புள்ளினங்காதல் - 6

Advertisement

Kamali Ayappa

Well-Known Member
அவர்கள் முன்னே இருந்த கருங்கல் சுவர் அது, இவர்களுக்கு வழிவிடும் விதமாக, இரண்டாய் பிரிய, அதனை ஆச்சர்யத்துடன் பார்த்தனர் இருவரும். "அவிரா..என்ன இது?" என்று ஆச்சர்யத்தில் மூழ்கிய ஆரூரன் கேட்க, "உள்ள போயி பார்க்கலாம் ஆரூரன்" என்றாள் அவிரா.



"என்னது? உள்ள போகணுமா?" என்று வாயை பிளந்தான் ஆரூரன். "ஆமா. இவளோ தூரம் வந்துட்டு, உள்ள என்ன இருக்குன்னு பாக்காம போனா எப்படி? வாங்க உள்ள போகலாம்" என்று அவிரா இழுக்க, "அவனோ. வாசல் வரை வந்ததுக்கே, பாழடைஞ்ச கோவிலை தூசி தட்டி, காட்டுக்குள்ள ஓடி, ஆத்துல குதிச்சி...என்னென்னமோ பண்ணிட்டோம். உள்ள என்னென்ன பண்ணவேண்டியது இருக்குமோ? வேணாம். நான் வரலப்பா" என்று ஆரூரன் பின்னால் நகர, "சரி. நீ இரு. நான் போறேன்" என்றாள் அவிரா.



"இவ ஒருத்தி. நான் போறன் போறேன்னு.." என்று முனகிக்கொண்டே, அவளை தாண்டி, அவளுக்கு முன்னே உள்ளே சென்றான்.



அவன் பின்னால் இவளும் அந்த பிளந்த சுவற்றை தாண்டி உள்ளே செல்ல, அந்த சுவர் தானாய் மூடிக் கொண்டு பழைய நிலைக்கு திரும்பியது. அதை கண்டு அலறினான் ஆரூரன். "அவிரா... இங்க பாரு. இந்த வழி மறுபடி அடஞ்சிடுச்சு. வெளிய போக வழி?" என்று கேட்டுக்கொண்டே, இரு கைகளையும் காற்றில் அலையவிட்டு, ஒரு வழியாய் மூடிய அந்த சுவரையும் கண்டுபிடித்து தடவிக்கொண்டிருந்தான். ஆம். தடவி கொண்டிருக்க மட்டும் தான் முடிந்தது. அந்த அதிசய வழியால் வெளிச்சமாய் இருந்த அவ்விடம், அந்த வழி வழி அடைந்ததும், வெளி வெளிச்சம் முற்றிலும் தடைபட்டு கும்மிருட்டாய் இருந்தது.



"அவிரா. இப்போ என்ன செய்றது? இந்த இருட்டுல பாக்க கூட முடியல" என்று அவன் பொலம்பிக்கொண்டிருக்க, அவளோ அதிர்ச்சியில் வாயடைத்துப்போய் இருந்தாள். சில வினாடிகளில் அவர்கள் பார்வை சிறிது தெளிவாக, கண்களுக்கு 'டார்க் அடாப்ட்டேஷன்' (Dark adaptation) ஷக்தி குடுத்த கடவுளுக்கு மனதார நன்றி கூறிக்கொண்டான் ஆரூரன்.



அவிரா பிரம்மை பிடித்தவள் போல அசையாமல் நின்றுகொண்டிருக்க, அவள் தோளை தொட்டு உயிர்பித்தான் ஆரூரன்.



"ஆரூரன்...." என அவன் கை பிடித்தவள், ஏதோ கூற சொல்ல வர, அதை கூறும் முன், அவள் கால் கீழ் இருக்கும் நிலத்தில் ஏதோ அதிர்வு தெரிய, இருவரும் கீழே நோக்கினார்.



"அவிரா. ஏதாவது நிலநடுக்கமா?" என்று ஆரூரன் கேட்க, அதற்கு அவிரா பதில் கூற எத்தனிக்கும் முன்னமே, இவர்கள் கால் ஊன்றி நின்றிருந்த நிலப்பகுதி அதில், சிறு விரிசல் ஒன்று ஏற்பட்டு, அந்த விரிசல் ஒரு குழியாய் மாறி, இவர்களை உள்ளே இழுத்தது. சிறு குழி அது, பெரிதாகி, பூமியில் தோண்டப்பட்ட துளை போல், செங்குத்தாய் ஒரு சுரங்கம் உருவாக, அதில் இருந்து வெளியேற இவர்கள் முயற்சித்தாலும் முடியாமல் போனது. அந்த துளை இவர்கள் வேகமாய் உள்ளிழுக்க, இவருவரும் அதில் சிக்கிக்கொண்டு, அதிவேகத்தில், செங்குத்தாய், வளைந்து வளைந்து சென்ற அந்த சறுக்கலில், கத்திகொண்டே சறுக்கினார்.



சிறுது நேரத்தில் இருவரும், மேலே பார்த்தது போலவே, ஒரு இடத்தில் வந்து விழுந்தனர். அதே போல், இருட்டு, மரண அமைதி, இரு பக்கமும் கருங்கல் சுவர், தளத்திலும் கருங்கல் சுவர். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம். அங்கு இல்லாத ஒன்று...ஒளி....தூரத்தில் ஒரு சிறு வெளிச்சம் கண்ணுக்கு தெரிந்தது. அந்த சிறு ஒளி அது, அவர்கள் மனதிற்கு ஏதோ பெரும் நிம்மதியையும், நம்பிக்கையையும் அளித்தது. ஆனால், அவர்கள் இங்க எந்த துளை மூலம் வந்து விழுந்தனரோ, அதற்கான அடையாளம் கூட தளத்தில் இல்லாமல் இருக்க, அதுவோ அந்த நிம்மைதியை குலைத்து, பீதியை கிளப்பியது.



வந்த வழியே திரும்பி செல்ல வாய்ப்பு ஏதும் இல்லை என்று ஆராய்ந்த இருவரும், சிறுஒளி தெரியும் அத்திசையில் நடக்க தொடங்கினர், முழு நம்பிக்கையும் திரட்டி. ஒளி-ஒலி இரண்டில் ஒன்று கூட அந்த இடத்தில் குடிஇல்லாததால் உச்சகட்ட பயத்தில் இருவரும் நடந்து செல்ல, ஆருரனின் கைகளை இறுக பற்றிக்கொண்டாள் அவிரா.

மெல்ல நடந்து இருவரும் அந்த ஒளி வந்த இடத்தை வந்தடைந்தனர். ஒளி வந்த இடத்தில் ஒரு பெரிய மரக்கதவு இருந்தது...அதில் இருந்த சிறு சிறு துளை மூலமே வந்தது அந்த ஒளி.



அதை நெருங்கும் முன், நடு வழியில் கருங்கல் மேடை ஒன்று இருக்க, அதை கண்டுகொல்லாமல் அந்த கதவிடமே சென்றனர் இருவரும். அதில் சாவி போட்டு கதவை திறக்க ஒரு சிறு துளை இருக்க, அதன் மூலமே வந்தது அந்த ஒளி. ஆனால் அதை திறக்க சாவி? அதை தான் யோசித்து நின்றனர் இருவரும்.



வாய் மொழி ஏதும் இல்லை என்றாலும், இருவரும் சொல்லி வைத்தார் போல, சுற்றிமுற்றி சாவி ஏதும் கண்ணுக்கு தெரிகிறதா என்று தான் தேடினர். அந்த கதவுக்கு அருகில் சுவற்றில் எப்படியும் ஐம்பது அறுபது சாவிகள் தொங்கவிடப் பட்டிருந்தன. அந்த சிறு ஒளியை மையமாக வைத்தே இவர்கள் நடந்து வந்து கொண்டிருந்ததாள், முன்பு இதை கவனிக்கவில்லை. ஆரூரன் ஒரு ஐந்தாறு சாவிகளை எடுத்து திறந்து பார்க்க, அது எதுவும் அந்த கதவை திறக்காமல் போக, அவிரா அவனை தடுத்தாள்.



"என்ன அவிரா?" என்று அவன் கேட்க, "இல்ல ஆரூரன். இப்டி ரேண்டமா கீ கண்டு புடிக்கற மாதிரி இருக்காது ஆரூரன் கண்டிப்பா. இதுல ஏதாவது ஹிண்ட் இருக்கனும்" என்றவாறே அவன் கையில் இருந்த ஒரு சாவியை வாங்கினாள். தங்கத்தில் செய்த சாவி என்பதால், இருளிலும் அப்படி ஜொலித்தது. அதை உற்று பார்த்தவள், அதில் ஒரு பக்கத்தில் 'ம' என்ற தமிழ் எழுத்து எழுதி இருந்தது. அதை கண்டவள் "ஆரூரன் இதுல 'ம' எழுத்து எழுதி இருக்கு" என்று அவன் கையில் கொடுக்க, அவனோ அதை கண்டு, 'ம'வா? எனக்கு அப்டி தெரியலையே. ஏதோ கிறுக்கி இருக்கு" என்று அதை உத்து உத்து பார்க்க, அவளுக்கோ அந்த நிலையிலும் அவனை கண்டு சிரிப்பு பொங்கியது. "இது பழைய தமிழ் எழுத்துக்கள் ஆரூரன். இப்போ வழக்கத்துல இருக்கறது இல்ல" என்று கூறிக்கொண்டே, மற்ற சில சாவிகளையும் எடுத்துப்பார்க்க, ஒவ்வொரு சாவியிலும் ஒரு எழுத்து பொதிந்திருந்தது.



"ஏதேதோ எழுத்து இருக்கு. எந்த வரிசையும் இல்லாம. இதுல எந்த எழுத்து இந்த கதவை திறக்கும்?" என்று யோசித்துக்கொண்டே சுற்றி முற்றிப் பார்த்தவள் கண்களுக்கு அவர்கள் கண்டுகொள்ளாமல் வந்த கருங்கல் மேடை பட்டது.



அந்த கதவிடம் இருந்து இரண்டடி தூரத்தில் தான் இருந்தது அந்த கருங்கல் மேடை.

அந்த மேடையில் மரத்தில் செய்த புகைப்பட சட்டம் போன்ற ஐந்து ஸ்டார் வடிவங்கள் இருக்க, அதன் நடுவில் இருந்த ஒரு வட்ட வடிவ இடத்தை தவிர, மற்ற இடத்தில் ஏதோ ஓவியம் வரைந்திருந்தது.
அந்த நடுவில் இருந்த வட்ட பகுதி மட்டும் சற்று உள்வாங்கி இருந்தது.

அந்த சாவி நுழையும் துவாரம் வழியாக வரும் வெளிச்சம் அதை, அந்த மேடையில் பட வைக்கும் விதமாக, ஒரு சிறிய ஒளி இணைக்கும் லென்ஸ்(Converging lens ) இருந்தது. மொத்த வெளிச்சமும் அந்த மேடை மீது வருமாறு அந்த லென்ஸ் பொருத்தப்பட்டிருந்தது.

அந்த கருங்கல் மேடையிலே, அந்த மர சட்டங்கள் ஒரு வட்டமாய் அடுக்கி வைத்திருக்க, நடுவில் இருந்தது தங்கக்காசுகள் சில.



அந்த மர சட்டத்தில் இருந்த அந்த வட்ட பகுதி, இந்த தங்கக்காசை பொருத்தும் அளவில் இருந்தது. ஒரு காசை எடுத்து ஒரு ஸ்டாரின் நடுவில் அவிரா பொருத்தி பார்க்க, அது கச்சிதமாய் பொருந்தியது.



அப்போது தான் அங்கு வந்த ஆரூரன், அந்த சட்டங்களையும், அதன் உள்ளே வரைந்திருந்த ஓவியங்களையும். தங்க காசுகளையும் உற்று நோக்கியவன் அந்த காசில் இருந்த சின்னங்கள் அதையும் நோக்கினான்.



"அவிரா. இங்க பாரு..இந்த காசு எல்லாத்துலயும், பறவையோட அலகு பொறிக்க பட்டிருக்கு. அதுவும் ஒவ்வொன்னும் ஒரு ஒரு விதமான அலகு அவிரா. அப்புறம்..இந்த மர சட்டத்துக்குள்ள இருக்க ஓவியங்களை பாரு. அது எல்லாமே பறவைகள் சாப்பிடுற உணவு வகைகள். அதை வச்சி தான் இதை பொருத்தணும்" என்று அவன் இன்னும் உற்று நோக்க, "எப்படி ஆரூரன்?" என்று கேட்டாள் அவிரா.



"பறவைகள் அலகோட வடிவத்துக்கு, அதோட உணவு பழக்கத்துக்கும் சம்மதம் இருக்கு. இப்போ உதாரணத்துக்கு, இதை பாரு" என்று ஒரு தங்க காசை எடுத்தான்.



"இதை பாரு அவிரா. இதுல இருக்க அலகு கூரிய கொக்கி மாதிரி இருக்கு. இந்த மாதிரி அலகு, மாமிசம் சாப்பிடும் பறவைகளுக்கு தான் இருக்கும். கழுகு மாதிரி பறவைகள், தன்னோட உணவை கிழித்து சாப்பிட தான் இந்த மாதிரி அலகு அமைப்பு. அதனால இதை இங்க வைக்கலாம்" என்று மாமிசத்தை ஓவியம் இருந்த சட்டத்தின் நடுவில் இருந்த வட்டத்தினுள் பொருத்தினான்".



"இப்போ இதை பாரு. குட்டியா இருக்க வளைந்த அலகு. பழம் சாப்பிடுற கிளி மாதிரி பறவைக்கு தான் இப்டி அலகு இருக்கும். கடினமான பருப்பு, கோட்டை போன்றவற்றை உடைத்து சாப்பிட இந்த அலகு ரொம்ப அவசியம்" என்று பழ ஓவியம் இருந்த சட்டத்தினும் அந்த வட்ட காசை பொறுத்தினான்".



"அப்டியே தான் அவிரா. இந்த குறுகிய கடினமான அலகு, தானியங்கள் மற்றும் விதைகளை சாப்பிடும் பறவைகளுக்கு. அப்புறம். நீண்ட கூரிய வளைந்த அலகு, தேன்சிட்டு போன்ற பறவைகள் பூவில் உள்ள மகரந்தத்தை சாப்பிட ரொம்ப உதவியா இருக்கும். அதே மாதிரி தான் பரந்த மற்றும் தட்டையான அலகு தண்ணீரில் வாழும் வாத்து மாதிரி பறவைக்கு இருக்கும். இவற்றின் அலகின் இருபுறங்களிலும் துளைகள் இருக்கு பாரு.தண்ணீர் பறவைகள் பூச்சிகள், புழுக்கள் மற்றும் நீர்வாழ் தாவரங்கள் கொண்ட மண் கலந்த கலங்கிய தண்ணியதான உட்கொள்ளுது.அப்டி உட்கொள்ளும்போது பூச்சிகள், புழுக்கள் மற்றும் நீர்வாழ் தாவரங்களை உள்ள எடுத்துக்கிட்டு,மண் மற்றும் தண்ணீரானது துளைகளின் வழியாக வெளியேவந்துடும்"

என்று மடமடவென ஐந்தையும் பொருத்திவிட்டு, அவிராவை நோக்க, அவளோ, ஆச்சர்யம் நிறைந்த கண்களுடன், அந்த சட்டங்கள் இருந்த இடத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.



ஐந்து ஸ்டார்களுக்கும் நடுமையமாக, தங்க காசுகள் இருந்த இருந்த இடம் இரண்டாய் பிளந்து, அந்த ரூபிக்ஸ் க்யூப்குள்ளே இருந்த அதே மாதிரி வெள்ளை துணி ஒன்று இருக்க, அதை எடுத்தாள். அதே போல, கருப்பு நிற எழுத்துக்கள் அதில் பொறிக்கப்பட்டிருக்க, அதை படிக்கத் துவங்கினாள்.





ஆர்கலி அதன் மேல்,

ஒற்றை விரல் கோர்த்து,

வீறு நடை போடும்,

ஒரு தாய் பிள்ளை இருவர்.



மேலவன் அவனுள்ளே...

கடவுளின் நகலே நாம்,

என்று அகந்தை கொண்ட இனம் அதுவும்

ஐயம் கொண்டது...



சிரம் மேல் சிறகடிக்கும் அவை...

கடவுளின் துகளோ!

தேவதையின் இனமோ என்று?



ரதியின் உயிரோவியம் அவளோ, என்று அண்ணார்ந்து பார்க்க,

ருசி கண்டு மகிழ்ந்தார், அக்கண்டத்தின் அயலவர்.





தேவதை இனம் அதை அழிக்க எவரேனும் துணியோர்,

என்று தான் எண்ணினானோ?,

வருடம் ஒன்று மட்டும் இட வைத்த,

தேவன் அவனும் கூட!

மானுடன் அவனை படைத்தமை மறந்து...



வன்முறையிலும் விஞ்ஞானத்தின் வாசம்,

அதன் வழியாய் வந்த கருவி அதை,

விசும்பை நோக்கி, அவன் உயிர்ப்பிக்க,

மடிந்து விழுந்தாளோ அவள் மண்ணில்,

அதன் ஓசையும் அவள் மனம் அதை இம்சிக்க.

இறகு மட்டுமல்ல, இதயமும் இலகு தான் அவளுக்கு.



வலை அதிலும் மாட்டி,

வாணலி அதிலும் வறுப்பட்டு,

வானத்து தேவதை அவள்,

வம்சத்தை வளர்க்க விரும்பாமல்,

வெறுத்து தான் அடைந்தாளோ !

விண்ணுலகம் அதை?



கூட்டமாய் வாழ்ந்து,

காண்போர் கண்ணெடுக்கா வண்ணம்,

நாள் ஒன்று அதன் நீளத்திற்கும்,

ஊர்வலம் நடத்திய,

தன் இனத்தின் வரலாறு கூறத்தானோ!

அரை நூற்றாண்டு தனிமையில் வாடினாளோ?

இராட்சசர் கூட்டம் விட்டுவைத்த,

இறக்கை முளைத்த ஒற்றை இனியவள்...



அவள் பெயர் கொண்டு இடர் அதை விலக்குவாய்.




என்று அவள் அந்த துணியில் இருந்த வரிகளை ஆரூரனுக்கும் கேட்கும் வண்ணம் படிக்க, அவனும் உற்றுக்கேட்டுக்கொண்டிருந்தான்.



படித்து முடித்தவள், "கடைசி லைன். அவள் பெயர் கொண்டு, இடர் இதை விலக்குவாய். அப்டினா. இதுல யாரையோ மென்ஷென் பன்றாங்க. அவங்க பெயரை வச்சி தான் இந்த கதவை ஓபன் பண்ண முடியும். ஏதோ தேவதை இனம்ன்னு இருக்கே. அழிச்சிட்டாங்கன்னும் இருக்கு. செகன்ட் பராகிராபில. கடவுளின் நகல் நாம் என்று அகந்தை கொண்ட இனம் ன்னு இருக்கு. அது யாரு? நம்ப மனித இனத்தை தான் குறிப்பிடுறாங்களா?" என்று அவிரா பேசிக்கொண்டே இருக்க, ஆரூரன் மண்டைக்குள் வேறு ஒன்று ஓடிக்கொண்டு இருந்தது.


Padikaravanga comments sollitu ponaa nalaa irukum.

Andha hint ku answer therinjaalum comments la sollungo..
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கமலி ஐயப்பா டியர்
 
Last edited:

தரணி

Well-Known Member
அலகுகள் பத்தியும் அதோட உணவு முறை பத்தி சொல்லி இருக்குறது சூப்பர்....


ஏதோ ஒரு பறவை பெயர் அப்படினு புரியுது.... 50 காலமாக இருக்குற பறவை அழிந்து வர.இனம் அது அதோட நீளத்துக்கு பறக்கும் பறவை...
 

Kamali Ayappa

Well-Known Member
அலகுகள் பத்தியும் அதோட உணவு முறை பத்தி சொல்லி இருக்குறது சூப்பர்....


ஏதோ ஒரு பறவை பெயர் அப்படினு புரியுது.... 50 காலமாக இருக்குற பறவை அழிந்து வர.இனம் அது அதோட நீளத்துக்கு பறக்கும் பறவை...
நன்றி.. அடுத்த epi ல தெளிவா சொல்லிடறேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top