ப்ரியசகியே 15

Advertisement

Preetz

Writers Team
Tamil Novel Writer
சகி-15





மறுநாளே வேலை விஷயமாக மாதுரி ஹைதராபாத் சென்றுவிட சிந்துவிற்கு தான் வேலை அதிகமாகிவிட்டது. அனுப்ப வேண்டிய சில மெயில்களையெல்லாம் அனுப்பிவிட்டு சிறிய டீ ப்ரேக்கிற்காக கஃபேட்டீரிய வந்திருந்தாள் சிந்து.

பாக்கெட்டிலிருந்த போன் லேசாக சினுங்க எடுத்துப்பார்த்தால் கிருஷ்ணாவிடமிருந்துதான் குறுந்தகவல் ஒன்று வந்திருந்தது ‘மாலை 6:30 காஃபி ஷாப்’ என்று அவளுக்கு ஓரளவு யூகிக்க முடிந்தாலும் சரி அவனே எதுவாகயிருந்தாலும் சொல்லட்டும் என்று விட்டுவிட்டாள்.


வேலையெல்லாம் முடித்துவிட்டு அவள் கிளம்பவே மணி 6:20 ஆகிவிட்டது. அவன் சொன்ன காஃபி ஷாப் கொஞ்சம் பக்கம்தான் என்றாலும் இவள் அங்கு செல்வதற்கு 6:30 மேலாகிவிட்டது வண்டியை வெளியே இடம் பார்த்து நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தால் ஒரு ஓரமாக இருந்த இருக்கையில் கிருஷ்ணாவும் ரகுவும் அமர்ந்திருந்தனர்.

இவளை பார்த்துவிட்ட கிருஷ்ணா கையாட்ட இவளும் அந்த டேபிளை நோக்கி நகர்ந்தாள்.


‘இதான் வர்ற நேரமா?’


‘இல்ல கொஞ்சம் வேலை இருந்தது அதான்...சாரி ஃபார் த டிலே’ என்று ரகுவிடம் கூறிவிட்டு அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்துக்கொண்டாள்.


‘என்ன ஆர்டர் பண்ணலாம்?’ என கிருஷ்ணா கேட்க


‘டேய்...காபி குடிக்கவாடா கூப்ட?’என்று கடுப்பாகி போனான் ரகு


‘இது என்ன உன்னோட காஃபி ஷாப்பா...ஏற்கனவே அந்த பேரர் இவனுங்க ஏதாவது ஆர்டர் பண்ணுவாங்களா மாட்டாங்களான்னு பாக்கறாரு இதுல இன்னும் லேட்டாக்குனா மனுஷன் கடுப்பாகி கழுத்த பிடிச்சி வெளில தள்ளிட போறாரு’ என அந்த பேரரை பார்த்த ரகுவிற்கு பகீரென்றானது


‘என்னடா இவர் பேரரா இல்ல பௌன்ஸரா? இவர் தள்ளுனா நாம தாங்குவோமா’


‘அதுக்குதான் சொல்றேன்’ என்றுவிட்டு அவன் மூன்று காபி ஆர்டர் செய்ய அதுவரை அமைதியாக இருந்த சிந்து கிருஷ்ணாவை பார்த்து


‘சரி சொல்லு கிருஷ்ணா எதுக்கு வர சொன்ன?’என்க அவனோ மிகவும் ரகசியமாக இருவரையும் அருகே அழைத்து


‘நாளைக்கழிச்சு என்ன நாள்?’


‘புதன் கிழமைடா’ என்ற ரகுவை பார்த்து கிருஷ்ணாவும் சிந்துவும் முறைக்க


‘சரிப்பா நான் எதுவும் சொல்லல நீயே சொல்லு’


‘நாளை மறுநாள் மாதுவோட பர்த்டே’ என்க ரகுவோ ‘ஆமாம்ல…’ என்றுவிட்டு ‘ஆனா கிருஷ்ணா மாது அத அவ்வளவா செலிப்ரேட் பண்ணமாட்டாடா’என்க சிந்துவும்


‘ஆமா கிருஷ்ணா ஹீ இஸ் கரக்ட்...மாது அவ்வளவா செலிப்ரேட் பண்ணமாட்டா வீட்ல கூட வள்ளியம்மாதான் ஏதாவது ஸ்வீட் செய்வாங்க மத்தபடி அவளா சொன்னாதான் தெரியும் அவளுக்கு பர்த்டேன்னு. ஆனா அங்கிள் இருக்க வரைக்கும் அவ பர்த்டேய ரொம்ப ஸ்பெஷலா கொண்டாடினாங்க ஓவ்வொரு வருஷமும் ஏதாவது ஒன்னு வித்யாசமாயிருக்கும். பட்...அதுக்கடுத்து சித்ரா ஆன்டீதான் ஏதாவது அவளுக்காக செஞ்சு எடுத்துட்டு வருவாங்க.’என


‘அதுக்குதான் உங்கள கூப்பிட்டேன் இதுக்கு முன்னாடி எப்படியோ தெரியாது பட் இந்த பர்த்டே அவளுக்கு ஸ்பெஷலா இருக்கனும்.’என அதற்குள் காபி வந்துவிட அதை பருகிக்கொண்டே திட்டமிட ஆரம்பித்தனர்


‘சிந்து நீ அவளோட ஸ்கூல்மேட்டில சோ நீ உங்க ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ இன்வைட் பண்ணு’


‘ரகு நீ உங்க காலேஜ் ஃப்ரெண்ட்ஸ கூப்பிடு’என


‘அதெல்லாம் ஓகேடா பட் இரண்டு நாள்ல எப்படி?’என்க கிருஷ்ணாவோ


‘நீ கூப்பிடு ரகு அவங்க கட்டாயம் வருவாங்க’என்றுவிட


‘சரி ஓகே…’


‘அதெல்லாம் ஓகே கிருஷ்ணா மத்த அரேஞ்ச்மென்ட்ஸ்லாம்?’என்று சிந்து வினவ

கிருஷ்ணாவோ


‘அத நான் பார்த்துக்கறேன் சிந்து’என்றுவிட்டான்.அதன் பிறகு மீதமிருந்த காபியை காலி பண்ணிவிட்டு மூவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்டிருந்த வேலையை பார்க்க கிளம்பிவிட்டனர்.


கிருஷ்ணா அந்த தோட்டத்தில் பார்ட்டிக்கான வேலையை துவங்க வேலனும் அவனுக்கு உதவியாக இருந்தார்.


மாதுரியை அழைத்துவர கிளம்பிக்கொண்டிருந்த ட்ரைவரை நிறுத்தி

‘அண்ணா மாதுவ கூப்பிடதானே கிளம்பறீங்க?’ என அவரும்


‘ஆமா தம்பி’


‘சரி அப்போ நீங்க கொஞ்சம் வேலண்ணனுக்கு ஹெல்ப் பண்ணுங்கண்ணா நான் மாதுவ கூட்டிட்டு வரேன்’ என்று அவரிடமிருந்து சாவியை வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டான் கிருஷ்ணா.


எப்பொழுதும் போல் ட்ரைவரை எதிர்பார்த்த மாதுரிக்கு கிருஷ்ணாவை கண்டதும் ஆச்சர்யமே.


‘ஓய்ய்ய்….என்ன வரவேற்பெல்லாம் பயங்கரமாயிருக்கு?’என


‘ஓ...நீ நான் உனக்காக வந்தேன் நினைச்சியா...நான் ஏர்போர்ட் எப்படியிருக்குனு பார்க்க வந்தேன்’


‘அடேங்கப்பா இது உலகமகா நடிப்புடா சாமி’என்க அதற்குள் அவனுக்கு அழைப்பு வர அவளிடம் திரும்பி

‘ஒரு நிமிஷம்’ என்றுவிட்டு சற்று தூரம் சென்று பேசிவிட்டு வந்தவனை பார்க்க அவளுக்கு வித்யாசமாகப்பட்டது. பேசிவிட்டு திரும்பி வந்தவன் ‘சரி வா கிளம்பலாமா?’ என்க


‘நீ ஏர்போர்ட்ட சுத்தி பார்க்கலயா?’


‘இல்ல இன்னொரு நாள் பிக்னிக் வரலாம்னு இருக்கேன் சோ இப்போ கிளம்பலாம்.’ என்று அவளை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான். வண்டியில் அமர்ந்தவள் அமைதியாக வராமல் ‘அங்க அது நல்லாயிருந்தது...இங்க இது டேஸ்டாயிருந்தது’ என்று இடைவெளி விடாமல் பேச கேட்டுக்கொண்டிருந்தவனுக்குதான் போதும் போதுமென்றானது பின்னே அவன் மதிய உணவை இன்னும் உண்ணவில்லை அவனிடம் வந்து சாப்பாடை பற்றியே பேசினால்….


‘நீ பிஸ்னஸ் விஷயமா போனியா...இல்ல சாப்பிட போனிய?’என்க அவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தவள் அவன் பக்கம் திரும்பி ‘ஏன் கிருஷ்ணா பொறாமையா இருக்கா?’என்க

அவள் திரும்பி உட்கார்ந்ததை பார்த்து ‘கோவப்பட்டுட்டாளோ’ என்று பார்த்தவன் அவளது பதிலில்


‘ஆமாமா அப்படியே பட்டுட்டாலும்’ என அவர்களது அரட்டை என்றும்போல் இன்றும் தொடர்ந்தது.

அவள் அப்பொழுதுதான் கவனித்தாள் கார் அவள் வீட்டிற்குச் செல்லாமல் சிந்துவின் வீடிருக்கும் வழியில் சென்றுக்கொண்டிருப்பதை. கவனித்துவிட்டும் அவள் அமைதியாகவே இருக்க கிருஷ்ணாவே ஆரம்பித்தான்


‘மாது எனக்கு இங்க பக்கத்துல கொஞ்சம் வேலை இருக்கு ஏன் எதுக்குனு கேட்காத கொஞ்ச நேரம் சிந்து வீட்ல இருக்கியா?’ என

அவள் எந்த கேள்வியும் கேட்காமல் ‘சரி கிருஷ்ணா பட் சீக்கிரம் வந்துடு’ என்று இறங்கிக்கொண்டவளை பார்த்து அவனுக்கு என்ன சொல்லவென்று தெரியவில்லை


‘ஏன் மாது உனக்கு எதுக்குனு கேட்க தோணலையா?’என்க


‘தோணலை கிருஷ்ணா’என்றவளின் பதிலில் நெகிழ்ந்துவிட்டவன் இறங்கி வந்து அவளை ஒருமுறை அனைத்து ‘தாங்க்யூ சோ மச் டா’ என்றுவிட்டு கிளம்பிவிட்டான்.


அவனுக்கு தெரியும் மாதுரியை போல் ஒரு பெண் இப்படி சொல்கிறாளென்றால் அவன் மேல் அவள் எந்தளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறாளென்று.


இங்கே இவன் அவள் பையையெல்லாம் எடுத்து வைப்பதற்குள் சத்தம் கேட்டு ரஞ்சனியே வெளியே வந்துவிட்டார்.


‘ஹேய் மாது!!!’ என்று அவளை கட்டிக்கொண்டவர்


‘இப்போதான் உனக்கு வழி தெரியுதா?’ என


‘அவளே இப்போதான் வந்துருக்கா டையர்டா இருப்பா உள்ள கூட்டிட்டு போய் பேசு ரஞ்சிம்மா’ என்ற வாரே வாசு வர. அவர்களிடம் சொல்லிக்கொண்டு கிருஷ்ணா கிளம்பிவிட்டான்.


‘சிந்து எங்கமா?’


‘ஆஃபிஸ் போயிருக்காடா’ என்ற பின்னரே கிருஷ்ணாவின் நினைவு வர ‘கூட்டு களவாணிங்க ஏதோ பண்ணுதுங்க’ என்று நினைத்துக்கொண்டவள்.


‘இன்னைக்கு உங்களுக்கு லீவா ஆன்டீ?’


‘இல்லடா நாங்க இன்னைக்கு காலைலதான் ஊர்ல இருந்து வந்தோம் சோ லீவ் போட்டோம்’


‘ஓ…’என இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்க கிட்சனிலிருந்து எட்டிப்பார்த்த வாசு


‘ரஞ்சி சாப்பாடு டேபிள்ல எடுத்து வைக்கவா?’என


‘சாப்பிடலாமா மாது?’


‘சாப்பிடலாமே…’என்று அவரிடம் சொன்னவள் அடுக்களை பக்கம் திரும்பி


‘இருங்க அங்கிள் நானும் வரேன் எடுத்து வைக்க’என வாசுவோ


‘அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் மாது நீ போய் ஃப்ரெஷாகிட்டு வா’ என அவளும் சரியென்று சென்றுவிட்டாள்.

-------------------------------------------------------------


சாப்பிட்டு முடித்தபின் அங்கிருந்த ஒரு சொஃபாவில் அமர்ந்துக்கொண்டு

‘வாவ்...செம்ம ஆன்டீ சான்சேயில்ல’என புகழ்ந்து தள்ள அங்கு வந்த வாசுவோ


‘ஏற்கனவே உங்க ஆன்டீ இரண்டு இன்ச் மேல பறக்குறா பாரு இன்னும் புகழ்ந்தேனா கையிலேயே புடிக்க முடியாது’ என


‘மாது அங்கிளுக்கு பொறாமை’ என


‘ஏன் ஆன்டீ?’


‘பின்ன நீ அவரோட சமையல் சூப்பர்னு சொல்லியிருந்தேல அத நான் ஓவர்டேக் பண்ணிடுவேனோன்னு பயம்’ என்க


அவரோ ‘நீயே சொல்லு மாது யார் சமையல் சூப்பர்?’ என அவளுக்கானால் வாயை குடுத்து மாட்டிக்கிட்டியே மாது என்றானது.


இருவரையும் பார்த்தவள் ‘ஆங்கிளோட காஷ்மிரி புலவ்வையும் ஆன்டீயோட அவியலையும் அடிச்சுக்க ஆளேயில்ல’என்று ‘ட்ரா’வில் முடித்துவிட்டாள்.


‘சரி விளையாடலாமா கொஞ்ச நேரம்?’ என


‘செஸ்ஸா?’ என்று ரஞ்சனி கேள்வியெழுப்ப


‘அதெல்லாம் சிந்துவ மாதிரி அறிவு கொழுந்துகள் விளையாடுறது நாம கேரம் விளையாடலாமா?...இல்ல ஓடி புடிச்சு விளையாடலாமா?’என்க


‘ நாம ஓடி புடிச்சு விளையாடினா பக்கத்து வீட்ல இருக்கவங்க டென்ஷனாகிடப்போறாங்க. வேணும்னா கொஞ்ச நேரம் கேரம் விளையாடிட்டு அப்புறமா ஷட்டில் விளையாடலாம்’என்ற ரஞ்சனியின் ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது.


5:30 வரை விளையாடிக்கொண்டிருந்தவர்கள் சிந்துவின் வண்டிச்சத்தம் கேட்டுதான் நிறுத்தினார்கள்.


வண்டியை நிறுத்திவிட்டு கையில் பெரிய பையுடன் வருபவளை பாரத்தவுடனே ரஞ்சனி அவளிடமிருந்து பையை வாங்கிக்கொண்டு.


‘விளையாடினது போதும் வாங்க காபி சாப்பிடலாம்’ என்றழைத்துவிட்டு சிந்துவின் பக்கம் திரும்பி கண்ஜாடை செய்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top