மன்னவன் கையால் மலர்மாலை வாங்கிடவே 2

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
“அம்மாயி அம்மா வந்துட்டாங்களா?” என்று தன் அம்மா வழிப்பாட்டியிடம் கேட்டவாறு வீட்டினுள் வந்தாள் தேவி... சிறிது நேர தேடலுக்கு பின் வீட்டினுள் யாரும் இல்லை என்று அறிந்த தேவி பின்புறம் தனியாக அமைக்கப்பட்டிருந்த சமையல் கட்டிற்கு தன் பாட்டியின் பெயரை ஏலம் போட்டவாறு சென்றவளை பின்னாலிருந்து அவளது ஜடையை வேகமாக இழுத்தான் தம்பா என்று அழைக்கப்படும் வசந்தன்.....
அவனது செயல் அவளுக்கு வலியை உண்டு பண்ண ஆ... என்று பலமாக கத்தினாள் தேவி....
“ஐயோ அக்கா.... ஏன் இப்படி கத்தி ஊரை கூட்டுற?? உன்னை தட்டி கூப்பிட்டதுக்கு இப்படியா ஊரையே கூட்டுவ??” என்று வசந்தனை கொட்டிவிட்டு
“ஜடை கையில் கழன்று வரும் அளவிற்கு இழுத்துட்டு தட்டி கூப்பிட்டேனு மாத்தி சொல்லுறியா??”
“ஆமா..நான் லேசா இழுத்தேன்... ஆனா நீ என்னமோ நான் உன் ஜடையை பிடித்து உன்னை தரதரனு இழுத்துட்ட போன மாதிரி சொல்லுற?? இரு தாத்தா வரட்டும்... அவர்கிட்ட சொல்லி உன் நெம்பை கழட்டி எடுக்குறேன்..”
“தப்பெல்லாம் நீ பண்ணிட்டு என்னை தாத்தா கிட்ட மாட்டி குடுப்பியா?? சரி தாத்தா வரட்டும்... நானும் அவர்கிட்ட சொல்லுறேன்... அவர் நம்ம ரெண்டு பேர் நெம்பையும் கழட்டுவாரு...” என்று வசந்தனிடம் தாத்தாவின் பெயரை தேவி பயன்படுத்த அதில் பயந்த வசந்தன்
“இப்போ யாரு இங்க தப்பு பண்ணா?? எனக்கு தெரிந்து யாரும் இல்லை... உனக்கு தெரிந்தும் யாரும் இல்லை... நீயும் நானும் சும்மா விளையாடிட்டு தான் இருந்தோம்..... இதெல்லாம் போய் தாத்தா கிட்ட யாரும் சொல்லுவாங்களா?? நீ என் சமத்து பாப்பா...நான் உன் சமத்து தம்பா...” என்று அவன் அந்தர் பல்டி அடிக்க
“அது....அந்த பயம் இருக்கட்டும்....”
“பயம்லா இல்லை.... இது ஒரு வகையான தன்னடக்கம், மரியாதை இப்படி பல பெயரில் சொல்லலாம்...”
“சரி....எதுக்கு என் ஜடையை பிடித்து இழுத்த..??
“அதுவா... நீ வா உனக்கு ஒன்னு காட்டுறேன்...” என்று தேவியின் கையை பிடித்து அழைத்து சென்றான் வசந்தன்...
வீட்டின் முன்புற திண்ணையில் ஒரு தடித்த மரத்தடியை மண்ணில் ஊன்றி அதில் ஒரு சிறு கயிற்றினால் நாய்குட்டி ஒன்று கட்டப்பட்டிருந்தது.... அது வவ்.. வவ் என்று சத்தம் போட்டவாறு அந்த தடியை வலம் இடமாகவும்.. இடம் வலமாகவும் வட்டமடித்துக்கொண்டிருந்தது....வெள்ளையாய் புசு புசுவென்றிருந்த அந்த நாய்குட்டியை கண்டதும் ஓடிச்சென்று அதை தூக்கிக்கொண்டவள் அதை தடவிக்கொடுக்க அது இவளுடன் செல்லம் கொஞ்சிக்கொண்டிருந்தது.....
“தம்பா இது யாரோடது??? இவ்வளவு அழகா இருக்கு....”
“நம்மளோடது தான் அக்கா.... தம்பிதுரை வீட்டில இருந்த நாய் குட்டி போட்டுச்சுனு என்னை வந்து பார்க்க சொல்லி கூப்பிட்டான்... நாலு குட்டி இருந்திச்சி...... அதான் ஒன்றை வளர்க்கலாம்னு தூக்கிட்டு வந்துட்டேன்...”
“யாரு நீ வளர்க்க போறியா??? ஏற்கனவே பால் குடுக்குறேன்னு ரெண்டு நாய் குட்டியை கொண்டுட்ட.... இப்போ மூன்றாவதா இதை கொல்லப்போறியா??? வேணாம் தம்பா... நீ கொண்டு போய் தம்பிதுரை வீட்டுலயே விட்டுட்டு வந்திரு” என்று தேவி கெஞ்சினாள்.... அவள் கெஞ்சுவதற்கு காரணம் இருமுறை வசந்தன் செய்த கொடூரம்..... முதல் முறை நாய் குட்டி ஒன்றை கொண்டு வந்தவன் அதற்கு ஒரு சிரட்டையில் பால் வைக்க அது பாதி சிரட்டை பாலை மட்டுமே குடித்தது... அது ஒரு மாத குட்டி என்பதால் அதற்கு மேல் அதனால் பருகமுடியவில்லை... அதை உணரமுடியாத அதாவது உணரும் அனுபவம் இல்லாத வசந்தன் அதை வற்புறுத்த அது அவனிடம் இருந்து துள்ளி ஓடியது ..... பின் ஒருவாறு அதை பிடித்து அதன் வயிற்றை தடவிப்பார்த்தவன் பின் காலின் வயிற்றுப்பகுதி காலியாக இருப்பதாக அதாவது சுருங்கி இருப்பதால் அதனுள் பால் இல்லை என்று தவறாக கருதி நாய் குட்டியை தலைகீழாய் தூக்கி பிடித்தால் முன்னால் தேங்கி நிற்கும் பால் அந்த இடைவெளியை நிரப்பி குட்டி மீதமுள்ள பாலை குடித்து வயிற்றை முழுதாய் நிரப்பிக்கொள்ளும் என்று எண்ணி நாய் குட்டியை தலைகீழாய் தூக்கி பிடித்தான்... அந்தோ பரிதாபம் நாய் குட்டி தன் இறுதி மூச்சை அடைந்து விட்டது... நாய்குட்டி மூச்சு பேச்சு இல்லாமல் இருக்க பயத்தில் அதனை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டான் வசந்தன்.... இரண்டாம் முறை இது நடக்கும் போது தேவி பார்த்துவிட்டாள்.... தடுக்க முயன்ற போது சம்பவம் நடந்து முடிந்துவிட்டது.... அதுவே அவளது இந்த கெஞ்சலுக்கு காரணம்...
“இல்லை பாப்பா நான் இந்த குட்டியை வளர்க்கத்தான் போறேன்.....” என்று பிடிவாதமாக இருக்க அவனை திசை திருப்பும் விதமாக
“சரி.. இந்த குட்டிக்கு பசிக்குது போல.... நீ போய் லஷ்மிகிட்ட பால் கறந்துட்டு வா... அது வரைக்கும் நான் இது கூட விளையாடிட்டு இருக்கேன்....”
“சரி அக்கா.... நீ இதை பத்திரமா பார்த்துக்கோ.. நான் இதுக்கு பால் கறந்துட்டு வரேன்...” என்று வசந்தன் மாட்டுத்தொழுவத்திற்கு செல்ல தேவி அந்த குட்டியை தூக்கிக்கொண்டு தம்பிதுரை வீட்டிற்கு சென்றாள்... தம்பிதுரை அவளது சித்தப்பா மகன்.... அவனும் வசந்தனும் ஒன்றாக தான் திரிவார்கள்.... நாய்குட்டியை கொண்டு வந்து விட்டவள் தாத்தா தான் நாய்குட்டியை கொண்டு போய் விட்டுவிட்டு வரச்சொன்னதாகவும் மீண்டும் வசந்தன் வந்து கேட்டால் கொடுக்க வேண்டாம் என்று சொன்னதாகவும் பொய்யுரைத்துவிட்டு வந்துவிட்டாள்..... தம்பிதுரை வீட்டிலிருந்து தன் வீட்டிற்கு வந்தவள் வசந்தனை தேட அவன் இன்னும் லஷ்மி என்று அழைக்கப்படும் அந்த பசுமாட்டின் மடியின் முலையோடு போராடிக்கொண்டிருந்தான்.....அதன் வழுவழுப்பு தன்மையால் அவனது கையில் அது தாண்டவமாட அதிலிருந்து வெளியே வந்த பால் அங்கும் இங்கும் சிந்தி கடைசியில் அவனையும் நனைய வைத்தது.... அவன் முகமும் முழுவதும் பாலாய் இருக்க தன் நாக்கினால் அதை சுவைத்துக்கொண்டு
“லஷ்மி எப்படி உன்னோட பால் மட்டும் இவ்வளவு ருசியா இருக்கு.... அதுவும் இன்னைக்கு இருமடங்கு ருசி....... அது என்ன இன்னைக்கு விசேஷம்???.......... ஆஆஆ கண்டுபுடிச்சிட்டேன்.... நான் பாடுன ஷெண்பகமே பாட்டு உனக்கு அவ்வளவு பிடிச்சிருந்திச்சா...... அதான் இன்னைக்கு இவ்வளவு ருசியான பால் குடுத்தியா???? என்னோட பாட்டுக்கே நீயும் விசிறி ஆகிட்டியா......???? சரி இனி தாத்தா காலையிலும் மாலையிலும் பால் எடுக்கும் போது நான் வந்து பாட்டு பாடுறேன்..... நீ இதே மாதிரி ருசியா பால் குடு.....” என்று வசந்தன் லஷ்மியோடு பேசிக்கொண்டிருக்க அவனது உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த தேவி சத்தமாக சிரிக்கத்தொடங்க அவளது சிரிப்பு சத்தத்தில் திரும்பிப்பார்த்த வசந்தன்
“ஓய் பீப்பா ஏன் சிரிக்கிற??? நம்ம லஷ்மியோட பால் இன்னைக்கு செம்ம ருசி ......நீயும் வந்து ஒரு வாய் குடிச்சிப்பாரு.....”என்று தேவியை வசந்தன் அழைக்க அவளோ
“எனக்கு காலையிலேயே சீம்பால் குடுத்தாரு ராமையா தாத்தா.... அது இதைவிட ருசி.... இப்போ நீ அங்க இருந்து வா..... நாய் குட்டியை சித்தி வாங்கிட்டு வர சொன்னதா தம்பிதுரை வந்து வாங்கிட்டு போய்ட்டான்.....நீ சீக்கிரம் அங்க இருந்து வா... தாத்தா பார்த்தா திட்டுவாரு” என்று அவனை பணித்துவிட்டு தன் பாட்டியை தேடி சமையற்கட்டிற்கு சென்றாள்....
அங்கு அவளது பாட்டி விறகடுப்பில் விறகை அடுக்கிக்கொண்டிருக்க அங்கிருந்த மேஜை மீதிருந்த ஜம்புக்காயை எடுத்து சாப்பிட்டவாறு பலாக்கட்டையை எடுத்துப்போட்டு அமர்ந்தாள் தேவி.....
“பாப்பா விறகு கட்டையை அடிக்கிட்டியா இல்லை அப்படியே வாசலிலேயே போட்டுட்டு வந்துட்டியா???”
“அதெல்லாம் அட்டலில் அடிக்கிட்டேன் அம்மாயி.... அம்மா இன்னும் வரலையா அம்மாயி??”
“இல்லை .... இன்னைக்கு ரெண்டு மலையில கொழுந்து பறிக்கனும்னு சொன்னிச்சி.... எப்படியும் இராப் பிந்தும்.. அதான் தாத்தா என்னான்னு பார்க்க போயிருக்காரு....”
“ஓ.... அம்மாச்சி...... சின்ன மச்சான் வந்திருக்காரு போல..... வழியில கண்டேன்...”
“யாரு சின்னப்புவா??? இந்த வேலு அவன் வந்ததை சொல்லவே இல்லை.... அதுவும் இந்தப் பக்கம் வரவே இல்லை.... சரி உங்க தாத்தா வரட்டும்... ஒரு எட்டு பார்த்துட்டு இந்த புளிப்பு மாங்காயை குடுத்துட்டு வர சொல்லுவோம்.... சின்னப்பு விரும்பி சாப்பிடுவான்...சரி நீ போய் கை கால் கழுவிட்டு வா.... காட்ட ஊற்றி தாரேன்.... தம்பா எங்க அவனை கூட்டிட்டு வா பாப்பா...” என்று பணிக்க தேவி எழுந்து சென்றாள்..
 
laksh14

nyccc
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top