மாதுளம் பழ பாயசம்

Bhuvana

Well-Known Member
#1
மாதுளம் பழ பாயசம் :

தேவையான பொருட்கள்:

மாதுளம்பழ முத்துக்கள் - 1 கப்
சேமியா - 1/2 கப்
பால் - 1 கப்
வெல்லம் - 3 ஸ்பூன் {பொடித்தது}
சக்கரை - 3 ஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1/4 ஸ்பூன்

மாதுளம்பழ முத்துக்களை பாலுடன் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

சேமியாவை மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும் பின்னர் அதனுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் சேமியா வேக ஆரமித்தவுடன்வெல்லம், சக்கரை சேர்த்து கலக்கவும்.

நல்ல தளதளவென கொதிக்கும்போது அரைத்த மாதுளம் பழ முத்துக்களையும், ஏலக்காய் தூளையும் சேர்க்கவும். பால் பொங்கி வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.

பரிமாறும் போது மாதுளை முத்துக்களை தூவி அலங்கரித்து பரிமாறலாம்.
வயிற்றுக்கு இதம் தரும் சத்தான பாயசம்.... 15871770_977091072396838_9033503016639976580_n.jpg
 
#2
:D :p :D
மாதுளம் பழம் பாயசம்
ரெசிப்பி, ரொம்பவே
நல்லாயிருக்கு,
புவனா டியர்
 
Last edited:

Advertisement

Sponsored