புரட்டாசி ஸ்பெஷல் - 3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
புரட்டாசி ஸ்பெஷல் !

திருப்பதி உண்டியல்

பிரமிக்க வைக்கும் உண்டியல் அதிசயங்கள் திருப்பதியில் மட்டுமே சாத்தியம்.
"காவாளம்" என்று சொல்லப்படும் பிரமாண்ட உண்டியல்கள் அவ்வப்போது நிரம்பியதும் உடனுக்குடன் அதை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு உண்டியலைக் கொண்டு வந்து வைத்து விடுவார்கள்.
காலியாக இருந்த உண்டியல் ஒரே நாளிலே நிறைந்து உடனடியாக நிறைந்து வேறு உண்டியல் மாற்றும் நிகழ்வு திருமலையில் சாதாரணம்.
ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரியுமா?
ஏழுமலையான் தரிசனத்தை முடித்துவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்காக நீங்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
சரியாக உங்கள் முறை வரும்போது நீங்கள் பணம் செலுத்திய அல்லது செலுத்துவதற்குக் காத்திருக்கிற நேரத்தில் அந்த உண்டியல் நிரம்பிவிட்டது என்பதை தேவஸ்தான ஊழியர்கள் அறிந்து கொண்டால் அதற்கு மேல் போட அனுமதிக்க மாட்டார்கள்.
உண்டியலில் சீல் வைத்து அங்கிருந்து அப்புறப்படுத்தும் வேளையில் அந்த உண்டியலுக்கு அருகில் நிற்கின்ற இரண்டு பக்தர்களைத் தங்களுடன் அழைத்துச் செல்வார்கள்.
இந்த உண்டியல் நிரம்பி விட்டது இதைக் கச்சிதமாக சீல் செய்து எடுத்துக் கொண்டு போனார்கள் அப்போது நான் உடன் இருந்தேன் " என்று அந்த இரண்டு பக்தரும் சாட்சிக் கையெழுத்து போட வேண்டுமாம்.
தைரியமாக கையெழுத்துப் போடலாம்.
இது சம்பிரதாயத்துக்காக செய்யப்படுகின்ற ஒன்று. ஆதி காலத்திலிருந்து பின்பற்றப்படும் நடைமுறை.
ஆகவே அதை இன்றும் விடாமல் கடைபிடித்து வருகிறது தேவஸ்தானம்.
இப்படி சாட்சிக் கையெழுத்துப் போட்ட இரண்டு நபர்களுக்கு என்ன வெகுமதி தெரியுமா?
மீண்டும் ஒருமுறை ஏழுமலையான் தரிசனம் இலவசமாக, அதுவும் வெகு அருகில் அழைத்துச் சென்று தரிசனம் செய்து வைப்பார்கள்.
இந்த தரிசனத்தின் போது உங்களை எவரும் அவசரப்படுத்த மாட்டார்கள்.
நின்று நிதானமாகப் பிரார்த்தனை செய்து வணங்கிவிட்டு வரலாம்.

கோவிந்தா ஹரி கோவிந்தா !
 

I R Caroline

Well-Known Member
ஓ இப்படி ஒன்று இருக்கா மேம், நான் ஒரு முறை சென்றிருக்கிறேன், அதுவும் விஐபி கோட்டா, அதனால் வரிசையில் நிற்கவில்லை, சன்னிதானம் பக்கத்தில் கூட்டிட்டு போய்ட்டாங்க, லட்டும் கைக்கே வந்து விட்டது, உண்டியல் எந்த பக்கம் இருந்தது என்றே தெரியாது...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top