ப்ரியசகியே 19

Advertisement

Preetz

Writers Team
Tamil Novel Writer
சகி-19





மாதுரி கவலைகளை வெளிக்காட்டிக்கொள்ளும் ரகமில்லையென்றாலும் அவளது மௌனமும் இந்த யோசனையில் தோய்ந்த முகமும் வள்ளியை கவலைக்குள்ளாக்கியது.


அன்று சந்திரசேகரின் வீட்டிலிருந்து திரும்பியதிலிருந்தே இப்படித் தானிருக்கிறாள் அவளது எண்ணவோட்டத்தை கணிக்க அவரால் இயலவில்லை...சாப்பாட்டைத் தவிர வேறெந்த விஷயத்திலும் அவளை கட்டாயப்படுத்தியதில்லை அவளும் அப்படியொரு சந்தர்ப்பத்தை அவருக்கு அளித்ததில்லை...காரணம் அவளிடமிருந்த தெளிவு...ஒவ்வொரு காரியத்தையும் அடியாழம்வரை ஆராய்ந்து செயல்படும் திறன்...ஒரு பக்கம் மாதுவிற்காக வருந்தினாரென்றால் மறுபக்கம் தன்னை உடன் பிறவா சகோதரியை போல் அன்பு செலுத்திய சுந்தரியை எண்ணி கலக்கமடைந்தார்.


அன்பு அத்தகையது...இதில் உண்மையான அன்பு பொய்யான அன்பு என்று பிரிக்கவோ இல்லை அன்புக்கு அளவுகோள் வைக்கவோ இயலாது...சுந்தரியும் அதையேத்தான் செய்தார் அன்பு செலுத்துவதில் என்ன கஞ்சத்தனம் என்று அவர் அன்பு மழையை பொழிந்தார்...அதன் விளைவு இன்று அவரில்லாத வீட்டில் எல்லோரும் மழைக்காக காத்திருக்கும் பூமியைப் போலானர்.



இரண்டு நாட்கள் ஓடிவிட்டது…


அன்று காலையிலேயே கிளம்பி டைனிங் டேபிளிற்கு வந்த மாதுரியின் முகத்தையே பார்த்துக்கொண்டு பரிமாறிய வள்ளியால் ஒன்றும் கணிக்க முடியவில்லை காரணம் அவளது உணர்ச்சியற்ற முகம்...வள்ளியம்மா தன்னையே பார்த்துக்கொண்டிருப்பது புரிந்தாலும் தட்டிலேயே பார்வையை பதித்து உண்டு கிளம்பிவிட்டாள்.. அவளிடம் இப்பொழுது கேள்விகள் மட்டுமே...பதிலுக்காக காத்திருந்தாள்...அவள் தேடிய பதிலும் கிடைத்தது ஆனால் வேறுவிதமாக.


நான்கு நாட்களாக வேலை பழு காரணமாக மூச்சுவிடக்கூட நேரமில்லாமல் சுற்றிக்கொண்டிருந்தாள் சிந்து. மாதுரி ஊரிலிருந்து வந்து இரண்டு நாட்கள் ஓடிவிட்டன இருந்தும் அவளிடம் சகஜமாகப் பேச நேரம் கிட்டவில்லை.கிருஷ்ணாவோ அலுவலகத்திற்கு வரவேயில்லை அவனுக்கு அழைத்துப் பார்த்தால் அதுவோ ஸ்விச்ட் ஆஃப் என்றது சரி அவன் வீட்டிற்குச் செல்லலாமென்றால் அவள் வேதாவிலிருந்து கிளம்பவே மணி 7:30க்கு மேலாகி விடுகிறது காலையிலோ அந்த வாகன நெரிசலில் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு வருவதே பெரும்பாடாகயிருந்தது அவளுக்கு. இன்றும் அவள் முன்னிருந்த டேட்டாவிற்குள் மூழ்கியிருந்தவள் அங்கு மற்றவர்களிடையே இருந்த சலசலப்பை கவனிக்கவில்லை அந்த மணிதர் அவள் முன் வந்து நின்று ‘மிஸ்.சிந்து வாசுதேவ்’என்று அதிகாரத்வனியில் அவள் கவனத்தை கலைக்கும்வரை. தலையை நிமிர்த்தியவளுக்கோ வந்தவர் யாரென்று கிரஹித்துக்கொள்ளவே சில நொடிகள் தேவைப்பட்டது.

அவர் யாரென்று மூளையில் உரைக்க மரியாதைக்காக எழுந்து நின்று வரவேற்றவள் முதலில் மாதுரிக்கு அழைத்து விவரத்தை கூற அவளோ சில நிமிட யோசணைக்குப் பிறகு ‘சரி அவர உள்ள கூட்டிட்டு வா’ என்றுவிட இவளும் அவரை மாதுரியிடம் அழைத்துச் சென்றாள் பின்னே அவள்தான் தெளிவாக கூட்டிட்டு வா என்றாளே அதற்கு அர்த்தம் அவளும் வரவேண்டுமென்பதுதானே.


அவர் உள்ளே வர வரவேற்பாக தலையை மட்டும் அசைத்துவிட்டு சிந்துவிடம் திரும்பி


'QC பண்ணியாச்சா?’என்க


‘பண்ணியாச்சு மாதுரி ரிபோர்ட்ஸ்லாம் கேஷவ் கிட்டயிருக்கு நீங்க அப்ரூவல் குடுத்தா ப்ரொசீட் பண்ணிடலாம்’


‘சரி அப்போ…’என்று ஆரம்பித்தவள் ஒரு சில வேலைகளை பிறபித்துவிட்டு முடித்துக்கொண்டு வரும்படி சொல்ல அவளோ பொதுவான ஒரு தலையசைப்போடு அங்கிருந்து அகன்றுவிட்டாள்.


அவரோ அதற்காகவே காத்திருந்தவரைப் போல கடகடவென பேச ஆரம்பித்தார்.


‘என்ன மாதுகண்ணா இப்படி இளைச்சு போய்ட்டே’என்றவர் அவளது பார்வையை உணர்ந்து


‘அதுசரி நீ என்னைக்கு குண்டா இருந்திருக்க இப்போ இளைக்கறதுக்கு...வேதா உயிரோட இருந்திருந்தா இப்படியா விட்றுபா? ஹூம்ம்ம்…’ என்றவர் விட்ட பெறுமூச்சில் மருந்துக்கும் அக்கறையில்லை ஆனால் அப்படி காட்டிக்கொண்டார். அவளது கண்கள் அசையாமல் அவரது கண்களையே ஊடுறுவ அதில் சற்று தடுமாறியவர் பார்வையை வேறுபுறம் திருப்பிக்கொண்டு கர்மமே கண்ணாக


‘அவ மட்டுமிருந்திருந்தா உனக்கு எப்போவோ கல்யாணம் பண்ணி வச்சிருப்பா...ராணி மாதிரி இருந்திருப்ப ஆனா இப்ப…’என்றவர் இழுக்க அவளோ பார்வையை கொஞ்சமும் அகற்றாமல்


‘ஏன் நான் இப்பவும் ராணிதானே?’


‘என்னம்மா நீ வீட்ல காலாட்டிட்டு நினைச்சத நினைச்சநேரம் வாங்கிட்டு ராணியாட்டம் இருக்கது எங்க?...அத விட்டுட்டு எந்நேரமும் ஃபைலும் கையுமா சுத்துறது எங்க?’ என்றவர் சொல்ல அவளோ


‘அதனாலதான்...நான் ராணியாட்டம் இருக்கறதவிட ராணியாவே இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்’ என்க அவரோ இதற்குமேல் சுற்றிவளைத்தால் சரிவராதென்று


‘என்ன மாது இப்படி சொல்லிட்ட...உனக்குனு ஒரு குடும்பம் வேண்டாமா?நாளைக்கு ஒரு நல்லது கெட்டதுனா பார்த்துக்க?ராகவ் வேற கல்யாணம்னா அது மாது கூடத்தான்னு ஒத்த கால்ல நிக்கறான்.’


ஓ இதுக்குத்தான் இவ்வளவுமா என்று பார்த்தவாரே அவரிடம் ஏதோ சொல்ல வர அதற்குள் சிந்து உள்ளே வர அனுமதி கேட்கவும் சரியாயிருந்தது. அவளை உள்ளே வர சொல்லிவிட்டு அவள் கொடுத்த ஃபைலை வாங்கி அப்படி டேபிளில் போட்டவள் அவரிடம் திரும்பி


‘நீங்க இதத்தான் சொல்ல வந்தீங்கனா சாரி அம் நாட் இன்ட்ரஸ்டட் அன்ட் மோரோவர் எனக்கு நல்லது கெட்டது பாத்துக்க நிறைய பேர் இருக்காங்க...அப்படியே நான் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அது நிச்சயமா ராகவ் ஆ இருக்காது’ என்று அவள் அழுத்தம் திருத்தமாகக் கூற அவரது பொறுமையோ கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் பறந்துக்கொண்டிருந்தது.

அவளிடம் வேலை பார்ப்பவளின் முன் தன்னை இப்படி பேசுவதா என்றுக் கோபம் அவளிடம் காட்ட முடியாதில்லையா பின் காரியம் கெட்டுவிடுமே. தன்னைவிட மேலேயிருப்பவன் மிதித்தால் அவனை எதிர்ப்பதை விட்டு அவர்களை விட கீழே இருப்பவரிடம்தானே அவர்களது வீரத்தைக் காட்டுவார்கள்.சத்யமூர்த்தியும் அதற்கு விதிவிலக்கல்ல அவரும் அதையேதான் செய்தார்.


‘டீசன்ஸினா என்னன்னு தெரியாத...வில் யூ ப்ளீஸ் கெட் அவுட்’என்று கத்திவிட மாதுவோ


‘ஷீ வோன்ட்…’என்றாள் சற்று திமிராக


‘என்ன மாது நம்ம ஃபேமிலி மேட்டர் பேசும்போது ஸ்டாஃப் எல்லாம் எதுக்கு? உனக்கு யார எங்க வைக்கனும்னு தெரியல…’


‘எஸ்...யூ ஆர் ரைட்! தெரிஞ்சிரிந்தா உங்கள உள்ளயே விட்றுக்க மாட்டேன்…’என அவருக்கோ கொஞ்சநஞ்சம் மிச்சமிருந்த பொறுமையும் மொத்தமாகப் பறந்திருந்தது.


‘நீ யாருக்கிட்ட பேசறேன்னு தெரிஞ்சித்தான் பேசறீயா?’


‘ஓ நல்லா தெரியுமே தி க்ரேட் சத்யமூர்த்தி! ஃபாதர் ஆஃப் தறுதலை ராகவ் சத்யமூர்த்தி!’என்று எள்ளலாக உறைக்க அவரோ


‘ஓ அவன் தறுதலைன்னா நீ யாரு அப்போ? உன்ன பத்தி ஊருக்குள்ள என்ன பேசிக்கறாங்கன்னு தெரியுமா?...பெரிய இவ மாதிரி பேசற...ராகவ் உனக்கு வாழ்க்கை குடுக்கனும்னு நினைக்கறான் அவன போய்…’


‘ என்ன பேசிக்கறாங்கன்னு பேசச்சொன்ன உங்களுக்கே தெரியலன்னா எனக்கெப்படி தெரியும்?...என்னது வாழ்க்கை குடுக்கறான்னா?நீங்கள்ளாம் புரிஞ்சித்தான் பேசறீங்களா? இல்ல ஏதாவது பேசனும்மேன்னு பேசி வைக்கறீங்களா’


‘ஏய்ய்!!!’


‘ப்ச் ப்ச் என் பேரு ஏய் இல்ல மாதுரி ராஜஷேகர்!’


‘என்ன திமிரா என்ன பகைச்சிக்கிட்டு உன்னால இந்த ஃபீல்ட்ல சஸ்டெய்ன் பண்ண முடியுமா...உங்கப்பனாலேயே முடியல’என்று கோபத்தில் வார்த்தையைவிட்டுவிட அவரையே நேர்பார்வைப் பார்த்து


‘கரெக்ட் தான் எங்கப்பாவாலயே முடியல தான்...ஆனா நான் என் அப்பா அளவுக்கு நல்லவ இல்லையே மிஸ்டர்.சத்யமூர்த்தி’என்க அவரோ அவள் பதிலில் குழப்பமுற்று


‘அப்படினா?’ என்க அவளோ


‘அதான் நீங்க இவ்வளவு நாள் எனக்கும் எங்க அப்பாவுக்கும் செஞ்ச நல்ல விஷயத்துக்கு பரிசு தரலாம்னு முடிவு பண்ணிட்டேன்’ அவரோ அவளை இன்னும் குழப்பமாகவே பார்க்க அவள் அவ்வளவு நேரம் இவர்கள் சம்பாஷனையின் காரணம் புரியாமல் விழித்துக்கொண்டிருந்த சிந்துவிடம் திரும்பி


‘சிந்து அந்த கப்போர்ட்ல லெஃப்ட் சைட் கார்னர்ல இருக்கற ப்ளூ கலர் ஃபைல எடு’என்க அவளோ இன்னும் அதிர்ச்சி விலகாமல் இவளையே பார்த்துக்கொண்டிருக்க


‘போ சிந்து எடுத்துட்டு வா’ என்று மறுமுறை சொல்லவே அவள் நடப்புக்கு வந்து அவள் கேட்ட அந்த ப்ளூ ஃபைலை எடுத்து வந்தாள். மாதுரியோ அதை வாங்கி ஒரு அலட்சியமான பாவத்துடன் டேபிளில் போட அவரோ அவளை முறைத்துக் கொண்டிருந்தார்.


‘ஓ முறைக்கறீங்களா? அத பாருங்க பார்த்துட்டு கன்டின்யூ பண்ணுங்க’ என்று நக்கலாக உறைக்க சிந்துவோ இவள் ஏன் இப்படி வினோதமாக நடந்துக்கொள்கிறாள் என்றுதான் எண்ணத் தோன்றியது.பொதுவாகவே மாதுரி மற்றவர்களை மதிக்கத் தெரிந்தவள் ஆனால் அப்படிப்பட்டவளிடம் இவ்வளவு அலட்சியம் எப்படி? என்றுதான் நினைக்கத் தோன்றியது.


அவள் கொடுத்த ஃபைலை எடுத்துப் பார்த்தவருக்கோ அந்த ஏசியிலும் வியர்த்தது.அதை கவனித்த மாதுரியோ


‘என்ன சார் ஷுகர் பேஷன்ட்டா? டேப்லட் ஏதாவது வேணுமா?’ என்றாள் நக்கலாக அவரோ அதே பதட்டத்துடன்


‘இது...இதெப்படி உன்கிட்ட?’ என்க அவளோ


‘என்ன சார் இவ்வளவு நேரம் என்ன திட்டும்போது அவ்வளவு சரளமா வார்த்தை வந்தது இப்போ என்னாச்சு’


‘இது உன்கிட்ட எப்படி?’


‘ஹும் நீங்க என் எம்ப்ளாயீய தப்பா செய்ய சொல்லி பணம் குடுத்தீங்க...நான் உங்க எம்ப்ளாயீய சரியா செய்யச்சொன்னேன்…சிம்பிள்’என்றவள் விரல்களை ஆராய்ந்துக்கொண்டே சொல்ல அவருக்கானால் இதிலிருந்து எப்படி தப்புவது என்ற யோசனையிலிருந்தார். அவரையே கவனித்துக்கொண்டிருந்தவளோ


‘ரொம்பலாம் யோசிக்காதீங்க மிஸ்டர் சத்யமூர்த்தி…’என்று வலது கை வாட்ச்சை திருப்பி பாரத்தவள்


‘இது போக வேண்டிய இடத்துக்கு இப்போ போயிருக்கும்’என்க அவரோ


‘இது அந்த பயல அனுப்புனதுக்கா?இல்ல…’


‘நான்தான் சொன்னேனே நீங்க இதுவரைக்கும் எனக்கு செஞ்ச எல்லா நல்ல காரியத்துக்கும் சேர்த்து ஆனா இத இப்போவே குடுத்ததுக்கு காரணம் நீங்க கிருஷ்ணா விஷயத்துல தலையிட்டதுனாலதான்’


‘நீ இதுக்கு அனுபவிக்கப் போற மாதுரி…’


‘அய்யோ நான் பயந்துட்டேன்...போய் தப்பிக்கற வேலையை பாருங்க சார்’


அவளை வெறித்துப் பார்த்தவர் அந்த ஃபைலை தூக்கியெறிந்துச்சென்றார்.


அவர் சென்றதை பார்த்த மாதுரியோ அங்கிருந்த அவளது அப்பாவின் படத்தை நோக்கி ஒரு நிமிடம் கண்களை மூடி பின் திறந்தாள்.இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சிந்துவோ அவளது தோளைப்பற்றி


‘என்னாச்சு மாது? ஏன் இவ்வளவு கோவம்?கிருஷ்ணாவுக்கு என்ன?’ என்க அவளோ சற்று நிதானித்து


‘உன்கிட்ட நான் அப்புறம் சொல்றேன் சிந்து நான் இப்ப கொஞ்சம் வெளில போகணும் நீ பார்த்துக்கோடா’என்று கிளம்பிவிட்டாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top