மல்லி 29 - நீங்காத ரீங்காரம் - என் பார்வையில்......

Advertisement

Joher

Well-Known Member
மல்லியின் 29-வது கதை நீங்காத ரீங்காரம்......

செல்லாத்தா செல்ல மாரியாத்தா எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா எனும் பாடலில் தொடங்கி.....

ங்கொய்யாலே........ வைக்கிறவன் என் கைல மட்டும் மாட்டினா கைமா தாண்டி மவனே நீ-னு சொல்லி அறிமுகமாகும் ஜெயந்தி......
தஞ்சாவூர் பொண்ணு..... சென்னைக்கு வந்து 2 வருடம் தான் ஆகுது....... படிப்பது MIT ல ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்......
அப்பா ஒரு கார் மெக்கானிக்...... வாடகை வீடு......சம்பாதிப்பது வாய்க்கும் கைக்கும் சரியா இருக்கும் குடும்பம்..... அம்மா கலைச்செல்வி, அண்ணன் விமலன் தம்பி கமலன்......
அப்பா பிரச்சனை என்றால் காத தூரம் ஓடுவர்.... ஆனால் ஓடாத ஒரே ஜீவன் ஜெயந்தி....... ஆடி மாத திருவிழாக்கு வேம்புலியம்மன் கோவில் பாட்டுக்கு தான் காலங்காத்தால மேலே சொன்ன அர்ச்சனை......

காட்டுனா இவளை கட்டணும்டா....... அட நம்ம லகான் என்று entry கொடுப்பவன் மருதாச்சலமூர்த்தி, மினி தாதா..... அம்மா இறந்துட்டாங்க.......... அப்பா வேற கல்யாணம் பண்ணிகிட்டார்......... 10 வயது வரை பாட்டி வளர்ப்பு...... வேறு உறவுகள் அண்டவிடவில்லை...... பாட்டிக்கு பின் தானே தன்னை செதுக்கிக்கொண்டவன்..... தொலைநோக்கு பார்வை கொண்டவன்......

விளைவு 15 வயதிலேயே டீ மாஸ்டர்....... எனக்கென ஒரு வீடு வேண்டும்.... அதுக்கு சம்பாதிக்கணும்னு ஆசையுள்ளவன்...... டீக்கடை பழக்கத்தில் போலீஸ் ஒருவர் மூலம் ரிஸ்கான ஒரு வேலை செய்ய லட்சம் கோடிகளில் கொட்டுது பணம்..... 16 வயதில் ஆரம்பித்த தொழில் 26ல் விடப்படுது....... அதற்குள் பணம் எல்லாம் அசையா முதலீடாக சேர்கிறது.......

ஆனாலும் வேலை வேணுமே என்று டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் நடத்துகிறான்....... படிக்காத முதலாளிக்கு துணை படித்த விஷால்...... மருதுவின் பிசினஸ் ல் ஆல் இன் ஆல்.....

வாழ்க்கையில் செட்டில் ஆனதும் துணையை தேட கண்ணில் விழுந்தவள் தான் லகான்...... இத்தனை நாள் பணத்தை தேடி ஓடியவன் இப்போ பிடித்த பொண்ணை பார்வையில் தேடி ஓடுகிறான்...... ஜெயந்தி ஜதி ஆகிறாள்...... விதி அவனிடமே வரவைக்குது பார்ட் டைம் வேலை கேட்டு ஆனால் வேலைக்கு வரவில்லை........ சிக்காது சில்வண்டு னு கண்ணில் சிக்காமல் போகிறாள்......

நல்ல பொண்ணு படிக்கிற பொண்ணு யார் மூலமாவது இவன் பேசநேர்ந்தால் மற்றவர் வாய்க்கு அவலாகிவிட கூடாதென்று நேரடியாக சந்திக்கும் வாய்ப்புக்கு காத்திருக்கிறான்...... வேம்புலியம்மன் இன்னொரு வாய்ப்பை கொடுக்கிறார்...... அந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து ஜெயந்தி குடும்பத்துக்கு எல்லா உதவியும் செய்கிறான்......

மல்லியின் கீர்த்தி சுரேஷ் அவனை தேடி வர wouldbe மாமனார் BP எகிறுது....... எல்லோருக்கும் தாதாவா தெரியும் மருது ஜெயந்திக்கு மட்டும் நல்ல மனிதனாக தோன்றுகிறான்........ அண்ணான்னு கூப்பிட்டு மருது BP யையும் அலறவிடுகிறாள்...... உடனே சுதாரித்தவன் அவளுக்கு உதவி செய்யும் காரணத்தை சொல்ல இப்போ BP ஏறுவது ஜெயந்திக்கு....... ஜெயந்தியின் பதிலில் கடுப்பாகிறவன் அவளை பார்ப்பதையே நிறுத்துகிறான்.......

ஜெயந்தி படிப்பை முடிக்க ஜெர்மனியில் வேலை கிடைக்கிறது..... அதை அவனிடம் சொல்ல வர சந்தர்ப்பம் சரியில்லாத காரணத்தால் சொல்லமுடியாமல் போகிறாள்...... ஏற்கெனவே அவளின் பதிலால் அதிருப்தியுற்றாலும் அவள் தான் வேண்டும் எனும் தீவிரம் குடிகொள்ள இப்போ அண்ணனிடம் ஜெயந்தியை கல்யாணம் பண்ணி கொடுப்பீங்களானு கேட்கிறான்........ அண்ணன் அவளின் இலட்சியத்தை சொல்ல நான் அவளின் லட்சியத்துக்கு மறுப்பு சொல்லமாட்டேன்னு சொல்ல விஷயம் அப்பா அம்மாவிற்கு போகுது.......

மறுப்பு சொல்வாள் என்று எதிர்பார்க்கப்பட, அவனால என்னை விட முடியலை....... அவனோட தவிப்பே சொல்லுதுன்னு மனதிற்கு புரிய,
கேட்டதும் ஓகே சொல்லிவிடுகிறாள் ஜெயந்தி ..... செய்த உதவிகளுக்கு பொண்ணை கொடுக்கவேண்டுமா என்று வீட்டில் ஆலோசிக்கப்பட ஜெயந்தியின் உறுதியில் ஓகே சொல்லிடுறாங்க........

ஆனால் மருதுவுக்கோ எடுத்து செய்ய யாருமில்லாததால் தயங்க ஜெயந்தியின் ஏற்பாட்டில் விஷால் & ஜீவா எல்லாவற்றையும் பார்த்து இரண்டே மாதத்தில் திருப்பதியில் கல்யாணத்தையும் முடித்துவைக்குறாங்க.....

மருதுவின் கடந்த காலம் தெரியாமலேயே அவனின் மனைவியாகிறாள் ஜெயந்தி....... தெரிந்து பிடிக்காமல் போய்விட்டால் எனும் பயம் வேறு..... மருதுவுக்கு கல்யாணம் நடந்தாலும் அவளின் வீட்டார் முகம் மலர்ச்சியை காட்டவில்லையேனு ஒரு ஆராய்ச்சி....... அவனின் தாதா முகம் தெரிந்ததால் மகளின் வாழ்க்கை குறித்த பயம் தான் அது என்று தனிக்காட்டு ராஜாவுக்கு புரியவில்லை......

கல்யாணத்திற்கு முன்பே ஜெயந்தியின் லட்சியத்திற்கும் ஓகே சொல்லிவிடுகிறான் கல்யாண வாழ்க்கையின் நிதர்சனம் புரியாமல்........ அவளுக்கோ அவளின் லட்சியம் மூலம் அவனிடம் வாங்கிய பணத்தை கொடுத்துவிட வேண்டும் என்னும் தவிப்பு...... அதன் மூலம் அவனுக்கு செய்ய வேண்டிய நன்றி போய்விடும்........ அப்புறம் தங்களோட வாழ்க்கை னு....... அவளுக்கு புரியாதது அவன் பணம் கொடுக்கிறப்போ ஜெயந்தி யாரோ...... இப்போ அவனோட மனைவி..... மனைவி சம்பாதித்து கணவனிடம் வாங்கிய பணத்தை கொடுக்கணுமான்னு.......

மருதுவை பற்றி தெரியாமலேயே ஜெயந்தி அவளின் இலட்சியத்தை கொண்டு அவளோட திட்டம் போட கல்யாண வாழ்க்கையில் அதுவும் மருதுவின் மனைவியால் இது சாத்தியமாகுமா???

இவளின் லட்சியம் ஒரு புறம் இருந்தாலும் கல்யாணம் அதன் கடமையை செய்ய யாருமே இல்லாமல் நடை பயணமாக மருது வீட்டுக்கு வந்து அவங்களே அவங்களுக்கு ஆரத்தி சுற்றி பொட்டு வைத்து எல்லா சம்பிரதாயங்களையும் நடத்துறாங்க ரெண்டு பேரும் மட்டுமே....... விளக்கேற்றும் போது தான் தெரியுது அம்மா அப்பாவை அவன் பார்த்ததில்லை ஒரு போட்டோ கூட இல்லையென்று...... அதோடு அவனின் படிப்பும் தெரிய வர அதிர்ச்சியாகிறது ஜெயந்திக்கு......

அவனின் தனிமையான வாழ்வு ஆசை எதிர்பார்ப்பு தேடல் எதுவுமே ஒரு மனைவியா ஜெயந்தி உணரவில்லை....... தனிமையில் வாழ்ந்தவனுக்கோ மனதின் ஆசைகளை சொல்ல தயக்கம்....... அவளோ தன்னோட லட்சியத்தை அடையும் நோக்கில் மனதால் இவனை நெருங்கவில்லை.....
அவள் இலட்சியத்தை நோக்கி பயணிக்க இவன் இன்னும் தனிமையில் அடைந்துகொள்கிறான்...... லட்சியம், பிரிவு இருவரையும் வாட்டினாலும் அதை சொல்லிக்கொள்ளவேயில்லை.......
அவனுக்கு ஒருத்தி....... அவனுக்கே அவனுக்கான ஒருத்தி மருதாச்சலமூர்த்திக்கு கிடைத்தாளா???

உணர்வுகளை மனதிலே போட்டுவைத்தால் என்னவாகும்??? மனஉளைச்சல் எப்படி எல்லாம் மனைவியிடம் வெளிப்படும்??? உதவிக்காக நடந்த திருமணம் என்ன மாதிரி விளைவுகளை கொடுக்கும்??? திருமணத்திற்கு பின்னும் தனி ஒருவரின் லட்சியமே முக்கியம் என்றால் திருமண வாழ்க்கையின் நிலை என்ன??? மல்லியின் எழுத்துக்களில் எப்போதும் போல......
இதுவே மீதி கதை...... படிச்சு தெரிஞ்சுக்கோங்க.......

உன்னை காணாதுருகும் நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்
நீங்காத ரீங்காரம் நான் தானே
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே-லே முடிந்தது......

இது அம்மாடி ரசிகர்களுக்கு........
இரவின் தனிமையில் மருதுவின் ஐடியா "அம்மாடி" எங்க இருந்துடா வர்ற நீ தான்.......
 

Sundaramuma

Well-Known Member
சூப்பர் ஜோ :love::love:
பாதி கதை சொல்லிடீங்க ....
அடுத்த பாதி ஒரே சண்டை ..எதுக்கு எடுத்தாலும் சண்டை ...அது எனக்கு பிடிக்கலை ....ஜெயந்தி மத்த மல்லி நாயகிகள் போல இல்லை ....அவங்க கிட்ட தன்மானம் சுயமரியாதை அதே சமயம் நிறைய புரிதலும் இருக்கும் ...ஜெயந்தி கிட்ட நிறைய மிஸ்ஸிங் ....எனக்கு சக்தி ,உஷா அண்ட் துளசி போல வேணும் ....
 

Joher

Well-Known Member
சூப்பர் ஜோ :love::love:
பாதி கதை சொல்லிடீங்க ....
அடுத்த பாதி ஒரே சண்டை ..எதுக்கு எடுத்தாலும் சண்டை ...அது எனக்கு பிடிக்கலை ....ஜெயந்தி மத்த மல்லி நாயகிகள் போல இல்லை ....அவங்க கிட்ட தன்மானம் சுயமரியாதை அதே சமயம் நிறைய புரிதலும் இருக்கும் ...ஜெயந்தி கிட்ட நிறைய மிஸ்ஸிங் ....எனக்கு சக்தி ,உஷா அண்ட் துளசி போல வேணும் ....

தேங்க்ஸ் உமா :love::love::love:
ஜெயந்திக்கு வீட்டு கஷ்டம் உணரவிடாமல் வளர்த்து பிரச்சனைனு வர்றப்போ பணமும் குடுத்து உதவியும் பண்ண ஆளு இருக்கு......
பிரச்சனையில் இருந்து மீண்டாச்சு......

பணம் லட்சியம் கண்ணா நினைக்குறா....... வீட்டை தவிர எந்த உறவும் இல்லை...... இவ கிட்ட வேறென்ன எதிர்பார்க்க முடியும்???
அவன் ஒன்னொன்னா சொல்ல சொல்ல தான் மாறுகிறாள்...... அப்பவும் புரிதல் எந்த அளவுக்கு???

மற்றவங்க எல்லாம் புரிதலில் கரை கண்டவர்கள்......
ஹீரோவை பிடிக்குதோ இல்லையோ level of understanding வேற தான்.....
 

Joher

Well-Known Member
Superb sis.....mukkal vasi kathaiyayum solliteenga....konjam sandai matgum missing.....malli sis oda 29 stories list m kudunga sis.....

தேங்க்ஸ் கலை......

  1. Enn Valvu Unnodu (Enai Therinthum Nee)_Surya Giri Vasan-Annalakshmi Prathuksha
  2. Thalaiviyin Nayagan_Venkata Ramanan-Varamahalakshmi
  3. Sathamillaamal Oru Yutham (Uyirae Enn Uravae)_Paarthiban-Abhiraami
  4. Kanaavil Un Mugam_Kathir Vel-Lalitha
  5. Unn Paarvai Naan Arivaen_Aravind-Keerthi
  6. Kadhal Kondene_Arul Pandian-Selvi
  7. Poovai Nenjam_Sri Ramachandra Moorthi-Vaidhegi
  8. Neethane Thalattum Nilavu_Senthil-Rajarajeswari
  9. Varam Tharum Vasanthame_Akash-Kanimozhi
  10. Veezventru Ninaithayo_Karthik-Sakthi Priyadharshini
  11. Kanave Kai Seruma_Vikram-Annakili
  12. Nenjukkul Peithidum Maamazhai_Vetrivel-Sandhiya
  13. Pakkam Vanthu Konjam_Sri Hari-Preethi Lakshmi
  14. Oomai Nenjin Sontham_Sibhi Varman-Jayashree
  15. Thendral Ennai Theendum Pothu_Arjun-Narmadha
  16. Oru Vanavil Polae_Athavan-Thaamarai
  17. Sangeetha Jaathi Mullai_Vishweswaran-Sangeetha Varshini
  18. Ippadikku Unn Idhayam_Vaasudevan-Janani
  19. Kaathalum Katru Mara_Guruprasad-Tamil Arasi
  20. Vaanam Thodaatha Megam_Nikil Varadharajan-Akshara
  21. Mendal Manathil_Kaandeepan-Vedha
  22. Nee Enbathu Yaathenil_Durai Kannan-Sundari
  23. Pesum Vizhikal Pesaa Mozhikal_Raghuvaran-Chandrika
  24. Santhathil Paadaatha Kavithai_Krishna Kumar- Kavya
  25. Maayamaai Manthiramaai_Thirumanthiran-Maayaa
  26. Eamai Aalum Nirantharaa_Vijayan-Saindhavi
  27. Saththamindri Muththamidu_Thiruneervannan-Thulasi
  28. Sarvam Sakthi Mayam_ Sakthi Vallaban-Archanaa
  29. Neengaatha Reengaaram_Maruthaachalamoorthy-Jeyanthi
  30. Naan Enadhu Manadhu_Raveendran-Sharmila
  31. Marabuveli_Rajarajan-Angayarkanni
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

அருமையான விமர்சனம்
இரவின் தனிமையில் மருதுவின் ஐடியா..
(எது ஒரு துணியால ஜெயந்தியோட கண்ணை கட்றதை தானே சொல்றீங்க ;);))
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top