பொதிப்பருவம்

Kshipra

Writers Team
Tamil Novel Writer
#1
இந்த மாதிரி ஒரு கதைக் களத்தோடு உங்க எல்லாரையும் சந்திப்பேன்னு நான் நினைக்கவேயில்லை..பிளானும் செய்யவே இல்லை.

முதல் காதல் பற்றி எழுதணும்னு ஆசை இருந்திச்சு அது இப்ப ஒரு மாதிரி நிறைவேறியிருக்கு.
கதைக்குப் பெயர் “பொதிப்பருவம்” இந்தப் பெயரைப் பற்றி எனக்கிருந்த சந்தேகங்களை இங்க கதை வாசிக்க வர்ற ஒரு வாசகிதான் தீர்த்து வைச்சாங்க.
அதை உங்களோட ஷேர் செய்யறேன் அண்ட் thanks to that reader.

"pothi naa nellu kathir motu maathiri irukum paruvam........ appuram udainthu kathir vara aarambikkum….."

இந்தக் கதைலே அந்தப் பருவத்திலே இருக்கற இரண்டு பேருக்கும் நடுவுலே ஏற்படற முதல் உணர்வு புரிப்படாம,
அதை புரிந்து கொள்ள வாய்ப்பு அமையா வாழ்க்கை வழி மாறி போகுது. சில வருஷங்களுக்குப் பிறகு அவங்க இரண்டு பேரும் அந்த உணர்வு உண்மையா?
அது அடுத்தவங்களுக்கும் ஏற்பட்டதா அப்படிங்கற கேள்விக்கு விடை தேடறாங்க. அந்த தேடல்தான் இந்தக் கதை.

முதல் மொட்டு விரியற உணர்வு Special.
அந்தப் பருவத்தை தாண்டி வந்தவங்க, அந்த உணர்வைத் தொடர முடியாதவங்க அவங்க மனசோட ஒரு மூலைலே அதைப் புதைச்சு வைச்சிருப்பாங்க.
இந்த மாதிரி ஒரு special, தனிப்பட்ட உணர்வை டிரான்ஸ்ஃபர் செய்ய முடியுமா?
அந்தக் கேள்விக்கு பதிலைத் தேடித்தான் இந்தக் கதையை எழுத ஆரம்பித்தேன்.
கொஞ்சம் research..நிறைய gossip, discussion தான் கதைக்குப் பேஸ்.

டெக்னாலஜினால நம்ம தினசரி வாழ்க்கைலே நிறைய மாற்றங்கள் ஏற்படறதைப் பார்க்கறோம்.
Siri, alexa virtual அஸிஸ்டெண்ட்லேர்ந்து virtually real neonக்கு வந்திருக்கோம்.

ஆசை, பேராசை, பாசம், நேசம், கோபம், ஆத்திரம், காதல், மோகம், கருணை, பரிதாபம் இந்த மாதிரி நுண்ணிய மனித உணர்வுகளை அல்காரித அடைப்புக்குறியினுள் அடைக்க முடியாதுன்னு நான் நினைக்கறேன். ஆனா அடைக்க முடியும்னு நம்ம அறிவியல் வளர்ச்சி ஆதாரத்தோடு சொல்லுது.
இந்தக் கருத்து பேதம் ஏற்படுத்திய விளைவுதான் இந்தக் கதை.

மூன்று விஷயத்தை வைச்சு கதையை எழுதியிருக்கேன்.

Thoughts ….>Bots…>Gods

காலனை வென்ற, காலத்தை வெல்ல நினைப்பவன், அவனின் மறுபாதி…அவர்கள் இருவர் பற்றிய கதை இது..
This is the story of Mrityun jay and Shambhavi.
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement