ப்ரியசகியே 12

Advertisement

Preetz

Writers Team
Tamil Novel Writer
சகி-12




‘ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்….’
மோடில் இருந்த கிருஷ்ணாவிற்கு எல்லாமே அழகாகத்தான் தெரிந்தது. மதிய வேலையில் அந்த சுட்டெரிக்கும் சூர்யனில் கூட சில்லென்று ஒரு காதல் படம் பார்த்த ஃபீலில் இருந்தான்.


அவனது சுபாவமே அதுதான் எப்பொழுதும் சிரித்த முகமாகவே இருப்பான் மற்றவர்களையும் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பான். இப்படிபட்ட கிருஷ்ணாவின் இன்றைய குதுகலத்திற்கான காரணம் அவனது MCom தேர்வுகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடைந்திருந்தது இனி ரிசல்ட் மட்டும்தான் பாக்கி. ஆனால் அவனுக்குதான் நன்றாக தெரியுமே எப்படி எழுதியிருக்கிறானென்று, எந்தளவு கலகலப்பானவனோ அந்த அளவு படிப்பாளியும்கூட. அதானால்தானோ என்னவோ அடுத்து என்ன என்ற கவலை கொஞ்சமும் இல்லாமல் ‘ ஃப்ரெண்ட பார்த்துட்டு வரேன்மா’ என்று கிளம்பிவிட்டவன் அவன் வீட்டில் இல்லை என்று தெரிந்தவுடன் பொறுமையாக வீடு திரும்பிகிறேன் பேர்வழி என்று ஊர் சுற்றிக்கொண்டிருந்தான்.


அப்படி அவன் வந்துக்கொண்டிருக்கும்பொழுதுதான்,

அதிக ஆள்நடமாட்டமில்லாத அந்த ரோட்டில் ஒரு கார் தாறுமாறாக வந்துக்கொண்டிருப்பதை பார்த்தான்.

அந்த புளிய மரத்தில் மோதிவிடும் என்றுதான் நினைத்தான் அதற்கேற்றார்போல் வண்டியும் இடிப்பதுப்போல் வந்து நின்றிருந்தது.


‘ அந்த ட்ரைவருக்கு என்ன புளியங்கா னா அவ்வளவு இஷ்டமா என்ன மரத்துமேலயே வண்டிய விடுறான்’ என்று பார்த்துக்கொண்டிருந்தவன் உள்ளிருந்து இறங்கிய பெண்ணை பார்த்துவிட்டு

‘ ஓ...விடுறான் இல்ல விடுறாள்’ என்று அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டிருக்க அவள் இறங்கிய விதமும் அதன்பின் கொஞ்சம்கூட நிற்காமல் நடந்துச்சென்றது எல்லாம் வித்தியாசமாகப்பட்டது ஏதோ சரியில்லை என்றுணர்ந்தவன் சிறிதும் யோசியாமல் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அவளை பின்தொடர்ந்தான்.

அவனுக்கு அவளை எந்த ரகத்தில் சேர்ப்பதென்று சுத்தமாக தெரியவில்லை உயரமாக இருந்தாலும் ஏனோ அவனுக்கு அவளை பார்க்க சிறுபிள்ளை போல்தான் தெரிந்தாள் எப்படி அழைப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தவன் அவள் திடீரென மடிந்தமர்ந்து அழவும் ‘ஓய்ய்ய்…’ என்றழைத்துவிட்டான் ஆனால் அவள் திரும்பாமல் போகவும்தான் லேசாக தோளில் தட்டினான். கண்களில் கண்ணீர் வழிய திரும்பி பார்த்தவளை பார்க்க அவனுக்கு என்னவோ போலிருந்தது.


அவன் ‘ஓய்ய்ய்…’ என்றழைத்தது அவளுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை ஏனென்றால் உள்ளே அடக்கி வைத்திருந்த அத்தனை கவலைகளும் கண்ணீராக வடிந்துக்கொண்டிருந்தது.

யாரோ தோளில் லேசாக தட்டவும்தான் இயந்திரகதியில் திரும்பினாள் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்ததால் முதலில் எதுவுமே தெரியவில்லை.அவளை பார்த்துக்கொண்டே இருந்தவன்

‘ எல்லாம் சரியாகிடும்ங்க இதுவும் கடந்துபோகும்’ என அவன் என்ன ஏது என்று கேட்டிருந்தால் கூட அவள் பதிலளித்திருப்பாளா என்பது சந்தேகமே ஆனால் அவன் ஆதரவாக எல்லாம் சரியாகிவிடும் என

‘எப்படி சரியாகும் இத என்னால சரி பண்ண முடியுமா ? எப்படி நான் சரி செய்ய போறேன்? ஒரு பக்கம் அப்பாவோட பேரு இன்னொரு பக்கம் நஷ்டத்துல ஓடுற கம்பனி... நான் அப்பா இறந்துட்டாங்கனு அழறதா இல்ல என்ன சுத்தி இவ்வளவு பிரச்சணைன்னு அழறதா? உனக்கு என்ன தெரியும் ரொம்ப ஈசியா சொல்ற சரியாகிடும்னு என்னால வாய்விட்டு அழக்கூட முடியல தலை வெடிச்சிரும்போல இருக்கு’ என்று தலையை பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டவளை பார்க்க அவனுக்கு பாவமாக இருந்தது.


அவள் மேல் கொஞ்சம் கூட கோபம் வரவில்லை அவளது கவலைகள் கோபமாக வருகிறது என்று புரிந்துக்கொண்டவன் தலையை பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தவளின் தோளில் ஆறுதலாக கை வைத்து சிறு அழுத்தம் கொடுத்தான்.


அவனிடம் கத்தியதாலோ என்னவோ இப்பொழுது கொஞ்சம் தெளிந்திருந்தவள்

‘அம் சாரி…. என்னது இயலாமை கோபம் அத உங்க மேல காட்டிட்டேன்’ என்றுவிட்டு மறுபடியும் கைகளால் தலையை தாங்கிக்கொண்டாள்.


‘பரவாயில்ல ஆனா நீ கட்டாயம் ஜெய்ப்ப…’ என


‘என்னது?...’


‘ ஆமாம் நீ கட்டாயம் ஜெய்ப்ப’


‘ எப்படி….நான் படிச்சு முடிச்சிட்டு இந்த பிஸ்னஸ்ஸ நடத்தனும்ங்கறதுதான் என்னோட ட்ரீம் ஆனா இப்படி ஒரு சிட்ச்சுவேஷன்ல இல்ல’


‘ சோ வாட்?... இதுதான் உனக்கான ச்சாலஞ்சே இதுல நீ ஜெய்க்கிறதுதான் உண்மையான வெற்றியே’


‘எப்படி சொல்ற?’


‘தெரியல பட் நீ ஜெய்ப்பேன்னு எனக்கு நம்பிக்கையிருக்கு’ என்று அவன் கூற


நம்பிக்கையென்ற வார்த்தையை கேட்டவுடன் அவள் நினைவிற்கு வந்ததெல்லாம் சந்திரசேகர் தான். நினைவுத்தெரிந்த நாளிலிருந்து ரொம்ப ஒட்டி உறவாடாவிட்டாலும் அவளுக்கென்று இருந்த சொந்தம் சித்தப்பா தான் ஆனால் அவரே அவளை நம்பவில்லையே. அவர் கோபத்தைவிட அவர் பேசிச்சென்ற வார்த்தையே வருத்தம் தந்தது. அப்படியிருக்கையில் யாரென்றே தெரியாத இவன் சொல்லும் வார்த்தைகள் அவளுக்கு கொஞ்சம் நம்பிக்கை தரவே


‘தாங்க்ஸ்’ என்றாள் அவனோ


‘ம்ஹூம்...இப்போ இல்ல நீ ஜெய்ச்சதுக்கு அப்புறம் சொல்லு’ என்க அதற்குள் அவனது போன் பாட அதை எடுத்து பார்த்தவன் அவள் சிறு புன்னகையுடன் தலையசைக்கவும் அவனும் அவளுக்கு சின்ன சிரிப்பை பரிசாக தந்துவிட்டு போனை எடுத்தான்.


-------------------------------------------------------------


‘நான் லைஃப்ல பண்ணதுலேயே பெரிய தப்பு அன்னைக்கு அவன் பேர கேட்காததுதான் சிந்து. அதுக்கடுத்து நான் அவன நிறைய இடத்துல தேடுனேன் ஆனா கிடைக்கல எப்பல்லாம் டௌன்னா ஃபீல் பண்றேனோ அப்பல்லாம் அங்கத்தான் போவேன் ஆனா அவன நான் அங்க அதுக்கடுத்து பார்த்ததேயில்லை.


நீ கேட்டியே நான் எங்க போனேன்னு...அன்னைக்கு எனக்கு காலைல கால் வந்திருந்தது ஷ்யாம் கிட்ட இருந்து அன்னைக்கும் நான் இவன தேடித்தான் போயிருந்தேன் ஆன…..’ என்று ஆரம்பித்தவள் சுந்தரியை சந்தித்த விதத்தையும் சொல்லிமுடிக்க அவளையே பார்த்துக்கொண்டிருந்த சிந்து அவளை அப்படியே அனைத்துக்கொண்டு


‘சாரி மாது ரொம்ப ரொம்ப சாரி உன்கூட எந்த சமயத்துல இருக்கனுமோ அப்போ நானில்லை...சாரிடா அன்னிக்கு அவன நீ மீட் பண்ணலன்னா….சாரி மாது’ என அவள் தோள்களில் ஈரத்தை உணர்ந்து


‘ச்சே ச்சே அப்படியெல்லாம் ஒன்னுமில்லை சின்னு...உன்ன மாதிரியும் கிருஷ்ணா மாதிரியும் ஃப்ரெண்ட்ஸ் இருக்கும்போது...நீங்களாம் என்கூடத்தான் இருக்கனும்னு கட்டாயமில்ல ஆனா எனக்குன்னு நீங்க இருக்கீங்கறதே தனி தைரியம் தான் சின்னு… நீ வெளியூர்ல இருந்தடா உனக்கு எப்படி தெரியும் விடுப்பா’ என


ஒரு நிமிடம் நிதானித்த சின்னு என்று செல்லமாக அழைக்கப்படும் சிந்து

‘ அதெல்லாம் ஓகே ஆனா இத யார்கிட்டயும் சொல்லி வைக்காத’ என


‘ஏன்பா?’


‘நானா இருக்க போயி என் ஃப்ரெண்டாச்சேன்னு நம்பினேன் ஆனா மத்தவங்களாம் அப்படி யோசிக்க மாட்டாங்கபா’


‘ஏன் அப்படி சொல்ற?’


‘நீனே யோசிச்சு பாரு நீ சொன்னது எல்லாமே எனக்கு ஃபேரி டேல் பார்த்தா மாதிரியிருக்கு’


‘மிராக்கில் டஸ் ஹேப்பன் சின்னு’


‘இத கேட்டதுக்கு அப்புறம் அத நான் நம்பறேன்’


‘ஹேய்….’


‘சரி அத விடு எப்ப வீட்டுக்கு வர ? அம்மா கேட்டுட்டே இருக்காங்க’ என அவர்கள் பேச்சு இரவு வரை நீண்டது.


‘ ஓய்ய் சாப்டுட்டு கிளம்பு’


‘ இல்லப்பா நான் காலையிலேயே சரியா சாப்பிடல நைட்டும் சாப்பிடலன்னா அம்மா டென்ஷனாகிடுவாங்க சோ நான் வீட்டுக்கு போயே சாப்டுக்கறேன், லேட்டாகிருச்சு

பை பை’ என்று சொல்லி முடிப்பதற்குள் ரஞ்சனி அழைத்துவிட்டார்.


‘அம்மாதான்’ என்றுவிட்டு அவரிடம்


‘மாது வீட்ல தான்மா இருக்கேன் கிளம்பிட்டேன்’ இவளிடம் திரும்பி


‘ அம்மா பேசனுமாம்’ என்று கொடுக்க வாங்கியவள்


‘ எப்படியிருக்கீங்க ஆன்டீ அங்கிள் எப்படியிருக்காங்க?’


‘நல்லாயிருக்கேன்மா அங்கிளும் நல்லாயிருக்காங்க...நீ எப்படி இருக்க?’


‘நான் சூப்பரா இருக்கேன் ஆன்டீ’ என்க


‘மாது இஸ் பேக் டூ தி பவிலியன்னா? உன்கிட்ட பேசி எவ்வளவு நாளாச்சு வீட்டுக்கு வாயேன்மா’


‘ கட்டாயம் வரேன் ஆன்டீ இந்த வீக் ஒரு சின்ன வேலையிருக்கு அத முடிச்சுட்டு வரேன்...பட் எனக்கு அங்கிளோட ஸ்பெஷல் காஷ்மிரி புலவ் வேணும்’ என்று அவர்கள் இருவரும் செல்லம் கொஞ்ச சிந்துவோ


‘ஓய்ய்...எனக்கு லேட்டாச்சு ட்ராஃபிக் வேற அதிகமாகிடும்’ என


‘ஓகே ஆன்டீ இங்க சிந்து கடுப்பாகுறா நான் என் நம்பர்ல இருந்து கூப்பிடறேன்’என


அவளோ ‘ஆமா அப்படியே கடுப்பாகிட்டாலும்’


‘அவகிட்ட கொஞ்சம் சொல்லு மாதும்மா சரியாவே சாப்பிட மாட்டேன்றா வேலை வேலைன்னு ஓடறா’ என அவர் பாஸிடமே முறையிட அவளும்


‘நான் சொல்றேன் ஆன்டீ நீங்க ஃபீல் பண்ணாதீங்க’ என்று போனை அனைத்துவிட்டு


‘ ஏன் சிந்து இப்படி பண்ற ? அம்மா எவ்ளோ வருத்தப்படுறாங்க பாரு’


‘நான் என்ன பண்ணேன்’


‘இந்த அப்பாவியா கேள்வி கேக்கற வேலையெல்லாம் வச்சுக்காதே’ என


‘ ஹேய் சரியா இருக்கறது தப்பா ?’


‘சரியாயிருக்கது தப்பில்லை ஆனா ஓவர் பெர்ஃவெக்ஷனிஸ்ட்டா இருக்கது தப்புதான்...நல்லவேலை நான் ஒரு இன்னஸென்ட்னு ஆன்டீக்கு தெரிஞ்சதால தப்பிச்சேன் இல்லைன்னா என்னதானே தப்பா நினைச்சிருப்பாங்க’ என வராத கண்ணீரை இவள் துடைக்க


‘ இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியல...நான் வள்ளியம்மாட்ட கேட்டா உன்னப்பத்தி டஸன் கணக்குல கம்ப்ளைன்ட் சொல்வாங்க நீ இன்னஸென்ட்டா’ இவள் சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே வள்ளியம்மா ஏதோ வேலையாக அந்தப்பக்கம் வர மாதுவோ


‘உனக்கு லேட்டாகிடுச்சு பாரு அப்புறம் ட்ராஃபிக்ல மாட்டிப்பே’ என்று அவளை அங்கிருந்து கடத்துவதுலேயே குறியாய் இருந்தாள்.சிந்துவும் அதிக நேரமாகிவிட்டதாள் ‘உன்ன அப்புறமா பார்த்துக்கறேன்’ என்று கிளம்பிவிட்டாள்.


என்னதான் அவள் அத்தனை சமாதானம் சொன்னாலும் அவளுடைய கஷ்ட காலத்தில் அவளுடனில்லாமல் போய்விட்டோமே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்தது சிந்துவிற்கு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top