ப்ரியசகியே 20

Advertisement

Preetz

Writers Team
Tamil Novel Writer
சகி-20





அன்று காலை வழக்கத்தைவிட மிகவும் தாமதமாக எழுந்து கீழே வந்தவள்


‘வள்ளியம்மா காஃபி!’ என்று விட்டு அங்கிருந்த சேரில் உட்கார்ந்து தலையை கைகளால் தாங்கிக்கொள்ள காஃபி மக்குடன் வந்த வள்ளியோ அவளை பார்த்துவிட்டு


‘என்னாச்சுமா...தலை வலிக்குதா?’என்று தலையை தொட்டுப் பார்க்க


‘லைட்டா மா’


‘நைட் லேட்டா தூங்கினியாமா?’


‘இல்லமா நான் வந்தவுடனே தூங்கிட்டேன்’


‘நீ வரும்போதே மணி 12டா’என்க அவளோ பதிலேதும் சொல்லாது பார்வையை அந்த ஃப்ரெஞ்ச் வின்டோ வழியாக வெளியே செலுத்த வள்ளி அவளது தோளை பற்றி ‘என்னாச்சுமா?’ என அவள் பார்வையை அகற்றாது


‘ஒன்னுமில்ல மா ஒரு முக்கியமான வேலை…’என்க அவள் தலையை தடவிக் கொடுத்து


‘எல்லாம் சரியாகிடும்டா’என அவளோ ஆகிடுமாம்மா? என்ற பார்வை பார்க்க அவளது தோள்களை லேசாக அணைத்துவிட்டு சென்றுவிட்டார்.


அங்கிருந்த செய்தித்தாளை கையிலெடுத்து பின் வேண்டாமென்று டேபிளில் போட்டவள் ஏதோ ஒன்று அவள் கவனத்தை ஈர்க்க மறுபடியும் அதை எடுத்துப் பார்த்தாள்.


அதை வாசித்தவளுக்கோ கோபம் தாறுமாறாக ஏற ‘இடியட்’என்று கத்தியவாறு காஃபி மக்கை ‘டப்’என்ற சத்ததுடன் டீபாய்யில் வைத்தவள் அப்படியே எழுந்து கார் சாவியையும் அந்த செய்தித்தாளையும் எடுத்துக்கொண்டு வண்டியை நோக்கிச் செல்ல வள்ளியின் குரல் அவள் காதில் விழவேயில்லை…


வண்டியிலேறியவளோ இலக்கையடையும் வரை ‘ இர்ரெஸ்பான்ஸிபிள் இடியட்’என்று புலம்பிக் கொண்டே வர அதற்குள் வரவேண்டிய இடமும் வந்திருந்தது.

காரிலிருந்து இறங்கியவள் காலிங் பெல்லை அடிக்கும் பொறுமைகூட {இல்லாமல் கதவை வேகமாக தட்டிவிட்டு கொஞ்சமும் பொறுமையில்லாமல் மறுபடியும் தட்ட எத்தனிக்கும்போதே கதவை திறந்திருந்தார் ரஞ்சனி…


நைட் ட்ரஸுடன் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க வந்து நின்றவளை பார்த்தவுடனே ஏதோ சரியில்லை என்றுணர்ந்தவர்


‘என்னாச்சு மாது?...ஏதாவது பிரச்சனையா?’என்றவள் உடையை பார்த்து அவர் கேட்க அவளோ ‘ஒன்னுமில்ல ஆன்டீ இந்தோ வரேன்’என்றுவிட்டு சிந்துவின் அறையை நோக்கிச் செல்ல அவருக்கானால் ஏதோ சரியில்லையென்று மட்டும் புரிந்தது. அந்நேரம் பார்த்து வாசு காலை வாக்கிங்கை முடித்துக்கொண்டுவந்தவர் ரஞ்சனியிடம்


‘என்னாச்சு ரஞ்சி?ஏன் மாது இவ்ளோ டென்ஷனா இருக்கா?’என ரஞ்சனியோ


‘அதான் தெரியல வாசு ரொம்ப டென்ஷனா இருக்கா…’


‘சரிவிடு அவளே சொல்லுவா கவலைப்படாத...சிந்து எப்படியிருக்கா?இப்போ ஓகேயா?’


‘அவ இன்னும் அப்டியேதான் இருக்கா....இன்னும் கீழ இறங்கி வரவேயில்லை கேட்டா தலைவலி கொஞ்சம் ஃப்ரீயா விடுங்கறா’ என அவர் வருத்தமுற


‘சரி விடு அதான் மாது வந்துட்டால பொறுமையா கேப்போம்’என்று இருவரும் உள்நுழைய அங்கு சிந்துவின் அறையிலோ மாது ருத்ரதேவியாகியிருந்தாள்.



இவள் தட்டிய தட்டில் பதறியடித்துக்கொண்டு சிந்து கதவை திறக்க இவளோ பொறுமையின்றி உள்ளே நுழைந்து


‘வாட் த ஹெல் இஸ் திஸ் சிந்து?...என்ன பண்ணி வச்சிருக்க நீ?...நான்தான் சொன்னேன்ல அதுகுள்ள என்ன அவசரம்?...ஹாவ் யூ லாஸ்ட் யுவர் மைன்ட்?’என்று கத்த சிந்துவோ


‘எஸ் அம் லாஸ்ட்(lost)...அம் லாஸ்ட்…ஐ ஹாவ் லாஸ்ட் மைசெல்ஃப்…’என்று தரையில் உட்கார்ந்துவிட ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் விழித்த மாதுரி மறுநிமிடமே அதற்கான அர்த்தம் புரிந்து


‘சிந்து?...’என்க கலங்கிய விழிகளுடன் அவளை நிமிர்ந்து பார்த்த சிந்து

ஆமாம் என்பதைப்போல் தலையசைக்க அவளை இறுக கட்டிக்கொண்டு


‘என்னாச்சு சிந்து?’ என்க அவளோ


‘அவன் கூட இருக்கும்போது எனக்கு ஒன்னுமே தெரியல மாது...ஆனா…’


‘ஆனா?’


‘அவன இனிமே பார்க்கவே முடியாதுங்கற போதுதான் எனக்கு என்னையே புரியுது…நீயும் எதுவும் பண்ணா மாதிரி தெரியல...எனக்கு வேற வழித் தெரியல மாது…’


‘அதுக்குன்னு ந்யூஸ் பேப்பர்லயா குடுப்பே?...நான் எதுவுமே பண்ணலன்னு உனக்குத் தெரியுமா?...’


‘என்னது உனக்கு அவங்க எங்க இருக்காங்கன்னு தெரியுமா?’என அதிர்ச்சியாக அவளோ


‘தெரியும்’என்று ஒற்றை வார்த்தையாகச் சொல்ல சிந்துவோ


‘எப்படி?...எப்போதிலிருந்து தெரியும்?’


‘நான் இங்க வந்த இரண்டாவது நாள்லயே எனக்கு தெரியும்’என அதில் இன்னும் அதிர்ந்தவள்


‘என்னது!!!...அப்புறம ஏன் அவங்கள கூப்டிட்டு வரல?’


‘என்னால அவங்களும் பாதிக்கப்படக்கூடதுன்னு நினைச்சேன் சிந்து அதான் எல்லாத்தையும் சால்வ் பண்ணிட்டு அவங்கள கூப்பிட்டு வரனும்னு இருந்தேன்...அதுக்குள்ள நீ அவசரப் பட்டுட்டே’கொஞ்சம் இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்த சிந்துவோ


‘உன்ன சுத்தி என்ன நடக்குது?மிஸ்டர்.சத்தியமூர்த்தி ஏன் அப்படி பிரச்சனை பண்ணாரு?எனக்கென்னமோ இது ராகவ்வாலன்னு தோணலை...என்ன பிரச்சணை?’ என்க அவளது புரிதலில் வியந்த மாதுவோ


‘யூ ஆர் ரைட்! இது ராகவ் பிரச்சனையில்ல...இது 16 வருஷத்து பழைய பிரச்சனை…’


‘மாது!!!’


‘ஆமா சிந்து சுதா அங்கிள் சொல்லிதான் எனக்கேத் தெரியும்’


‘...’


‘நீ நினைக்கற மாதிரியில்ல சிந்து இதுல அங்கிளுக்கும் தெரியாத நிறைய விஷயமிருக்கு’


‘யூ மீன் டு சே….’


‘யெஸ் சிந்து அவருக்கு பிரச்சனை எங்கப்பாவோடத்தான் ஆனா இப்போ இங்க வந்து நிக்குது.’


‘புரியல மாது 16 வருஷமா அப்டி என்ன பிரச்சனை?’


‘அந்த சத்தியமூர்த்தியும் சித்தப்பாவும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்…

அப்போ அப்பா பிஸ்னஸ்ஸ எக்ஸ்பேன்ட் பண்ண புதுசு…

ஒரு அஃபீஷியல் பார்ட்டீல அப்போ பிஸ்னஸ் உலகத்துக்கு புதுசான சத்தியமூர்த்தியும் வந்திருக்கார்...போதை கொஞ்சம் அதிகமானதுல ஏதோ ஒரு பொண்ணுக்கிட்ட அவர் மிஸ்பிஹேவ் பண்ணத அப்பா பார்த்துட்டு எல்லார் முன்னாடியும் வச்சு அவர அறைஞ்சிட்டாராம்...அதுல இருந்து சித்தப்பாவுக்கும் அப்பாவுக்கும் நடுவுல நிறைய மனஸ்தாபம் வந்திருக்கு...சித்தப்பா இன்னும்கூட அந்த சத்தியமூர்த்திய நம்பறாங்க...அதனாலதானோ என்னவோ என்ன புரிஞ்சிக்கல…’என்க சிந்துவோ


‘அப்பாவுக்கும் பிள்ளைக்கும் உங்கக்கிட்ட அடி வாங்கறத தவிர வேற வேலையேயில்லையா?’


‘ நீ நினைக்கற அளவுக்கு அவர் சாதாரணமான ஆளில்ல…


‘கிருஷ்ணா விஷயத்துல தலையிட்டதுக்கா அவர இப்படி பண்ண?’என்க அவ்வளவு நேரம் சரளமாக பேசிக்கொண்டிருந்தவள் இறுகிய முகபாவத்துடன் கண்கள் சிவந்து நிற்க சிந்துவோ


‘ஏ என்னாச்சு மாது? ஏன் இப்படி?’


‘இல்ல சிந்து இது நான் ஒரு மகளா பண்ண காரியம்’ என்க சிந்து புரியாமல் விழிக்க அவளே தொடர்ந்தாள்


‘அப்பா என்கூட இல்லாம போனதுக்கு அவர்தான் காரணம்…’


‘மாது!!!’


‘ஆமா சிந்து பிஸ்னஸ்ல வந்த லாஸ் ப்ரீ ப்ளாண்ட்...ஏன் அதுக்கடுத்து சித்தப்பா என்கிட்ட பிஸ்னஸ்ல வரவேண்டாம்னு சொல்லி சண்டை போட்டதுக்கும் இவர்தான் காரணம்...எனக்கு முதல சின்ன டௌட்தான் இருந்தத ஆனா...அன்னைக்கு சுதா அங்கள் இந்த இன்ஸிடன்ட்ட சொல்லும்போதுதான் கன்ஃபர்மாச்சு...

அன்னைக்கு சித்தப்பா வீட்லயிருந்து டேரக்ட்டா அங்கிள் வீட்டுக்குதான் போனேன் சிந்து…’என்றவள் குரலில் அவ்வளவு வேதனை கண்கள் கூட கலங்கிவிட்டது.


‘மாது!’என்று சிந்து கட்டிக்கொள்ள கண்களை துடைத்துக்கொண்டவளோ.


‘ஓய்...ட்ரீட் எப்போ?’என்க முதலில் புரியாமல் விழித்தவளின் முகம் பின் கவலையை பூசிக்கொள்ள மாதுவோ


‘ஏ என்னாச்சு?’


‘இல்ல இது செட்டாகுமா?எனக்கு மட்டும் பிடிச்சா போதுமா?...’என்க அட லூசே என்பதுபோலா பார்த்தவள்.


‘ஏன் சின்னு உனக்கு இன்னமுமா புரியல?எனக்கு அந்த கிறுக்கன பத்தி நல்லாத் தெரியும்…’என்று விஷமமாக சிரிக்க அவளோ


‘ஏய் என்ன சொல்ற?...’என்று பரபரப்பாக அதில் சிரித்தவளோ


‘ஆமா… சாருக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் அவனே தான் சொல்வானாம்...நான் சொல்லக்கூடாதுன்னு சொன்னான்’ என்க சிந்துவுக்குதான் தான் என்ன மாதிரி உணர்கிறோம் என்றே தெரியவில்லை.அவனும் சொல்லவில்லை அவளும் சொல்லவில்லை ஆனாலும் காதல் இருக்கிறது.இது எப்படிப்பட்ட காதல்?...


‘ஓய் அப்போ இனிமே நீ நான் கிருஷ்ணா சுந்துமா அங்கிள் ஆன்டீயெல்லாம் ஒன்னாயிருக்கப்போறோம்மா!!!’என்று குதூகலிக்க சிந்துவோ


‘ அம்மாப்பா ஒத்துப்பாங்களா’என்க மாதுரி


‘அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் எல்லாரும் ஒன்னா ஒரே வீட்ல தான் இருக்கப்போறோம்’என்க அவளையே பார்த்துக்கொண்டிருந்த சிந்து


‘உன்ன புரிஞ்சிக்கவே முடியல மாது...சில நேரம் சின்ன பிள்ளை மாதிரியிருக்க...சில நேரம் ரொம்ப மெட்ச்யூர்ட் ஆ நடந்துக்கறே…’என்க சின்னதாக சிரித்துவிட்டு


‘புரிஞ்சிக்க ட்ரை பண்ணாதே சிந்து!இங்க யாராலயும் யாரையும் முழுசா புரிஞ்சிக்கவே முடியாது சின்னு அப்படி யாராவது உன்ன முழுசா புரிஞ்சிக்கிட்டேன்னு சொன்னா அது வடிகட்டுன பொய்னு அர்த்தம்...புரிஞ்சிக்க ட்ரை பண்ணலாமே தவிர ஒருதங்கள கம்ப்ளீட்டா தெரிஞ்சிக்க முடியாது...இதுக்கு காலமும் ஒரு காரணம்’என்றுவிட்டு


‘பீ ரெடி சின்னு நாளைக்கு காலைல வரேன்...ஒரு முக்கியமான இடத்துக்குப்போக வேண்டியிருக்கு’என்று சென்றுவிட்டாள்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top