மன்னவன் கையால் மலர்மாலை வாங்கிடவே 7

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
ஒரு மாதம் கழித்து தன் ஊரிற்கு வந்திருந்தான் சந்திரன்... இம்முறை எவ்வாறேனும் தேவியிடம் தன் காதலை தெரியப்படுத்த வேண்டும் என்ற முடிவுடனே கொழும்பில் இருந்து வந்திருந்தான்.... சிறுவயதில் தேவியின் மீது இருந்த அக்கறை, பாசம் ஆகியவை வாலிப பருவத்தில் இருந்த அவனுக்கு அது காதலின் நிலை என்று உணர்த்த அதை அவன் தன் செயல்களால் தேவிக்கு உணர்த்த முயல அவளோ அதை கண்டுகொண்டதாக அவனுக்கு தெரியவில்லை... அவள் தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிறாளா இல்லை நிஜமாகவே அவளுக்கு புரியவில்லையா என்று அவனுக்கு தெரியவில்லை...காரணம் அவளது நடத்தையே......
அவள் தன்னுடன் பேசி பழகியிருந்தால் இந்த காதல் மலர்ந்திருக்குமா என்ற கேள்விக்கு அவனிடம் பதிலில்லை..... ஆனால் அவள் ஒதுங்கி நின்றதே அவள் வசம் தான் சரணாகதி அடைந்ததற்கு காரணம் என்று அவன் அறிவான். அதுவே அவளை சீண்ட காரணமாகியது...என்னதான் சீண்டினாலும் அவளது கோப முகத்தை காணும் அதிஷ்டம் அவனுக்கு கிடைத்ததில்லை.... சந்திரன் சீண்டுவதை தேவி உணர்ந்தால் தானே கோப்படுவதற்கு என்பது வேறு கதை...
ஆனால் அவற்றை விட அவனை கவர்ந்த விடயம் அவளது நடத்தை.... சிறுபிள்ளையாய் ஓடித்திரிந்தாலும் வேலை என்று வரும் போது அதை விருப்புடனும் ஒருவித அர்ப்பணிப்புடன் அவள் செய்வதும், வீட்டுப்பெரியவர்களுக்கு பணிந்து நடப்பதும், அனாவசியமாக பேச்சுவார்த்தைகளில் மாட்டிக்கொள்ளாமல் அவ்விடத்திலிருந்து நழுவுவதும், எவர் உதவி கேட்டாலும் தயங்காமல் செய்வது இப்படி பலவிடயங்களில் அவளது குணம் அவனை கவர்ந்தது....மேலும் மாமன் மகள் என்ற எண்ணமும் அதற்கு இன்னும் வலுவூட்டியது...
இப்படி எல்லாவற்றிலும் தன்னை கவர்ந்தவளை தானும் கவர வேண்டும் என்ற முடிவுடன் மாலை நான்கு மணியளவில் தேவியின் வீட்டுக்கு சென்றான் சந்திரன்....
அங்கு அம்மாயி மற்றும் தேவி மட்டுமே இருந்தனர்... வழமை போல் இவன் தலை தெரிந்ததும் சமையற்கட்டினுள் தேவி ஒழிய அம்மாயி வந்து சந்திரனிடம் நலம் விசாரித்துக்கொண்டிருந்தார்... சற்று நேரத்தில் தேவியின் அம்மா தெய்வானையும் வந்துவிட அவரும் தன் பங்குக்கு சந்திரனை நலம் விசாரித்த வண்ணம் இருக்க வீட்டிற்கு வெளியே ஒரு சிறுவர் பட்டாளம் வந்து நின்றது.... அவர்கள் தலை தெரிந்ததும் தேவியை தெய்வானை அம்மா அழைக்க தேவி வெளியில் வந்து அவர்களை அழைத்து சென்றாள்...... அவள் சென்றது சந்திரன் தன் அத்தையிடம்
“யாரு அத்த இந்த சிறுசுக எல்லாம்?? எதுக்கு பாப்பாவை தேடிட்டு வருதுக??”
“அதுவா தம்பி... நம்ம பாப்பா அதுகளுக்கு ஒவ்வொருநாள் சாயந்திரத்துல பாடம் சொல்லு குடுக்கும்....அதான் வந்திருக்குங்க....”
“ஓ... நம்ம பாப்பா அவ்வளவு பெரிய ஆளா???”
“சாயந்திரம் வயசுக்கு வந்த புள்ள வெளிய போககூடாதுனு சொன்னேன்... நேரம் போகமாட்டேங்குதுனு சொல்லி இப்படி தோட்டத்துல உள்ள சின்னதுகளுக்கு எல்லாம் பாடம் சொல்லு குடுக்குது... அதுங்க இதுக்கு ரெண்டு பைசாவும் ஒரு போத்தல் லாமெண்ணொயும் குடுக்குங்க... எதோ அவளால முடிஞ்ச உழைப்புனு செய்றா... நானும் சரினு விட்டுட்டேன்...”
“அது நெனக்கிறதும் சரி தான் அத்த....நமக்கு தெரிஞ்சத நாலு பேருக்கு சொல்லி குடுக்கிறது தப்பில்லையே... அதுக்கும் அது நல்ல அனுபவமா இருக்கும்....”
“ஆமா தம்பி... சரி நீ காட்டதண்ணி ஏதாச்சும் குடிக்கிறியா??”
“சரி அத்த...” என்று அவன் சரி சொல்ல அவனுக்கு குடிப்பதற்கு கலப்பதற்காக உள்ளே சென்றார் தெய்வானை....
அவர் அப்பக்கம் நகன்றதும் இப்பக்கம் சந்திரன் எழும்பி தேவியை பார்க்க சென்றான் சந்திரன்...
அவள் வீட்டின் பின்புறமாக சற்று தள்ளி கூடாரம் போன்று அமைக்கப்பட்டிருந்த இடத்தில் பாய்விரித்து அந்த சிறுசுகளை அமரச்செய்து பாடம் கற்பித்து கொண்டிருந்தாள் தேவி.. அவளும் அவர்களுடன் கீழே அமர்ந்து தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் பாடம் நடத்திக்கொண்டிருந்தாள்... அவளை தூரத்திலிருந்து ரசித்துக்கொண்டிருந்தான் சந்திரன்.. அவள் அழகாகவும் பொறுமையாகவும் பாடம் புகட்டும் விதமும், பிழைகள் விடும் சிறுசுகளை தன் கையில் வைத்திருக்கும் பிரம்பினால் மிரட்டுவதும், புரியவில்லை என்று கேட்போருக்கு வேறு முறையில் விளக்கம் அளிப்பதும், இடையிடையே அனைவரும் தத்தமது வேலைகளை செய்கின்றனரா என்று தன் ஓரக்கண் பார்வையால் நோட்டமிடுவதும் என்று அவளது ஒவ்வொரு செயலையும் ரசித்தவாறு இருந்தான் சந்திரன்.. அவள் பார்வை தன் புறம் திரும்புவதை உணர்ந்தவன் அப்போதுதான் வருபவன் போன்ற பாவனையுடன் அவளருகே வந்தான்... அவன் வந்ததும் இவ்வளவு நேரம் இருந்த சூழல் மாறுவதாக தேவி உணர்ந்தாள்... ஆனால் அதை முகத்தில் காட்டாது தன் வேலையை தொடர்ந்தவாறே இருந்தாள்.... அவளருகே அமர்ந்த சந்திரன்
“என்ன பாப்பா பசங்களுக்கு பாடம் சொல்லிக்குடுக்கிறியா??”
“ம்...”
“நீ அவ்வளவு பெரிய ஆளா பாப்பா?? எனக்கு தெரியாம போச்சே... என்னடா அக்கா நல்லா சொல்லித்தருதா??” என்று அக்கூட்டத்திடம் ஒரு கேள்வியை முன்வைக்க
“நல்லா சொல்லித்தாராங்க அண்ணா..” என்று அந்த கூட்டம் கூற
“அப்படியா?? அப்படி என்ன உங்க அக்கா உங்களுக்கு சொல்லிகுடுத்தாங்க...?”
“கணக்கு சொல்லி குடுத்தாங்க.....” என்று அக்கூட்டம் கூற
“கணக்கா??? பரவால்லயே.. உங்க அக்காக்கு நல்லா கணக்கு வரும் போல இருக்கே...?”
“ஆமா அண்ணே....அக்கா நல்லா கணக்கு சொல்லிகுடுக்கும்....”
“அப்படீங்கிற?? சரி நான் உங்க அக்காவுக்கு ஒரு கணக்கு போட்டுகுடுக்குறேன்... அதுக்கு உங்க அக்கா பதில் நாளைக்கு சொல்லனும்....சரியா?”
“எதுக்கு நாளைக்கு அண்ணா???? அக்கா இப்பவே பதில் சொல்லும்... நீங்க வேணும்னா குடுத்துப்பாருங்க....” என்று அந்த சிறுசு அவனின் உள்நோக்கம் அறியாமல் பேச அவனோ
“இல்ல... அந்த கணக்கு கொஞ்சம் பெருசு... அத இப்ப கண்டுபிடிக்க கிளம்புனா ரொம்ப நேரம் எடுக்கும்... அதனால உங்க படிப்பு தடப்பட்டு போகும்... அதனால உங்க அக்கா அதுக்கான பதில நாளைக்கு நான் வரும் போது சொல்லட்டும்.. இப்ப எனக்கு ஒரு கடதாசியும் பேனாவும் தாடா தம்பி..” என்று கடதாசியையும் பேனையையும் பெற்றுக்கொண்டவன் அதில் ஏதோ எழுதி அதை தேவியின் கையில் திணித்தான்... அதனை அவள் வாசிக்க அதில்”ஐ லவ் யூ” என்று அந்த மூன்றெழுத்து வார்த்தை தமிழில் எழுதப்பட்டிருந்தது...அதை மனதுக்குள் அவள் வாசித்துவிட்டு அதிர்ந்தவள் அவனை தேட அவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.....
பின் அங்கிருந்த சிறுசுகளின் சத்தம் அவளது கவனத்தை கலைக்க அவர்கள்பால் தன் கவனத்தை செலுத்தினாள்..... அவர்கள் சென்றதும் சந்திரன் கொடுத்துச்சென்ற அந்த கடதாசியில் இருந்த எழுத்துக்களை மீண்டும் படித்தாள்... அவ்வாறு மீண்டும் படித்ததற்கு காரணம் அவன் விட்டுச்சென்ற செய்தியின் உண்மைத்தன்மையை அவள் மனம் ஏற்க மறுத்ததே... அவளது வளர்ப்பு சந்திரன் வரைந்த கணக்கிற்கு பதில் சொல்ல மறுத்தது....
அவளது தாய் தெய்வானை கூறிய அறிவுரைகள் அவளது கண் முன்னே வந்து சென்றது....
“ பாப்பா பொம்பளை பிள்ளைங்க பெருவிரல பார்த்து தான் தன்னோட ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கணும்... இல்ல அவங்க வாழ்க்கையே சிதஞ்சி போயிரும்.... நான் உங்க அப்பா தயவு இல்லாம என்னோட சம்பாத்தியத்திலயும் உங்க தாத்தாவோட உதவிலயும் தான் உன்னையும் தம்பாவையும் வளத்திருக்கேன்... எந்த காலத்திலயும் கம்மனாட்டி வளத்த புள்ளங்க... அதான் தறிகெட்டு நடக்குதுங்கனு யாரும் சொல்லிரகூடாது.... அப்படி ஒரு வார்த்தை எப்போ வருதோ அன்னைக்கே உங்க அம்மாவ நீங்க ரெண்டு பேரும் மறந்திறவேண்டியது தான்..” என்று ஒருநாள் அவர் கூறிய எச்சரிக்கையெனும் அறிவுரை அப்போது அவள் முன் நிழலாடி பயமுறுத்தியது.... மாமன் மகன் என்றாலும் தன் குடும்பத்திற்கு இதனால் ஏதும் தலைகுனிவு வருமோ என்று பயந்தாள்..... சந்திரன் தன்னோட விளையாடிப்பார்க்க எண்ணுகிறானோ என்ற எண்ணமும் தோன்றி அவளை கதிகலங்க வைத்தது.... என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் அவள் குழம்பித்தவிக்க அப்போது அங்கு வந்த தம்பா அம்மா அழைப்பதாக தேவியை அழைத்தான்.. அவனை போகச்சொல்லிவிட்டு சந்திரன் கொடுத்த அந்த முதல் கடிதத்தை தன் புத்தகத்தில் பத்திரபடுத்திவிட்டு அன்னையை நோக்கி சென்றாள்...
நாளை தேவியின் பதில் என்ன???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top