கை கழுவ போகும் போது அருவியின் போன் அலற....

எடுத்துப் பார்த்தவள் அதில் சரு என்று வரவும் முகத்தில் அளவிலா மகிழ்ச்சி உண்டானது.

"ஹேய் சரவணா... சொல்லுடா?"

"நான் காலையில் மெசேஜ் பண்ணேன்,நீ ரிப்ளை பண்ணலையே அதான் இப்போ போன் பண்ணேன் எங்க இருக்க?"

"ஓ நான் பார்த்துருக்க மாட்டேன்டா.... தோட்டத்துல இருக்கேன்"

"இல்லையே ப்ளூ டிக் காட்டுச்சே, நீ பார்க்காம எப்படி ப்ளூ டிக் காட்டிற்கும்?"

"தெரியல விடு... இன்னைக்கு நைட் நான் உன்னைய பார்க்கணுமே சரவணா.."

"என்னடி அதிசயமா இருக்கு எப்போவும் நான்தானே உன்னைய பார்க்கணும்னு சொல்லுவேன், நீ யாராவது பார்த்துட்டா என்ன பண்றதுனு பயப்படுவ இப்போ நீயே பார்க்கலாம்னு சொல்ற.?"

"அது... நான் உன்கூட கொஞ்சம் பேசணும் கோவில் குளத்துக்கு வந்துடு, நானும் எல்லோர் கண்ணுலையும் மண்ணை தூவிட்டு வந்தரேன்" என்றாள்.

"ம்ம் நைட் பூஜை உங்க வீட்டுதுதானே"

"அப்படி தான்னு நினைக்கறேன், இனியா அப்படி தான் சொன்னான்".

"அப்போ நான் வரமுடியாதா அரு"

"ஏன் கோவிலுக்கு தானே வர... கோவில் ஒன்னும் அவங்க சொந்த சொத்து இல்ல.. பொது சொத்து, சாமியை சொந்தம் கொண்டாட எல்லோருக்கும் உரிமை இருக்கு,எவன் கேள்வி கேப்பான்?" என்றாள் கோவமாக.

"உங்க மாமாவை பார்த்தா தான் பயமா இருக்கு அரு."

"அட ச்சீ வா... இந்த அளவுக்கு பயம் இருக்கறவன் லவ் பண்ணிருக்கக் கூடாது."

"எனக்கு உங்க மாமாவை கண்டா தான் பயம் மத்தபடி..." என்று அவன் முடிக்கும் முன்

"சை வாயை மூடு இதுலாம் ஜெய் காலத்துலயே பார்த்தாச்சு..." என்றவள் "நான் வீட்டுக்கு போகணும் போனை வை" என்று வைத்து விட்டாள்.

ஊர் கோவிலில் ஒவ்வொரு மாத பௌவுர்ணமியிலையும் ஒவ்வொரு வீட்டினர் பூஜை செய்து அன்னதானம் செய்வார்கள்...அதில் இன்று வேந்தன் வீட்டின் முறை... அதற்காக தான் சரவணன் பயந்தான்.

பஞ்சாயத்துக்கு போன வேந்தனுக்கு அருவியைப் பற்றிய எண்ணமே மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

"முதல் தடவை களை எடுக்கப் போயிருக்கா, என்ன பண்ணளோ...? எந்த ஏழரையும் கூட்டாம இருந்தா போதும்..."என்று அவள் மீது நம்பிக்கை இல்லாமல் கண்டதும் தோன்ற, 'அருவி இருக்கற இடத்துல பிரச்சனை இல்லாமலா?' என்றது மனது...

எப்போதுடா பஞ்சாயத்து முடியும் அருவி பண்ணி வைத்திருக்கும் பஞ்சாயத்தை தீர்க்கப் போகிறோம் என்று மனம் அலைபாய...

வெளித்தோற்றத்திற்கு வேந்தன் பிரச்சனையை நிறுத்தி நிதானமாக உள்வாங்கிக் கொண்டிருப்பதுப் போல் தெரிந்தது.

ரித்துவும் தேவாவும் காரிலையே அமர்ந்து வேடிக்கைப் பார்த்தனர். அவர்களை வெளியே நின்று வேடிக்கைப் பார்க்க வேந்தன் அனுமதிக்கவில்லை.

அனைவரும் சூழ்ந்திருக்கும் அந்த இடத்தில் அருவிக்கு போன் செய்யவும் முடியாமல் அவளை நினைத்து தவித்தவன் யாரிடமிருந்தாவது போன் வருகிறதா?" என்று அவ்வவ்வப் போது போனையும் பார்த்த வண்ணம் இருந்தான்.

அதுவோ இன்று எனக்கு விடுமுறை என்பது போல் தன் வேலையில் இருந்து ஓய்வு பெற்றிருந்தது.

"வேந்தா முடிவா என்ன தான் சொல்ல வர எனக்கு மடை தண்ணி முழுசா வேணும். இதை நம்பி தான் பத்து ஏக்கர் நடவு பண்ணிருக்கேன்" என்று சரவணின் அப்பாவான தில்லைநாயகம் கத்த...

தன் கவனத்தை அவரிடம் திருப்பியவன், "முடியாதுன்னு சொல்றேன்... உங்களுக்கு ஒருதடவை சொன்னா எதுமே புரியாதா...? வாய்க்கால் மடை ஊருக்குனு இருக்கற பொது சொத்து உங்க வயல் வழியா வருதுங்கறதுக்காக நீங்க அதை உங்க காட்டுக்கு மட்டும் பயன்படுத்தணும்னு சொல்றதும் நினைக்கறதும் பேராசை.. அப்படி பார்த்தா pap வாய்க்காலும் என்னோட தோட்டம் வழியா தான் வருது அதுக்குன்னு எனக்கு தான் சொந்தம்னு சொல்லிக்க முடியுமா? அப்படி சொன்னா தான் நீங்க சும்மா இருப்பிங்களா..? ஒருமணி நேரம் இல்ல ஒரு நாள் முழுக்க பேசுனாலும் இதுதான் என்னோட முடிவு...யாரும் மடையை அடைச்சு அவங்க காட்டுக்கு மட்டும் தண்ணியை திறந்து விடக்கூடாது.... அப்படி திறந்து விட்டா யார் அப்படி பண்றாங்களோ அவங்களோட காட்டை கோவில் சொத்துக்கு எழுதி வைச்சிடணும்" என்றான்.

"அப்போ நான் மடையை என் காட்டுக்கு திறந்து விட்டா நான் காட்டை எழுதிக் கொடுக்கணுமா இது என்ன நியாயம் ஊர் உலகத்துல எல்லோரும் பண்ணாததையா நான் பண்றேன்?"

"ஆமா கொடுக்கணும், எந்த ஊர்ல பன்றாங்கனு எனக்கு தெரியாது... இந்த ஊர்ல இதுதான் நியாயம், அதை மீறியும் நீங்க செஞ்சா காட்டை எழுதி வாங்கிட்டு ஊரை விட்டு தள்ளி வைக்க வேண்டிவரும்" என்றவன் "சும்மா மணி கணக்கா பேசுனாலும் என்னோட முடிவு இதுதான் ... உங்க முடிவு என்னனு நீங்க சொல்லுங்க" என்று அங்கிருந்த மற்ற பெரியவர்களிடம் கேட்டான்.

அவர்களும் வேந்தன் சொல்வது தான் சரி என்றனர்.

இதனால் தில்லை நாயகத்திற்கு வேந்தனின் மீது கொலைவெறி உண்டானது.

ஏற்கனவே இரு குடும்பத்திற்கும் இடையே குடும்ப பகை வேறு இருக்க அதை இந்த பஞ்சாயத்தின் மூலம் பழி தீர்த்துக்கொண்டதாக எண்ணினார் அவர்..

பஞ்சாயத்து கலையப்பட்டு அனைவரும் அங்கிருந்து கிளம்ப.. வேந்தன் மின்னலாக பாய்ந்து காரில் ஏறியவன் காற்றுடன் போட்டிப் போட்டுக் கொண்டு ஓட்டினான்.

"மாமா எதுக்கு இவ்வளவு பாஸ்ட்டா போறீங்க...?"

"வேலை இருக்கு தேவா..."

"அதுக்குன்னு இவ்வளவு வேகமா போவீங்களா... மெதுவா போங்க"என்று கத்தியது எதுவும் வேந்தன் காதில் விழவில்லை.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top