Rajalakshmi Narayanasamy

Writers Team
Tamil Novel Writer
#1
அமைதியாய் அமர்ந்திருந்தவன் திடீரென உற்சாக கூச்சலிட்டான்.. "பாலா.. உன் தங்கச்சி எங்க இருப்பான்னு எனக்கு ஒரு கெஸ் இருக்கு.. போய் பார்க்கலாம்" என்று உடனடியாக யாருக்கோ பேசியில் அழைத்தான்..

அழைத்து அவள் அங்கு இருப்பதை உறுதி செய்தவன் உடனடியாக காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.. 'உடன் வருகிறேன்' என்ற பாலனை "மவனே உன்னால தான் இவ்வளவு குழப்பம்.. நீ ஒன்னும் கழட்ட வேண்டாம்.. இங்கேயே இருந்து எல்லாரையும் பாத்துக்கோ.. நான் அவள கூட்டிட்டு வரேன்" என்று கிளம்பினான்.

அவன் கிளம்பி சிறிது நேரத்திலேயே ஆதிமூலத்திற்கு பேசியில் அழைத்த பவித்ரா சில விஷயங்களை கூறி விட்டு போனை வைத்தாள்..!!

நேராக அவன் சென்றது அவனது பண்ணைக்கு..! ஆம் அவளுக்காக அவன் ஆசை ஆசையாக உருவாக்கிக் கொண்டிருக்கும் பண்ணைக்கு தான் சென்றிருந்தாள் பவித்ரா..!! அதுவே அவனுக்கு லட்சம் சக்தியைக் கொடுத்தது.!.

கோவித்துக் கொண்டு சென்றவள் தந்தையையும், தாயையும், தன்னுடைய வேலை இடத்தையும், நண்பர்களையும் தேடாமல் அவன் அவளுக்காக உருவாக்கிக் கொண்டிருக்கும் இடத்திற்கு செல்கிறாள் என்றாலே அவளது மனம் உறுதியாக புரிந்துவிட்டது தானே?

இதற்கு மேலும் அவள் மனதில் தன் மீது காதல் இருக்கிறதா? அன்பு இருக்கிறதா? என்று சோதனை செய்ய அல்லது கவலைப்பட என்ன இருக்கிறது என்று புரிந்தது...

அவள் சுவாசம் முழுவதும் அவனே நிறைந்திருக்கிறான் என ஒரு நொடியில் புரிந்து போய் விட அவனது மனம் குதூகலித்தது கும்மாளமிட்டது..!!

காரை எடுத்துக் கொண்டு சென்றவன் காவலாளியை அழைத்து "பவித்ரா வந்திருக்கிறாளா?" என்று கேட்டான், "அதை ஏன் கேக்குறீங்க? மதியம் வந்தாங்க தோட்டத்தில் வேலை பார்த்துட்டு இருந்த எல்லாரையும் கூட்டிட்டு போய் நீங்க பூந்தோட்டம் போடுவதற்கு தனி இடம் ஒதுக்கி வைத்து இருக்கீங்களே..?? அங்கே இறக்கிட்டாங்க.. யாரையும் வேற எந்த வேலையும் செய்யவிடவில்லை.. வித விதமா குழி தோண்டவும், உரம் வைக்கவும், ஆளாளுக்கு கட்டளை..!!

எல்லாரையும் ஒரு வழி ஆக்கிட்டு இருக்காங்க.. இன்னும் யாரையும் வீட்டுக்கு கூட விடவில்லை.. எக்ஸ்ட்ரா 500 ரூபா சம்பளம் தர ன்னு சொன்னதும் யாருக்கும் வீட்டுக்கு போகவும் தோணலை" என்றார்..

சிரிப்பு தான் வந்தது ஆதிக்கு..!! அங்க வண்டி வாகனங்களுக்கு லட்சக்கணக்கில் செலவு இழுத்து வைத்து விட்டு, இங்கே வந்து சம்பளம் கொடுக்கிறேன் என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் செலவை கூட்டி விட்டு இருக்கிறாளா? இவ கிட்ட கோவப்பட்டா சீக்கிரமே ஆண்டி ஆகிடுவேன் போலயே" என நினைத்து சிரித்துக் கொண்டே அவளைத் தேடிச் சென்றான்.

வித விதமான மலர்ச்செடிகள் பாலிதீன் கவர்களில் குவிந்திருக்க ஒவ்வொரு செடியையும் எப்படி வைக்க வேண்டும், அதற்கு எவ்வளவு ஆழத்தில் குழி தோண்ட வேண்டும், எவ்வளவு உரம் வைக்க வேண்டும் என்று ஒவ்வொருவரையும் ஏவிக் கொண்டிருந்தாள்..

மதியம் வந்தவள் அதற்குள் பாதி தோட்டத்தில் செடிகளை நிரப்பி விட்டாள்.. வந்ததிலிருந்தே எவ்வளவு தீவிரமாக வேலை செய்து இருக்கிறாள் என புரிந்தது..

இவன் வந்து நிற்பதை கண்டும் காணாதவள் போல் வேலை பார்ப்பவர்களை இவள் ஏவிக் கொண்டே இருக்க, இவனை நிமிர்ந்து பார்த்தவர் கள் அவனும் ஒன்றும் சொல்லாததால் தங்களுடைய வேலைகளை கவனிக்கலாகினர்..!!

பொறுமையாக அமர்ந்து இருந்தான் அவன்.. அவளை பொறுமை இழக்க செய்து விட்டு வந்ததும் அவளிடம் பேச வேண்டும் என்றால் அதற்கு அல்லிராணி எப்படி ஒத்துக்கொள்வாள்? அவளைப் பற்றி தெரியாதா? அவனுக்கு?

ஆகவே, ஒரு வார்த்தை பேசாமல் அவள் சொல்லும் இடத்திற்கெல்லாம் அவள் பின்னாடியே சென்று அமைதியாக நின்று கொண்டிருந்தான்..

ஒரு கட்டத்தில் அவளே எரிச்சலாகி "இப்போ என்ன வேணும்? எதுக்கு என் பின்னாடியே சுத்திகிட்டு இருக்க?" என்றாள்

"உன் கிட்ட பேசணும்" என்றான் பவ்வியமாக..

"ஆமா இவரு பெரிய துரை..!! இவரு பேசணும் நினைக்கிறப்போ நாங்க உடனே போய் சொல்லுங்கய்யா என்று கும்பிடு போட்டு பேசனும்.. நாங்க பேசனும்னு சொல்றது அவருக்கு காது கேட்காது" என்றாள் கடுப்பாக..


"சரி, தப்பு தான் என்ன மன்னிச்சிடுங்க ராணி.. கொஞ்சம் அப்படிக்கா வந்தீங்கன்னா தோப்புக்கரணம் கூட போடுறேன்.. ஆனால் இப்படி பப்ளிக்ல என் மானத்தை வாங்காதே செல்லம்.." என்றான் குழைந்த குரலில்.

பேசாமல் அவனுடன் நடந்தாள்.. உள்ளே சென்றதும் "ஆம் சோ சாரி பவி.. நீ ஏர்போர்ட்டுக்கு வருவேன்னு ரொம்பவும் எதிர்பார்த்தேன்.. நீ வரலைன்னதும் எனக்கு ரொம்ப ஏமாற்றம் ஆகிடுச்சு.. நான் போன் பண்ணும் போதும் நீ ஃபோன் எடுக்கல.. அதனால தான் நான் கோவிச்சிக்கிட்டேன்" என்றான்.

"அப்போ இப்போ மட்டும் எப்படி உன் கோபம் போச்சு?" கேட்டாள் சந்தேகமாக..

" ஏன்னா, என் ரசகுல்லா செஞ்ச கேரட் அல்வா..!! அதை பார்த்ததுமே ஏறின மிளகாய்பொடி எல்லாம் இறங்கி உடம்பு சும்மா ஜில்லுனு ஆகிடுச்சு.. அத சாப்பிட்டு இருந்தா அங்கேயே மயங்கி விழுந்து இருப்பேன்.. அது தான் சாப்பிடாம, உன் கையால சாப்பிடணும்னு பார்சல் பண்ணி எடுத்துட்டு என் சீனிவெடிய தேடி ஓடி வந்து விட்டேன்" என்றான் சிரிப்பாக.

அவன் கைகளில் இருந்த கேரட் அல்வா டப்பாவை பார்த்ததுமே அவளுக்கும் இதழ் ஓரத்தில் ஒரு மென்னகை பூக்க, அதை அவசரமாக மறைத்து கொண்டாள்..

"சரியான தீனி பண்டாரமா இருப்ப போல இருக்கே? ஒரு சாதாரண கேரட் அல்வாவை பார்த்ததும் இப்படி ஓடி வந்து இருக்க?" என்றாள் நக்கலாக.

"அது சாதாரண கேரட்அல்வா இல்லையே.. என் செல்ல பொண்டாட்டி எனக்காக கஷ்டப்பட்டு தன் கையாலேயே முதல் முதலா செஞ்ச ஸ்வீட் மா.. அத போய் சாதாரண அல்வான்னு சொல்லிட்டே" என்றான் ரசனையாக.

"என்ன பொண்டாட்டி கிண்டாட்டின்னு ஓவரா உரிமை எடுக்குற? அதுக்கெல்லாம் நான் ஒத்துக்க வேண்டாமா?" என்றாள் கிண்டலாக..

"ஓஹோ, ஒதுக்காமல் தான் இங்க வந்து தோட்டத்துக்கு பதியம் போடுறீங்களா மகாராணி?"

கண்ணங்கள் சிவந்து போய் காலகள் தடுமாறியது.. " அது..." என்றாள்..

" ஐயோ இப்படி வெட்கப்படாத பவி.. அப்புறம் நடக்கிற விபரீதத்துக்கு நான் பொறுப்பில்லை.." என்றான் கிறங்கிய குரலில்..

பேச்சை திசை மாற்ற மீண்டும் கோவ அவதாரம் எடுத்தவள் "என்கிட்ட ஏன் கோச்சிக்கிட்டு போன? அங்க போய் ஏன் என்னை கூப்பிடவே இல்லை? அம்புட்டு பிசியோ? இங்கே எல்லாருக்கும் போன் பண்ணி மணிக்கணக்கில் பேசின.. ஆனா, என்கிட்ட மட்டும் ஏன் பேசல?" என்றாள்..

"அது.. நான் ஊருக்கு போறேன் என்று சொல்லியும் உன் மனசுல இல்ல உன் முகத்துல பிரிவிற்கான கவலை தெரியல.. அதனால என்ன பிரிகிறது உனக்கு கஷ்டம் இல்லையா? நான் உனக்கு முக்கியம் இல்லையா?ன்னு ரொம்பவும் தோணிச்சு..
அதனால தான் மனம் வெறுத்துப் போய் கிளம்பி போனேன்.. ஆனால் கொஞ்ச நேரத்திலேயே கோபம் தெளிஞ்சு உன்கிட்ட பேசலாம்னு போனை எடுத்தால், அந்த கடன்காரன் உன் அண்ணன்.. அவன் தான் அவன் தான் சதி செஞ்சான்.."

"ஏய் தப்பெல்லாம் நீ செஞ்சுட்டு எங்க அண்ணன குறை சொல்லாதே.. அவன் சொன்னா உனக்கு எங்க போச்சு புத்தி ?
எங்க அண்ணன ஏதாவது குறை சொன்னா உன்ன பிச்சிபுடுவேன் பிச்சி" என்றாள்..

"ஐயோ இம்புட்டு பாசமா அண்ணன் மேல? ஹா ஹா"

"ஆமா காட்டிக்கலன்னா பாசம் இல்லன்னு ஆகிடுமா? ரெண்டு பேரும் வருஷக்கணக்கில் பேசாம இருந்தா கூட உள்ள இருக்கிற அன்பு மாறி விடுமா என்ன?" எனக் கேட்டாள்..

அது பாலனை மட்டும் மனதில் வைத்து சொன்ன பதில் இல்லை, இவனுக்கும் சேர்த்து தான் என புரிந்தது ஆதிக்கு..

"அப்போ காட்டிக்கலன்னாலும் அன்பு பாசம் காதல் நேசம் எல்லாம் இருக்கும் அப்படித்தானே?" என்றான்

"அது புரியரவங்களுக்கு புரியும்.. பாலாவுக்கு ரொம்ப நல்லாவே புரியும்.. ஆனா உன்ன மாதிரி மர மண்டைக்கு அது புரியலைன்னா நான் என்ன செய்ய?" என்றாள் மெல்லிய குரலில்..

"புரியலையே அது புரியாம தான் அவனோட சதி வலையில் மாட்டி அவன் சொன்னதை கேட்டு உன் கிட்ட பேசாம இருந்தேன்.. ஆனா உன் கிட்ட பேசாத ஒவ்வொரு நொடியும் நான் எவ்வளவு தவித்து போனேன் என்று எனக்கு தான் தெரியும்.. எல்லாருக்கும் போன் பண்ணினேன்.. ஆனால் எல்லாமே வீடியோ கால் அவங்ககிட்ட பேசுவதை விட வீடியோ ல உன்னை பார்த்து ஏங்கினது தான் அதிகம்.." என்றான் மயக்கமான குரலில்..

"அடப்பாவி, வெளிநாட்டுக்கு போய் வேலை பார்க்காமல், இங்கு இருக்கிறவளை சைட் அடிச்சிட்டு இருந்திருக்க.. நான் தான் எனக்கு ஒரு போன் கூட பண்ணலியே அவ்வளவு கோவமா? அப்டின்னு ரொம்ப தவிச்சி கலங்கி கவலைப் பட்டு போயிட்டேன்.. இருடா உன்ன.." என்றவள் அவனை மொத்து மொத்து என மொத்தினாள்...

"ஏய் ராட்சசி விடு டீ.., வலிகுது.." என அவள் இரு கைகளையும் பிடித்து அவளை அருகே அமர்த்திக் கொண்டவன், "உண்மையிலேயே பவி இந்த ஒரு மாசமும் உன்ன அவ்வளவு மிஸ் பண்ணேன்.. எத்தனையோ வருஷம் படிப்பிற்காக வெளிநாட்டில் போய் இருந்திருக்கிறேன்.. அப்போ எல்லாம் இப்படி எப்போடா இந்தியாவுக்கு போவோம்னு நான் தவித்ததில்லை..

இந்த ஒரு மாசம் என்னால அங்கு இருக்க முடியல.. ஆதிரா என் மனசை மாத்த எங்கெங்கோ ஊர் சுற்றிப்பார்க்க இழுத்துட்டு போனாள்.. ஆனால் அங்கேயும் போற இடத்தில் எல்லாம் உன் பிம்பம் தெரிந்ததடி கண்மணியே..!!" என்றான்

"ஹேய் பாரதியார் பாட்ட ஆட்டைய போட்டு மாத்தி மாத்தி சொல்லாத மாமா.. கூட ஒருத்திய கூட்டிட்டு வந்து இருக்குறயே என்கிட்ட சொல்லவே இல்ல..?" என்றாள்..

"சொல்ல போன் செஞ்சா தான் நீ எடுக்கவே இல்லயே.." என சிரித்தான்..

"பவி உன்கிட்ட கேட்கணும்னு நினைச்சேன், ஆதவன்-ஆதிரா பேர் பொருத்தம் நல்லா இருக்குல்ல?" என கேட்டான் குறும்பாக..

"என்ன டா கேட்ட?" என மீண்டும் பல மொத்துக்களை வாங்கினான்.. அவள் சுற்றி முற்றி தேடி கையில் ஒரு உருட்டு கட்டையை வேறு எடுக்கவும், "ஐயோ தாயே, முழுசா கேட்டுட்டு கோபப்படு என் பட்டு.. என் பாடி தாங்காது.. இன்னைக்கு தான் அவ்வளவு தூரம் டிராவல் பண்ணி வந்து இருக்கேன்" என்றான்

"சொல்லித் தொலை நீ சொன்னதுக்கு என்னடா அர்த்தம்?" என்றாள் பவித்ரா..

"பாலன்- பவித்ரா பொருத்தமாய் இருக்கிற மாதிரி ஆதவன்- ஆதிரா பொருத்தமா இருக்கு இல்ல? ன்னு கேட்டேன்" என்றான்

திகைத்து விழி விரித்து வியந்தாள் பவித்ரா.. " அவள சிஸ்டர்னு சொல்றியா?" என்றாள்

"அதே தான் ஏ தர சக்கரமே.. உனக்கும் அவனுக்கும் இருக்கிற பாண்டிங் பார்த்து எனக்கும் இப்படி ஒரு தங்கச்சி இல்லையே என ஏங்கி இருக்கேன்.. ஒத்த பிள்ளையா போயிட்டேனேன்னு ரொம்ப கவலைப்பட்டேன்.. ஆனால் ஆதிராவை பார்த்ததும் ஒரு சொந்த தங்கச்சி பீலிங் வந்துச்சு..

பாலனும் பவித்ரா மாதிரி எனக்கும் ஒரு தங்கச்சி இருந்தால் இப்படி தானே பேர் வைத்து இருப்பாங்க அப்படின்னு யோசிக்கவும்.. அவளை என் தங்கச்சி ஆகவே தத்து எடுத்துக்கிட்டேன்.. சாரி பேபி உன் கிட்ட பர்மிஷன் வாங்காமலே செஞ்சிட்டேன்" என்றான்.


ஆதிராவை பற்றி பேசும் போது அவனது கண்களில் தோன்றிய பாசத்தை பார்த்து அதிர்ந்து தான் போனாள்.. 'இப்படி ஒரு உறவை உருவாக்கி நேசத்தையும் வழங்க முடியுமா? என தோன்றினால், அன்பு நிறைந்த மனதிற்கு அதை அள்ளி அள்ளி கொடுக்கவும் தெரியும் தானே..?' என எடுத்துச் சொன்னது அவளது மனது..

" அச்சோ அந்த பொண்ணு ஆசையா வந்து கிஸ் பண்ணா.. நான் தான் கோபத்தில் தட்டிவிட்டு அவ கிட்ட ஒரு வார்த்தை கூட பேசாமல் வந்துட்டேன்.. பாவம்" என மிகவும் வருந்தினாள்..

"அதெல்லாம் கவலைப்படாதே.. நீ பொறாமையில் பொங்குற என்று அவளுக்கு நல்லாவே புரிஞ்சது.. அதைத் தான் நானும் அவ காதில் சொன்னேன்... உன் கிட்ட பேசுறது அவளுக்கு பொசசிவ்னஸ் க்ரியேட் பண்ணுது" அப்படின்னு சொன்னேன்.. அதுக்கு தான் "யூ ஆர் வெரி லக்கி மேன்" அப்படின்னு சிரிச்சா..!!

"ஆதிரா ரொம்ப நல்ல பொண்ணு பவி.., ஃபாரின்ல வளர்ந்தாலும் நம்ம கலாச்சாரம் பண்பாடு மேல எல்லாம் ரொம்ப ஈடுபாடு இருக்கிற பொண்ணு.. இப்போ அவ ஆராய்ச்சிக்காக இங்கே வந்திருக்கிறா.." என்றான்

"என்ன ஆராய்ச்சி பண்றாங்க?" எனக் கேட்டவளுக்கு பதில் சொல்லாமல், "அவளை பற்றிய ஆராய்ச்சியை அப்புறமா செய்யலாம்.. முதல்ல நம்ம ஆராய்ச்சியை தொடருவோம்.." என அவள் மென் விரல்களை பிடித்து தன் கையோடு கோர்த்துக் கொண்டவன் அதை எடுத்து தன் கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டான்..!!

"உன்ன ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் பவித்ரா.. எங்கே உனக்கு என் மீது கொஞ்சம் கூட விருப்பம் இல்லையோன்னு இந்த ஒரு மாசமா நான் தவித்த தவிப்பு எனக்கு தான் தெரியும்.. என் உயிரே என் கிட்ட இல்லாதது போல இருந்தது..." என்றான்.

அவனை வினோதமாக பார்த்தவள், "உன் மேல ஒரு மண்ணாங்கட்டியும் இல்லன்னா.. நான் ஏன் உன் பயராவுசுல, கந்தக வாடையில நமத்து போய் கிடைக்க போறேன்? இந்த சின்ன விஷயம் கூட புரியாமல் நீ குழம்பி தவிச்சா., அதுக்கு யார் என்ன செய்ய முடியும்? என்றாள் மிடுக்காகவே..!!

"ஹே பவி பாரேன்... இதை நான் யோசிக்கவே இல்லை.. சரி சரி, சொல்லு சொல்லு, மாமாவை எப்போ உனக்கு பிடிக்க ஆரம்பிச்சது..?" எனக் கேட்டான் ஆதி.

"இந்த மகேஷ் பாபு மண்டைய, மைதாமாவு மூஞ்சிய பார்த்ததுமே உள்ளுக்குள்ள என்னமோ பண்ணுச்சு. தான்.. ஆனால் அது ஏதோ நீ பார்க்க சுமாரா இருக்கிறதுனால சும்மா கண்ணு உன்ன மேயுதுன்னு நெனைச்சு கண்டுக்காம விட்டேன்..

ஆனா நீ எங்க என்னய விட விட்ட? அது தான் அடிக்கடி கண்ணு முன்னாடி வந்து நின்னு கிட்டே இருந்தயே..?? அப்புறம் என்ன? அதெல்லாம் அப்பவே வந்துச்சு.. எப்ப வந்துச்சு? எந்த நொடி வந்துச்சுன்னு சொல்ல இது என்ன குருவாயூர் எக்ஸ்பிரஸா?

காதல் மாமா காதல்... காதல் எப்ப வரும் என்று எப்ப வந்தது என்று எப்படி சொல்ல முடியும்? ஏதோ ஒரு நொடி என் இதய கூட்டுல உனக்கான இடம் உறுதி செய்யப்பட்டது.. அது எப்போனு கேட்டா எனக்கு சொல்ல தெரியல.. உன்னை ஏன் பிடிக்கும் என்று கேட்டால் அதற்கு காரணம் சொல்ல தெரியல..

ஆனா நீ வந்து கல்யாணம் என்று கேட்கும் போது, இவ்வளவு சின்ன வயசிலேயே கல்யாணம் குழந்தை குட்டின்னு எனக்கு பயமா இருந்தது.. அதனால வேணாம்னு சொன்னேன்.. நீ போட்ட ரெண்டு வருஷ டீல்ல எனக்கும் கொஞ்சம் டைம் கிடைக்கும் அப்படின்னு சரின்னு ஒத்துக்கிட்டேன்..

இந்த பட்டாசு தொழில் பிடிக்கலைன்னாலும் இப்போ அங்க இருந்து, அந்த மக்களுடன் வாழ்ந்து அந்த கஷ்டத்தை எல்லாம் பார்க்கும்போது, எந்த தொழிலும் பாவமானதோ மோசமானதோ இல்லை.. அவர்களுக்கு அதற்கு ஒரு நியாயம் இருக்கும்.. உழைத்து சாப்பிடணும் அவ்வளவுதான்.. அப்படின்னு புரிஞ்சுகிட்டேன்..

எனக்கு இப்போ எந்த மன குழப்பமும் இல்ல.. ஆதி..!!"

"அப்போ இன்னும் ஒரு வருஷம் கழிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்றியா?" என கேட்டான் சோகமான குரலில்...

"அது அது.." என இழுத்தவள் கண்ணங்கள் செம்மையுற.. அவள் வெட்கம் கொண்ட அழகில் அவன் சொக்கிப் போனான்..!!

"ஹேய் இப்போ ஏன் இவ்வளவு வெக்கப்படற? என்னமோ இருக்கு என்ன விஷயம் சொல்லு?" எனக் கேட்க பதில் சொல்லாமல் அங்கிருந்து எழுந்து ஓடியே விட்டாள் பவித்ரா..

அவள் வெளியே வரவும்.. , பாலன் அங்கு வந்தவன்.. " என்ன அணுகுண்டு படார் படாரென்று வெடிக்கும் பார்த்தா மத்தப்பா பொரிஞ்சுகிட்டு வருது.." என நினைத்துக் கொண்டவன் "தாயே பரதேவத.. வரியா வீட்டுக்கு போவோம்? இருட்டிடுச்சு" என்றான்.

ஒன்றும் பதில் சொல்லாமல் அவன் கொண்டு வந்த வண்டியில் ஏறி அவள் பறந்து சென்று விட்டாள்..

என்ன என்று ஒன்றும் புரியாமல் குழப்பத்தில் இருந்த ஆதவனுக்கு பேசி அழைக்க, எடுத்தால் அது அதியவன்..

"பவித்ரா ஆதிமூலத்திற்கு போன் பண்ணி இந்த மாசத்துக்குள்ள ஒரு நல்ல நாள் பாருங்க கல்யாணத்துக்கு ன்னு சொல்லி இருக்காடா" என்றார் உற்சாகமாக...

அவள் வெட்கம் கொண்டதன் காரணம் புரிந்தவன், "ஐயோ ஜஸ்ட் மிஸ், ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி நீங்க போன் பண்ணி இருக்க கூடாதா? அப்பா" என சலித்துக் கொண்டான்..

மனம் வானத்தில் றெக்கை கட்டி பறக்க அவள் தோட்டம் உருவாக்க மண் கிளறி போட்டிருந்த இடத்தில் போய் தரையில் தலை சாய்த்தான்.. தன்னவளை தோல் சாய்க்கும் நாளை மனதில் எண்ணியபடி..!!
 
Attachments

Advertisement

New Episodes