மறந்துவிட்டேன்.

Eswari kasi

Well-Known Member
#1
டிவி என் வீட்டிற்கு வந்தபோது. ... புத்தகங்களை எப்படி படிக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டேன்.

கார் என் வீட்டிற்கு வந்தபோது.....
நான் எப்படி நடக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டேன்.
என் கையில் மொபைல் கிடைத்தவுடன்..... கடிதங்களை எப்படி எழுதுவது என்பதை மறந்துவிட்டேன்.

என் வீட்டிற்கு கணினி வந்தபோது.......
எழுதவதை மறந்துவிட்டேன்.

ஏசி வந்ததும்......
இயற்கைக் காற்றை மறந்து விட்டேன்.

நகரத்திற்கு வந்தவுடன்...
அழகு நிறைந்த கிராமத்தை மறந்துவிட்டேன்.

வங்கிகள் மற்றும் கார்டுகளை கையாளுவதால்...
பணத்தின் மதிப்பை மறந்துவிட்டேன்.

வாசனை திரவியத்தை பயன்படுத்தியதால்...

பூக்களின் மனத்தை மறந்துவிட்டேன்.

துரித உணவு வருவதால்...
பாரம்பரிய உணவு வகைகளை சமைக்க மறந்துவிட்டேன்.

சம்பாதிக்க சுற்றி, சுற்றி ஓடுவதால்.....
ஓடுவதை எப்படி நிறுத்துவது என்பதை மறந்துவிட்டேன்.

கடைசியாக வாட்ஸ்அப் கிடைத்ததும்....

எப்படி பேசுவது
என்பதையே.....

மறந்துவிட்டேன்.படித்ததில் பிடித்தது
 
mithrabarani

Writers Team
Tamil Novel Writer
#9
சூப்பர் ஈஸ் க்கா..:love::love: நல்லவேளை நீங்களும் மறக்காம ஷேர் செய்துட்டீங்க நாங்களும் மறக்காம படிச்சுட்டோம்...
 
Advertisement

Sponsored