மண்ணில் தோன்றிய வைரம் 36

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
அன்று கிருஷ்ணனுக்கு ஆப்ரேஷன் என்று திகதி குறிக்கப்பட்ட நாள்....
சாரு, அஸ்வின்,சித்ரா,வருண் , சஞ்சய் என அனைவரும் அந்த ஆப்பரேஷன் தியட்டரிற்கு வெளியே போடப்பட்ட இருக்கையில் பலதரப்பட்ட மனநிலைகளை தாங்கிய வண்ணம் அமர்ந்திருந்தனர்.
சாரு சித்ராவின் அருகே அவருக்கு ஆறுதல் கூறியவாறு இருந்தாள்.. அஸ்வினை வருண் மற்றும் சஞ்சய் ஆறுதல் படுத்தினர்... இடையில் வற்புறுத்தி சித்ராவை வருணும் சஞ்சுவும் காண்டினிற்கு அழைத்து சென்றனர்... அப்போது அங்கமர்ந்து சுவற்றை வெறித்துக்கொண்டிருந்த அஸ்வினை சாரு அழைக்க அவனிடம் அசைவில்லாமல் போகவே அவனது தோள்களில் அவள் கரம் பதிக்க அதில் சுயவுணர்வு அடைந்தவன் கண்ணில் நீர் கொட்டியது.... அதில் பதறிய சாரு
“ஹே பேபி என்னாச்சு??? எதுக்கு இப்படி அழுற??? நீயே நம்பிக்கை இல்லாத மாதிரி நடந்தா பாவம் சித்ராம்மா என்ன பண்ணுவாங்க??? இது ஜஸ்ட சர்ஜரி தான்.... அதுவும் இதெல்லாம் இப்ப எல்லாரும் செய்துகிறாங்க.... அதோட சர்ஜரி பண்ணுற டாக்கர் இதை போல் பல கேஸஸ் பார்த்து சக்சஸ் பண்ணவரு.... அதனால உன்னோட பயம் அவசியமற்றது... என்னோட ரௌடிபேபி ரொம்ப போல்ட் டைப் ஆச்சே...... இதுக்கெல்லாமா பயப்படுவ.... பாரு அங்கிள் எப்படி திரும்பி பழைய மாதிரி வரப்போறாருனு...” என்று தன்னால் முடிந்தவாறு அஸ்வினை சாரு சமாதனப்படுத்த அவன் முக பாவனையோ மாறவில்லை......
அவனை எப்படி சமாதானப்படுத்துவது என்று சாரு யோசிக்க அவளது மூளையில் ஒரு யோசனை தோன்றியது.. தோன்றிய மறுகணம் தாமதிக்காது நிறைவேற்றினாள்.....
சுவரை வெறித்தவாறு கண்களிலிருந்து நீர் சிந்திக்கொண்டிருந்த அஸ்வின் முன் சென்று நின்றவள் அவனை அணைத்துக்கொண்டாள்.... அவனும் அவளது வயிற்றைக்கட்டிக்கொண்டு அழுதி தீர்த்தான். அவளோ அவனது தலையை கோதிக்கொடுத்தாள். அதில் அவனது மனச்சஞ்சலம் நீங்குவதாய் உணர்ந்தான்.......
தாயின் அணைப்பை பெற்ற தாயினால் மட்டும் அல்ல... உயிராய் நினைக்கும் காதலியால் கூட வழங்க முடியுமென அன்று உணர்ந்தான் அஸ்வின். பல நாட்களுக்கு பிறகு மறைந்த தன் அன்னையின் அணைப்பு மீண்டும் கிட்டியதாய் உணர்ந்தான் அஸ்வின்... அதுவே அவனது மனதிற்கு ஒரு வித ஆறுதலை தந்தது..... என்னதான் ஒரு ஆண்மகன் சமூகத்தில் உயர்ந்து சிறந்திருந்தாலும் அவனை சீராட்ட ஒரு மடி தேவை..... அந்த மடி அவனது சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ளும்... தனிமை என்ற உணர்வு அவனை நெருங்க விடாமல் தடுக்கும்..... துக்கமான சந்தர்ப்பத்தில் அதிலிருந்து மீள வழி செய்யும்..... அந்த மடி ஒரு பெண்ணின் மடியாக இருப்பது அவனுள் ஒரு நிறைவுத்தன்மையை உணர்த்தும்.... அந்த மடி தாயாகவோ தாரமாகவோ அல்லது காதலியாகவோ கூட இருக்கலாம்.... அந்த சீராட்டல் அவனை அந்த நேரத்தில் குழந்தையாய் மாற்றிவிடும்...... நிஜ உலக பிரச்சினைகளை மறக்க செய்யும்.....
அந்த சீராட்டலை சாரு அஸ்வினிற்கு தன் அணைப்பினால் உணர்த்தினாள்.. அதுவும் அவனை அவனது துக்கங்கள் மறக்க வழி செய்தது..... நான் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லியது......அந்த அணைப்பு அவனை சகஜ நிலைக்கு திருப்பியது.....
அவனது தலையை கோதியவாறு இருந்த சாருவை தன்னிடம் இருந்து விலக்கியவன் அவளது கரத்தினை ஏந்தி
“தாங்ஸ் ஜிலேபி” என்றுவிட்டு அவளது புறக்கையில் தன் இதழ் பதித்தான்..
அது அன்பை மட்டுமே தாங்கி நின்ற இதழொற்றல்... பாடசாலைக்கு முதல் நாள் செல்லும் மகன் அன்னைக்கு கொடுக்கும் முத்தத்திற்கு ஈடானது.... அந்த உணர்வினை பிரதிபலித்ததாலோ என்னவோ வழமையாக அவனது முத்தத்திற்கு முகம் சிவக்கும் சாரு இன்று அவனது தலையை கலைத்துவிட்டு
“தாட்ஸ் மை பாய்” என்றாள். பின் சில நிமிடங்களில் காண்டினிற்கு சென்ற மற்றவர்கள் வர அஸ்வினும் சாருவும் காண்டின் சென்றனர்... அங்கு எதுவும் வேண்டாம் என்று கூறிய அஸ்வினை வற்புறுத்தி உணவருந்த வைத்தாள் சாரு.. பின் இருவரும் திரும்பும் போது அங்கு யாரோ புதிய நபரொருவர் சித்ராவுடன் பேசிக்கொண்டிருப்பதை சாரு கண்டாள்.. சுமார் அறுபது வயது குறிப்பிடத்தக்க ஒருவர் சித்ராவுடன் பேசிக்கொண்டிருக்க அஸ்வினிடம் யாரென்று கேட்கும் பொருட்டு அவன் புறம் திரும்ப அவன் முகமோ இன்னதென்று சொல்ல முடியாத ஒரு உணர்வை தத்தெடுத்திருந்தது..... அது கோபம், வெறுப்பு, வேதனை,குரோதம் என்று பலவகையான உணர்வுகளை வெளிப்படுத்தியது......அவனது இந்த முகமாற்றத்திற்கான காரணத்தை அறிய சாரு “ரௌடிபேபி யார் அது சித்ராம்மா கூட பேசிட்டு இருக்க பெரியவர்?”
“மிஸ்டர் தனசேகரன்..... ஜே.ஓ.டி ஐடி சலூஷன் ஓட சி.ஈ.ஓ” என்று சாருவின் கேள்விக்கான பதிலை அஸ்வின் அளிக்க சாருவிற்கோ உச்ச கட்ட அதிர்ச்சி.... ஏனெனில் ஜே.ஓ.டி ஐடி சலூஷன் யூ.எஸ் இல் பெயர்போன நிறுவனம்.... பல சாப்ட்வேர் பட்டதாரிகளுக்கு வாழ்வில் ஒருமுறையாவது அங்கு வேலை பார்க்க வேண்டும் என்ற கனவு உண்டு.... பல போட்டியாளர்கள் உருவாகியும் ஜே.ஓ.டியின் அங்கீகாரத்தை யாராலும் பெற முடியவில்லை..... அதனாலேயே இன்று வரை அந்த துறையில் அதிக வருமானம் ஈட்டும் நிறுவனமாக திகழ்கின்றது....
“என்ன பேபி சொல்லுற??? அவரு உங்களுக்கு யாரு???”
“எங்க சித்தப்பாவோட கூடப்பிறந்த அண்ணன்.....” என்று விட்டு சாருவை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன்
“என்னோட அப்பா....”
“என்ன பேபி சொல்லுற???” என்று சாரு உச்சகட்ட அதிர்ச்சியில் வினவ
“ஆமா ஜிலேபி.... அவர் தான் என்னோட அப்பா மிஸ்டர். தனசேகரன்.... யூ.எஸ் ரின்டன்” என்று அஸ்வின் கூறிய விதம் சாருவிற்கு சிரிப்பை வரவழைக்க சாருவோ
“என்ன ரௌடிபேபி என்னமோ மாப்பிளை எந்தவூரு பாரின் ரிட்டன் அப்படிங்கிற மாடிலேஷனில் சொல்லுற??? ஆனாலும் உனக்கு இம்புட்டு குசும்பு ஆகாது மாமோவ்” என்று சாரு சிரிக்க அப்போதும் அவனது பாவனை மாற்றிக்கொள்ளாத அஸ்வினை கண்டு சாருவிற்கு ஏதோ நெருடியது..... இருந்தும் எதை பற்றியும் விசாரிக்காது அவர்கள் இருந்த இடம் நோக்கி அஸ்வினும் சாருவும் சென்றனர்...
அவ்விடத்தை அடைந்ததும் சித்ரா சாருவை தனசேகரனுக்கு அறிமுகப்படுத்த அஸ்வினோ தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்ற தோரணையில் ஓரமாக வருணை இழுத்து சென்றான்...
“டேய் அஸ்வின்... அப்பா வந்திருக்கார்டா.... வாங்கனு ஒரு வார்த்தை சொன்னா குறைந்தா போய்ருவ.... அங்க பாரு சாரு சிஸ்டர் என்னாச்சினு நம்மையே பார்த்துட்டு இருக்காங்க....நீ செய்றது சரி இல்லை அஸ்வின்... அவரு உன்னோட அப்பா.... மூன்றாம் மனிதன் இல்லை..... இவ்வளவு நாள் கழித்து உன்னை பார்க்க வந்திருக்காரு..... அவரை பார்த்து வாங்கப்பானு சொல்றதுல நீ எங்க குறைந்து போய்டுவ???? இப்படி அவரை அவாய்ட பண்ணுறது தப்பு அஸ்வின்”
“ வருண் உனக்கு அவரை பற்றி சரியா தெரியாது... அம்மா இறந்ததும் சித்தியும் சித்தப்பாவும் இல்லாட்டி என்னோட நிலைமை எப்படி இருந்திருக்கும்னு உனக்கு தெரியாது.... அம்மாவை இழந்த எனக்கு ஆதரவாய் இருப்பதை விட அப்போ அவருக்கு அவரோட பிஸ்னஸ் தான் முக்கியமா இருந்தது... அதனால என்னைப்பற்றி கவலைப்படாம சித்தி சித்தப்பா பொறுப்பில் என்னை விட்டுட்டு போய்ட்டார். ஏதோ சித்தியும் சித்தப்பாவும் என்னை அவங்க பிள்ளையா நினைத்து வளர்ந்ததால நான் இன்று ஒரு நல்ல நிலையில் இருக்கேன்.... வேறு யாராவது தப்பானவங்க கையில் என்னை ஒப்படைத்திருந்தால் என்னோட நிலையை யோசிச்சி பார்த்தியா??? அவருக்கு உயிருள்ள மனிதர்களை விட உயிரில்லாத அந்த பணத்தின் மேல் தான் பிரியம் அதிகம்..... இவ்வளவு நாள் நான் இருக்கேனா??? செத்தேனா என்று கூட விசாரிக்காத அவரை நான் வாங்கனு சொல்லனுமா???? சாரி வருண் நான் ஒன்று அவ்வளவு நல்லவன் இல்லை... ஐ ஜஸ்ட் கான்ட எக்ட் எஸ் ஐ ஹெவ் பொகொட்டின் எவ்ரிதிங்....” என்று அஸ்வின் கூற அவனது வலியை புரிந்து கொண்ட வருண்
“ஓகே என்னால உன்னை புரிந்து கொள்ள முடிகிறது... பட் இப்போ அங்கிள் கிருஷ்ணன் அங்கிளை பார்க்க வந்திருக்காரு”
“ஹாஹா.... அவரு ஒன்னும் பாசத்தில் அவர் தம்பியை பார்க்க வந்திருக்க மாட்டாரு.... ஏதாவது பிஸ்னல் டீலை முடிக்கவேண்டி இருந்திருக்கும்.. அந்த சாக்கில் இங்க வந்த அட்டன்டஸ் போட்டுருப்பாரு...
நீ வேணும்னா பாரேன்... அவர் ஏதோ டீலிங்கிற்காக தான் இங்க வந்திருப்பார்... அவரெல்லாம் அன்பு பாசம்னு சொன்னா எந்த கடையில் விற்கிறார்கள் என்று கேட்கிற ஆளுடா..” என்றுவிட்டு ஒரு அசட்டு புன்னகையை உதிர்த்தான் அஸ்வின்...
அவன் எந்த நேரத்தில் எதனால் அப்படி கூறினானோ தெரியவில்லை .... ஆனால் அவனது தந்தை ஒரு டீலிங்கை பேசி முடிப்பதற்காகவே தாய்நாடு வந்திருந்தார்.... பிசினசில் பல டீலிங்கை வெற்றிகரமாக பேசி முடித்தவரால் தன் மகனது வாழ்வில் அதை நடைமுறைப்படுத்த முடியுமா???அதற்கு அஸ்வின் பதிலடி கொடுப்பானா இல்லை மறுக்காமல் சரி என்பானா???
 

banumathi jayaraman

Well-Known Member
எவ்வளவுதான் பணமிருந்தாலும்
அன்பும், பாசமும் ஒரு மனிதனுக்கு
கிடைக்கலைன்னா, அவன்
வெறும் ஜீரோதான்-ங்கிறதை
அஸ்வின் மூலமாக அழகாக
உணர்த்தியிருக்கீங்க, அனு டியர்
கிருஷ்ணனும் சித்ராவும் மிக
அருமையான பெற்றோர்

அஸ்வினின் அப்பா என்ன
டீலிங்கோடு வந்திருக்கிறார்?
இந்தியாவிலுள்ள ஏதேனும்
ஒரு பணக்காரப் பெண்ணை
மகனுக்கு மணமுடிக்கும்
ஐடியாவோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top