மன்னவன் கையால் மலர்மாலை வாங்கிடவே 3

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
இரவு தன் அத்தை தெய்வானை வீட்டிற்கு வந்திருந்தான் சந்திரன்.... தன் மாமாவின் கடையில் வேலை செய்வதற்காக கொழும்பிற்கு செல்பவன் மாதம் இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்து தன் ஊரிற்கு வந்து விடுவான்.... போதிய கல்வி அறிவு இல்லாத போதிலும் நேர்மையான வழியில் முன்னேற வேண்டுமென்ற வெறி அவனுள் இருந்தது.... தன் தந்தை அவரது கடையில் வந்து வேலை செய்ய அழைத்தபோது அதை மறுத்துவிட்டு தன் மாமாவின் நகைக்கடையில் வேலை செய்தான்... அவனது நேர்மை மற்றும் வேலையின் நேர்த்தி காரணமாக அவனுக்கு அனைத்து தொழில் நுட்பங்களையும் அனுபவத்தின் மூலம் கற்பித்தார் அவனது மாமா ராஜன்... அங்கு தங்கி வேலை செய்பவனுக்கு ஊரிற்கு வந்ததும் ராஜ உபசாரம் தான்.... தாய் வீடு , தாய் மாமன் வீடு என்று அவனை உபசரிக்க அனைவரும் முன்னிற்பர்...... நண்பர்களோடு அரட்டை, உறவினர் வீடுகளுக்கு படையெடுப்பு என்று அவனது இரண்டு நாட்களும் பறந்துவிடும்...... உறவினர் வீடு படையெடுப்பில் அவன் அத்தை வீடு அதாவது அவனுக்கு தேவியின் தரிசனம் கிடைக்கும் இடமே பிரதானம்.... அங்க செல்பவனுக்கு எப்போதும் தடபுடல் விருந்து தான்.... அங்கு அவன் அத்தை முதற்கொண்டு அனைவரும் மிக பிரியத்துடன் கவனித்து கொள்வர்.......அனைவருடனும் அரட்டை அடிக்கும் அவனால் தேவியின் வாயில் இருந்து ஒரு வார்த்தையை கொண்டுவர முடியாது...... உணவு பரிமாறும் போது முன் சாலைக்கு வருபவள் அவன் நலம் விசாரிக்கும் முன் அவ்விடத்தில் இருந்து சென்று விடுவாள்....
வழமை போல் இம்முறையும் அதே நடக்க அவனுக்கு சலிப்பு தட்டியது.... இம்முறை ஏதேனும் செய்ய வேண்டுமென்று முடிவெடுத்தவன் வசந்தன் மூலம் தன் விளையாட்டை தொடங்கினான்....
“ஏன் தம்பா பாப்பா ஏதும் மௌனவிரதம் இருக்குதா??? நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன் ஒரு வார்த்தை கூட பேச மாட்டேன்குது... இந்த மங்கம்மா சபதம் மாதிரி நான் பேச மாட்டேன்னு பாப்பா ஏதும் சபதம் எடுத்திருச்சா?” என்று பெரியவர்கள் இல்லாத தைரியத்தில் நடுச்சாலையில் அமர்ந்து தன் துணிகளை மடித்துக்கொண்டிருந்த தேவியை அவன் வம்பிழுக்க அவன் தலை தெரிந்ததும் பேசா மடந்தையாகிவிடும் தேவி இன்றும் அவ்வாறே இருந்தாள்...
“யாரு அக்காவையா சொல்லுறீங்க??? அது வாய் திறக்காத வரைக்கும் நீங்க தப்பிச்சீங்கனு நினைச்சுக்கோங்க...... நானே அவள் இப்ப தான் வாயை மூடிகிட்டு அமைதியா இருக்கானு சந்தோஷப்பட்டுட்டு இருக்கேன்... நீங்க வேற மச்சான்.... அப்புறம் இன்னொரு சங்கதி தெரியுமா??”
“என்ன சங்கதி???”
“எங்க அக்காவுக்கு வாய் மட்டும் இல்லை கையும் நல்லா வேலை செய்யும்....”
“டேய் தம்பா...உங்க அக்காவுக்கு மட்டும் இல்லை எங்க எல்லாருக்கும் தான் கை நல்லா வேலை செய்யிது??”
“ஐயோ மச்சான்... நான் அந்த வேலையை சொல்லலை.... இது வேற வேலை.... நம்ம சின்னராசுவை உங்களுக்கு தெரியும்ல??”
“ஆமா.. அவனுக்கு என்ன??”
“அவன் இன்னைக்கு அக்காகிட்ட செமத்தியா அடி வாங்கியிருக்கான்...”
“என்ன சொல்லுற தம்பா?? நம்ம பாப்பா அவனை அடிச்சிச்சா??”
“அட ஆமா மச்சான்... நாங்க விளையாடிட்டு இருந்தோம்... அப்போ அந்த சின்னராசு அவனோட கூட்டாளி பசங்களோட அங்க வந்து வம்பிழுத்துட்டு இருந்தான்... அவன் அக்காகிட்ட வம்பிழுக்குறேனு போய் எருக்கங்குச்சில அடிச்சிட்டான்.. அக்காவுக்கு நல்லா வலிச்சிருச்சி போல அவன் அடிச்ச குச்சியை பிடிங்கி செமத்தையா வெலுத்துரிச்சி... நானே ஒரு நிமிஷம் என்ன நடக்குதுனு புரியாம திகைச்சி நின்னுட்டேன்... அந்த குச்சி துண்டா ஒடையிற வரைக்கும் அக்கா அவனை விடல... நம்ம சங்கீதா அக்கா தான் ஒரு மாதிரி அவங்களை அங்க இருந்து இழுத்துட்டு வந்தாங்க... சின்னராசுக்கு விழுந்த அடியில அங்க விளையாடிட்டு இருந்த அம்புட்டு பயலுகளும் துண்டைக்காணோம் துணியை காணோம்னு ஓடிட்டாய்ங்க”
“ ஹாஹா.... என்னால நம்பவே முடியலையே..... நம்ம பாப்பாவா அடிச்சது...?”
“அட ஆமா மச்சான்..... இனி இந்த சின்னராசு பய இந்த பக்கம் தல வச்சி படுக்க மாட்டான்...”
“ஆமா அவனுக்கு இது தேவ தான்... சும்மா சின்னப்பயல்களை அடிச்சி பெரிய பிஸ்தா மாதிரி பூச்சாண்டி காட்டிட்டு இருந்தான்னு என் கூட்டாளிமாரும் சொல்லுட்டு இருந்தாய்ங்க.... வரும்போது பார்த்துக்கலாம்னு இருந்தேன்... அதுக்குள்ள நம்ம பாப்பாவே அந்த வேலையை பார்த்திருச்சி.... நானும் பாப்பாவை என்னமோனு நினச்சேன்....ஆனா அது எல்லாத்துக்கும் மேல இல்ல இருக்கு... சரி தம்பா கிளம்புறேன்... எனக்கு ஒரு இலாம்பு போத்தல் பந்தம் தா... இருட்டுல நடந்து போக அதான் வசதிப்படும்....” என்று வசந்தனிடம் ஒரு வேலையை கூறி அவனை அங்கிருந்து அனுப்பிவிட்டு தேவி அமர்ந்திருந்த இடம் நோக்கி வந்தவன்
“பார்க்க ஒன்னும் தெரியாத மாதிரி பாப்பா மாதிரி இருந்துட்டு அவனை அந்த வெளு வெளுத்திருக்க... இனி உன்கிட்ட கொஞ்சம் கவனமா தான் இருக்கனும்... சரி இனிமே வெளிய போகும் போது தம்பாவை துணைக்கு கூட்டிட்டு போ. அந்த சின்னராசு பய ஒரு கிறுக்கன்... நீ அவனை அடிச்சிட்டனு கோபத்துல ஏதாவது தகராறு பண்ணுவான்... நானும் என் கூட்டாளி பயலுக கிட்ட சொல்லி வைக்கிறேன்.... சரி நான் இப்போ கிளம்புறேன்...” என்று விட்டு அவன் அவ்விடம் விட்டு நகர அப்போது அங்கு வந்த வசந்தன் இலாம்பு போத்தலை சந்திரன் கையில் கொடுத்தான்... அது கண்ணாடியால் ஆன போத்தலினுள் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டு மேல் துவாரம் தக்கையினால் மூடப்பட்டு இருந்தது.....அந்த தக்கையில் ஒரு துவாரம் இடப்பட்டு அதனுள் துணியால் திரிக்கப்பட்ட திரியொன்று போடப்பட்டிருந்தது..... அந்த திரியை பற்ற வைத்த வசந்தன் சந்திரனை வழியனுப்ப அவனுடன் துணைக்கு சென்றான்... சமையல்கட்டில் இருந்த அத்தை, தாத்தா மற்றும் பாட்டியிடம் சொல்லிட்டு தன்னிடம் நோக்கி பயணிக்க ஆரம்பித்தான் சந்திரன்.... ஆறுமணிக்கு பிறகு அங்கு இருள் முழுமையாக கவ்விவிடும் என்ற படியாலே இலாம்பினை ஏந்தி சென்றான் சந்திரன்...அவனுடன் வீட்டு முற்றம் வரை வந்த வசந்தன்
“மச்சான் போன வாரம் தான் நம்மா பக்கத்து வீட்டு முத்தம்மா ஆச்சி செத்து போனிச்சி... அதுக்கு பிறகு ராவுல அது உலாவுறதா சொன்னாங்க. கொஞ்சம் பார்த்து சூதானமா வீடு போய் சேருங்க” என்று ஒரு கதையை கிளப்ப சந்திரன் கதி கலங்கி நின்றான்..... அவனுக்கு சிறுவயதிலிருந்தே இந்த பேய், பூதம் என்ற வார்த்தைகளை கேட்டாலே பயம்... வெளியே பயம் இல்லாதது போல் காட்டிக்கொண்டாலும் உள்ளே அந்த வார்த்தைகள் அவன் இரத்த அழுத்தத்தை எகிறச்செய்யும்.... என்றும் போல் அன்றும் தன் பயத்தை வெளிக்காட்டாது கிளம்பிச்சென்றான்.... அவனது பயம் விஸ்வரூபம் எடுக்க அதனை போக்கும் விதமாக அந்த இராத்திரி நேரத்தில் தன் குரல் வளத்தால் நாரசாரமாக பாடத்தொடங்கினான்.... பாதி தூரம் பந்தத்தை பிடித்து சென்றவன் ஒரு முச்சந்தி வந்ததும் காற்றின் வேகத்தால் அவன் கையில் இருந்த அந்த பந்தம் அணைந்து விட்டது... பந்தம் அணைந்ததும் அவனது பேய் பயம் தலை விரித்து ருத்ர தாண்டவம் ஆட அப்போது என்றோ தன் அம்மா கூட பேய் கதைகள் நியாபகம் வந்து அதில் பந்தம் அணைந்தால் அது பேய் வந்ததற்கான அறிகுறி என்று அவர் கூறியது அப்போது நியாபகம் வந்து தொலைக்க அவனோ அங்கிருந்து கண்ணு மண்ணு தெரியாமல் கத்திக்கொண்டு ஓடத்தொடங்கியவன் அங்கு இங்கு என்று ஒவ்வொரு இடத்திலும் விழுந்து எழும்பி கடைசியில் ஒருவாறு வீடு வந்து சேர்ந்தான்.......
கதவு உடைந்து விழும் அளவிற்கு யாரோ கதவை தட்ட வைதுகொண்டே கதவை திறந்த வேலம்மாள் அதிர்ந்து விட்டார்...ஆங்காங்கே சிராய்ப்புகளுடன் சந்திரன் நின்றிருக்க அவனை உள்ளே அழைத்து சென்றவர் அவனது காயங்களுக்கு மருத்திட்டு அவனிடம் விசாரிக்க நடந்ததை சந்திரன் கூற அவனுக்கு திருநீறு அணிவித்துவிட்டு உறங்குமாறு கூறினார் வேலம்மாள்... இவ்வளவு நேரம் பயத்துடன் ஓடிவந்து கலைத்த சந்திரன் வீடு வந்ததும் சிறிது ஆசுவாசமடைய இவ்வளவு நேரம் தெரியாத கலைப்பு கட்டிலில் விழுந்ததும் உணர உறக்கம் அவனை அரவணைத்துக்கொண்டது...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top