மன்னவன் கையால் மலர்மாலை வாங்கிடவே...

Advertisement

laksh14

Well-Known Member
“ அம்மாடி பாப்பா இப்படி கொஞ்சம் திரும்பி சின்னப்புவை பார்த்துட்டு போனா என்ன?? பாவம் சின்னப்பு உன் கடைக்கண் பார்வைக்கு ஏங்கிட்டு இருக்கான்...” என்று வீட்டிற்கு விறகுக்கட்டை தூக்கிச்சென்ற தேவியை வம்பிழுத்துக்கொண்டிருந்தனர் அந்த கூட்டத்தினர்...
“என்ன சின்னப்பு பாப்பா திரும்பிக் கூட பார்க்க மாட்டேன்குது.... நீ என்னமோ பாப்பா உன்னை பார்த்து சிரிச்சிட்டு தான் போகும்னு பந்தயம் கட்டுன???” என்று தன்னோடு அமர்ந்திருந்த சின்னப்பு என்று அழைக்கப்படும் சந்திரனை வம்பிழுத்தான் மாரி..
“டேய் ஏன்டா இப்படி பண்ணுறீங்க?” என்று சந்திரன் மாரியை முறைக்க கண்ணப்பனோ
“டேய் அப்பு நாங்க என்னடா பண்ணோம்??? எதுக்கு நீ அவனை முறைக்கிற? நீ தான் பாப்பா விறகெடுத்துட்டு போற நேரம்னு எங்களை இங்க கூட்டிட்டு வந்த... சரி பையன் பாவமேனு துணைக்கு வந்தது மட்டுமல்லாமல் உனக்கு கடைக்கண் தரிசனமாவது தரச்சொல்லி காலில் விழாத குறையா பாப்பாகிட்ட கெஞ்சிட்டு இருக்கோம்.... நீ என்னானா எங்களை முறைக்கிற???”
“அவ நல்ல காலத்திலேயே திரும்பி பார்க்க மாட்டா.... இதுல நீ இப்படி கூப்பிட்டா மட்டும் பார்த்திருவாளாக்கும்...”
“அப்பு எனக்கு ஒரு சந்தேகம்..... பாப்பா உன்னோட மாமா பொண்ணு தானே அப்புறம் ஏன் அது நின்று ஒரு வார்த்தை கூட பேசமாட்டேன்குது?? உங்க வீட்டிற்கும் அவங்க வீட்டிற்கும் ஏதும் சண்டையா?” என்று தன் நெடுநாள் சந்தேகத்தை கேட்டான் மாரி...
ஆம், பாப்பா என்று அழைக்கப்படும் தேவி சந்திரனின் சொந்த தாய்மாமன் மகள்... இருவருக்கும் ஐந்து வயதுதான் வித்தியாசம்..
சந்திரன் பற்றி சொல்வதானால் அவன் வேலம்மாள்-ஆறுமுகம் தம்பதிகளின் இரண்டாவது புதல்வன்.. மூத்தவன் சிவா..
வேலம்மாளின் தம்பி சுந்தரத்தின் இரண்டாம் தாரம் தெய்வானையின் மகளே தேவி...
தேவி மற்றும் சந்திரனின் குடும்பம் மிகப்பெரியது... வேலம்மாளுடன் கூடப்பிறந்தவர்கள் பதினொரு பேர்.இதில் வேலம்மாளே மூத்தவர்.. அவர் திருமணம் முடித்து சில காலங்கள் கழித்து சுந்தரம் மீனாட்சியம்மாளை கரம் பிடித்தார்...சுந்தரம் பற்றி சொல்வதானால் அவரே குடும்பத்தின் மூத்த ஆண்மகன். அவர் அங்கிருந்த தேயிலை தோட்டத்தில் கங்காணியாக கடமையாற்றிக்கொண்டிருந்தார்.. சுந்தரத்திற்கும் மீனாட்சியம்மைக்கும் கலா,கலை, பிரேமா என்று மூன்று பெண்களும் நாதன் என்று ஒரு ஆண் மகனும்..
சில பல காரணங்களினால் மீனாட்சியம்மாளின் தங்கை தெய்வானையை மணந்தார் சுந்தரம்.. இதில் மீனாட்சியம்மாளுக்கு விருப்பமில்லை என்ற போதிலும் சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர் சரி என்று சொல்ல நேர்ந்தது...
தெய்வானை மற்றும் சுந்தரத்திற்கு பிறந்தவர்களே தேவியும்,வசந்தனும். இவ்வாறு உறவுகளால் பின்னிப்பிணைந்தது இவர்களது குடும்பம்.
சந்திரன் தேவியின் உறவு பிறந்த கணத்திலிருந்து ஆரம்பித்திருந்தது... சந்திரனுக்கு சிறுவயதிலிருந்தே தேவியின் மேல் ஒரு ஈடுபாடு... அதை ஈடுபாடு என்று சொல்வதைவிட ஒரு உரிமையுணர்வு,பாசம் என்று சொல்லலாம்... தேவி என்றால் அவனுக்கு கொள்ளை பிரியம்..ஆனால் தேவியோ அதற்கு நேர் எதிர்... சந்திரனிடமும் அவன் அண்ணன் சிவாவிடமும் நின்று ஒரு வார்த்தை பேசமாட்டாள்...காரணம் அவர்களை பிடிக்காது என்று இல்லை.. ஆனால் பேசமாட்டாள்..
ஆனால் அவள் பயன்படுத்தும் சிலேடு முதற்கொண்டு அனைத்து விளையாட்டு பொருட்களும் சந்திரன் மற்றும் சிவாவினுடையதே...
அவர்கள் இருவரும் வீட்டில் இல்லாத போதே தன் அத்தை வீட்டிற்கு செல்வாள்... சந்திரனின் தாய் வேலம்மாளிற்க்கு தேவி என்றால் பிரியம். அவளது அமைதி, பெரியோர்களுக்கு பணிந்து நடக்கும் பண்பு, கள்ளம் கபடமில்லாத அன்பு என்று அவளது ஒவ்வொரு பண்பும் வேலம்மாளிற்கு பிடிக்கும். அதே போல் தெய்வானைக்கும் சந்திரன் என்றால் விருப்பம்.. இரு குடும்பத்தினருக்கும் இவர்களை மண வாழ்க்கையில் இணைக்க வேண்டுமென்ற எண்ணம் மனதில் இருந்தது...
சந்திரன் சரியான சுட்டி... அவனது சுட்டித்தனத்தை கண்டிக்கும் அன்னையுடன் கோபித்துக்கொண்டு தன் மாமா வீட்டிற்கு வந்துவிடுவான்...அவன் அங்கு வருவதற்கு அவனது அத்தை மற்றும் தாத்தாவின் வகையறா கவனிப்பும் ஒரு காரணம்...அவனது நண்பர் பட்டாளமும் அவன் மாமா வீடு இருக்கும் வழியில் தான் படையெடுக்கும்... அதைவிட முக்கிய காரணம் தேவி தரிசனத்தை பெறும் ஆவல்....அவனை அங்கு வரச்செய்யும்..
இனி கதைக்கு வருவோம்...
“அப்படி ஒன்னும் இல்ல மாரி..” என்று மாரியின் கேள்விக்கு சந்திரன் பதிலளிக்க
“அப்போ ஏன் மாப்ள உன் ஆளு உன்னை மட்டும் திரும்பி பார்க்க மாட்டேன்குது....??
“அவ சின்ன வயசில இருந்து அப்படி தான்னு உனக்கு தெரியாதா??”
“அது தெரிந்த சங்கதி தான்.... ஆனாலும் இதை இப்படியே விடக்கூடாது.... ஏதாவது தடாலடியா செய்தே தீரனும்.... டேய் கண்ணா பேசாம பாப்பாவை தூக்கிருவோமா??”
“எதுக்கு?? சின்னப்பு நம்மளை ஆள் வைத்து தூக்கவா?? ஏன்டா டேய் உருப்படியா ஏதும் யோசிக்க மாட்டியா?? இதுனால தான் சந்ரா எப்பவும் உன்னை முறைச்சிட்டே இருக்கு..” என்று மாரியை கண்ணப்பன் வார மாரியோ
“டேய் கிறுக்குப்பய மகனே... முறைப்பொண்ணுன்னா முறைச்சிட்டு இருக்காம சிரிச்சிட்டா இருக்கும்??”
“ஆனா நம்ம பாப்பா என்னா முறைச்சிட்டா இருக்கு?? இல்லையே?? அதுவும் நம்ம சின்னப்புக்கு முறைப்பொண்ணு தானே?” என்று மாரி கடைசியில் பாப்பாவை பற்றிய ஆராய்ச்சியிலேயே முடிக்க
“டேய்..... அடங்க மாட்டீங்களா டா...நீங்க இவ்வளவு தூரம் கஷ்டப்படுறது ஒரு சதத்திற்கு கூட பிரயோஜனம் இல்லை.. இவ்வளவு நேரம் நாம என்ன பேசினோம்னு அவகிட்ட கேட்டா... நீங்களா யாரு?? எங்க இருந்தீங்க?? என்ன பேசுனீங்கனு நம்மகிட்டயே அந்த கேள்வியை திருப்பி கேட்பா..... அதுனால இப்ப நடையை கட்டுங்க...நம்ம வந்த வேலை தான் முடிஞ்சிருச்சே... அப்புறம் எதுக்கு இந்த வீண் ஆராய்ச்சி??? கிளம்புங்க ரெண்டு பேரும்... நாம தோட்டத்திற்கு போகலாம்” என்று மாரி மற்றும் கண்ணப்பனை சந்திரன் கிளப்ப
“இவனும் ஏதும் உருப்படியா செய்ய மாட்டான்.... நம்மளையும் ஏதும் செய்ய விட மாட்டான்...இதுக்கு எல்லாம் நீ நல்ல அனுபவிப்ப சின்னப்பு” என்று மாரி முன்மொழிய
“ஆமா... இந்த பாப்பாவை எல்லாரும் பாப்பா பாப்பானு கொஞ்சி அது கடைசிவரைக்கும் பாப்பாவா இருந்து உனக்கு ஆப்படிக்க போகுது...பார்த்துக்கோ” கண்ணப்பன் வழிமொழிந்தான்..
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்... இப்ப நீ நடையை கட்டு... நமக்கு வேற ஜோலி இருக்கு” என்றவாறு இருவரையும் கிளப்பிச்சென்றான் சந்திரன்.
nyc
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top