Kamali Ayappa
Well-Known Member
அந்த சிலையை இருக்கும் இடத்தை விட்டு சற்று நகர்த்த, மீண்டும் கேட்டது ஒரு பெரும் சத்தம்.
இதுவரை இல்லாமல், புதியதாய் ஒரு வழி தோன்றியது. மேல் நோக்கி போகும் படிகள் அது.
புது வழி ஒன்று தோன்ற, தங்கள் பயணம் அவ்வழி தான் தொடர வேண்டும், என்று தீர்மானித்தவர்களாய் அந்த படிகளை நோக்கி நடந்தனர்.
அங்கு இருந்ததோ ஏழே ஏழு படிகள் தான். அதில் ஏறி சென்றனர் இருவரும். அந்த ஏழு படிகளுக்கு மேல், செல்ல வழி இல்லை, ஒரே ஒரு சுவர் தான். அந்த சுவரின் நடுவில், உள்ளங்கை அளவில் ஒரு இடம் மட்டும் உள்வாங்கி இருந்தது. பார்த்ததும் கணிக்க முடிந்தது, அந்த இடத்தில் கைவைக்க வேண்டுமென்று.
ஆர்வக்கோளாரில் ஆரூரன் கை வைக்க, அவன் கை சுவரில் இருந்த அச்சை விட, பெரியதாய் இருந்தது. உள்ளே நுழையவில்லை.
"அவிரா, நீ உன்னோட கை வைத்து பாரு" என்று அவன் கூற, அவளும் அந்த இடத்தில அவளது வலது கையை வைக்க, அவள் கை கச்சிதமாய் பொருந்தியது. ஏற்கனவே, தனக்கும் இந்த புதையலுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது, என்று சந்தேகித்தவளுக்கு, இது இன்னும் அந்த சந்தேகத்தை பலப்படுத்தியது.
இவள் அந்த இடத்தில் கையை வைத்து அழுத்தவும், அந்த கதவு இரண்டாய் திறந்து வழிவிட்டது.
உள்ளே இருந்த காட்சியை பார்த்து ப்ரமிதித்துப்போயினர் இருவரும்.
முன்னர் இருந்த அறையில் இருந்தது போல் வெளிச்சம் இல்லை. ஆனால் முழு இருட்டும் இல்லை. சிறு வெளிச்சம், தீபம் ஏற்றி வைத்தது போல, மங்களகரமான ஒரு வெளிச்சம்.
அந்த அறை முழுவதும் தரையில் பறவைகள் இருந்தது. உயிரற்ற பறவைகள். பொம்மைகள் போல் இருந்தன. தரையில் அழகாய் அடுக்கிவைக்க பட்டிருந்தது. "இங்க இருக்குற பொம்மைகள் எல்லாமே அழிந்து போன பறவைகள் அவிரா" என்றான் ஆரூரன் ஆச்சர்யத்தில். ஒவ்வொரு இனத்தை சேர்ந்த, ஆண் பறவை ஒன்றும், பெண் பறவை ஒன்றும் இருந்தது.
அந்த அறையின் நடுவில், ஒரு இடத்தில் மட்டும் பெரும் வெளிச்சம் இருந்தது. அந்த இடத்தை நோக்கி செல்ல, அந்த இடத்தில் தரையில், ஒன்பது குழிகள் இருந்தது. ஒன்பது குழிகளை பார்த்ததும், அவிராவுக்கு, தன் கைப்பைக்குள் இருக்கும், நவரத்தினங்கள் நினைவுக்கு வர, அதை எடுத்து, ஒரு குழிக்கு ஒன்று என அவள் பொறுத்த,
"இப்பூவுலகம் யாவர்க்கும் பொதுவென,
நீ கற்ற வேதம் மொழிந்து,
அழைப்பாயோ ஈசனை.
உன் உதிரத்தின்,
ஒரு துளி அளித்து,
உயிர்பிப்பாயோ அவனை"
என்ற, வார்த்தைகள் சில வினாடிகள் அதில் தெரிந்து, மறைந்து போனது. அதை விட்டு மறைந்து போனாலும், அது அவிராவின் நினைவில் நன்றாக பதிந்தது.
"இப்பூவுலகம் யாவர்க்கும் பொதுவென, நீ கற்ற வேதமா?", "இது நம்ப குடும்பத்துல இருக்கவங்க வழி வழியா சொல்லுறதாச்சே! அது எப்படி இந்த புதையலை ஒளித்துவைத்தவருக்கு தெரியும்" என்று குழப்பம் இருந்தாலும், அவள் இதழ்கள் முணுமுணுக்க தொடங்கியது,
"அனுவிதைக் கருவாய் உயிரென தோன்ற.,
உயிரது மெல்ல நிலத்திடை தவழ.,
அவற்றினை தாண்டி நீரிலும் உறைய.,
வானிலும் சிலது சிறகுடன் உலவ.,
யாவருக்கும் பொதுவாம் இப்பூவுலகு.." என்று.
"என்ன அவிரா இது?" என்று ஆரூரன் கேட்க, "இது எங்க குடும்பத்துல, வழி வழியா எல்லாருக்கும் சொல்லி குடுக்கறது. எங்க குடும்பத்தில் இருக்கும் குழந்தைகள் பேச தொடங்கியதுமே இதை தான் சொல்லி குடுப்பாங்க" என்று அவள் கூற, "அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்" என்று ஆரூரன் கேட்ட நேரம், இவள் நவரத்தினம் பொதித்த இடத்தில், ஒரு சிவலிங்கம் தோன்றியது.
"உதிரத்தின் ஒரு துளி அளித்து, உயிர்பிப்பாய் அவனை" என்று அடுத்த வரிகளை நினைவுகூறந்தவள், அவன் கைப்பையில் இருந்த, பேப்பர் வெட்டும் கத்தியை எடுத்து, அவள் விரல் நுனியில் சிறிதாய் வெட்ட, அவள் விரலில் இருந்து வந்த உதிரம், அந்த சிவலிங்கத்தின் மேல் பட்டது.
அவள் உதிரம் பட்டதும், சிவலிங்கம் உருக தொடங்கி, ஒரு வித புகையாக மாறி, அந்த அறையெங்கும், மெல்ல பரவ தொடங்கியது.
அந்த புகை, அங்கு இருந்த பறவை பொம்மைகள் மீது பட, அந்த பொம்மைகள் உயிர் பெற்றது. அதாவது. அழிந்த இனங்கள், உயிர் பெற்றது மீண்டும்.
நம் வாழ்நாளில் காணவே முடியாது, என்று நினைத்த பறவைகள் எல்லாம் இருந்தது அங்கு. இப்படி ஒரு பறவை இருந்ததா என்று நாம் யோசிக்கும், டோடோ முதல், 'ரியோ' படத்தில் அனிமேஷனாய் நாம் கண்டு மகிழ்ந்த ஸ்பிக்ஸ்'ஸ் மக்காவ் வரை, எல்லாம் இருந்தது.
அவை எல்லாம் உயிரற்ற பொருட்களாய் பார்த்தபோதே, அத்தனை மகிழ்ச்சி ஆரூரனுக்கு. அவை உயிர் பெற்று அங்கும் இங்கும் பறக்கும் போது, சொல்லவா வேண்டும்!
அந்த சிவலிங்கம் மொத்தமாய் கரைந்து, புகையாய் மாறி, இவ்வையம் விட்டு மறைந்த புள்ளினங்கள் அவற்றுக்கும் உயிர் அளிக்க, அது மொத்தமாய் கரைந்ததும், வெளியே தெரிந்தது அந்த சிவலிங்கத்துக்குள் இருந்த கடிதம் ஒன்று.
சிகப்பு நிற பட்டு துணியில், தங்க நிற எழுத்துக்கள் இருந்தது. அந்த கடிதத்தை எடுத்ததும், அந்த இடத்தில் இருந்து ஏதோ, விதைகள் போல வர தொடங்கியது. ஏதோ ஊற்று போல, வந்துகொண்டிருந்தது. என்னென்று புரியவில்லை அவர்களுக்கு.
அந்த கடிதத்தை படிக்க தொடங்கினாள் அவிரா.
"என் சந்ததியில், என் மகளின் மறுபிறவியாய் உதித்த, வெளிச்சத்தின் பெயர் கொண்டவளே! அழிந்த இப்புள்ளினங்களின் வாழ்வில், ஒளி விளக்கேற்றி, வெளிச்சமதை புகுத்த பிறந்தவளே! நான், எழில்வேந்த சக்கரவத்தி!
எம் வம்சத்தில் பிறக்கும் மங்கை அவள், புள்ளினங்கள் மீது பேர் அவா கொண்ட ஆண்மகனுடன் இணைந்து, மறைந்த புள்ளினங்கள் உயிர்த்தெழவும், உயிர் கொண்ட புள்ளினம் அவை அழியாமல் காக்கவும் வழிவகை செய்வாள் என்ற என் எண்ணத்தை, செயலாகிவிட்டீர்கள் நீங்கள் இருவரும்.
என் உதிரம், என் உதிரம் வழி வந்தவள், என் வம்சத்தில் உதித்த உன்னால் மட்டுமே, இதை செய்து முடிக்க முடியும்.
பஞ்சபூதங்களால் நிறைந்த இவ்வையம், அந்த பஞ்சபூதங்களை அடிப்படையாய் கொண்டு, உருப்பெற்ற உயிர் அனைத்திற்கும் பொதுவே.
ஆனால், நாம் வாழும் வையத்தை, தனதென, மனிதஇனம் சொந்தம் கொண்டாட தொடங்கி, நூற்றாண்டுகள் பல கடந்துவிட்டன. சகமனிதர்களின் உடமைகளை கவர்ந்து, அந்த பொருட்கள் மேல் உரிமை கொள்வதை வாடிக்கையாக வைத்து, அதில் இன்புறும் மனித இனம் அல்லவா! ஐந்தறிவு ஜீவிகளாய் பிறந்த இப்புள்ளினங்களின் உடமையையும், வாழிடத்தையும் கவர்தல் தவறென உணர்வரா அவர்கள்?
சுயநலமிக்க இம்மனிதர்கள் மறந்துபோயினர், தங்கள் உயிர்வாழ உணவு சங்கிலி எவ்வளவு முக்கியமென்று. அந்த உணவு சங்கிலியில் பறவைகள் அவை வகிக்கும் இடம் என்னவென்று.
எம் காலத்தில், கொடும் தவறு புரிந்த கொடூரர்களை இருள் மட்டும் குடிகொள்ளும் தனி அறையில் கடத்தி, புத்தி பேதலிக்க செய்து கொள்வது வழக்கம். நும் காலத்திலோ! எடத்தவரும் புரியா, சின்னஞ்சிறு பறவைகள் அவையை, காற்றலைகள் மூலம், கொடிய கதிர் புகுத்தி கொள்வது எவ்வகையில் நியாயம்.
அனைவர்க்கும் பொதுவான இவ்வுலகில், ஐந்தறிவு ஜீவன்கலாய் வாழும் இவைகளுக்கு, எதிராய் நடக்கும் இந்த அநியாயங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
உன்னருகில் இருக்கும் ஆண்மகன். அவன் மீதமுள்ள ஆண்டுகள் யாரும் உன் கை கோர்த்தே, பயணிப்பது இவ்விறைவனின் கட்டளை.
தெரியாமலே அழிந்து போன பறவைகளுக்கு உயிர் அளித்த நீங்கள், அழிவில் விளிம்பில் இருக்கும் பறவைகளை காப்பாற்ற தெரிந்தே வழிவகை செய்ய போகிறீர். இங்கு இருக்கும் வித்துக்கள் தான் அதை செய்ய போகின்றன.
நீங்கள் வரும் பாதையில், உயிர் அளித்த மரம், பட்ட மரமாய் இருந்து உயிர் பெற்ற அம்மரத்தின் வித்துக்கள் இவை. உலகமெங்கும் இவ்வித்துக்களை விதைப்பீராக.
அந்த மரத்தில் இருந்து, வெளிவரும் கதிர்வீச்சு அது, பறவைகளை துன்புறுத்தும் கதிர்வீச்சுகளுக்கு எதிராய் இருந்து, பறவைகளை பாதுகாப்பவை. பறவைகளை தன்னை நோக்கி ஈர்க்கும் சக்தி கொண்டவை அவை. தேனாய் சுவைக்கும் பழங்களில் அவற்றுக்கு தேவையான சக்தியை வழங்குபவை அவை. மனிதர்களை தன்னிடத்தில் நெருங்கவிடா மரங்கள் அவை.
சுயநலமிக்க எவர் கைகளிலும் சிக்க கூடாது என்று தான் இத்தனை இடர் கொண்ட பயணமாய் இதை மாற்றியது.
இந்த பொறுப்புணர்ச்சி உங்களோட முடியாமல், இனி வரும் உங்கள் சந்ததியருக்குள்ளும் விதைப்பீர் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன்" என்று இருந்தது.
இதெல்லாம் கனவா, நெனவா என்று இருந்தது இருவருக்கும். அந்த வித்துக்கள் ஊத்தெடுப்பது நின்றது. ஆயிரக்கணக்கான விதைகள் நிரம்பி இருந்தது.
அந்த இடத்தில் ஒரு பக்கம் சுவர் விலகி வழி விட, அவ்வழியே பறந்து சென்றன, பறவைகள் அனைத்தும்.
ஆரூரன் அவ்வழியே வெளியே எட்டி பார்க்க, அங்கு தெரிந்த இடம், இவர் பயணத்தை தொடங்கிய அந்த சிவன் கோவில்.
எப்படியோ பாடுபட்டு அனைத்து விதைகளையும் வெளியே கொண்டு போய் வைக்க, தானாய் மூடிக்கொண்டது அந்த இடம்.
"இதையெல்லாம் எப்படி வீட்டுக்கு கொண்டு போக" என இருவரும் யோசித்துக்கொண்டிருக்க, அவ்வழியே வந்தது ஒரு மாட்டுவண்டி.
ஆரூரன் ஓடிப்போய், அந்த மாட்டுவண்டியை நிறுத்த, "என்னப்பா..." என்றார் அந்த மாட்டுவண்டிக்காரர். "ஊருக்குள்ள போகணும்" என்றான் ஆரூரன். "ஊருக்குள்ள எங்கப்பா?" என கேட்க விழைந்தவர், பக்கத்தில் இருந்த அவிராவை கண்டதும், "ஓஹ். பட்டினத்து பாப்பா வீட்டுக்கா?" என்று அவரே கண்டுகொண்டார்.
அவர் வண்டியில் இருந்த கோணிப்பையில் அந்த விதைகளை கட்டி, அந்த மாட்டுவண்டியில் நிரப்பி எடுத்துசென்றனர்.
"இது என்னப்பா விதை?" என்று அந்த மாட்டுவண்டிக்காரர் கேட்க, "அது ஒரு மருந்துச்செடி. வைத்தால் சுற்றுப்புறத்துக்கு நல்லது" என்றாள் அவிரா, வேறு என்ன சொல்வதென்று தெரியாமல்.
"அப்போ எனக்கு ரெண்டு குடுங்க. நம்ப வீட்டுலயும் நட்டுவைக்கறேன்" என்றார் அந்த மாட்டுவண்டிக்காரர்.
அவருக்கு ரெண்டு அளித்துவிட்டு, மீதியை அவிராவின் வீட்டில் பத்திரப்படுத்தி கொண்டனர்.
.
.
.
அடுத்தநாள் காலை, இருவரும், அந்த நதியினுள் இருக்கும் குகையை இப்பொழுதும் திறக்க முடிகிறதா என்று ஒரு ஆர்வத்தில் அந்த நதியினுள் குதித்து பார்க்க, அந்த வழி, இவர்களால் உயிர்பெற்ற அந்த மரத்தினால், அடைக்க பெற்றிருந்தது. அந்த இடத்தில் மிக பெரிதாய் வளர்ந்திருந்தது. அந்த மரத்தை சுற்றி பறவைகள் துன்பம் இன்றி, பாடி பறந்துகொண்டிருந்தன.
ஈரத்துணியோடு, ஆற்றங்கரையில் இருவரும் அமர்ந்து,அந்த பறவைகளின் அழகை பார்த்துக்கொண்டிருக்க, "சோ! அடுத்து என்ன செய்ய போறோம்?" என்று அவன் தோளில் சாய்ந்து அவிரா கேட்க, "முதல கல்யாணம். அப்புறம் ஒரு வேர்ல்ட் டூர். இந்த விதைகளை கொண்டு போயி சேர்க்க" என்று அவன் கூற, சிரித்துக்கொண்டே சிணுங்கினாள் அவள்.
"அப்புறம் சொந்தமா ஒரு மேகசின் தொடங்க போறோம். இந்த பயணத்தின் போது, நாம் காணும் பறவைகளையும், அழகையும் நம்ம பாக்குறத விட அழகா எழுதுறதுக்கு" என்று அவன் கூறினான் அவன். சிறிது நேர அமைதிக்கு பின், அவன் தோளில் இருந்து எழுந்தவள், அவன் கண் பார்த்து கூறினாள், "தீவிர காதலன் டா நீ" என்று. "உன்னோட காதலனா?" என்று கேட்டான் அவன். இல்லையென தலை அசைத்தவள், "புள்ளினங்காதலன்! " என்றாள்.
_சுபம்_
Epiloge விரைவில் வரும்.
உங்கள் கருத்துக்களை கண்டிப்பா சொல்லிட்டு போங்க.