ப்ரியசகியே உன் ப்ரியமானவன் நானடி -4

Advertisement

அத்தியாயம் 4:

பேருந்தில் ஜன்னலின் அருகில் அமர்ந்து வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் ஹர்ஷினி....

மதுரை ரயில் நிலையத்தில் இறங்கி இதோ இப்பொழுது தேனிக்கு செல்லும் பேருந்து பயணத்திலும் கூடவே தான் இருந்தான் ஹர்ஷா....

அவன் பின் பக்க சீட்டில் அமர்ந்து கொண்டு வர... ஹர்ஷினிக்கு முன் பக்க ஜன்னல் இருக்கை கிடைத்திருந்தது...
சிலு சிலுவென்று காற்று வீச பேருந்து பயணத்தை விரும்பியே அனுபவித்தாள் ஹர்ஷினி...

அருகில் இருந்த பெண்மணி பூக்கட்டி கொண்டுவர... அவருக்கு அருகில் இருந்த சீட்டில் அமர்ந்திருந்த சிறுவன் தன் கையிலிருந்த பொம்மையை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தான்.

பின்னாலிருந்து, "ஏலே கண்டக்டர் இதெல்லாம் பஸ்ஸா... இம்புட்டு அமைதியா வருது... ஒரு நல்ல பாட்டா போடு இல்லனா... பஸ் கண்ணாடியை ஒடச்சு புடுவேன் பாத்துக்கோ...டோய்" என்று ஒரு குடிமகன் சத்தம் போட...

"இதோ போட்டு விடுறேன் அண்ணே" என்று அந்த புது கண்டக்டர் பயந்து பிளேயரை ஆன் செய்து விட்டார்...

"உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்...
தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
அந்த வானம் அழுதாத்தான்
இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சிலபேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்...."

"ஹைய்யோ ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப் கண்டக்டர் அண்ணா ப்ளீஸ் சோகமான பாட்டு போடாதீங்க..." என்று ஹர்ஷினி இருந்த இடத்தைவிட்டு எழுந்து சத்தமாக சொல்ல...

"நல்ல பாட்டு தானே பாப்பா" என்று பேருந்தில் அந்த பாட்டை ரசித்து கேட்டுக் கொண்டிருந்த ஒரு சிலர் குரல் எழுப்பினர்...

"நல்ல பாட்டு தான் பட் பேட் டைமிங்... இப்போ இந்த பஸ்ல இருக்குற எல்லாருமே ஒரு நல்ல காரியத்துக்காக போகலாம்... இல்லனா சொந்தக்காரங்க வீட்டுக்குப் போகலாம்... இல்லனா ஜாலியா ஊர் சுத்த போகலாம்... வேலை முடிஞ்சு வீட்டுக்கு போகலாம் ஆர் வேலைக்கு போகலாம்...இப்படியே போறவங்க எல்லாரோட மனசுலயும் புத்துணர்ச்சி தான் இருக்கணும் ...சோகம் இருக்க கூடாது... நல்ல எனர்ஜெடிக் சாங் கேட்டா... மனசும் மூளையும் புத்துணர்ச்சி ஆகிடும்... இந்த சோகமான பாட்டு எல்லாம் நம்மளையும் நம்ம மூளையையும் சோகமா தான் இருக்கணும்னு நமக்கே தெரியாம செட் பண்ணி வச்சுடும்" என்று நீண்ட பிரசங்கம் பண்ண...

பின்னால் சீட்டில் அமர்ந்திருந்த ஹர்ஷாதித்தியன்
"இங்க வந்து கூட வாய க்ளோஸ் பண்ண மாட்டேங்கறா... இவள என்ன பண்ண" என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான்...

டிரைவர் கூட ...
"ஆமா ஆமா பாப்பா சொல்ற மாதிரி பாட்டை மாத்து..." என்று ஹர்ஷினிக்கு சப்போர்ட் பண்ண,
பேருந்திலும் சலசலப்பு ஏற்பட்டது.

சிலர் ஹர்ஷினிக்கு சப்போர்ட் பண்ண ஒரு சிலரோ அவளின் கருத்தை மறுத்தனர்....
கண்டக்டர் அமைதியாக்க முயற்சிக்க, சலசலப்பு ஓய்ந்தபாடில்லை...

பின் என்ன நினைத்தாரோ கண்டக்டர்...
வேறு பாட்டு மாற்றிவிட்டு அவரது இருக்கையில் அமர்ந்துகொண்டார்....

"நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா?
அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா?
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாது....
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே....
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் பொன்னுமணி..."

அந்தப் பாட்டின் இனிமையில் வாயை மூடிக் கொண்டனர் அனைவரும்....
அடுத்தடுத்த பாட்டு மனநிம்மதி தருவதாகவே அமைய யாரும் அவ்வளவாக பேசவில்லை...
"என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன் - உந்தன்
கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக்
கண்டதும் கண்டு கொண்டேன் - எந்தன்
கழுத்து வரை இன்று காதல் வந்து இரு
கண்விழி பிதுங்கி நின்றேன்..." என்ற பாடல் காதலன் படத்திலிருந்து இனிமையாக ஒலிக்க அனைவரும் அதிலேயே மூழ்கி இருந்தனர்.

பாடலை ரசித்துக்கொண்டிருந்த ஹர்ஷா...
"இவ என்ன ரொம்ப அமைதியாக இருக்கா?" என்று தன் இருக்கையிலிருந்து லேசாக எழுந்து அவளை எட்டிப் பார்க்க...

ஒரு பாடலுக்கு அத்தனை களேபரம் செய்து வைத்த ஹர்ஷினியோ ஜன்னலோரம் அமர்ந்திருந்ததால் காற்றுவாக்கில் தூங்கிப் போயிருந்தாள்....

அதைப் பார்த்த அவனின் இதழ்கள் "அழகான ராட்சசி" என்று தன்னை அறியாமலேயே முணுமுணுத்து விட்டு புன்னகைத்துக் கொண்டது.

தேனி பேருந்து நிலையம்....
மாலை ஐந்தரை மணி....
இருவரும் பேருந்திலிருந்து இறங்கி ஒரு டீக்கடையின் முன் நின்றனர். ஹர்ஷினி அன்றைய பயணத்தில் மிகவும் களைத்துப் போயிருந்தாள்.
அவளுக்கு டீ வாங்கி கொடுத்த ஹர்ஷா..
"உன்ன பிக்கப் பண்ண உன்னோட ப்ரெண்ட் வீட்ல இருந்து யாராவது வருவாங்களா?" என்று கேட்க

"ஆமா வருவாங்களாம்... உங்கள கூப்பிட யார் வருவா? ஹர்ஷா சார் " என்று பதில் கேள்வி கேட்டாள் அவள்...

"என்னோட ஃபிரண்ட் அழகேசன் வருவான் இப்பதான் மெசேஜ் பண்ணினான்...."

இருவரும் காத்திருக்க முதலில் ஹர்ஷாவின் உயிர் நண்பன் அழகேசன் தான் வந்து சேர்ந்தான்...

"மாப்புள நல்லா இருக்கியாடா..." என்று வண்டியை நிறுத்துவதற்கு முன்பே கேட்ட அழகேசன் வண்டியை நிறுத்திவிட்டு தன் நண்பனை தோளோடு அணைத்துக்கொண்டான்...

"நல்லா இருக்கேன்டா அழகு.." என்று ஹர்ஷாவும் பாசத்துடன் அணைத்துக் கொள்ள....

"ஏண்டா ஊருக்கு கூப்பிட்டா வரவே மாட்டியா ...உன்ன எவ்வளவு மிஸ் பண்ணினே தெரியுமா?" என்று அழகேசன் ஹர்ஷா வயிற்றில் குத்த,

நண்பனின் செல்லமான குத்தை வாங்கிய ஹர்ஷாவும் சிரித்துக்கொண்டே...
"இனி ஊர்லயே தாண்டா இருக்க போறேன்" என்று அவனின் தோளை தட்டி ஆறுதல் படுத்தினான்.

"அப்போ அப்பத்தா சொன்னமாதிரி சீக்கிரமே கல்யாணம் தான் உனக்கு" என்று சிரித்துக்கொண்டே சொன்ன அழகேசன் அப்பொழுதுதான் அவர்களின் அருகே நின்று இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்த ஹர்ஷினியை கவனித்தான்...

உடனே அவனின் உள்ளம் பதற்றத்தை வாடகைக்கு எடுத்து விட,
"டேய் மாப்புள சொன்னமாதிரியே ஒரு பொண்ண கூட்டிட்டு வந்துட்டியா... இது தெரிஞ்சா உன்னோட மாமன்காரன் மச்சான் காரன் எல்லாம் வெட்டருவா தூக்கிகிட்டு வந்துடுவாங்க டா?" என்று மெல்லிய குரலில் சொல்ல...

"டேய் மாம்ஸ் கொஞ்சம் அடக்கி வாசி.... போன்ல உன்னை கலாய்க்கிறதுக்காக பொய் சொன்னேன்டா..." என்றவன்,
ஹர்ஷினியின் புறம் திரும்பி...
"இவன் அழகேசன் என்னோட ஆருயிர் நண்பன் சின்ன வயசுல இருந்தே என் கூடயே தான் சுத்துவான்...." என்று அறிமுகப்படுத்தி வைத்தவன்...

"அப்புறம் இவங்க ஹேமஹர்ஷினி... மெட்ராஸ்ல பெரிய ரவுடி தாதா எல்லாருக்கும் தண்ணி காட்ற ஒன் உமன் ஆர்மி.... இப்போ கிராமத்து சைட் சுத்தி பார்க்க வந்திருக்காங்க" என்று பெரிய பில்டப் உடன் அழகேசனுக்கு ஹர்ஷினியை அறிமுகப்படுத்தி வைத்தான்....

'மாப்பு இந்தப் பாப்புவுக்கு இவ்வளவு பில்டப்பா' என்று ஹர்ஷாவிடம் முணுமுணுத்த அழகேசனை பார்த்து
"ஹாய் அழகேசன் சார்..". என்று அந்த களைப்பிலும் இளம் புன்னகையுடன் சிரித்தாள் ஹர்ஷினி...

அவளது முகத்தில் இருந்த குழந்தை தனத்தை பார்த்தவன்... அதில் கவரப்பட்டு....
"சார் மோர் பீர் எல்லாம் வேண்டாமா அண்ணனே சொல்லலாம்...." என்றான் சலுகையாக...

அதற்கு....
"அவ்வ் ....நான் அண்ணான்னு சொல்லனும்னா என்கிட்டே இருந்து மரியாதை எதிர்பார்க்கவே கூடாது" என்று தன் குண்டு விழிகளை உருட்டி கண்டிஷன் போட்டாள் ஹர்ஷினி.

அவளைப் பற்றி தெரியாமல் அழகேசன் வீராப்பாக....
"மரியாத என்ன மரியாத பெரிய புடலங்கா மரியாத... அதெல்லாம் யாருக்கு வேணும் பாப்பு... உன்ன பார்த்தா ஒரு தங்கச்சி ஃபீலிங் வருது... என்ன அண்ணா ன்னு கூப்பிடேன் பாப்பு"என்றவனிடம்,

"சரி நா அண்ணான்னு கூப்பிடுறேன் அண்ணா... அது என்ன பாப்பு அண்ணா... நான் என்ன பாக்க பாப்பா மாதிரியா இருக்கேன் அண்ணா... பட் என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் நான் பீப்பா மாதிரி இருக்கேன்ல சொல்றாங்க" என்று உதட்டைப் பிதுக்கி அவள் சொன்ன தினுசில் சிரிப்பு வந்துவிட்டது இருவருக்கும்....

"பாத்தீங்களா நீங்களும் சிரிக்கிறீங்க" என்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டவளிடம்...

"பாப்பு ன்னு சொன்னா பாப்பா ன்னு அர்த்தமில்லை..... தங்கச்சிய செல்லம்மா கூப்பிடுறது" என்ற ஹர்ஷா சிரித்துக்கொண்டே சொல்ல அழகேசன் அதை ஆமோதிப்பது போல் தலையசைத்தான்.

"ஓஹ்ஹ்.... அப்போ சரி" என்று ஹர்ஷினி தலை ஆட்டவும் அவர்களின் முன் கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது...

அதிலிருந்து கட்டபொம்மன் போல் உடற் கட்டுடைய ஒருவன் மீசையை முறுக்கிக் கொண்டு இறங்க ஹர்ஷா அழகேசன் இருவரும் இவனா? அதிர்ச்சியடைந்தனர்....

சென்னையில்.....

ஹர்ஷினி வீட்டில்...
துளசியின் முகமே சரியில்லை....
மாலையில் கோர்ட்டிலிருந்து வந்திருந்த சுகந்தன் மனைவியின் முகத்தைப் பார்த்து என்னவென்று விசாரிக்க.... அதற்காகத்தான் காத்திருந்தது போல.... மளமளவென்று மொத்த வருத்தத்தையும் கணவரிடம் ஒப்புவித்தார் துளசி.

"பாருங்க....இந்த குட்டி பண்ற வேலையை டூருக்கு போறேன்... அதுக்கு போறேன்... இதுக்கு போறேன்னு....ஊர் ஊரா சுத்த கிளம்பிட்டா ...எல்லாம் நீங்க கொடுக்கிற செல்லம் தான்... நேத்தே என் கிட்ட சொல்லிட்டு கிளம்பு ன்னு சொன்னேன்.....
நான் கோவிலுக்கு போன டைம் பார்த்து கரெக்டா வீட்டை விட்டு போய் இருக்கா....போன் பண்ணி கேட்டா அப்படி இப்படின்னு சொல்லி சமாளிக்குறா....நமக்கு தெரியாம ஏதோ ஒன்னு இந்த குட்டி பண்ணுது....
சரி ஊருக்கு போய் போன் பண்றேன்னு சொன்னா...இப்போ வரைக்கும் போன் பண்ணவே இல்ல...."
என்று புலம்பியவரை
பார்க்க சிரிப்பு தான் வந்தது சுகந்தனுக்கு.....
சிரித்தால்...இல்லத்தரசி .... இட்லி மாவு அரைக்கும் கிரைண்டரில் போட்டு ஆட்டி விடுவாளோ...!
என்ற பயத்தில் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டார் அந்த குடும்பத் தலைவா்...

"நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்...நீங்க எங்க கவனத்தை வச்சிருக்கீங்க..."

"ஆஆங்.... சொல்லுமா கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்....நீ சொல்லு மா"

"ம்ம்ம்....,அவ இருந்தாலும் சேட்டை பண்ணிக்கிட்டே...என்கிட்ட திட்டு வாங்குறா.... இல்லாட்டாலும் ஒரு மாதிரி தான் இருக்கு ... இன்னைக்கு காலையில இருந்து...பக்கத்து வீடு... எதிர் வீடு...ஏன்... தோட்டக்காரன் ஈவினிங் பேப்பர் போடுறவன் முதக்கொண்டு எல்லாரும் அவளை பற்றி விசாரிச்சுட்டாங்க... அந்த அளவுக்கு அவ எல்லாரோட மனசுலயும் ஈசியா இடம் பிடிச்சிடு வா... அவ இல்லாம கஷ்டமா இருக்கு... ஒரு கால் பண்ணி பேசினா என்ன....நான் போன் பண்ணாலும் நாட் ரீச்சபிள் ன்னு வருது" என்றார் தவிப்பாக...

தாயுள்ளம் கவலைப்படாமல் இருக்குமா என்ன...???

அவரின் தவிப்பை புரிந்துகொண்ட சுகந்தன் அவருக்கு ஆறுதலாக பேசினார்.
" நம்ம பொண்ணு பத்தி நமக்கு தெரியாதா...???
ஆமா அவளுக்கு குழந்தை மனசு அதுக்காக...அவள் ஃபுல்லா குழந்தையும் இல்லை...அவளுக்கு நல்லது எது...???கெட்டது எதுன்னு??? சொல்லி கொடுத்து தான் நாம வளர்த்து இருக்கோம்... கொஞ்சம் துடுக்காக பேசுவாளே... தவிர மனசுக்குள்ள எதையும் வச்சுக்க மாட்டா....அவளை பத்தி யாரும் குறை சொல்ல முடியாது...
அவ ஏதாவது நமக்கு தெரியாமல் செஞ்சாலும் அதுல ஒரு காரணம் இருக்கும்...."
என்று மனைவிக்கு எடுத்துக் கூறினார் அவர்...

மனைவியின் முகம் தெளிஈயாமல் இன்னும் குழப்பத்தோடு இருக்க...அதை கவனித்தவர்...
"அவள் பிரெண்ட்ஸ் கூட தானே போயிருக்கா ... நீ அவ பிரண்ட்ஸ் நம்பர் வச்சிருந்தா அவங்களுக்கு போன் பண்ணி கேளு "
என்றார்.

இது தனக்கு தோன்றவில்லையே..... என்று நினைத்த துளசி...சரி என்றுவிட்டு சற்றுத் தள்ளி சென்று கீர்த்தனாவிற்கு கால் பண்ணினார்.
சுகந்தனும் சிரித்துக்கொண்டே... சோபாவில் அமர்ந்து.... களைப்பில் கண்களை மூடிக்கொண்டார்
துளசி போன் பேசப்பேச...அவரின் முகம் பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தது....பேசி முடித்துவிட்டு கணவரிடம் வந்தவர்...
முகம் கோபத்தில் கல்லாக இறுகி இருந்தது...

அவரின் முகத்தை பார்த்து ஏதோ பிரச்சனை என்று உணர்ந்த சுகந்தன்.....

"என்னாச்சும்மா... குட்டி நல்லாருக்கா தான...ஒன்னும் பிரச்சனை இல்லையே.... "
என்று கேட்ட... கணவனை
முறைத்துப் பார்த்தவர்....

"உங்க பொண்ணு நல்லா பொய் சொல்ல கத்துகிட்டா.... நம்ம கிட்டயும் பொய் சொல்லிட்டு... ஃபிரண்ட்ஸ் கிட்டயும் பொய் சொல்லிட்டு....அப்டி எங்க தான் போனாளோ ...தெரியல"
என்று எள்ளும் கொள்ளும் வெடிக்கும் முகத்தோடு பேசிய மனைவியை பார்த்தவர்...மனதில் ஓடியது இதுதான்....

'அட இது என்னங்கடா நியாயம்... அவ ஏதாவது போட்டியில் ஜெயிச்சுட்டு வந்துட்டானா.... போதும்..... என்னோட பொண்ணு ஜெயிச்சுட்டா...என்னோட பொண்ணு ஜெயிச்சுட்டான்னு... தண்டோரா போடாத குறையா..பக்கத்து வீட்டிலிருந்து பெங்களூர் வரை போன் பண்ணி எல்லாருக்கும் சொல்லி வாய் அடிப்பா.... இதையே...தப்பு பண்ணிட்டானா போதும்...உங்க பொண்ணு இப்படி தான்.... உங்க பொண்ணு...உங்க பொண்ணு அப்படின்னு....சொல்லி நம்ம மேல எரிஞ்சு விழுறா....இவள என்ன சொல்ல....
அதுசரி என்னோட மாமனார் வளர்ப்பு சரியில்ல...இத நம்ம...பொண்ணு எடுக்கறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும் சுகந்தா....'
என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார் ஹர்ஷினியின் அப்பா....

"ஏங்க உங்கள தான் என்ன யோசிச்சுக்கிட்டு இருக்கீங்க...."
என்று மனைவி கேட்டதும்....

தன் யோசனையை கலைத்துவிட்டு....
"நம்ம பொண்ண பத்தி தான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன் துளசி...
நம்ம பொண்ணு ஏதாவது ஒரு நியாயமான காரணத்துக்காக தான்...நம்மகிட்ட இப்படி பொய் சொல்லி இருப்பா...."
என்று மகளை விட்டுக் கொடுக்காமல் பேச....

"எந்த காரணமா இருந்தாலும் ஒரு வயசு பொண்ணு அவள பெத்தவங்க கிட்ட சொல்லாம ஃபிரெண்ட்ஸ் கிட்ட கூட சொல்லாம எங்க போவா? எல்லாம் உங்கள தான் சொல்லணும் ...வளர்ப்பு சரியில்ல.... பொம்பள புள்ளைய கொஞ்சம் அடக்கமா தான் வளக்கணும்....நீங்களும் இருக்கீங்களே..."
என்று மொத்த கோபத்தையும் கணவரிடம் காட்டினார் துளசி.

"தோளுக்கு மேல வளர்ந்த பையன அடிக்க கூடாதுன்னு சொல்லுவாங்க....அதேமாதிரி தோளுக்கு மேல வளர்ந்த பொம்பள பிள்ளையையும் அளவுக்கு மீறி அடக்கி வைக்கக் கூடாது துளசி மா.... கொஞ்சம் ஃப்ரெண்ட்லியா பழகலாம்...நீ நம்ம பொண்ண கொஞ்சம் ஓவராதான் அடக்கணும்னு பார்த்த..."
என்று சுகந்தன் கூற....

"ஆமா ஆமா...உங்க பொண்ணு நான் சொன்னதை கேட்டு அடங்கி இருந்துட்டாலும்... காலேஜே முடிச்சிட்டா இன்னும் சின்னப் புள்ளை மாதிரி நண்டு சுண்டுங்க கூட எல்லாம் சேர்ந்துட்டு பட்டம் விட்டுட்டு திரியுறா... ஏதாவது கேட்டா....சினிமா வசனம் பேசி ஈசியா சிரிக்க வச்சிட்டு...
ஓடிடு வா...."
என்று துளசி மீண்டும் குறை கூற ...

"இருந்தாலும் நம்ம பொண்ண நீ கொஞ்சம் கண்டிப்பா தான் வளர்த்த....அவளுக்கு பாசமா சொன்ன புரிஞ்சிக்க போறா நீ எதுக்கு அரட்டி உருட்டுற... அதான் உன்கிட்ட எதையும் ஷேர் பண்ணாம அவளே முடிவு பண்றா..."

"வெளிய சாதாரணமா சுத்திட்டு இருக்குற காத்த... ஒரு பெட்டிக்குள் போட்டு அடைச்சு வெச்சா தான் அதோட அழுத்தம் அதிகமாகும்... அதே மாதிரி தான் கொஞ்சம் சுதந்திரமா பிள்ளைகள விடணும் அத விட்டுட்டு அவங்கள அடக்கி வைக்கணும்னு பாத்தா...அவங்க வாலுத்தனம் சேட்டை தான் அதிகமாகும்..."என்று மீண்டும் தன் மகளுக்கு பரிந்து பேசினார் சுகந்தன்....

"விட்டுக் கொடுக்க மாட்டீங்களே உங்க சீமந்த புத்திரிய.... "என்று சலித்துக்கொண்ட துளசி..
" சரி நீங்களே உங்க பொண்ண என்ன செய்றதுன்னு சொல்லுங்க பாக்கலாம் ... எனக்கு உண்மையா அவளை எப்படி ஹேண்டில் பண்ணனு தெரியல... நானும் ஸ்கூல்ல பிடி டீச்சரா வொர்க் பண்ணியிருக்கேன் ஆனா இப்படி ஒரு வித்தியாசமான பொண்ண நான் பார்த்ததில்ல... அவள கண்டித்தும் பாத்துட்டேன்... பாசமா சொல்லியும் பாத்துட்டேன்....
அதையும் தாண்டி அவள என்னதான் செய்றதோ... ஸ்கூலுக்கு போனா பசங்கள அடிச்சுட்டு வாரா....சரி காலேஜ் ஆவது நல்ல டிசிப்ளின் ஆன காலேஜ் பார்த்து சேர்த்துவிட்டா...அங்கேயும் எல்லார்கிட்டயும் வம்பு இழுத்துட்டு தான் வந்தா ... இதுல நீங்க வேற அவள கராத்தே கிளாஸ் அனுப்பி வச்சீங்க... ஏற்கனவே அவ வாய் இங்கே இருந்து...கன்னியாகுமரி வரப்போகும்......இதுல சண்டை போட கத்துக்கிட்டதும் மினி ரவுடி மாதிரி திரியுறா.... அவள அடக்காமா விட்டா எத்தனை சண்டைய வீட்டுக்கு இழுத்துட்டு வருவானு தெரியுமா? நீங்க ஜாலியா கோர்ட்டு கேஸ் இருக்குன்னு எஸ்கேப் ஆகி போயிடுவீங்க... ஆனா அவ கொண்டு வர்ற பஞ்சாயத்தை தீர்த்து வைக்கிறது நான் தானே... எனக்குதான் அந்த கஷ்டம் தெரியும்"
என்று கோபத்துடன் பொரிந்து தள்ளினார் துளசி.

கோர்ட்டில் அழகாக வாதாடும் சுகந்தனுக்கு தன் மனைவி துளசியிடம் வாதாட முடிவதில்லை.....

அதனால் துளசி சொல்வதை கேட்டுக் கொண்டு அமைதியாகவே இருந்தார் சுகந்தன்....

கணவரின் முகத்தில் இருந்த வருத்தத்தை கண்டதும் சற்று கோபத்தைத் தள்ளிவைத்து விட்டு,
"இந்த பொண்ண வச்சுட்டு என்ன தாங்க பண்ண மனசு படபடனு அடிக்குது... எங்க போனாளோ தெரியலையே போன் கூட நாட் ரீச்சபிள் னு வருது என்ன பண்ண இப்போ?" என்று கலங்கிய மனைவியை பார்த்தவர்...

"காலையில முடியும் வெயிட் பண்ணலாம் துளசி... அதுக்கப்புறம் என்ன செய்யன்னு பார்ப்போம் நம்ம பொண்ண பத்தி நமக்கு தான் நல்லா தெரியுமே? அவ பத்திரமா தான் இருப்பா... கண்டிப்பா காலையிலேயே போன் பண்ணுவா பாரு" என்ற மனைவியை தேற்றினார் அவர்... அவருக்கும் உள்ளுக்குள் குறுகுறுப்பு தான்...
 
"டேய் மாப்புள என்னால் நம்பவே முடியலடா உன்னோட எதுத்த வீட்டுக்கு தான் அந்த ஹர்ஷினி புள்ள வந்து இருக்கா ... "

"ஆமாடா மாம்ஸ் ட்ரெயின்ல என்கிட்ட சுகன்யான்னு ஒரு ஃபிரண்ட் வீட்டுக்கு வந்து இருக்கிறதா தான் சொன்னா.. பட் அது நம்ம கனின்னு நினைக்கல டா..." என்றான் ஹர்ஷா யோசனையாக...

"ஓஓ... ஆனா ஒண்ணு மாப்புள அந்த கட்டதுரை ஹர்ஷினி புள்ள நம்ம பக்கத்துல நின்னதுக்கே என்னா முறைப்பு முறைக்கிறான் ... இனி என்னலாம் ஆகப்போகுதோ..."

"ப்ச்ச் அவ குழந்தை மாதிரிடா... என் மேல இருக்கிற கோபத்துல அவளை எதுவும் சொல்லிடக்கூடாது..." என்று வருத்தமாக சொன்னான் ஹர்ஷா

"சரி விடு டா மாப்புள ...என்ன இருந்தாலும் கனி புள்ள ஃபிரண்டு தானே பாப்பு ...அதனால அந்த புள்ளய ஒன்னும் சொல்ல மாட்டான்யா..." என்ற அழகேசன் ஹர்ஷாவை தன் பைக்கில் ஏற்றிக்கொண்டு வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான்....

இங்கு காரில் பயணம் செய்து கொண்டிருந்த ஹர்ஷினி.... கோபத்துடன் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தவனிடம்...

"சார் உங்க பேர் என்னது நீங்க எத்தனை வருஷமா சுகா வீட்டில டிரைவர் வேலை பாக்குறீங்க ? சூப்பரா வண்டி ஓட்டுறீங்க..."
என்று பாராட்டியவளை எரிப்பது போல் பார்த்தவன்...

"என்ன பாத்தா டிரைவர் கணக்கா இருக்கா..." என்று உறுமலுடன் கேட்க,

திருதிருவென்று முழித்த ஹர்ஷினி,
"பின்ன நீங்க டிரைவர் இல்லையா?சார்" என்று மீண்டும் அதையே கேட்க...

கோபத்துடன் ஏதோ சொல்ல வந்தவன் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு...
உம்மென்ற முகத்துடன்,
"இது என்னோட கார் நான் கனியோட அண்ணா கார்த்திக்..." என்றான் அவன்...

"ஓஹ்ஹ்... சாரி சாரி சார் ..."என்று சொன்ன ஹர்ஷினி... "வெள்ளை வேட்டி சட்டை போட்டு இருக்கீங்களே கண்டிப்பா நீங்க அரசியல்வாதி தானே... எந்த கட்சி நீங்க?" என்று மீண்டும் வாயை விட்டு அவனின் முறைப்பை பரிசாக வாங்கிக் கொண்டாள்...

"ச்சே... சுகா நீ எவ்வளவு சிரிச்ச முகமா இருப்ப... உன் தடிமாடு அண்ணே எதுக்கெடுத்தாலும் முசுடு மாதிரி முறைக்கிறான்.... ஊருக்கு போறதுக்குள்ள இவனுக்கு பூஜைய போடணும் ...அப்பதான் இந்த ஹர்ஷினி யாருன்னு இந்த தடி மாடுக்கு புரியும்" என்று மனதிற்குள் வெகுண்ட ஹர்ஷினி உதட்டைப் பிதுக்கிக் கொண்டு தான் வந்தாள்.

ஆனால் கார்த்திக் என்றழைக்கப்படும் கட்டதுரை அவளை கண்டுகொள்ளவே இல்லை...

மற்ற நேரமாக இருந்தால் கூட தன்மையாக சொல்லியிருப்பானோ ? என்னவோ ? ....

ஆனால் அவனின் ஜென்ம விரோதியான ஹர்ஷாவிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த பெண்ணிடம் எங்கிருந்து அவன் பொறுமையாக பேச....

கார்த்திக்கின் கார் மெயின் ரோட்டில் இருந்து ஒரு சிறிய சாலைக்கு திரும்ப ...அந்த இருட்டிலும் இருபுறமும் மரங்கள் அடர்ந்த வளர்ந்து இருக்கிறது என்று தெரிந்தது...

வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்த ஹர்ஷினிக்கு
தூரத்தில் வெளிச்சம் தெரிய அதை உற்று கவனித்தாள். அவள் கார் வெளிச்சத்தில் அருகே சென்றவுடன் வயல்வெளியில் நடுவில் ஒரு ஒரு பெரிய வேப்பமரம் சேலையால் சுற்றிக் பட்டிருக்க... அதன் அடியில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது...
அதனருகில் மங்களகரமாக நின்றுகொண்டிருந்தாள் ஒருத்தி...

முகம் முழுவதும் மஞ்சள் பூசி பெரிய குங்குமப் பொட்டிட்டு தனது தீர்க்கமான விழியால் காரில் இருந்த ஹர்ஷினியை பார்த்து மர்மப் புன்னகை புரிந்தாள். அவளிடமிருந்து கண்களை பிரித்து எடுக்காமல் கார் நகர்ந்தாலும் தலையை திருப்பிப் பார்த்துக் கொண்டே வந்தாள் ஹர்ஷினி.

அவளின் தோற்றம் கண்ணுக்கு தெரியாத தொலைவில் வந்ததும்தான் சுயநினைவு அடைந்த ஹர்ஷினி ஏதோ ஆழ் கிணற்றுக்குள் விழுந்த உணர்விலிருந்து விழித்தாள்...

"எதுக்கு அந்த அக்கா என்ன பாத்து சிரிச்சாங்க..." என்று ஹர்ஷினி நினைக்கவும் கார் ஊருக்குள் வந்திருந்தது....

தனது யோசனையை புறந்தள்ளி விட்டு மீண்டும் வாய் பார்க்க ஆரம்பித்தாள் ஹர்ஷினி.
அவள் விரும்பி செல்ல ஆசைப்பட்ட கிராமம் அல்லவா...?

ஊரின் பெரும்பான்மையான குடிசை வீடுகள் அரசாங்கத்தின் உதவியால் கான்கிரீட் கட்டிடமாக கட்டப்பட்டிருக்க... கூரை வீடுகள் அவ்வளவாக இல்லை முன்பக்கம் மட்டும் சில வீடுகளில் கூரையால் வேயப்பட்டிருந்தது.... சில வீடுகள் பாரம்பரியமாக ஓட்டு வீடுகள் ஆகவே இருந்தது ஹர்ஷினி அதையெல்லாம் திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டுவர... கார்த்திக்கின் கார் ஒரு பெரிய ஓட்டு வீட்டின் முன் இருந்த வேப்ப மரத்தின் அடியில் நிறுத்தப்பட்டது.

அவனின் கார் சத்தம் கேட்டதும் அந்த பாரம்பரியமான பெரிய வீட்டில் இருந்து தோழியை காணும் ஆவலுடன் தடதடவென்று கொலுசு சத்தத்துடன் ஓடிவந்தாள் சுகன்யா என்னும் கனி....

"அடியேய் ஆடு காளி கழுத பொட்ட புள்ள பூமி அதிர்ற மாதிரி ஓடாத... ஓடுற கால ஒடச்சி அடுப்புல வெச்சுடுவேன்டியே" என்று வெளித் திண்ணையில் அமர்ந்து வெற்றிலை இடித்துக் கொண்டிருந்த பூமணி அப்பத்தா அதட்டவும் தான் ஓட்டம் குறைந்தது. ஆனால் ஆவல் குறையவில்லை வேக எட்டுக்களுடன் நடந்த சுகன்யா ஹர்ஷினி காரிலிருந்து இறங்கவும் ஹர்ஷி என்று அவளை இறுக அணைத்துக் கொண்டாள்.

"அடியேய் போதும்டி போதும்டி பாயாசத்தை ரொம்ப கொட்டாத" என்ற ஹர்ஷினி,
அவளின் காதிற்குள்,
"விடு சுகா உன்னோட தண்டபாணி அண்ணன்காரன் பின்னாடி நின்னு முறைக்கிறான் பாரு" என்று திரும்பாமலே சொல்ல...

அவள் சொன்னதுபோல் கார்த்திக் இருவரையும் முறைத்துக் கொண்டு நின்றிருந்தான்....

அதைப்பார்த்த சுகன்யா, "ஏய் எப்படி டி கரெக்டா சொன்ன?" என்று ஆச்சரியமாக கேட்க...

"ஹான்..உன்னோட நொண்ணன் நா ஏத்திட்டு வந்ததிலிருந்து அதாண்டி பண்றான்... நான் ஊருக்கு போறதுக்குள்ள அந்த தண்டபாணி மண்டைய பொளக்குறேன் பாரு" என்றால் ஹர்ஷினி கடுப்பாக....

"ஏய் அப்படி எல்லாம் சொல்லாத ஹர்ஷி ....அண்ணா கொஞ்சம் கோபக்காரர் ஆனா நல்லவர்தான்... புதுசா வந்தவங்க கிட்ட அப்படி எல்லாம் நடந்துக்க மாட்டாரே" என்றாள் யோசனையாக...

"அடியே நான் என்ன பொய்யா சொல்றேன்... என்ன நம்ப மாட்டியா நீ" என்று ஹர்ஷினி சுகன்யாவை முறைக்க....

"இப்போ வீட்டுக்குள்ள போக போறீங்களா? இல்ல வெளிய நின்னு கொஞ்சப் போறீங்களா?" என்ற கார்த்திக் கடுப்புடன் கேட்கவும்....
இருவரும் வீட்டிற்குள் சென்றனர்...

"என்ன இவ லக்கேஜ் எடுத்துட்டுப் போகாம போறா..." என்று கடுப்பான கார்த்திக் அவள் விருந்தாளி என்பதை நினைவிற்குக் கொண்டு வந்து எரிச்சலுடன் அவளது லக்கேஜை காரிலிருந்து எடுக்கவும் ....அவர்கள் எதிர் வீட்டில் பைக் வந்து நிற்கவும் சரியாக இருந்தது....
ஹர்ஷாவை பார்த்ததும் காரின் பின்னால் மறைந்தது போல் நின்று கொண்டான் கார்த்திக்...
அழகேசன் வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்த ....ஹர்ஷாதித்யன் அதில் இருந்து ஸ்டைலாக இறங்கினான்...

'ஜீன்ஸ் பேண்ட் டி ஷர்ட் போட்டு வந்து ரொம்பத்தான் பந்தா காட்டுறான் ... ஒருவேள எல்லாரையும் கவுக்க தான் திரும்பவும் ஊரிலிருந்து வந்து இருக்கானா....' என்ற தன் எண்ணத்தில் மூழ்கியவாறே அவனையே கவனித்து கொண்டிருந்தான் கார்த்திக்.

அழகேசன் பைக் சத்தம் கேட்டதுமே
ஹர்ஷாவை வரவேற்க.... அவனது அப்பத்தா, அம்மா, அப்பா சித்தி சித்தப்பா அவனின் சகோதரிகள் அவர்களின் குழந்தைகள் கணவன்மார்கள் என்று ஒரு கூட்டமே வாசலுக்கே வந்து நின்று நெடிய மூன்று வருடங்கள் கழித்து சொந்த ஊருக்கு வந்தவனை ஆசை தீர பார்த்து கண்கலங்கி விட்டு பாச மழையைப் பொழிந்தனர்....
அவர்களின் பாசத்தில் எப்பொழுதும்போல் கரைந்து தான் போனான் ஹர்ஷா...

"எப்பா சாமிகளா அவனே களைச்சு போய் வந்து இருக்கான்... அவன வெளிய நிக்க வச்சு குடும்பத்தோடு சேர்ந்து கும்மி அடிக்காம கொஞ்சம் உள்ளார விடுங்க"என்று அழகேசன் சொன்னதும் தான் ஹர்ஷாவை உள்ளேயே அழைத்தனர்.... இல்லையென்றால் விடிய விடிய வெளியில் நின்று பாசத்தை தான் பொழிந்து இருப்பார்கள்...

நண்பனின் கூற்றில் சிரித்த ஹர்ஷா வீட்டிற்குள் செல்வதற்கு முன் எதிர் வீட்டை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு தான் உள்ளே சென்றான் ...
காருக்கு பின்னால் நின்ற கார்த்திக்கை அவன் பார்க்கவில்லை....
"எதுக்கு துரை இத்தனை வருஷம் கழிச்சு இங்கன வரணும்... வந்தது மட்டுமில்லாம என் வீட்ட பார்த்துட்டு போகணும்..." என்று கடுப்பாகிய கார்த்திக் ஹர்ஷினி சூட்கேஸ் அடங்கிய பையை பயங்கர வேகத்துடன் இழுத்துக்கொண்டு உள்ளே சென்றான்......

அதிலிருந்து அவளின் சின்சான் கீ செயின் அறுந்து கீழே விழுந்ததை அவன் கவனிக்கவில்லை போலும்....
கவனித்து இருந்தால் பின்னால் நடக்கப் போகும் அசம்பாவிதங்களை தடுத்திருக்கலாம்....

கார்த்திக் வீட்டிற்குள் நுழையும்போது...ஹர்ஷினியின் கணீரென்ற குரல் அவ்வீட்டில் எதிரொலித்தது...

"ஏய் கிழவி....என்ன கொழுப்பா பல்லில்லாத உன்னோட வாயில பல்லாங்குழி விளையாடுவேன் பாத்துக்கோ ..."

ஹர்ஷினியின் இத்தகைய மரியாதை இல்லாத பேச்சில் கார்த்திக்கின் பொறுமை பறந்தது.... கோபத்துடன் அவள் அருகில் சென்றான்..

தொடரும்....

ப்ரியசகியே உன் ப்ரியமானவன் நானடி:love:

போன யூ டி ல லைக்ஸ் கமெண்ட்ஸ் பண்ண எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி....:):)
 
laksh14

Well-Known Member

hahaha superr epi
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top