பூவே வாய் திறவாயோ - 05

Advertisement

தாயும் மகளும் பேசி கொண்டிருக்க "பாப்பா" என்று வெளியில் இருந்தபடி சந்திர சேகர் குரல் கொடுக்க "இதோ வந்துட்டேன்ப்பா" என்று வேகமாக சென்றவள் "இந்தாடா இத கொண்டு போய் அம்மாகிட்ட கொடு நா சரோஜா ஆன்ட்டி வீடு வரைக்கும் போய்ட்டு வறேன் அப்றம் அம்மாவ சீக்கிரம் சமைக்க சொல்லு ரொம்ப பசிக்கிதுடா மதியம் கூட சரியா சாப்பிடல" என்று கூற

"அப்டின்னா குளிச்சிட்டு சாப்ட்டுட்டு போக வேண்டியது தானேப்பா வந்தவோடனே போகனுமா" என்றதும் "மதியமே அங்கிள் கால் பன்னாருடா நான் தான் வேலை இருக்கு நைட்டு வந்து பேசிக்கலாம்னு சொன்னேன் மணி எட்டாச்சு இன்னும் கொஞ்ச நேரத்துல அங்கிள் வேலைக்கு கிளம்பிருவாறு அதான் போய் பாத்து பேசிட்டு வந்துடுறேன்" என்று கூற

"அப்பா சீக்கிரம் வாங்க இன்னைக்கு என்னோட சமையல் உங்களுக்காக தான் சாப்பிடாமா வெய்ட் பண்ணிட்டு இருக்கோம்" என்று கூற

"அப்டியாடா என்னோட தங்கம் இரு நா பேசிட்டு வறேன்" என்று கூறி சென்று விட "அம்மா இந்தா அப்பா கொடுக்க சொன்னாரு" என்று நீட்ட வாங்கி பிரித்து பார்த்தவரின் உதட்டில் புன்னகை தவழ்ந்தது "என்ன அரு சிரிக்கிற அளவுக்கு உள்ள என்ன இருக்கு" என்று வாங்கி பார்க்க எத்தனித்தவளை "ஏய் சும்மா இருடி வாலு உனக்கு இது தேவையில்லாதது உன்னோட வேலைய மட்டும் பாரு" என்றவர் பிரிட்ஜ் மேல் வைத்து விட்டு மீண்டும் தன் பணியை தொடங்கினார்

நால்வரும் வீடு வந்து சேர அயர்வாக உள்ளது என கோபால் அறைக்கு சென்றுவிட்டார் பல்லவியின் அறைக்கு சென்ற ரஞ்சனி "அண்ணி நீங்க சொன்ன எல்லாமே வாங்கியச்சு எதுக்கும் ஒரு தடவை பாத்துக்கோங்க" என்று கூற

"நா பாக்குறதுக்கு என்னம்மா இருக்கு ஒண்ணுவிடமா நீயே வாங்கிருப்பா உன்ன பத்தி எனக்கு தெரியாதா" என்று பல்லவி கூற

சிரித்து கொண்டே "எல்லாம் உங்க ட்ரைனிங் தானே வந்த புதுசுல எப்டி இருந்தேன் இப்போ எப்டி இருக்கேன்" என்ற ரஞ்சனி "புடைவை எடுக்கவே இந்த பாலா ரொம்ப நேரமாகிட்டான் மோதிரம் அப்றம் பூ மாலை மட்டும் வாங்கல அண்ணி நாளைக்கு சாயங்காலம் தானே நிச்சயம் அதனால வம்சிகிட்ட நாளைக்கு அளவு பாத்து வாங்கிருங்கன்னு சொல்லிருக்கேன் அப்றம் அவர அனுப்பி மாலை பூ எல்லாம் வாங்கிக்கலாம்" என்று கூற

"நீ சொன்னா சரியா தான் இருக்கும்" என்றவர் "நாளைக்கு யார் யார கூப்பிடனும்னு மட்டும் சோபாகிட்ட கேட்டுக்கோ ஒன்பது தாம்பூலம் ரெடியா எடுத்து வை காலையில அரக்கப்பறக்க வேலை பாத்துட்டு இருக்க கூடாது" என்று கூற

" சரிங்க அண்ணி" என்று கூறிய ரஞ்சனி "புடவை எப்டி இருக்குன்னு பாருங்க உங்க மருமகன் செலக்ட் பண்ணது" என்று காட்ட
முன்னும் பின்னும் திரும்பி பார்த்தவர் "பரவாயில்லயே நல்லா தான் எடுத்துருக்கான் பொண்ணுக்கு பொருத்தமா இருக்கும் போய் எல்லாத்தையும் பூஜை ரூம்ல வை நாளைக்கு போகும் போது எடுத்துக்கலாம்" என்றவர் "நைட்டு எனக்கு எதுவும் வேணாம்மா ஒரு கிளாஸ் பால் மட்டும் போதும்மா ரொம்ப அசதியா இருக்கு" என்று கூற

"நீங்க படுத்துக்கோங்க நா உங்களுக்கு பால் கொண்டுவறேன்" என்று வெளியே வந்த ரஞ்சனி "அக்கா இங்க வாங்க உள்ள என்ன பண்ணிட்டு இருக்கீங்க வந்து எவ்ளோ நேரம் ஆகுது" என்று கத்த "ஏ ரஞ்சு இப்டி கத்துற வேலை முடிஞ்சுட்டு வரலாம்னு இருந்தேன் என்ன சொல்லு" என்க

"நாளைக்கு எல்லாத்தையும் நீங்க தான் முன்ன இருந்து பண்ணனும் எனக்கு எதுவும் தெரியாது" என்றதும் "ஆமா நா நாலஞ்சு பிள்ளை பெத்து எல்லாருக்கும் கல்யாணம் பண்ணிருக்கேன் பாரு" என்றவர் "எனக்கு என்ன ரஞ்சி தெரியும் அண்ணி கிட்ட கேட்டு செஞ்சுக்கலாம்" என்று கூற

"உங்ககிட்ட கேட்டுக்க சொன்னாங்க யார் யார கூப்பிடனும்ணு சொல்லுங்க எனக்கு அவ்வளவா யாரையும் தெரியாது அக்கா" என்று கூற

"நிச்சயம் தானே பண்ண போறோம் இங்க பக்கத்துல இருக்குறவங்கள மட்டும் கூப்பிட்டா போதும் கல்யாணத்துக்கு எல்லாரையும் கூப்பிட்டுகலாம் அப்றம் தாம்பூலம் ஸ்டோர் ரூம்ல மேல் செல்ப்ல இருக்கு வம்சிய கூப்பிடு எடுத்து தர சொல்றேன் மத்ததெல்லாம் காலையில பாத்துக்கலாம் எல்லாரையும் சாப்பிட வர சொல்லு டைம் ஆச்சு"என்று கூற

"ம் சரிக்கா மாமா வந்துட்டாரா?"

"இன்னும் வரல வர்ற நேரம் தான் நீ போய் பசங்க ரெண்டுபேரையும் கூட்டிட்டு வா நா எல்லாத்தையும் எடுத்து வைக்கிறேன்" என்று சென்று விட வாங்கிய பொருட்களை பூஜை அறையில் வைத்து விட்டு கணவர் பிள்ளைகளை அழைக்க சென்றார்

வம்சியின் புன்சிரிப்பை கண்ட பாலா "டேய் அண்ணா இன்னைக்கு உன்னோட போக்கே சரியில்ல காலையில என்னடான்னா ஆபிஸ் ரூம்ல ஒரு பொண்ண கட்டிபிடிச்சிட்டு நிக்கிற கடையில இருக்கும் போது பொம்மைய பாத்து சிரிக்கிற இப்போ என்னடான்னா தனியா காரணமில்லாம சிரிக்கிற உனக்கு எதுவும் ஆகிருச்சா" என்று கேட்க

"பைத்தியம் பிடிச்சிருச்சான்னு நேரடியா கேட்காம மறைமுகமா கேக்குற அந்த அளவுக்கு போகல போகவும் மாட்டேன் தம்பி...." என வம்சி இழுக்க "என்னவோ போ காலையில இருந்து மந்திரச்சு விட்ட ஆடு மாதிரியே எனக்கு தெரியிற" என்றதும் "ஏண்டா பேச மாட்ட எல்லாம் என்னோட நேரம்" என்றவன் "வா எனக்கு ரொம்ப பசிக்கிது சாப்ட்டு வந்து நல்லா தூங்கனும்" என்று கூற அதேசமயம் "டேய் சாப்பிட வாங்கடா உங்கள மேல வந்து கூப்பிடனுமா" என்று கீழிருந்து குரல் வர "உன்னோட அம்மா தான் சீக்கிரம் வா" என்று இருவரும் கீழே விரைந்தனர்

நிரஞ்சனா வீட்டில் மூவரும் உண்ண அமர்ந்திருக்க ஒரு வாய் எடுத்து வைத்த சந்திர சேகர் மறு மொழி ஏதும் கூறவில்லை வாயடைத்து போனார் தன் மகளின் கைப்பக்குவம் கண்டு பேச நா எழவில்லை அவர் முகத்தை கண்ட அருணா வேண்டுமென்றே "என்னங்க சமையல் எப்டி இருக்குன்னு சொல்லவே இல்லையே உங்க மக சமைச்சது எப்டி இருக்குன்னு ஒருவார்த்தை சொல்லிருங்க உங்க முகத்தையே பாத்துட்டு இருக்கா பாருங்க" என்று சீண்ட

அப்போது தான் பார்த்தார் தன்னை தவிர மற்ற இருவரும் உண்ணவில்லை என்று "நீங்க ட்ரையல் பாக்க நான் தான் கிடைச்சேனா" என எண்ணியவர் "லிட்டில் பிரின்சஸஸ் என்னடா இது" என்று கேட்க

"அப்பா சப்பாத்தி குருமா நானே சமைச்சேன் அம்மா கூட எனக்கு சொல்லி தரலா யூடியூப் பாத்து நானே செஞ்சது எப்டி இருக்கு" என்று ஆர்வத்துடன் கேட்க

"அருமையா இருக்குடாம்மா என்ன கல்யாணம் பண்ண புதுசுல உங்கம்மா எப்டி சமைச்சலோ அப்டி இருக்கு! இல்ல அதைவிட அருமையா இருக்கு" என்றவர் "இன்னும் ஒரு சப்பாத்தி போடு" என்க அருணாவிற்கு சிரிப்பு வந்தாலும் சிரிப்பை மறைத்து கொண்டு தன் கணவரின் செய்கையை எண்ணி பரிவு உண்டானது மகளின் மனம் புண்பட கூடாது என்று கூறுகிறார் என எண்ணிக்கொண்டவர் ஏதும் பேசாமல் உண்ண தொடங்கினார் "அம்மா நீ எப்டி இருக்குன்னு சொல்லவே இல்லையே" என்று கேட்க

"நல்லா இருக்கு பரவாயில்ல என்னவிட நல்லாவே சமைக்கிற" என்றவர் பிரிட்ஜ் மேல பால்கோவா இருக்கும் பாரு அப்பா வாங்கிட்டு வந்துருக்காரு எடுத்து சாப்பிடு" என்று கூற

"இல்லம்மா எனக்கு வேணாம் பசியில்லை நா தூங்க போறேன் நாளைக்கு நளாவை பொண்ணு பாக்க வர்றாங்கலாம்" என்றவள் "அப்பா குட்நைட்" என்று விட்டு அறைக்குள் முடங்கி கொள்ள நிரஞ்சனா செல்லும் வரை பொறுத்து கொண்டிருந்த இருவரும் வேகமாக தண்ணிரை எடுத்து மடமடவென குடித்தனர் அப்போதும் காரத்தின் வீரியம் குறைந்ததாக இல்லை "ஏய் அருணா சக்கரை ஏதாவது கொண்டுவா என்னால தாங்க முடியல" என்று கூற

"ஏ இப்டி கத்துறீங்க அவளுக்கு கேட்டுற போகுது இருங்க கொண்டுவறேன்" என்றவர் சந்திர சேகர் வாங்கி வந்த பால்கோவாவை கொடுக்க வேகமாக ஒரு வாய் எடுத்து வைத்த பின்பு தான் காரம் சற்று மட்டு பட்டதுபோல இருந்தது "பக்கத்துல இருந்து கத்து கொடுக்க வேண்டியது தானே இப்டியா சமைக்க சொல்லி கொடுப்ப பசிக்கிதுன்னு வந்தேன் எல்லாம் போச்சு" என்று கோபப்பட

"நல்லா இருக்கே நீங்க சொல்றது நீங்க தானே சமையல் கத்துகட்டும்னு சொன்னது அதான் அவள செய்ய சொல்லிட்டு போனேன் உங்க பொண்ணு தானே சாப்பிடுங்க" என்று நொடித்து கொள்ள

"சரி சரி விடு சண்டை வரும் போது மட்டும் என்னோட பொண்ணு மத்த நேரமெல்லாம் உன்னோட பொண்ணு" என்று கூற

"சரி இருங்க உங்களுக்கு தோசை சுட்டு எடுத்துட்டு வறேன் எள்ளு பொடி இருக்கு இபோதைக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க" என்றவர் ஐந்து நிமிடத்தில் தோசை வார்த்து கொண்டு வந்தவர் "என்ன அதிசயமா பால்கோவா வாங்கிட்டு வந்துருக்கீங்க என்ன விஷயம்" என்று தெரிந்தும் தெரியாதது போல கேட்க

"ஏ உனக்கு தெரியாதா" என்று தோசையை கபளீகரம் செய்து கொண்டே கேட்க
"தெரியாதுன்னு தானே கேக்குறேன் ஏ உங்க வாயால சொல்ல முடியதாக்கும்" என்று கேட்க

"சொல்ல முடியாதுன்னு இல்ல உனக்கு தெரியும்னு இருந்தேன்" என்றவர் "இன்னைக்கு தான் உன்ன முதல் முதல பொண்ணு பாக்க வந்த நாள்" என்று அருணாவை பார்த்து கொண்டே கூற

சிறு நாணத்துடன் "நீங்க அதை ஞாபகம் வச்சுருக்கீங்களா!, எங்க வருசா வருஷம் வருதேன்னு மறந்து போயிருப்பிங்கன்னு நினைச்சேன்" என்று கூற

"அந்த கொடுமையை மறக்க முடியுமா?" என்றதும் "என்ன! என்ன சொன்னிங்க!" என்று அவசரமாக அருணா கேட்க

"இல்ல அந்த கொடுபனைய மறக்க முடியுமான்னு சொன்னேன்" என சமாளித்தவர் "பின்ன உன்ன மாதிரி ஒரு மனைவி அமைய நா கொடுத்து வச்சுறுக்கணும் கல்யாணமாகி இருபத்தி எட்டு வருஷம் ஆகுது என்கூட பொறுமையா குடும்பம் நடத்தி இவ்ளோ தூரத்துக்கு கொண்டு வந்துருகன்னா அதுக்கு காரணம் நீ தானே" என்று சந்திர சேகர் கூற

"நீங்க என்ன கிண்டல் பண்ணலயே" என்று அருணா கேட்க

"ச்சே என்ன அருணா உன்ன பத்தி எவ்ளோ பெருமையா சொல்லிட்டு இருக்கேன் நீ என்னடான்னா கிண்டல் பண்ணுறீங்களான்னு கேக்குற உன்ன புகழ்ந்து பேசுனா தானே நாளைக்கு எனக்கு சாப்பாடு கிடைக்கும்" என்றதும் "போங்க சேகர் நா போறேன் என்கிட்ட பேசாதிங்க நாளைக்கு காலையில உங்க பொண்ணு கையாலேயே சாப்பிடுங்க" என்று எழுந்து சென்றுவிட்டார் மகள் இல்லாத நேரம் கணவரை சேகர் என்று அழைப்பது அருணாவின் வழக்கம் மனைவி பெயர் சொல்லி அழைப்பது சந்திர சேகருக்கு பிடித்தமானது அருணாவின் கோபத்தை கண்ட சந்திரசேகர் சிரித்து கொண்டே உணவருந்தி முடித்து பாத்திரங்களை சிங்கிள் போட்டுவிட்டு விளைக்கை அணைத்து விட்டு அறைக்கு வர அவருக்கு முதுகு காட்டிய வண்ணம் படுத்திருந்த தன் மனைவியின் அருகில் சென்று அமர்ந்து

"என்ன கோபமா" என்றவர் "பரவாயில்லயே என்னோட ஜாஸ்மினுக்கு கூட கோபம் வருது" என அருணாவை தன் புறம் திருப்பினார் தனியாக இருக்கும் போது அருணாவை செல்லமாக ஜாஸ்மின் என்றே அழைப்பார் காரணம் அருணாவிற்கு மல்லிகை என்றால் உயிர் அதையே செல்ல பெயறாக சூட்டிவிட்டார் "சும்மா சொன்னேன் உன்ன சீண்டி பாக்க சொன்னது அதுக்கு போய் கோவிச்சுக்கிட்டு வந்துட்டயே தயவு செஞ்சு நாளைக்கு நீயே சமையல் பண்ணு மறந்தும் நிருவ அந்த பக்கம் விட்டுறாத முடியல" என்றதும் கிளுக்கி சிரித்த அருணா "நானும் சும்மா தான் கோபப்டுற மாதிரி நடிச்சேன் உங்க மேல நா என்னைக்கு கோபபட்டுருக்கேன் உங்க மேல அன்பு மட்டும் தான் என்னால காட்ட முடியும் கோபத்தை காட்ட முடியாது" என்று புன்னகைக்க

"ஜாஸ்மின் என்னைக்குமில்லாமா இன்னைக்கு உன்னோட முகம் ரொம்ப அழகா இருக்கு" என்று கூற

"போங்க சேகர் உங்களுக்கு எப்பவும் விளையாட்டு தான் வயசு என்ன ஆகுது இப்போ போய் அழகா இருக்கன்னு சொல்லிக்கிட்டு" என்று வெட்கத்துடன் கூற

"காதலுக்கு ஏதுமா வயசு இப்போன்னு இல்ல உன்ன எப்போ முதல் முதல பாத்தேனோ அப்பவே எனக்குள்ள நீ வந்துட்ட" என்று காதல் மொழி பேச

"இன்னைக்கு உங்களுக்கு என்னாச்சு காதல் மன்னன் மாதிரி பேசுறீங்க" என்று கூற

"தெரியல இன்னைக்கு உன்ன பாத்ததும் தனா வருது அவுத்து விட்ட காளை மாதிரி"என்றவர்" முதல் தடவை உன்ன எப்போ பாத்தேன்னு உனக்கு ஞாபம் இருக்கா?" என்று கேட்க

"ம் எங்க வீட்டுல வச்சு தானே பாத்தீங்க நீங்க உங்க அப்பா சித்தப்பா இன்னும் மூணு பேரு வந்திருந்தாங்களே நா கூட உங்களுக்கு காபி தண்ணி கொண்டுவந்து கொடுத்தேனே என்னமோ பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பாக்குற மாதிரில பாத்துட்டு இருந்திங்க" என்று கேலி செய்ய

"அது என்னமோ உண்மை தான் ஆனா நா முதல் முதல பாத்தது உங்க வீட்டுல இல்ல ஆத்தங்கரையில நீ இடுப்புல தண்ணி குடம் வச்சுக்கிட்டு உன்னோட சோடி பொண்ணுங்க கூட வந்துட்டு இருக்கும் போது எதிர்ல வந்து உன்னோட வீட்டுக்கு போறதுக்கு வழி கேட்டேனே நீ கூட முகம் பாக்காம வழி சொன்னயே மறந்துட்டாய" என்று கேட்க

ஆச்சர்யத்துடன் தன் கணவரை விழிகள் விரிய பார்த்து கொண்டிருந்தார் அருணா "என்ன அப்டி பாக்குற அப்போ பாத்தது பாத்ததும் நீ தான்னு முடிவு பண்ணிட்டேன்" என்றவர் "ரொம்ப நேரம் ஆச்சு படு நாளைக்கு காலையில சீக்கிரம் எந்திரிக்கணும்னு என்ன எழுப்பி விட்டுரு" என்று கூறி விளக்கை அணைத்து விட்டு படுக்க பழைய நினைவுகளை நினைத்து கொண்டே படுத்து கொண்டார் அருணா..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top