மழைக்காலத்தில் (review) அடிக்குது புயலுடன் கூடிய கனமழை

Advertisement

Kavyajaya

Well-Known Member
அடடா... நாமளும் ஸ்டோரி முடிஞ்ச பிறகு review போடுவோம்ன்னு போன வாரம் அமைதியா ஆரம்பிச்சேன் விட்டாங்களா? voting வேற அதுவும் நான் ரொம்ப ஆவலா எதிர்பார்த்த மாலினியின் ஜோடி யார் என்று. கேக்குமா மனசும் கையும்? வந்தாச்சு @GomathyArun க்கா:);) (review first... my vote last)

கல்லூரி காலம் எல்லாரும் சொல்வது போல் நல்ல மழைக்காலம் கனாக்காலம் தான் போலன்னு தோணுனது இந்த கதை படிச்சித்தான். யப்பா கலாட்டாக்கு பஞ்சமில்லை. ( நீ எங்க படிச்ச பால்வாடிலையா என்று கேட்க கூடாது. படித்ததெல்லாம் பெண்கள் பள்ளி மகளிர் கல்லூரி :ROFLMAO::ROFLMAO:)

உண்மையா சொல்றேன் நானே அவங்க கூட படிக்குற பீல் ஆகுது. முதல் எபியில் முதல் நாள் பீல் ஒருத்தர் பெயரும் நியாபகம் இல்லை மாலினி மோகனா பிருந்தா நந்தினி தவிர. போக போக அவங்க அவங்களுக்கான தனி தனி குணங்களுடன் மெதுவா இடம் பிடிச்சாங்க மனசுலயும் மூளையிலும் ஸ்ரீராம் தவிர:cautious:

மோகனா குட்டி வர இடத்துல நானும் அவளுக்கு சுத்தி போடணும் இப்போ பாப்பா கொஞ்சம் கொஞ்சமா வளருதுல்ல:D எல்லாம் காதல்படுத்தும் பாடு.

மாலினிக்கு வர டவுட் எனக்கும் வரும் அது எப்படி பார்த்ததும் எல்லாருக்கும் லவ் வருது? அதுக்கான பதிலும் அருணாவின் மூலம் அசத்தல்:love::love::love:

மாலினி நாயகின்னு ஏக மனதா முதல் எபிலையே கண்டுபிடிச்சாச்சு. நாயகனை தேடி தேடி மூர்த்தி காப்பாத்துனதும் ஹையா இவன்தானா இவன்தானா மாலினி மணவாளன் இவன் தானா என்று பிருந்தா போல் உளறிட்டு தான் படிச்சேன் அதுக்கு டீச்சரம்மா குடுத்தாங்க பாருங்க லெக்சர் :rolleyes:o_O:censored: மூடுவிழா தான்.

அடுத்து handsome அண்ட் beautiful போட்டில முன்னாடி வந்த செல்வா மாலினி ஜோடியா என்று நினைத்தேன் மனசு கொஞ்சம் ஒட்டல சரின்னு சமாதானம் பண்ணி படிச்சா வந்தான் பாருங்க வெற்றி :love::love::love: (புரிஞ்சிருச்சி எல்லாருக்கும் என் ஓட்டு)

review என்னால திருப்தியா போட முடியல நிறைய விட்டாச்சு அவ்ளோ இருக்கு கதைல எதை போட எதை விட சோ டைரக்ட் டா ஓட்டு போட்டுட்டு நடைய கட்டுவோம்.

மாலினி இப்போதைக்கு கண்டிப்பா யாரையும் காதலிக்க மாட்டா... செல்வா மேல லவ் வருமா என்றும் தெரியல அப்படி பார்த்தா தன் மானத்தை காப்பாற்றிய மூர்த்தி மேல எப்பவோ வந்திருக்கும். ஐ தின்க் அவளுக்கு கல்யாணம் முடிஞ்ச பிறகுதான் வரும்:unsure:அதனால கோம்ஸ்க்கா சொல்ற மாதிரி இன்னொரு பார்ட் மாலினி காதலுக்கு போடலாம் கல்லூரிக் கதை கல்லூரியில் நடந்ததாகவே இருக்கட்டுமே :) இது என்னோட கருத்து மட்டும்.

வெற்றி வெற்றி வெற்றி
வெற்றி என்ற பேர் வச்சவங்களுக்கு தோல்வி கிடைச்சதா சரித்திரமே இல்லை :p:p:p வேல் வேல் வெற்றிவேல் வீரவேல் வெற்றிவேல் :LOL::ROFLMAO:


(ஆத்தா மாரியாத்தா செல்வாக்கு ஓட்டு போட்டவங்க கிட்ட இருந்து என்னை மட்டும் காப்பாத்து ஆத்தா :cry:)
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Enaku vetriya thaa pudichiruku.. :geek: banuma
ஆனால் எனக்கு செல்வராஜ்ஜைத்தான் பிடிச்சிருக்கு
அதனால நீங்க செல்வாவுக்குத்தான்
ஓட்டு போடணும்
செல்வாவுக்குத்தான் ஓட்டு போட்டே
ஆகணும், காவ்யா டியர்
இல்லைன்னா.........
 

kayalmuthu

Well-Known Member
ஆனால் எனக்கு செல்வராஜ்ஜைத்தான் பிடிச்சிருக்கு
அதனால நீங்க செல்வாவுக்குத்தான்
ஓட்டு போடணும்
செல்வாவுக்குத்தான் ஓட்டு போட்டே
ஆகணும், காவ்யா டியர்
இல்லைன்னா.........
SUper super பானு மா.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top