பூங்கொடி 32

sutheeksha eswar

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் நட்பூஸ்,

நேத்து ud போட மறந்துட்டேன். உங்க வீட்டு புள்ளையா நெனச்சு மன்னிச்சு விட்டுடுங்க. போன பதிவுக்கு லைக் கமெண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி.

தொடர்ந்து ஆதரவு தர எல்லாருக்கும் நன்றி நன்றி நன்றியோ நன்றி.
ஹான் சொல்ல மறந்துட்டேன். இல்ல கதைக்கு டெய்லி ud போடலாமா போட்டா படிப்பீங்களானு கேட்க நெனச்சேன். ஆனா கரெக்டடா கமெண்ட் போட்டுடனும் ஓகேவா.

உங்க பதிலை சொல்லிட்டு போங்க நட்பூஸ்.

பூங்கொடி 32


பிரசன்னாவுக்கு அபர்ணாவின் பார்வை தன்னை தொடர்வதை கண்டு, எதுவோ நெருடுவது போல இருந்தது. அவனது உள்ளுணர்வு அவனுக்கு எதையோ உணர்த்த முயன்றது.
என்ன என்று தான் அவனுக்கு புரியவில்லை. ஆனால், முன்பை விட அபர்ணாவின் செய்கைகள் அவனுக்கு குழப்பத்தையே தந்தது. மனம் எதுவோ குழப்பத்தில் உழன்று தவிக்க, எதிலும் கவனம் செலுத்த முடியாது தவித்தான்.


அவனது குழப்பம் சுமந்த முகத்தை கண்டு அனைவரும் விசாரிக்க, ஒண்ணுமில்லை என எல்லாரிடமும் சமாளித்து வைத்தான். அவர்களும் இந்த நடனம், கடைசியில் ஆள் மாறியது பற்றிய டென்ஷன் என நினைத்து, அவன் ஒண்ணுமில்லை என சொல்லவும், அத்துடன் மேலும் தோண்டி துருவாமல் விட்டு விட்டனர்.


நெருங்கிய நண்பர்கள் தான் என்றாலும், சிலரிடம் மனதிற்கு தோன்றும் நெருக்கம் எல்லரிடமும் தோன்றாது. அவனின் குழப்பம் ராதிகா, வினோத் மற்றும் விவேக்குக்கு புரிந்தது.
அவனே தெளிந்து வரட்டும் என்று விட்டு விட்டனர். எல்லா நேரமும் அவர்களே அவனுக்கு துணை நிற்க முடியாது என்று நினைத்து, தங்களது உதவி தேவை படும் நேரத்தில் உதவலாம் என்று ஒன்று போல நினைத்தனர்.


சில நேரம் ராதிகாவிடம் இதனை சொல்லி விடலாமா? என்று கூட நினைத்து இருக்கிறான்.

ஆனால், “என்னனு அவகிட்ட சொல்லுவ?” என மனசாட்சி திருப்பி கேள்வி கேட்டதில் அவன் அத்துடன் அந்த எண்ணத்தை கை விட்டான்.


என்னவென்று சொல்வான் அவளின் பார்வை எதுவோ செய்கிறது என்றா. அவனுக்கே புரியாத ஒன்றை அவளிடம் சொல்லி அவளையும் குழப்ப அவன் விரும்பவில்லை.

வினோத், விவேக்கிடம் சொல்லலாம் என்றால், அவர்களை பற்றி தெரியும் என்றாலும், ஒரு பெண்ணை பற்றி மற்றவர்களிடம், அதுவும் நண்பர்களே ஆனாலும் அவளை பற்றி சொல்ல விருப்பம் இல்லை. மேலும் தனக்கே உறுதியாக தெரியாத ஒன்றை சொல்லி அவர்களையும் குழப்ப மனது இல்லை.
இங்கே அபர்ணா அவனை பார்வையாலே தொடர்வதே போதும் என்று இருக்க, அவளின் பார்வை கூட அவனை இம்சித்தது. தன்னையே தொடரும் அவளின் ஆர்வப் பார்வைகள் அவனுக்கு பயத்தை உண்டு செய்ய, அவளிடம் இருந்த சற்று தள்ளி இருக்க முடிவு செய்தான்.


அவனின் ஒதுக்கம் அவளிடையே மிகுந்த பாதிப்பை உருவாக்கியது. முன்பே, மற்றவர்களிடம் எளிதாக பழகுவது போல இவளிடம் பேச கூட மாட்டான். ஏனோ அவளிடம் அவனுக்கே இயல்பாகவே ஒரு ஒதுக்கம் இருந்தது.


மற்றவர்களிடம் கலகலப்பாக இருப்பவன், இவளுடன் இதன் பிறகு சிறிது கவனமாக நடக்க ஆரம்பித்தான். ஓரிரு வார்த்தைகளில் உரையாடுபவன், இப்போது எல்லாம் தேவை இல்லாமல் அவளிடம் பேசுவதில்லை. எதாவது தேவை இருந்தாலும், வேறு யாரையோ விட்டோ இல்லை சிறு வார்த்தைகளில் பேச்சை சுருக்கி கொண்டான்.


அவனின் ஒதுக்கம் இவளுக்கும் புரிய, “நான் அப்படி என்ன செஞ்சேன்னு இவரு என்ன ஒதுக்குறாரு?” என நினைத்து மறுகியவள், எதை எதையோ நினைத்தவள், “ ஒருவேளை ஒருவேளை யாரவது இவர்கிட்ட சொல்லி இருப்பாங்களோ?” என நினைத்தவள், பிறகு “ச்சே ச்சே அப்படி எல்லாம் இருக்காது அப்படினா அப்போவே அவங்க சொல்லி இருப்பாங்களே!” என நினைத்தாள்.


“ஒருவேளை.. நானே காட்டி கொடுத்துட்டேனா?” என நினைத்தாள்.
அப்படி தான் இருக்கும் என முடிவுக்கு வந்தவள், சிறிது நேரம் வருத்தப்பட்டாள். அடுத்த நொடியே, “ஏன் நான் இவர விரும்ப கூடாதாமா? நான் அப்படி என்ன செஞ்சுட்டேன். காதலிக்குறது ஒரு குத்தமா?” என மனதினுள் பொங்கினாள்.

அவன் அவளை தவிர்க்க, தவிர்க்க, இவள் தவிக்க ஆரம்பித்தாள். மனதின் தவிப்பு யாரிடமும் வெளிபடுத்த முடியாது போக, அவளின் சுபாவத்திலேயே மாற்றம் ஏற்பட்டது.


என்னவென்று சொல்வாள், அவன் என்னை தவிர்க்கிறான் என்றா, ஏனோ அதனை தோழியிடம் பகிர்ந்து கொள்ள கூட அவளது மனம் இடம் தரவில்லை.
தனக்குள்ளே போராடி தவித்தவள், இறுதியாக தோழியிடம் சரண் அடைந்தாள். சௌம்யாவிடம் மனம் திறந்தவள், அவளின் மடியில் படுத்துக் கொண்டு அழுது கரைந்தாள்.


அவள் அழுவது கஷ்டமாக இருந்தாலும், அவளின் தலையை வருடியபடி, “அபர்ணா நான் ஒன்னு சொன்னா கேட்பியா?” பீடிகையுடன் ஆரம்பித்தாள்.

அழுது கலைத்த விழிகளுடன் என்ன என்று கேள்வியை தேக்கி நிமிர்ந்து பார்த்தாள்.


“இல்ல அவங்க தான் உன்னை அவாய்ட் பண்றார்னு உனக்கு தெரியுது இல்ல. நீ ஏன் இன்னும் அவரையே நெனசுகிட்டு இருக்க?

அவருக்கு உன் மேல விருப்பம் இல்ல போல. நீ தான் தேவை இல்லாம உன்னையே கஷ்டப்படுத்திக்கிற?


நடந்தது எல்லாத்தையும் மறந்துடு. உன் படிப்புல மட்டும் கவனம் வை. நிச்சயமா உனக்கானவன் உன்னை தேடி வருவான்!” என அவள் அவளைதேற்றும் விதமாக சொல்ல,

கண்ணில் கண்ணீர் பெருகி நிற்க, “ உயிரே போய்டும் போல இருக்கே. என்னால மறக்க முடியுமான்னு தெரியலையேடி!” என பாவமாக சொன்னாள், அபர்ணா.


தோழியிடம் பேசியது சற்றே ஆறுதல் அளிக்க, அவனுக்கு தன்னை பிடிக்கவில்லை என்றால், அவனை தொந்தரவு செய்யாமல் இருப்பதே நல்லது என நினைத்தாள்.


“உன்னால அப்படி இருக்க முடியுமா?” என மனம் கேள்வி எழுப்ப, சரியாகி விடுவேன் என சொல்லிக் கொண்டாள்.

அதன் பிறகு மறுபடியும் நத்தை தனது ஓட்டினுள் சுருங்கி கொண்டது போல தன்னையே சுருக்கிக் கொண்டாள்.


அமைதியாக இதை எல்லாம் வேடிக்கை பார்த்த மற்றவர்களுக்கு இப்போது என்ன புது பிரச்சனை? இவ்ளோ நாள் நல்லா தானே இருந்தா என்று தான் தோன்றியது.


அவனிடம் செல்லும் மனதையும், அவனை தொடர நினைக்கும் கண்களையும் வெகு சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள். இரவில் தனது துக்கம் மறைக்க தலையணை நனையும் அளவுக்கு அழுது தீர்த்தாள்.


மனம் எங்கும் சமாதானம் ஆக மறுத்தது. ஆனால், அவன் முன்பு சாதாரணமாக இருப்பதாக காட்டிக் கொள்ள பிரம்ம பிரயத்தனம் செய்தாள். அவனுக்கும் தன்னையே சுற்றி வரும் அவளது பார்வைகள் இப்போது இல்லாதது ஏமாற்றமாக தான் இருந்தது. ஆனாலும், நடைமுறையில் இதற்கு சாத்தியம் இல்லை.


இதற்கான சாத்தியக்கூறுகள் கம்மியாக இருப்பினும், அதற்கு அவர்கள் நிறைய இழக்க வேண்டி வரும் என்று அவன் யோசித்தான். இதனை தொடர்ந்தால், அவர்கள் தாண்டி வர வேண்டிய தடைகள் நிறைய இருப்பது அவனுக்கு தெரிந்து இருந்தது. அதனால் பின்னாடி வருந்துவதற்கு இதுவே மேல் என நினைத்து கொண்டான்.

தன்னை விரும்பும் ஒரு பெண், ஆனால் சூழ்நிலையால், அவளை நிராகரிக்க வேண்டியதை நினைத்து வருந்தினான். ஆமாம் காதலிப்பதை விட, காதலிக்கப்படுவது சுகம் தானே. அந்த உணர்வு அவனுக்கு மிகவும் பிடித்து தான் இருந்தது. ஆனாலும், நிஜம் என்ற ஒன்று இருக்கிறது அல்லவா?

நிதர்சனம் உறைக்க, தனது நிலையை எண்ணி மனதினுள் குமைந்தான். அவளை பிடிக்குமா என்றால், அவனுக்கு அதற்கான விடை தெரியவில்லை. ஒரு பெண் தன்னை இந்த அளவு விரும்புவது அவனுக்கு சற்றே கர்வத்தை கொடுத்தது.


இவர்கள் இடையே ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் நடைபெற, நண்பர்கள், அதனை வேடிக்கை பார்க்க மட்டுமே செய்ய முடிந்தது.
ஒரு முறை ராதிகா கூட இதனை வினோத்திடம் சொல்லி வருந்த, “விடு! அவங்க என்ன சின்ன புள்ளையா? அவங்களே அவங்க பிரச்சனையை தீர்த்துக்கட்டும். நம்ம இதுல தலை இட்டா நல்லா இருக்காது.” என்பதோடு நிறுத்திக் கொண்டான்.


அவன் சொல்வதும் சரியாக படவே, அவளும் அத்துடன் அமைதியாக இருந்துக் கொண்டாள்.


இப்படியாக ஒரு வழியாக அவர்களது கல்லூரி ஆண்டு விழாவும் வந்தது. இவர்கள் அனைத்திற்கும் தயாராகி கொண்டு இருக்க, நேரம் நெருங்க நெருங்க பிரசன்னா மிகவும் டென்ஷனாக உணர்ந்தான். ஒவ்வொரு விஷயத்தையும், சிறு குறை கூட வந்து விடக் கூடாது என்று பார்த்து பார்த்து கண்ணும் கருத்துமாக செய்தான்.


அவனின் ஈடுபாடு கண்டு அபர்ணா பிரமித்தாள். அனைத்தையும் நேர்த்தியாக பார்த்து பார்த்து செய்பவன் மேல், அவளுக்கு ஆச்சரியம் தான் கூடியது. அவள் அவனையே பார்த்துக் கொண்டு இருக்க, சௌமியா தான் அவளை கலைத்தாள்.

“ஒய் என்ன அங்கேயே பார்த்துக்கிட்டு இருக்குற? என்ன சைட்டா?” என அவள் அபர்ணாவிடம் வம்பிழுக்க,

“அடி போடி” என சலித்துக்கொண்டாள். “சரி சரி நேரமாகுது பாரு!” என அவளை துரிதப்படுதியவள், அவள் தயாராவதற்கு உதவி செய்தாள்.


தோழியின் உதவியுடன் தன்னை அலங்கரித்துக் கொண்ட அபர்ணா, ஒரு முறை தன்னை கண்ணாடியில் சரிப்பார்க்க, அதே நேரம் அவளின் பின்னே அவளையே பார்த்துக் கொண்டு இருந்த பிரசன்னா பட்டான். அவளையே பார்ப்பது போல அவள் உணர, உள்ளுக்குள் குறுகுறுப்பாக உணர்ந்தாள். நேரம் ஆவது உணர்ந்து தன்னை மீட்டு கொண்டவன், அவள் தன்னை கூர்ந்து கவனிக்கும் முன் அங்கிருந்து கிளம்பி இருந்தான்.


ஆனால் அவன் அறியாத ஒன்று, அவள் அந்த அரை நொடி பொழுதினில் அவனை கவனித்து விட்டது தான். கண்ணாடியையே வெறித்துக் கொண்டு இருந்த அபர்ணாவை, சௌமியா தான், “என்னடி அங்கேயே பார்த்துக்கிட்டு இருக்க. என்ன இருக்கு அங்க?” என கேட்டவள், தனது பார்வையை சுழலவிட்டாள்.


நேரம் ஆவது உணர்ந்து, “ நேரம் ஆச்சு பாரு” என அபர்ணாவை கிளம்ப சொன்னவள், அவளின் அலங்காரத்தை மேல் இருந்து கீழாக பார்த்து திருப்தியான பின், அவளை நெட்டி முறித்தாள்.


“அடியே அபர்ணா! அய்யோ ரொம்ப அழகா இருக்கடி! என் கண்ணே பட்டுடும் போல இருக்கு!” என சொல்லி அவளை கட்டிக் கொண்டாள். அதில் கூச்சம் வர பெற்றவளாய், “போடி சும்மா கிண்டல் பண்ணிக்கிட்டு!” என சிணுங்கினாள்.


அதே நேரம் ராதிகாவும், எல்லாரும் தயாராகி விட்டார்களா என பார்க்க வந்தவள், இவர்கள் இருவரையும் கண்டு அவர்களுடம விரைந்தாள்.


“என்ன பண்றீங்க ரெண்டு பேரும்? அங்க நேரம் ஆச்சுன்னு ஒருத்தன் காலுல வெண்ணி தண்ணி ஊத்துன மாதிரி கொதிச்சுகிட்டு இருக்கான். நீங்க இன்னும் இங்கேயே நிக்குறீங்க!” என்ற படியே அவர்கள் அருகில் வந்தவள், அபர்ணாவை கண்டு அப்படியே நின்றாள்.


“ஹே அபர்ணாவா இது!” என குரலில் ஆச்சரியம் விரவ கேட்டாள்.

அவளது ஆச்சரியத்தை வேறு விதமாக புரிந்து கொண்ட அபர்ணா, “ ஏன் அக்கா நல்லா இல்லையா?” என குரலில் கவலையோடு கேட்க,


அட லூசே என்பது போல பார்த்த ராதிகா, “ நான் அப்படி எங்கடி சொன்னேன். அழகா இருக்க போ! என் கண்ணே பட்டுடும் போல இருக்கு!” என அவளும் தன் பங்கிற்கு புகழ, இவளது கன்னமோ வெட்கத்தில் சிவந்து போனது.


“போங்கக்கா சௌமி கூட என்ன இப்படி தான் கிண்டல் பண்ணினா. இப்போ நீங்களுமா?” என அவள் கேட்க, “ஹே! நான் என்ன பொய்யா சொல்றேன்? நிஜமாவே அழகா இருக்க” என்றவள், அவளின் கன்னத்தில் முத்தம் பதித்தாள்.


அதனை சௌமியா கண்களில் பொறாமையுடன் பார்க்க, “சரி சரி வா நேரம் ஆச்சு!” என அவளை கையுடன் இழுத்துக் கொண்டு சென்றாள். இங்கே இவர்களது நடனதிற்கான அறிவிப்பு வர, இவள் மிகவும் பதட்டமாக உணர்ந்தாள். இத்தனை கூட்டத்தை பார்த்ததில்லை என்பதால், அவள் சற்றே பட படப்பாக உணர, கண்களோ தன்னையும் அறியாமல் பதற்றத்தோடு நாலா புறமும் சுழன்று தன்னவனை தேடியது.


அவள் யாரை தேடுகிறாள் என நினைத்த பிரசன்னா, அவளையே பார்த்தபடி இருக்க, அவனை கண்டு கொண்டவள், அவன் தன்னையே பார்ப்பது உணர்ந்து, வேகமாக தலையை திருப்பிக் கொண்டாள்.


அவளின் மனமோ “ஹேய் அபர்ணா மறுபடியும் அவனை ஒருமுறை பாரேன்!” என அவளை தூண்ட, அதனை அடக்க பெரும்பாடு பட்டாள்.


“ஹே செம்ம அழகா இருக்கான்டி. சுத்தி இருக்கிற பொண்ணுங்க கண்ணு எல்லாம் அவன் மேல தான்” என அருகிலே இரு பெண்கள் பேசும் குரல் கேட்க, யாரை பற்றி பேசுறாங்க என தோன்ற, அவர்களிடம் தனது செவியை பதித்தாள்.


“இந்த டிரஸ் அவனுக்கே செஞ்ச மாதிரி இருக்குது” என சொல்லவும், தன்னை போல அவளது பார்வை யாரை சொல்கிறார்கள் என அவர்கள் சொன்ன திசையை பார்க்க, அங்கே பிரசன்னாவும், சந்தோஷும் நின்றுக் கொண்டு இருந்தனர்.


அவர்கள் சொன்னதோ சந்தோஷை, இவள் புரிந்து கொண்டதோ பிரசன்னாவை. நொடி நேரத்தில் அவன் என்னவன் என்ற உரிமை உணர்வு தலை தூக்க, அவனையே பார்த்தபடி மன்னிக்கவும் முறைத்தபடி நின்றாள்.எதுவோ தோன்ற அவன் இங்கு பார்க்க, தன்னையே முறைத்த படி இருக்கும் அபர்ணாவின் பார்வை கண்டு குழம்பினான். இப்போது மனதில் உள்ள பயம் போய் கோபம் அங்கே குடியேறியது. அவளையே பார்த்தபடி அவன் இருக்கவும், அவர்களை அழைக்கவும் சரியாக இருக்க, திரும்பி அவள் முகம் கண்டான். அதில் இன்னும் கோபம் இருப்பது கண்டு “என்ன ஆச்சு இந்த லூசுக்கு?” என நினைத்தவன், அவளை கண்டு தன்னை மறந்து, தனது உறுதி மறந்து புன்னகைத்தான்.


அதில் இவ்வளவு நேரம் இருந்த கோபம் மட்டுபடத்தான் செய்தது. இவ்வளவு நாட்கள் தன்னிடம் பாராமுகமாக இருந்தவனின் இந்த புன்னகை, தகித்த மனதிற்கு தென்றலாய் வருடியது போல இருந்தது. இது நாள் வரை அவனின் ஒதுக்கம் அவளை வருத்தி இருக்க, அவனின் இந்த சிறு செய்கை அனல் என இருந்தவளின் மனதை புனல் என குளிர்விக்க செய்தது.


காதல் கொள்வேன்…
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement