மயக்கும் மான்விழியாள் 5

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..

மயக்கும் மான்விழியாள் 5

காலைவேளை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது சிவரூபன் அலுவலகம்.தன் மடிக்கணிணியில் மூழ்கி இருந்தவனை அழைத்தான் மகேஷ் அவனது பாட்னர்.

"சொல்லுடா மகி...என்ன காலை விஜயம்..."என்றான் சிவரூபன்.அவனுக்கு தெரியும் காரணமில்லாமல் வரமாட்டான் என்று.

"எல்லாம் நல்ல விஷயம் தான் டா...நாம ரொம்ப நாளா எதிர்பார்த்த ஜேகே கம்பெனி அவங்க நட்சத்திர ஹோட்டல் கான்்ராக்ட் நமக்கு கிடைச்சிருக்கு மேன்..."என்றான் குரலில் துள்ளளோடு.

"வாவ்...ரியலி கிரேட் மகி...ரொம்ப நாள் கஷ்டப்பட்டதுக்கு பலன் கிடைச்சிருச்சு..."என்ற சிவரூபன் முகம் யோசனைக்கு தாவியது.

"என்ன டா...என்ன திடீர்னு யோசிக்கிற..."என்றான் மகேஷ்.

"அந்த கவர்மெண்ட் டெண்டர் லொக்கேஷன் சென்னைனு இப்ப தான் மேஸேஜ் வந்திருக்கு...நீ இல்லனா எப்படி டா..."என்றான் கவலையாக.

"டேய் இதுக்கா இவ்வளவு டென்ஷன்...அங்க எனக்கு தெரிஞ்ச பிரண்ட் ஒருத்தன் இதே வேலை தான் பன்றான்...நான் அவன் கிட்ட பேசிட்டேன் அவன் உனக்கு எல்லா உதவியும் செய்வான்..சோ கவலையவிடு..."என்றான் உற்சாகமாக.

"ம்ம்..."என்றான் ரூபன்.ரூபனுக்கும்,மகேஷிற்கும் பல சிந்தனைகள் ஒத்துபோகும் அதுவே அவர்கள் கூட்டணி வெற்றி பெற காரணம்.இப்போது வேறு ஒருவன் அவன் சிந்தனைகள் எவ்வாறு இருக்கும் அது தனக்கு ஒத்துபோகுமா என்ற பயம்.இது அவனது பலநாள் கனவு எந்த ஒரு சிறிய தவறும் நடக்ககூடாது என்பதில் கவனமாக இருந்தான் ரூபன்.

மகேஷ் அவனது உற்ற தோழனும் கூட ரூபன் டெல்லியில் வந்த போது சற்று தடுமாறி தான் போனான்.அப்போது அவனது ஒரே ஒரு பற்றுக்கோள் கையில் இருந்த வேலை மட்டுமே.ரூபன் டெல்லிக்கு வரும் போதே வேலையுடன் தான் வந்தான் அதனால் அவனுக்கு வருமானத்திற்கு பஞ்சமில்லை என்றாலும் டெல்லி அவனுக்கு புதிது என்பதால் சற்று தடுமாற்றம்.அவன் வேலை செய்த கம்பெனியில் அறிமுகம் ஆனவன் தான் மகேஷ்.மகேஷ் தமிழ் பாதி இந்தி பாதி கலந்த கலவை.மகேஷின் அம்மா தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.மகேஷ் பிறந்தது,வளர்ந்தது எல்லாம் டெல்லி என்பதால் அவனுக்கு அனைத்தும் அத்துப்படி.

மகேஷூம் தன் வேலையை நேசித்து செய்யும் குணமுடையவன் அதனால் தான் என்னவோ சிவரூபனுக்கு மகேஷை மிகவும் பிடித்துவிட்டது.சிவரூபனும் வேலை செய்வதிலும் சரி தனக்கு கீழ் உள்ளவர்களை வேலை வாங்குவதிலும் சரி கெட்டிக்காரன்.ஒருகட்டத்தில் மகேஷ் தனக்கென்று ஒரு சொந்தமாக கட்டிட கம்பெனி திறக்க அவனுடன் சிவரூபனும் இணைந்து தன் இன்டீரியர் வொர்க்ஸ் கம்பெனியும் திறந்தான்.இருவரும் வேலையில் கெட்டிக்காரர்கள் என்பதால் அவர்களுக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.

"ரூபா...ரூபா டேய்..."என்ற மகேஷின் குரலில் நிகழ்வுக்கு வந்த சிவரூபன்,

"ஆங் என்ன டா..."என்றான்.அவனின் மனநிலையை சரியாக ஊகித்த மகேஷ்,

"டேய் ரூபா நீ டென்ஷன் ஆகாத டா...நான் சொன்ன ஆளும் கிட்டதட்ட என்ன போல தான் வேலை செய்வான் அதுமட்டும் இல்லாம என்னோட குடும்ப நண்பன் அதனால நீ பயப்படுற மாதிரி எதுவும் நடக்காது..."என்று திடப்படுத்தினான்.மகேஷ் சொன்ன குடும்ப நண்பன் என்ற வார்த்தையில் சிவரூபனுக்கு சற்று ஆசுவாசம்.ரூபனின் முகம் தெளிவடைவதைக் கண்ட மகேஷ்,

"அப்பா தெளிஞ்சிட்டியா...எப்ப பாரு தொழில் பத்தின சிந்தனை தான...சரி சொல்லு வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்காளா..."என்று அவனது குடும்பம் பற்றி கேட்க அப்போது தான் ரூபனுக்கு தாயின் நினைவு வந்தது.அவரிடம் இன்னும் தனக்கு சென்னையில் வேலை என்று சொல்லவில்லை கண்டிப்பாக போகாதே என்று சொல்லமாட்டார் என்று அவனுக்கு தெரியும் இருந்தாலும் மனதில் அன்னை மனநிலை எவ்வாறு இருக்கும் என்று யோசனைக்கு தாவ அவனது யோசனைகளை தடுத்தவாறு கேட்டது மகேஷின் குரல்,

"டேய்...ரூபா...டேய்..."என்று கத்தவே செய்தான் மகேஷ்.நான் என்ன கேட்டுட்டேன் வீட்ல எல்லாரும் நல்லாருக்காங்களா தான கேட்டேன் அதுக்கு ஏன் இப்படி ரியாக்ஷன் கொடுக்குறான் என்று நினைத்தவன் கூப்பிட அவனோ கனவில் மிதப்பது போல இருக்கவும் தன்னையும் மீறி கத்திவிட்டான்.
மகேஷ் கத்தவும் சுயத்துக்கு வந்த ரூபன்,
"ஏன்டா இப்படி கத்துற..."என்றான் காதுகளில் கைகளை விட்டுக்கொண்டே.

"ஏன்டா கேட்க மாட்ட...கூப்பிட கூப்பிட ஏதோ கனவுல மிதக்குறவன் போல இருந்துட்டு இப்ப என்ன கேலி பண்றியா..."என்று கைகளை ஓங்கினான் மகேஷ்.

"சரி சரி விடு..."என்று சரண்டர் ஆன ரூபனிடம் மேலும் சில நிமிடம் தொழில் விஷயங்கள் பேசிவிட்டு மகேஷ் செல்ல ரூபனுக்கு மனது மீண்டும் தாயிடம் சென்றது.எதுவாயினும் சமாளித்துக்கொள்வோம் என்று நினைத்தவன் தன் வேலையில் கவனம் செலுத்த தொடங்கினான்.

மதுமிதாவிற்கு காலையில் இருந்தே வேலை பிழிந்தெடுத்தது தன் மதிய உணவிற்கு வந்தவள் சாப்பாட்டு மேஜை மேலே தலை கவிழ்ந்து படுத்துவிட்டாள். பெரிய சூப்பர் மார்க்கெட்டில் அகௌன்ட்ஸ் செக்ஷனில் வேலையில் இருக்கிறாள்.வாழ்க்கையில் பல அடிகளை வாங்கியதாளோ என்னவோ அவளது முகமே கலையிழந்து காணப்பட்டது.கண்மூடியவளின் நினைவுகள் சற்று பின்னோக்கி சென்றன.

பூமிநாதன்,சிவசுந்தரியின் செல்ல மகள் மதுமிதா.திருமணமாகி இரு வருடங்கள் வேண்டுதளுக்கு பின் பிறந்தவள்.மாநிறம்,கலையான முகம் அவளது வாய் மட்டும் பேசாது அவளது கண்களும் பேசுமோ என்பது போல அவளது கண்களும் நயனமாடும்.எப்பொழுதும் சிரித்த முகமாக அனைவருக்கும் சேட்டை செய்யும் பெண்ணாகவே வளர்ந்தாள்.

இத்தனைக்கும் வீட்டின் கடைசி பிள்ளை அவளது தம்பி ஆனந்த் தான் ஆனால் அவனை விட மது தான் சேட்டை அதிகம்.அதனால் மதுமிதா இருக்கும் இடமெல்லாம் அரட்டைக்கு பஞ்சமிருக்காது.எவ்வளவு கனமான சூழல் என்றாலும் அதை அசட்டை செய்யாமல் கடப்பது அவளது குணமாகி போனது.அந்த குணமே அவளுக்கு எதிரியாக மாறியது அவளது வாழ்க்கையில்.அவளது சிறுபிள்ளை தனமான செயல்களே அவளை குழியில் தள்ளியது.சுந்தரி பல முறை அவளது செயல்களை தட்டி கேட்பவர் தான் ஆனால் பூமிநாதனுக்கு மகளை எதாவது கூறினால் கோபம் அதிகமாக வரும் அதனால் சுந்தரியின் பேச்சு எடுபடாமல் போகும்.

பூமிநாதனின் அண்ணன் அருணாச்சலம் பணம் மட்டுமே வாழ்க்கை என்று நினைப்பவர்.பணத்தை வைத்து தான் மனிதர்களிடம் பேசவே செய்வார்.அவருக்கு ஏற்றார் போல் தான் அவரது வாழ்க்கை துணை வசந்தாவும் மனிதர்களின் மனம்,குணங்களை விட பணம் மட்டுமே முக்கியம் என்று கருதுபவர்.அருணாச்சலமும்,பூமிநாதனும் காஞ்சிபுரத்தில் பட்டு வியாபாரம் செய்து வந்தனர்.அது அவர்களின் பரம்பரைத் தொழில்.சத்தியமூர்த்தி இவர்களின் தந்தை தன் காலத்திலேயே பிள்ளைகளுக்கு அனைத்தையும் பிரித்துக்கொடுத்தவர் தொழிலை மட்டும் பிரிக்காமல் விட்டுவிட்டார்.தன் காலத்திற்கு பிறகு மகன் இருவரும் சேர்ந்தே தொழிலை நடத்தவேண்டும் என்பதே அவரது வேண்டுகோள்.

சத்தியமூர்த்தியின் மறைவிற்கு பின் வீட்டின் கட்டுபாடு அருணாச்சலம் மற்றும் வசந்தாவின் கையில் சென்றது.பூமிநாதனுக்கு தன் அண்ணன் மேல் அளவு கடந்த மதிப்பும் மரியாதையும் உண்டு அருணாச்சலத்தை மீறி அவர் எதுவும் செய்யமாட்டார்.அந்த குணமே அருணாச்சலத்திற்கு வசதியாக போனது அதனால் தன் தம்பியின் குடும்பமும் தன் கட்டுப்பாட்டின் கீழ் தான் இருக்கும் என்ற கர்வம்.வீட்டில் உள்ள அனைவரும் அருணாச்சலம் என்ன கூறுகிறாரோ அதை தான் பின்பற்றுவர்.அதாவது அவர் கூறுவது தான் சரி அதை நீ செய்து தான் ஆக வேண்டும் என்பது அருணாச்சலத்தின் வாதம்.வீட்டின் செலவு முதல் பிள்ளைகளின் படிப்பு வரை அவர் என்ன சொல்கிறாரோ அது தான்.இதில் எதிலும் கட்டுபடாமல் இருக்கும் ஒரே ஜீவன் நம் மதுமிதா.

அருணாச்சலம் என்ன சொல்கிறாரோ அதற்கு எதிர் வாதம் செய்வது மதுமிதா மட்டுமே.ஆனால் அதற்காக தன் பெரியப்பாவுடன் சண்டை எல்லாம் போடமாட்டாள் அவர் எப்படி சில இடங்களில் நயந்து தன் வேலைகளை செய்து கொள்கிறாரோ அதே போல் இவளும் அவரிடம் நயந்து தன் காரியங்களை சாதித்துக்கொள்வாள்.அதே போல் தான் மது பத்தாவது முடித்து எந்த குரூப் எடுக்க என்று வீட்டில் வாதம் வர அருணாச்சலம் அவளை முதல் குரூப் எடு என்று கூற இவளோ எனக்கு அக்கௌன்ட்ஸ் தான் பிடிக்கும் என்று நின்றாள்.அதற்கு அருணாச்சலம் வலுவாக மறுக்க இவளோ தன் பெரியப்பாவிடம்,

"என்ன பெரிப்பா நீங்க நான் அக்கௌன்ட்ஸ் எடுத்து படிச்ச நம்ம குடும்பத்துக்கு தான் நல்லது...நீங்க புரிஞ்சிக்கமாட்டேங்கிரீங்க..."என்று கூற அருணாச்சலமோ,

"என்ன சொல்லற மது...அது எப்படி..."என்று கேட்க வீட்டில் உள்ளவர்களுக்கு புரிந்தது இனி அவள் கூறுவதற்கு இவர் ஆமாம் சொல்லிவிட்டு சென்றுவிடுவார் என்று.அதே போல் தான் நடந்தது,

"அப்படி கேளுங்க பெரிப்பா..."என்று அவரின் கீழ் அமர்ந்து,
"நான் அக்கௌன்ட்ஸ் எடுத்தா தான் மேல சிஏ படிக்க முடியும்..அப்படி படிச்சா தான் நம்ம தொழில் கணக்க நானே பார்த்துக்குவேன்ல...உங்களுக்கும் கஷ்டம் குறையும் இல்ல..."என்று இன்னும் சில ஆசை வார்த்தைகளை பேசி அவரை கரைத்து சேர்ந்து இதோ பிகாம் முடித்திருந்தாள் ஆனால் அவளது கனவான சிஏ கனவாகவே போனது.கனவை நோக்கி இவள் கால் வைத்த நேரம் வாழ்க்கையில் பல சோதனைகள் நிகழ்ந்துவிட்டிருந்து.

அதற்கு மேல் கண்களை மூட முடியாமல் திறந்தவளுக்கு வேண்டாம் நினைக்காதே என்று மனது கூப்பாடு போட்டாளும் சில காயங்கள் அவளது மனதை தைத்து ஆறாத வடுவாகி போயிருந்தது.தனது காயங்களுக்கு காரணமானவனே அதற்கான மருந்தாக மாறுப் போவது தெரியாமல் தன் சிந்தனைகளில் உழன்றாள் மதுமிதா.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

அடப் பாவமே
சிவரூபனுக்கு கிடைத்த டெண்டர் சென்னையிலா?
அம்மா தேவகி என்ன சொல்லுவாளோ?

மதுமிதாவுக்கு ஏன் சிஏ படிக்க முடியாமல் போனது?
என்ன காரணம்?
ஓடிப் போய் கல்யாணம் செய்யப் பார்த்தவள்ன்னு மதுமிதாவை வசந்தா திட்டும் அளவுக்கு என்ன நடந்தது?

சுந்தரி அத்தை வீட்டுடன் விலகியிருந்த ரூபன் இதில் எப்படி உள்ளே வந்து மதுவுடன் சிக்கினான்?

பணத்தாசை பிடித்த அருணாச்சலம் என்ன கோளாறு செய்தார்?
பூமிநாதன் ஏன் படுத்த படுக்கையானார்?
 
Last edited:

Ambal

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

அடப் பாவமே
சிவரூபனுக்கு கிடைத்த டெண்டர் சென்னையிலா?
அம்மா தேவகி என்ன சொல்லுவாளோ?

மதுமிதாவுக்கு ஏன் சிஏ படிக்க முடியாமல் போனது?
என்ன காரணம்?
ஓடிப் போய் கல்யாணம் செய்யப் பார்த்தவள்ன்னு மதுமிதாவை வசந்தா திட்டும் அளவுக்கு என்ன நடந்தது?

சுந்தரி அத்தை வீட்டுடன் விலகியிருந்த ரூபன் இதில் எப்படி உள்ளே வந்து மதுவுடன் சிக்கினான்?

பணத்தாசை பிடித்த அருணாச்சலம் என்ன கோளாறு செய்தார்?
பூமிநாதன் ஏன் படுத்த படுக்கையானார்?
நன்றி தோழி...தான் செய்த வினையின் பயனை அனுபவிக்கிறார் பூமிநாதன்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top