மயக்கும் மான்விழியாள் 4

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..

மயக்கும் மான்விழியாள் 4

தன் அக்காவிடம் பேச மாடி ஏறிய நிவேதாவை தடுத்தது அவளது அன்னை வசந்தாவின் அழைப்பு,

"ஏய் நில்லுடி...எங்க போற...எத்தனை தடவ சொல்றது அங்க போகாதனு..."என்றார் காரமாக.

நிவேதாவோ தன் அன்னையின் பேச்சைக் காதில் போட்டுக்கொண்டாளே தவிர எதுவும் பேசவில்லை.பின்னே பேசினால் அதற்கும் எதாவது சொல்லுவார் வீண் சண்டை உருவாகும் இன்று தனக்கு மகிழ்ச்சியான நாள் அதனால் சண்டை போட்டு தன் மனதை வருத்த விரும்பவில்லை அதனாலே அமைதி காத்தாள்.வசந்தாவோ,

"என்னடி கேட்டுக்கிட்டே இருக்கேன் பதில் சொல்லாம அங்கேயே நிக்குற...முதல்ல இங்க வா..."என்றார் அதட்டலாக.அதற்கும் நிவியிடம் மௌனம் மட்டுமே பதிலாக கிடைக்க அவர் பேசும் முன்,

"என்னடி அம்மா சொன்னது காதுல விழல வாடி இங்க...கூடப்பிறந்தவ நான் இங்க இருக்கேன் அக்காவாம் அக்கா..."என்று கத்தினாள் நித்யா நிவேதாவின் அக்கா.

"நீங்க இவ்வளவு சொல்ரீங்க கொஞ்சம் கூட மரியாதை இல்லாம இன்னும் அங்கேயே நிக்குறா பாருங்கத்தை..."என்று அவர்களுக்கு ஒத்து ஊதினான் நித்யாவின் கணவன் நிர்மல்.

"நீ எல்லாம் என்ன கேக்குற அளவுக்கு என் நிலைமை இருக்கு...நீயே ஒரு தெண்டச்சோறு என்னை கேள்விக் கேட்கிற...உன்னை சொல்லக் கூடாது உன்னை ஏதோ மகாத்மா மாதிரி நம்புர இந்த தத்திகளை சொல்லனும்..."என்று தன் மனதிற்குள் வசைபாடிக் கொண்டிருக்க அந்த நேரம் அவளைக் காப்பாற்ற அழைத்தது கைபேசி அதை பார்த்தவள் அழைத்த நபருக்கு மனதில் நன்றி கூறிவிட்டு ஆன் செய்தவாறே மாடிக்கு ஓடி விட்டாள்.வசந்தா,நித்யா கத்தியும் அவள் நிற்கவில்லை.

"இங்க வராமலா போயிடுவ வருவல அப்ப உன் காலை உடைக்கிறேன் பாரு..."என்று கத்திய வசந்தா பூமிநாதன்,சுந்தரியின் அறைப் பக்கமாக வந்து,

"என்ன செஞ்சு என் பொண்ண மயக்கினாளோ தெரியல...என் பொண்ண என்கிட்டேந்து பிரிச்சுவச்சுட்டா...இவ எல்லாம் எங்க நல்லா இருக்க போறா..."என்று தன் மனதில் உள்ள வன்மமத்தைக் கக்கிவிட்டே சென்றார்.
அறையின் உள்ளே படுத்திருந்த சுந்தரிக்கும்,பூமிநாதனுக்கும் வசந்தாவின் வார்த்தைகள் மனதைத் தைத்தது.ஒருகாலத்தில் இதே வசந்தா தான் மதுமிதாவை மகாலெட்சுமி போல இருக்கம்மா என்று புகழ்ந்து கூறுவார் அந்த வார்த்தைகள் எல்லாம் மனதிலிருந்து வரவில்லை வெறும் வாய் வார்த்தைகள் மட்டுமே என்று தற்பொழுது புரிந்தது பூமிநாதனுக்கு.காலம் தாழ்ந்த பின் புரிந்து என்ன பயன் என்பது போல தான் இருந்தது அவரது நிலையும்.

மாடியில் நிலவை வெறித்துக்கொண்டிருந்த மதுமிதாவிற்கு மனது ஒருநிலையில் இல்லை.தந்தையிடம் சற்று அதிகமாக பேசிவிட்டோமோ என்று நினைத்தவளுக்கு கண்கள் தன் போல கலங்க அவளது கண்ணீரை துடைத்து ஒரு கரம் அந்த தொடுகையில் தன்னுணர்வு பெற்றவள் திரும்பி பார்க்க அங்கே மலர்ந்த முகத்துடன் நின்றிருந்தாள் நிவேதா.

"ஓய் அக்கா இங்க என்ன பண்ற..."என்றபடி பக்கத்தில் அமரந்தாள்.

"சும்மா தான் ரிலாக்ஸா இருக்கலாம்னு வந்தேன்...நீ இங்க என்ன பண்ற...இன்னும் தூங்காம..."என்றாள் மதுமிதா.

"முதல்ல ஆஆ காட்டு சொல்றேன்..."என்றாள் நிவேதா.

"என்னடி சொல்ர..."என்றாள் மது.இவகிட்ட பேசி புரிய வைக்க முடியாது என்று உணர்ந்த நிவி அவளது வாயில் இனிப்பை திணித்தவாறே,

"எனக்கு வேலை கிடைச்சிடுச்சுக்கா...நானும் இனி சம்பாதிக்க போறேன்..."என்றாள்.மதுவோ நிவி வாயில் திணித்த இனிப்பை கஷ்டபட்டு முழுங்கியவள்,

"ம்ம் சந்தோஷம்..."என்றாள் சுரத்தே இல்லாமல்.மதுவின் பதிலில் கடுப்பான நிவி,

"என்ன மதுக்கா நான் எவ்வளவு சந்தோஷமான விஷயம் சொல்லுரேன்..நீ என்னடான இப்படி ரியாக்ஷன் கொடுக்கிற..."என்றாள் குறையாக.அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்த மது தன் முகத்தை வேறு புறம் திருப்பினாள்.அவளது செயலில் நிவேதாவிற்கு மனது கஷ்டமாகி போக,

"அக்கா ப்ளீஸ்...நான் வேலைக்கு போறேன்..."என்றாள் மன்றாடலாக.

"போ...நான் ஒண்ணும் சொல்லை நிவி.."என்று வாட்டேத்தியாக பேசினால் மதுமிதா.நிவேதாவின் கண்கள் கலங்குவது போல் ஆக அதற்கு மேலும் பொறுக்க முடியாமல்,

"நிவி...என்னடி இது கண்ணெல்லாம் கலங்கிட்டு...என்ன ரொம்ப கஷ்டப்படுத்தாதடி..."என்றாள்.ஒரு ஆழ்ந்த மூச்சொன்றை எடுத்துவிட்டவள் நிவியிடம்,

"நான் தான் முழுசா படிக்க முடியாம போயிடுச்சு...நீயாவது பிஜி முடிச்சா உன் லைப் நல்ல இருக்கும்னு சொன்னேன்....உன்னை கஷ்டப்படுத்தனும்னு நான் நினைக்கலடி...நீ கொஞ்சம் யோசியேன்...உனக்காக அப்ளிக்கேஷன் கூட வாங்கிட்டு வந்திருக்கேன்..."என்றாள்.

தன் குடும்பத்தார் அவ்வளவு செய்த பிறகும் தனக்காக யோசிக்கும் அக்காவைக் கண்டு கண்கள் கலங்க அவளை ஆறத்தழுவி,

"உனக்கு என் மேல கோபம் இல்லையாக்கா...இன்னக்கி நீ இப்படி இருக்கனா அதுக்கு என் அப்பா,அம்மா தான் காரணம்..."என்று நிவி முடிக்கும் முன்,

"அவங்க மட்டும் தான் காரணம்னு சொல்லமுடியாது நிவி நானும் ஒரு காரணம் எங்க அப்பாவும் ஒரு காரணம் … அதுமட்டுமில்லாம அவங்க பண்ணதுக்கு நீ என்ன பண்ணுவ நிவி..."என்றாள் மதுமிதா.

மது அதோடு விடாமல் நிவியிடம்,

"நிவி..உனக்கு இப்ப கிடைச்சிருக்க வேலைக்கு சம்பளமும் கம்மி...ஏன்னா நீ யூஜி தான் முடிச்சிருக்க இதே நீ பிஜியும் முடிச்சிட்டு வேலைக்கு போனா நல்ல சம்பளம் கிடைக்கும்..."என்றாள் தங்கைக்கு புரிய வைக்கும் பொருட்டு.அவளுக்கு தெரியும் நிவேதாவிற்கு வெளிநாட்டில் வேலை செய்ய பிரியம் என்று சிறு வயதில் இருந்தே கூறுவாள் நான் வெளிநாட்டுல தான் வேலைக்கு போவேன் என்று அப்போது அவள் கண்களில் ஆயிரம் ஆயிரம் மின்னல்கள் தோன்றி மறையும்.

இப்போது தங்கள் வீட்டின் நிலைக் கருதி அவள் படிக்க மறுக்கிறாள் என்று உணர்ந்தவளுக்கு மனதில் ஒரு உறுதி எப்படியேனும் தன் தங்கையை அவள் ஆசைப்படி படிக்க வைத்துவிட வேண்டும் என்று.கனவுகளை சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இழந்தவர்களுக்கு அதன் வலி தெரியும் என்பதால் தான் மதுமிதா நிவேதாவை படிக்க சொன்னது.நிவேதாவின் முகம் யோசனைக்கு செல்லவும்,

"நல்ல யோசி நிவி...வா இப்ப தூங்க போகலாம்..."என்று தங்கையை அழைத்துக்குக் கொண்டு கீழே சென்றாள்.

அங்கு இவர்களுக்காகவே காத்திருப்பது போல காத்திருந்தனர் வசந்தா குடும்பத்தார்.மதுவும்,நிவியும் ஒன்றாக வருவதைக் கண்ட வசந்தாவிற்கும்,நித்யாவிற்கும் பற்றிக் கொண்டு வந்ததது என்றால் நிர்மலோ மதுவையே பார்வையால் விழுங்கிக் கொண்டிருந்தான்.அவனுக்கு சில காலமாக மதுவின் மேல் ஒரு நாட்டம்.அதற்கு நித்யாவின் திமிரும்,மேம்போக்கு தனமும்,பொறுப்பின்மையும் ஒரு காரணமாகும்.

நித்யாவிற்கு தன் அழகின் மீது அதீத கர்வம் என்றே கூறலாம்.நித்யா பார்த்ததும் மற்றவரை கவர்க்கூடிய ரகம்.அதுவே அவளுக்கு ஒருவித திமிரைக் கொடுத்திருக்க எப்பொழுதும் சிரித்த முகமாக இருக்கும் மதுவை கண்டால் மனதில் பொறாமை பிறக்கும்.இப்போதும் அவர்கள் சிரித்துக்கொண்டு வருவதைக் கண்டு நித்யாவிற்கு புகைச்சலாக இருக்க,

"பார்த்தியா ம்மா...எப்படி சிரிச்சுக்கிட்டு வாராங்கனு...அந்த சின்னதையும் பாரேன் நம்ம கிட்ட இப்படி பேசுறாளா அங்க போனா மட்டும் எப்படி சிரிக்கிறா பாரு...அவ ஏதோ மயக்கி வச்சிருக்கா ம்மா..."என்று எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றி எரியவிட்டாள் நித்யா.

மாடியில் இறங்கி வந்த மதுமிதாவும்,நிவேதாவும் ஹாலில் நின்றிருந்தவர்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் உள்ளே செல்ல பார்க்க,

"என்னடி திமிர் கூடி போச்சா..."என்று கத்தினார் வசந்தா.அவரது கத்தலைக் கண்ட மது இது தினமும் நடப்பது தான் என்பது போல தன் அறைக்கு செல்ல அதே எண்ணத்துடன் நிவேதாவும் செல்ல பார்க்க வசந்தாவிற்கு தன்னை மதிக்காமல் செல்கிறார்கள் என்பதில் ஆத்திரம் அதிகமாக மதுவை எப்படியாவது காயப்படுத்திவிடும் நோக்கில்,

"என்னடி உனக்கும் எப்படி ஓடிப் போய் கல்யாணம் பண்ணலாம்னு சொல்லிக்கொடுக்குறாளா...அவ வாழ்க்கை நாசமானது பத்தாதுனு உன்னையும் நாசமாக்க பாக்குறாளா..."என்று விஷத்தைக் கக்குவது போல வார்த்தைகளை விட,

"அம்மா..."என்று நிவேதா அதிர்ந்து கத்தினாள் அவளுக்கு தன் அன்னை இவ்வளவு கீழ் இறங்கி பேசுவார் என்று நினைக்கவில்லை.ஏதோ திட்டிவார் தான் ஆனால் இந்தளவிற்கு மதுவின் மீது வன்மமா என்று நினைத்தவள் உறைந்துவிட்டாள்.ஏதோ சத்தம் கேட்டு வெளியில் வந்த சுந்தரி காதிலும் வசந்தாவின் பேச்சு விழ தன் அழுகையை அடக்க முயன்று தோற்றவர் கேவலோடு உள்ளே சென்றார்.மாத்திரையின் வீரியத்தால் பூமிநாதன் நல்ல உறக்கத்தில் இருந்ததால் அவருக்கு இது எல்லாம் கேட்காமல் போனது.

தன் அறையின் உள்ளே இருந்த மதுவின் காதுகளில் வசந்தாவின் வார்த்தைகள் ரீங்காரமிட தன் கைகளால் காதுகளை பொத்தியவளின் மூடிய விழிகளில் அன்றைய தினத்தின் காட்சிகள் ஓடியது அன்று தான் செய்த மடமையை எண்ணி வெட்கி குருகி போனாள்.தன் வாழ்க்கையில் மிக மோசமாக தோற்ற நாள்.வாழ்க்கையின் பாடத்தை கற்றுக் கொண்டது அந்நாளிலிருந்தது தான் ஒருவகையில் அதைக் கற்றுக் கொடுத்தவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

மீண்டும் நிமிர்ந்து அமர்ந்தவள் மற்றவர்கள் கூறுவதால் நீ கெட்டுபோவதில்லை உன்னை நீயே சுருக்கிக்கொள்ளாதே எதிர்த்து போராடு உன்னுடைய நிமிர்வு தான் உனக்கு பலம் அதை விடாதே மது என்று தினமும் தனக்கு தானே சொல்லும் வார்த்தைகள் இன்றும் மதுமிதாவின் மனதில் ஒலித்தன.அந்த வார்த்தைகளின் தாக்கம் அவளை நிமிரச் செய்தது.தன் கண்களை அழுந்த துடைத்தவள் மனது சற்று தெளிவுபெற்றது.
 
Last edited:

Saroja

Well-Known Member
வசந்தா நித்யா நிர்மல்
ஒரு கூட்டணியா
எப்படி பேசுது வசந்தா
 

MEGALAVEERA

Well-Known Member
Nice epi
எப்போதுமே பெண்ணின் மன வலிக்கு ஒரு பெண்ணே காரணம் ஆகிறா be strong mathu
 

Ambal

Well-Known Member
வசந்தா நித்யா நிர்மல்
ஒரு கூட்டணியா
எப்படி பேசுது வசந்தா
அடுத்தவரின் கண்ணீரைக் கண்டால் சிலருக்கு ஆனந்தம் உண்டாகும் அந்த ரகம் தான் வசந்தா...நன்றி தோழி...
 

Ambal

Well-Known Member
Nice epi
எப்போதுமே பெண்ணின் மன வலிக்கு ஒரு பெண்ணே காரணம் ஆகிறா be strong mathu
ஆவதும் பெண்ணாளே அழிவதும் பெண்ணாளே...நன்றி தோழி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top